Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஒரு கிலோ ஜாமீன் குடுங்க‌ மை லார்ட் !அது ஏன் சார் வாய‌த் தொற‌ந்தா எப்ப‌ப் பாத்தாலும் 2ஜி, ஊழ‌ல், தி.மு.க‌-னு உயிரை வாங்குறீங்க‌ ? ம‌த்த‌ ஊழ‌ல்க‌ளை ம‌ற‌ந்த‌ மாதிரி இதையும் ம‌ற‌ந்துற‌ வேண்டிய‌துதானே ? அட‌ ! மொத‌ல்ல‌ இது ஒரு ஊழ‌லே இல்லையே ! எப்ப‌டினு கேக்க‌றீங்க‌ளா ? ஏன் சார், ஆளானப்பட்ட கபில் சிபலே "ஊழலே நடக்கவில்லை"-னு சொல்லிட்டாரு. அதையும் மீறி இப்படி அகராதியா கேள்வி கேட்டா என்ன அர்த்தம் ? அவர் மேல நீங்க என்ன மதிப்பு வெச்சிருக்கீங்க ? அவர்தான் தன் கணித மேதைமையைப் பயன்படுத்தி 'ஒன்னும் ஒன்னும் ரெண்டு'-னு பூச்சி பூச்சியா கணக்குப் போட்டு, "இதனால அரசுக்கு லாபம்தான்"-னு உண்மையை உலகுக்கு அறிவிச்சிட்டாரே ! அப்பறம் என்ன ? சரி, முதல்ல வருபவருக்கு முன்னுரிமை-னு ராஜா அண்ணன் டெல்லியில ஒரு மாதிரி ஹோட்டல் பிசினஸ் நடத்தினாரு. எவ்வளவு காசு குடுத்தாங்கங்கறதா முக்கியம் ? வயிறு நெறைய சாப்பாடு போட்டாங்கங்கறதுதானே முக்கியம் ? அதைத்தானே அண்ணன் செஞ்சாரு ? அவர் செஞ்சது புண்ணியம் சார், புண்ணியம் ! இது ஊழ‌லே இல்ல‌ !

சரி ! 'குறைந்த விலைக்கு லைசென்ஸை வாங்கி, அதை உடனே அதிக விலைக்கு விற்று, அரசுக்கு சேர வேண்டிய வருமானத்தைத் தனியார் நிறுவனங்கள் லாபம் பார்த்து விட்டன'-னு ஒரு குற்றச்சாட்டு. இதுக்கு ராஜா அண்ணன் என்ன பண்ணுவாரு பாவம் ! இதை நீங்க அந்த கம்பெனிகாரங்க கிட்டல்ல கேக்கணும் ? எதுக்கு எதுக்கெடுத்தாலும் அண்ணனையே குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க ? இதை ஒண்ணுமே பண்ண முடியாதா என்ன ? கண்முன்னாடியே பரிகாரம் இருக்கே சார் ! சிம்பிள் ! "பொருளாதாரத்தின் தந்தை என்று அறியப்படுகிற ஆடம் ஸ்மித்தே என் கனவுல வந்து 'இது தப்பு கிடையாது'-னு சொல்லிட்டாரு"-னு முத்தமிழ் வித்தகர் த‌லைவ‌ர் கலைஞர் கருணாநிதியை முரசொலியில் அறிக்கை விடச் சொல்லலாம். அவ்வளவுதான், மேட்டர் ஓவர் ! இதுக்கு போய் ஓவரா சீனப்போட்டுக்கிட்டு ! இதனால தலைவருக்கு அப்பப்ப நடக்கற மாதிரியே ராஜா அண்ணனுக்கும் அப்பப்ப கண்கள் பனித்து இதயம் இனிக்கும். அது சில பேருக்கு புடிக்கல சார். அதான் இப்படித் தேவையில்லாம எதையாச்சும் கெளப்பி விடறானுங்க ! எங்க தலைவரோட ராஜதந்திரத்தப் பாத்து சில பேருக்குப் பொறாமை சார் ! வேற ஒன்னும் இல்ல. இது ஊழ‌லே இல்ல‌ !

இப்ப என் சிங்கம் சொக்கத் தங்கம் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில மனு போட்டிருக்கு. ஜாமீன் கெடச்சதும் கொய்யால பாருங்கடா ! 'நான் நிரபராதி'-னு உலகுக்கு அழுத்தம் திருத்தமா நிரூபிப்பாரு. ஜாமீன் கெடைக்குமா ? கெடச்சுடும் கெடச்சுடும் ஜாமீன் கெடச்சுடும். ஜாமீன் கடல்ல தான் இல்ல, ஆனா சுப்ரீம் கோர்ட்ல இருக்கே ! கெடச்சுடும்... வாழ்க்கை ஒரு வட்டம் டா ! இங்க ஜெயில்ல இருக்கறவன் வெளிய வருவான் வெளிய இருக்கறவன் ஜெயிலுக்குப் போவான் ! இனிமேலும் சும்மா தலைவரையும் அண்ணனையும் எதானா கேள்வி கேட்டீங்க, அப்பறம் பகுத்தறிவுப் பாசறைலேந்து கிஸ்ண பரமாத்மா வந்து ஒங்க எல்லாரையும் வதம் பண்ணிடுவாரு ஆமாம் ! சொல்லிட்டேன் ! இது ஊழ‌லே இல்ல‌ !

யோவ் இன்னாயா அதான் இவ்ளோ நேரம் எங்க கொள்கையை நல்லா விள‌க்கிட்டேனே ? இன்னும் சொம்மா கேள்வி கேட்டுகினே கீறீங்க ? தலைவர் ரெஸ்ட் எடுத்திட்ருக்காருல்ல ? சரி, நம்ம பிரதமர் சொன்னாவாவது கேப்பீங்களா ? மன்மோகன் சார் ! அட, எங்க போறீங்க ? உங்களைதான் ! அட உங்களைதான் பிரதமர்னு கூப்பிட்டேன், மறந்துட்டீங்களா ? பரவால்ல பரவால்ல. ஒரு சின்ன ஹெல்ப். இன்னும் ஒரே ஒரு வாட்டி 'எனக்கு ஒன்றுமே தெரியாது'-னு இந்தப் பசங்க முன்னாடி சொல்லிட்டுப் போயிடுங்களேன் ! சும்மா சும்மா தலைவரைத் தொந்தரவு பண்ணிட்டு இருக்கானுக ! இது ஊழ‌லே இல்ல‌ !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி