Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் !


காந்தி பிறந்த பாரத நாட்டில் இன்று
எங்கெங்கு காணினும் ஊழல்கள் !
இந்திய உலகின் எஞ்சிய மண்ணிலே இன்று
எண்ணிலடங்கா சட்ட மீறல்கள் !

லஞ்சம் மூலம் கிடைத்த செல்வம்
தேங்கி நின்றது - இதனால்
கொஞ்ச நஞ்சம் அடைந்த புகழும்
தேங்கி நின்றது.

தஞ்சம் அடைந்த தீயோர் வழக்கு
தூங்கி போனது - இதனால்
எஞ்சிய கூட்டம் மேலும் லஞ்சம்
வாங்கி வந்தது.

மிஞ்சியது எல்லாம் உதை பட்டு
வீங்கிப் போனது - இதனால்
பிஞ்சு முகம் விடிவை எண்ணி
ஏங்கிப் போனது.

ஆனால்,
நெஞ்சம் இல்லா கயவர் முகமோ
தொங்கிப் போகவில்லை - இதனால்
நஞ்சு கொண்ட ஊழல் இன்னும்
எங்கும் போகவில்லை. 

இவற்றை எல்லாம் கூர்ந்து நோக்கும் சட்டமோ,
தவற்றை மறைக்க நீதி கண்ணைக் கட்டி விட்டது.
மமதை கொண்ட கையூட்டின் வட்டமோ, இதனால்
இமயம் முதல் குமரி வரை எட்டிவிட்டது.

நஞ்சை புஞ்சை நாற்றிசையும்
ஓங்கி வளர்ந்த நாட்டிலே இன்று
நாற்றமெடுக்கும் லஞ்சப் புதர்கள்
ஓங்கி வளர்ந்தது எப்படி ?

காந்தி படேல் இறுதிவரை 
கடமையாற்றிய மண்ணிலே இன்று
காமன்வெல்த்தாக இருந்த ஒன்று
கல்மாடிவெல்த்தாக ஆனது எப்படி ?

அடிபட்டு மிதிபட்டு சீர்குலைந்த இந்தியா
அடுத்த தலைமுறை கையில் சேரக் காத்திருக்கிறது.
வருபவர்கள் வாங்காமல் வழங்குதல் வேண்டுமெனும்
வற்றிய புரட்சி இந்தியர் நெஞ்சில் பூத்திருக்கிறது.

நாளைய இந்தியா நம் கையில்
என ஒருசேர முழங்குவோம் !
அப்துல் கலாமின் அன்பு செல்வங்கள்
என உலகெங்கும் பெயர் வாங்குவோம் !

ஊழல் வேரைக் கிள்ளி எறிந்து
உலகின் உச்சியில் என்றும் அமர்வோம் !
இந்திய நாட்டை வளமுறச் செய்து
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி