Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

மகளிர் தினம் - 2010

எங்களை மிஞ்சிட எவரிங்கே என
இறுகிய ஆணினம் கூவிய தருணம்
பங்கினைப் பிரித்து உன்னத பெண்ணினம்
குறுகிய வேளையில் குன்றேன வளர்ந்தது.

பாரமே இவளென எண்ணிய ஆணிடம்
பாரடா எங்களின் பலத்தினை என்ற
பாரதி கண்ட புதுமைப் பெண்ணினம்
பாரெங்கும் சூழ்ந்ததை ஒளிரச் செய்தது.

எங்கும் எதிலும் சரிநிகர் சமமாய்
செயலில் பெண்கள் எழுந்து நின்றும்
மங்கிய கருத்தை ஆண்கள் சொல்வது
முயலாமை கதை போல் தோன்றுகிறது.

எமனையே வென்று புகழினைப் பெற்ற
உமனின் பலத்தை இனியும் மதிக்காது
உலர்ந்த கதையில் உழன்று இருந்தால்
வளர்ந்த உலகைக் காண்பது அரிது.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி