Posts

Showing posts from April, 2012
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அவ‌ள்

Image
ஒரு வேலை விஷ‌ய‌மாக‌ ம‌த்திய‌ கைலாஷில் இற‌ங்கும்போது எதேச்சையாக‌ அவ‌ளைப் பார்த்தேன். அவ‌ளுக்கே உரித்தான‌ அந்த‌ ந‌ட‌ன‌ ந‌டையுட‌ன் க‌ல்லூரிப் பேருந்திலிருந்து அவ‌ள் இற‌ங்க‌, ஒரு நிமிட‌ம் ப‌ழைய‌ நினைவுக‌ளில் ஆடிப்போய் அவ‌ளையே பார்த்த‌ப‌டி நின்றேன். என்னை அறியாம‌ல் என் கை அவ‌ளை வ‌ந்த‌னிக்க‌, அவ‌ளும் என்னைப் பார்த்தாள்; நின்றாள்; "ஹேய் !!"

என்னை நோக்கி ஒரு ம‌யிலிற‌கு காற்றில் மித‌ந்த‌ப‌டி வ‌ந்த‌து. த‌லையை இருபுற‌மும் ஆட்டினேன்; ம‌யிலிற‌குதான். ப‌ழைய‌ ஞாப‌க‌ங்க‌ள் ஒன்றோடு ஒன்றாய் என்னை என்னுள்ளே எங்கெங்கோ இழுத்துக்கொண்டு செல்ல‌ வெளியே என் உட‌ல் அவ‌ளை வ‌ந்த‌னித்துக்கொண்டிருக்கும் என் கையைச் சும‌ந்த‌ப‌டி அப்ப‌டியே நின்றுகொண்டிருந்த‌து.

+2 முடித்து SRM ஈஸ்வ‌ரியில் என‌க்கு சீட் கிடைத்து எல்லாம் சுப‌ம் என்று இருந்த‌போது திடீரென்று என‌க்காக‌வே ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்லூரிபோல் கேயாஸ் திய‌ரியின் புண்ணிய‌த்தில் என‌க்கு SSN க‌ல்லூரியில் இட‌ம் கிடைக்க‌, அத‌ன் அப‌ரிமித‌மான‌ சுத‌ந்திர‌த்தாலும் முற்போக்குத் த‌ன்மையாலும் வ‌ன‌வாணி விஷ்ணு கொஞ்ச‌ம் காணாம‌ல் போனான். இப்பொழுதும் என் க‌ண்ணெதிரில் ம‌யிலிற…