Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% Discount on Vishnu's new book

Vishnu's new book is on sale! 100% discount for four days [Free until 22nd oct, 2018 morning]. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். இந்த வார விடுமுறையை ஒட்டி [வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை] நான்கு நாட்கள் என் புத்தகத்தின் மின்பதிப்பு அமேசானில் இலவசமாகக் கிடைக்கும்.

ஓர் உயிரின் குரல்

          26/11/2008 அன்று மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொண்ட தமிழ் தெரிந்த ஒருவன், தன் உயிர் போகப்போகிறது என்று தெரிந்தபின் தீவிரவாதிகளிடம் கவிதை வடிவில் சூளுரைக்கும்/உளறும் வார்த்தைகள், ஒரு கற்பனையாய்...

அடே மூடா !  நிர் மூடா !
நீ வீரமான கோழையடா !
கண்ணாரக் கண்டாயடா - எங்கள்
உயிரின் கடையை !

செவிமடுத்தாயோ எங்கள் ஓலத்தை ?
அனுபவித்தாயோ எங்கள் அவலத்தை ?
எங்கு கேட்டதுண்டு இக்கேவலத்தை ? - மூடா !
இப்போதுன் உயிர்க்கு உத்திரவாதம் இல்லையடா !

எத்தனைப் பேரைப் பலவந்தமாய்ப் பிடிப்பாய் ?
எத்தனை மக்களின் உயிரை எடுப்பாய் ?
எவ்வளவு நேரம் இந்நகரை அச்சுறுத்துவாய் ? - அடே !
என்னடா பிழைப்பு இது ?

இச்சோலையைப் பிடித்திருக்கும் சோகம்
தற்போது நீ அனுபவிக்கும் சுகபோகம்;
பற்றி எரிகிரதெங்கள் தேகம் - உனக்கு
என்று தணியும் இந்த ரத்ததாகம் ?

அடே ! உங்களுக்கென்று ஒருநாள் வரும்,
அன்று உங்கள் இனம் அழியும்,
உலகில் உங்கள் ஆட்சி அணையும் - அடே !
தீவிரவாதம் இனி மெல்லச் சாகும் !

அடே மூடா ! என்னைக் கொன்றால் போதுமா ?
உனக்காக இறங்கியென் இன்னுயிரை அளிக்கிறேன் !
இந்நகரைவிட ஓர் உயிர் பெரிதன்றோ ? - அதனால்
உனக்காகச் சாகிறேன் ! வாழ்க பாரத.........

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி