Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாஸ், நீங்க‌ ந‌ல்ல‌ கெட்ட‌வ‌ரா இல்ல‌ கெட்ட‌ ந‌ல்ல‌வ‌ரா ?
முன்குறிப்பு : இப்ப‌திவு இங்கு குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ ந‌ப‌ர்க‌ள் யாரையும் புண்ப‌டுத்தும் நோக்குட‌னோ அவ‌ர்க‌ளின் குண‌நல‌ன்க‌ளையும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் ப‌ற்றி அவ‌தூறு சொல்லும் வ‌கையிலுலோ எழுத‌ப்ப‌ட‌வில்லை. இது முழுக்க‌ முழுக்க‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ந‌ப‌ரின் பூர‌ண‌ அனும‌தியுட‌னே எழுத‌ப்ப‌டுகிற‌து. இது ஒரு பெர்ச‌ன‌ல் டைரியின் சாய‌ல் கொண்ட‌ ஒரு ஒப்புத‌ல் வாக்குமூல‌மே அன்றி யாரையும் வாழ்வில் வ‌ழித‌வ‌றிய‌வ‌ர்க‌ளாக‌ சித்த‌ரிக்கும் ஒரு சுய‌ச‌ரிதையின் தேவைய‌ற்ற‌ அத்தியாய‌ம் அல்ல‌. இத‌னைப் ப‌டித்த‌பின் எங்க‌ளைப் ப‌ற்றிய‌‌ ந‌ல்ல‌பிப்பிராய‌ம் கெடுவ‌து அர்த்த‌ம‌ற்ற‌து, அவ‌சிய‌ம‌ற்ற‌து. இது ஒரு வாழ்விய‌ல் பாட‌ம் ம‌ட்டுமே, பாழ்விய‌ல் பாட‌ம் அல்ல‌.
------------------------------------------------------------------------------------------------------------

"ல‌வ‌டிக்க‌பால் !!", ச‌ப்பு க‌த்தினான்.

ம‌த்திய‌ கைலாஷ் செல்வ‌த‌ற்காக‌ Bus 13-இல் ஏறும்போதுதான் இந்த‌க் கூத்து. 2011-ம் வ‌ருட‌ம் SSN காலேஜில் சேர்ந்த‌ வ‌ன‌வாணி ஆண்பிள்ளைக‌ள் நானும் ச‌ப்புவும் ம‌ட்டும்தான். நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு மெக்கானிக்க‌ல் பிரிவில் சேர‌, ப‌ய‌புள்ள‌ EEE-க்கு சென்றுவிட்டான். So அப்ப‌ப்ப‌ ப‌ஸ்ல‌ பாப்போம்.

"அடிங்கொம்மாலே !", ஏதேதோ புதுசு புதுசாய் வார்த்தைக‌ள் ச‌ப்புவின் வாயிலிருந்து புற‌ப்ப‌ட்டுக்கொண்டிருந்த‌து.
"என்ன‌ ச‌ப்பு BACK TO FORM AH ?"
"ஆமா மாமா ! வன‌வாணி பாய்ஸ்னு காட்ட‌னும்ல‌ ?"
"காட்டு காட்டு", போய் என் இருக்கையில் அம‌ர்ந்தேன், ப‌ஸ் கிள‌ம்பிற்று.
"இன்னா மாமா இப்ப‌ல்லாம் பேச‌ற‌தே இல்ல‌ ?", திட்டுவ‌தை நிறுத்திவிட்டு என்னோடு பேச்சு கொடுத்தான். "இன்னா திருந்திட்டியா ?"
"ப்ச், இப்ப‌ எதுக்குடா அதெல்லாம்", நான் அலுத்துக்கொண்டேன். நான் ஆர்வ‌க்கோளாறினால் A to Z எல்லா டாபிக்கிலும் ஒரு கால் வைத்திருந்த‌த‌னால் எல்லாவ‌ற்றைப் ப‌ற்றியும் என்னிட‌ம் அபிப்பிராயங்க‌ளும் மொக்கைக‌ளும் ச‌ந்தேக‌ங்க‌ளும் நிறை குறைக‌ளும் கொட்டிக்கிட‌க்கும்; அனைவ‌ரிட‌மும் ச‌க‌ஜ‌மாக‌ என் பார்வையை ஒன் லைனில் ப‌கிர்ந்து கொள்வேன். ஆனால் இந்த‌ மாதிரி யாராவ‌து ப‌ழைய‌ விஷ‌ய‌ங்க‌ளைக் கிள‌ற‌ ஆர‌ம்பித்தால் ம‌ட்டும் ஏனோ அந்த‌ இட‌த்தை விட்டுக் க‌ழ‌ண்டுவிட‌ முனைந்துவிடுவேன்.

"இன்னா‌ மாமா பேச‌மாட்டியா ? அவ்ளோ பெரிய ஆளாயிட்டியா ?"
"இப்ப‌ உன‌க்கு என்ன‌தாண்டா வேணும் ?"
"சொல்லு மாமா..."
"விட்றா..."
"மாமா..."
"ஐ வாண்ட் டு ப‌ர்கெட் தோஸ் டூ இய‌ர்ஸ் ! போதுமா ?", லேசாக‌க் க‌டுப்பானேன். "ஆன்ஸ‌ர் கெட‌ச்சுடுச்சா ?"
"பார்ரா ! பெரிய‌ மாணிக் பாட்ஷா இவ‌ரு !", க‌லாய்த்தான், க‌டுப்பேற்றினான், என‌க்குப் பிடிக்க‌வில்லை; அமைதியாய் வெளியே பார்த்தேன்.

ம‌னித‌ர்க‌ள் ...ம‌னித‌ர்க‌ள் ...முக‌ம் தெரியாத‌ ம‌னித‌ர்க‌ள்...

"ஒக்கால‌ ஓலி !!"
என‌க்குச் ச‌ப்புவின் மீது கோப‌ம் கோப‌மாய் வ‌ந்த‌து. அதான் அதப்ப‌த்திப் பேச‌ வேணாம்னு சொல்லிட்டேன்ல‌ ! சும்மாம்ம்மயி... சிறிது நேர‌த்தில் அவ‌னும் அமைதியாகி ஹெட்ஃபோனில் லின்கின் பார்க் ட‌மார‌ங்க‌ளைக் கேட்க‌ ஆர‌ம்பிக்க‌, நான் என் ப‌ழைய‌ நினைவுக‌ளில் சிறிது நேர‌ம் மூழ்கிப் போனேன். வ‌ழ‌க்க‌ம்போல் கேயாஸ் திய‌ரி என் வாழ்க்கையில் ஏற்ப‌டுத்திய‌ ப‌ல‌ப்ப‌ல‌ திருப்ப‌ங்க‌ளை எண்ணி, அத‌ன் விளைவாய் என் ந‌ர‌ம்புக‌ளில் ஏற்ப‌டும் வித‌வித‌மான‌ சிலிர்ப்புக‌ளை அமைதியாய் எதிர்கொண்டேன்.

என‌க்கு ஒன்ப‌தாம் ம‌ற்றும் ப‌த்தாம் வ‌குப்பு விஷ்ணுவின்‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் கால‌ப்போக்கில் கான‌ல்நீராக‌ப் பொய்த்துப் போய் இவ்வ‌ள‌வு நாளும் என் ம‌ன‌தில் ஒதுக்கி வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. க‌ல்லூரியில் அவ்வ‌ப்போது லேசாக‌ ஞாப‌க‌ம் வ‌ரும்போது பிர‌சாந்திட‌மும் ம‌துவிட‌மும் மேலோட்ட‌மாக‌, "ஒரு கால‌த்துல‌ நான் ரொம்ப‌ கெட்ட‌வ‌னா இருந்தேன்டா" என்பேன்.

"மாமா உன் ஆளுடா, துப்ப‌ட்டாவ‌ ச‌ரி செய்ய‌ற‌துக்குள்ள‌ நிமிந்து பாரு !"... ஷிட் ! அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் ப‌தின் ப‌ருவ‌ விளைவு கார‌ண‌மாக‌ கொத்தாக‌ ஒரு ப‌த்துப் பேர் பாதை மாறிப்போனோம். மேம்போக்காக‌, "நாம‌ எப்ப‌டிடா பொற‌ந்தோம் ?" என்ற‌ ம‌னித‌ப்பூர்வ‌மான‌ கேள்வியில் ஆர‌ம்பித்து, பின்ன‌ர் அதுவே "இப்ப‌டித்தான்டா பொற‌ந்தோம்னு நெனைக்கிறேன்", என்று அபிப்பிராய‌மாக‌ உருவெடுத்து, பிற‌கு "த‌ப்புடா டேய் ! எப்ப‌டிப் பொற‌ந்தோம்னு நான் நாளைக்குக் காட்ட‌றேன்", என்று விவாத‌மாய் மாறி, பின்ன‌ர் "எப்ப‌டினு தெரிஞ்சிருச்சு, ஆனா இத‌ விட‌ சூப்ப‌ரான‌ வீடியோ ஒன்னு எங்கிட்ட‌ இருக்குடா", என்று விதண்டாவாத‌மாகிப் போன‌து. விளைவு, க‌ண்க‌ள் 'மேலும் கீழுமாய்' அலைபாய‌த் தொட‌ங்க‌, த‌னிமையில் ம‌ன‌ம் 'காங்கிர‌ஸ்'அடிக்க‌த் தூண்ட‌ (புரிந்தால் முதுகில் ஷொட்டு வைத்துக் கொள்ள‌வும்), இர‌வினில் உட‌லுக்குள் என்ன‌ன்ன‌வோ இன்ப‌ம‌ய‌மாக‌ ந‌ட‌ப்ப‌துபோல‌த் தோன்ற‌, புதுப்புது வெப்சைட்டுக‌ள் தின‌ம்தின‌ம் முளைத்து எங்க‌ளைச் சுவைக்க‌ ஆர‌ம்பிக்க‌, அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌கால‌ இடைவேளையிலே க‌டுமையாக‌ ட‌ரிய‌ல் ஆகிப்போனோம் நாங்க‌ள். இந்த‌ விளைவு ஒரு சாதார‌ண‌ ஆணிற்கு அந்த‌ வ‌ய‌தில் வ‌ருவ‌துதான் என்றாலும் எங்க‌ளுடைய‌து கொஞ்ச‌ம் ஓவ‌ர் டோஸாகிப் போய் நாங்க‌ள் ப‌ல‌ கேவ‌ல‌மான‌ த‌ள‌ங்க‌ளைத் தொட‌ அது துணைபுரிந்திற்று.

த‌ங்க‌ம‌ணி டீச்ச‌ர் வ‌ர‌லாறு ந‌ட‌த்தும் போது க‌டைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு "ஆயிர‌ம் பெட்ரூம் வீடு" என்று செக்ஸ் பாட‌ல்க‌ளை எழுதும் வ‌க்கிர‌ எண்ண‌ம் அப்போது எங்க‌ளுக்குள் விர‌வி இருந்த‌து. அவ‌ர் திரும்பி நிற்கும்போது ராக்கெட் விடுவ‌து, வாத்து போல‌ ஆட்டிக்காட்டுவ‌து, புத்த‌க‌ப்பை நாடாவை இழுத்து, விட்டு, இழுத்து, விட்டு, பெருமூச்செறிந்து, க‌ச‌முசா ச‌த்த‌ங்க‌ளை எழுப்பி, அனைவ‌ருக்குள்ளும் ஒரு ச‌ங்க‌ட‌ம் க‌ல‌ந்த‌ சிரிப்பை வ‌ர‌வ‌ழைப்ப‌து, பெண்க‌ளின் உட‌ல‌மைப்பை நோட்ட‌ம் விட்டுக்கொண்டே, "மாமா இவ‌ இன்னும் வ‌ய‌சுக்கு வ‌ர‌ல‌ போல‌ டா !", என்று அவ‌ர்க‌ள் காதில் விழும்ப‌டியாக‌வே வ‌க்கிர‌மாய் சொல்லுதிர்ப்ப‌து, வ‌குப்பு ஆசிரியைக்கு 'மாங்கொட்டை' என்ற‌ ப‌ட்ட‌ப்பெய‌ரைக் கேவ‌ல‌மான‌ எண்ண‌த்தில் சூட்டுவ‌து, என்று எங்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ம் ஒரு பாவ‌ப் பெட்ட‌க‌மாய் கால‌தேவ‌னின் முன் அட‌க்க‌மாய் அட‌கு வைக்க‌ப்ப‌ட்டு இருக்கிற‌து. எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ இப்பொழுது என‌க்கு உற்ற‌ தோழியாய் இருக்கும் ஒருவ‌ளை ஒன்ப‌தாம் வ‌குப்பில் பால்காரி என்று விளித்த‌து... ஷிட் ஷிட் ஷிட் ! இப்பொழுது அவ‌ளைப் பார்க்கும்போதெல்லாம் உட‌ல் கூனிக் குறுகிப் போய் அவ‌மான‌த்தில் அப்படியே...

"மாமா !", ச‌ப்பு கூப்பிட்டான்.
"என்ன‌டா ?"
"என்ன‌ ஆட்டோகிராஃபா ? இல்ல‌ கேக்க‌றேன்..."
"...த்தா சும்மாவே இருக்க‌மாட்டியா ?", எகிற‌ ஆர‌ம்பித்தேன்.
"ஓவ‌ரா ப‌ண்ணாத‌ ! நீ ந‌ல்ல‌வ‌னாவே இருந்துட்டு போடா ! அதுக்காக‌ அமைதியா இருக்க‌ணுமா என்ன‌ ?"
"இப்ப‌ என்ன‌ ப‌ண்ண‌னும்ங்கிற‌ ?"
"கார்ட்ஸ் ஆட‌லாம் வா, ப‌ச‌ங்க‌ எல்லாரும் வ‌ராங்க‌".
"ம்ம்ம்"
"நாங்க‌ள்ளாம் உன் ஃப்ரெண்ட்ஸ் டா. அதுவாவ‌து ஞாப‌க‌ம் இருக்குல்ல ?‌"
"டேய் சீ அப்டிலாம் இல்ல‌டா", அவ‌ன் அப்ப‌டி சொன்ன‌தும் என‌க்கு ஒருமாதிரி ஆகிவிட்ட‌து. "சாரிடா ச‌ப்பு, நானும் வ‌ரேன் இரு"
"அது ! டேய் மாமாவும் வ‌ரானாம்டா. ஆளுக்கு எட்டு கார்டு போடு க‌ரெக்டா இருக்கும்"

எட்டாம் வ‌குப்புவ‌ரை ச‌தாசிவ‌ ப‌ரிபூர‌ண் என்று ப‌ச்ச‌ப்புள்ளையாய் இருந்த‌வ‌ன் எங்க‌ள் பார்வை ப‌ட்ட‌தும் சப்பாணி ஆகி, பின்ன‌ர் ச‌ப்பு ஆனான் (இப்பொழுது வெறும் ப‌ரிபூர‌ண் ஆகி வார்த்தைக‌ளைப் ப‌ரிபூர‌ண‌மாய்ப் பிர‌யோகித்துக் கொண்டிருக்கிறான்). என் ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ட்ட‌ம் ப‌ற்றி இங்கே நான் சொல்லியாக‌ வேண்டும். எட்டாம் வ‌குப்பு வ‌ரை என‌க்கு இருந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் சுமார் ப‌த்து ப‌தினைந்து பேர் ஒன்ப‌தாம் வ‌குப்பில் பொசுக்கென்று காணாம‌ல் போனார்க‌ள்.. எம்.கே. D Section போய்விட்டான். போன‌துமில்லாம‌ல் அங்கு அதுவ‌ரை சுமாராக‌ப் ப‌டித்துக்கொண்டிருந்த‌ சின்னியை இவ‌ன் மோடிவேட் செய்ய ஆர‌ம்பிக்க‌‌, இப்பொழுது சின்னி ஐ.ஐ.டி. ரூர்கீயில் இருக்கிறான் ! கேயாஸ் திய‌ரியின் விளையாட்டைப் பாருங்க‌ள் ! செம்ம‌ ல‌ ? (ஆனால் நானோ A Section போன‌ எம்.எஸ்.-ஐயும் சுதிரையும் பிரேக்கிலும் ல‌ஞ்ச்சிலும் சென்று ச‌ந்தித்து அவ‌ர்க‌ளைக் கெடுத்துக் குட்டிச்சுவ‌ர் ஆக்கினேன், அது வேறு விஷ‌ய‌ம்). இன்று நான் அதிக‌ம் ம‌திக்கும் ம‌னித‌ர்க‌ளில் எம்.கே.-வும் சின்னியும் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள். Such a dedication and hardworking nature. Well done guys, well done !

அதேபோல் தேவ‌த‌னுஷ், விஷால், ராவ், என்று ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரிசையாக‌ வேறு வேறு பிரிவிற்குச் சென்றுவிட்டார்க‌ள். எட்டாம் வ‌குப்பில் பிரிந்த‌ நாங்க‌ள் ப‌தினொன்றாம் ப‌ன்னிர‌ண்டாம் வ‌குப்புக‌ளில்தான் மீண்டும் ஒன்று சேர்ந்தோம். இப்பொழுது என‌க்கு இருக்கும் ந‌ட்பு வ‌ட்டார‌ம் அப்ப‌டி reunite ஆன‌வ‌ர்க‌ளும், ப‌தினொன்றாம் வ‌குப்பில் வ‌ன‌வாணியில் சேர்ந்த‌‌ புதிய‌வ‌ர்க‌ளும், புதிதாய் அறிமுக‌மான‌ ப‌ழைய‌வ‌ர்க‌ளும்தான். And this ச‌ப்பு and ச‌க்தி, அவ்வ‌ள‌வே. என‌வே என்னுடைய‌ அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ விஷ‌ய‌ங்க‌ள் நிறைய‌ பேருக்குத் தெரியாது. நானும் அவ‌ர்க‌ளுட‌ன் பேசும்போதெல்லாம் பெரிய‌ உத்த‌ம‌ன் மாதிரிதான் ந‌ட‌ந்துகொண்டு வ‌ந்திருக்கிறேன், என்னைப் ப‌ற்றி அதிக‌ம் பேசாம‌ல். இதுதான் எந்த‌ன் நிலைப்பாடாக‌ இருந்து வ‌ந்த‌து, இதை எழுதும் வ‌ரை...

ஒன்ப‌தாம் வ‌குப்பின் முத‌ல் நாள‌ன்று முக்கால்வாசி பேரை ஏதோ வேற்றுகிர‌க‌வாசிக‌ளைப் பார்ப்ப‌துபோல் அமைதியாக‌ப் பார்த்துக்கொண்டு இருந்தேன். ப‌ழைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் சுனிலும், அன்பும் கூட‌ இருந்தார்க‌ள். வ‌குப்பு ஆர‌ம்பித்த‌ ஐந்தாவ‌து தின‌ம்,
"மாமா !", என்று ச‌க்தி வ‌ந்து நின்றான்.
"ம‌ச்சான் !", என்று குள்ரே அருகில் வ‌ந்தான்.
"மாப்ளேஸ் !", என்று நான் கூவினேன்.

அந்த‌ வ‌ருட‌ம் செஞ்சிக் கோட்டைக்கு டூர் செல்லும்போது நாள் முழுவ‌தும் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் பேசினோம், இணை பிரியா ந‌ண்ப‌ர்க‌ள் ஆனோம்; இப்ப‌வும் அப்ப‌டியே இருக்கிறோம். ச‌க்தி செம்ம‌ கேர‌க்ட‌ர். 'அது எல்லாமே' இள‌வ‌ய‌தின் தாக்க‌ம்தான் என்று இப்பொழுது அவ‌னுக்கும் என‌க்கும் புரிந்துவிட்ட‌தால் அவ்வ‌ப்போது சும்மா அப்ப‌டி இப்ப‌டிப் பேசுவோமே த‌விர‌ எங்க‌ள் பார்வையும் ம‌ன‌தும் சுத்த‌மாக‌த்தான் இருக்கிற‌து என்று நினைக்கிறேன். ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன். அவ‌னும் பிர‌தீப் என்னும் இன்னொரு ந‌ண்ப‌னும் உத‌வி என்றால் உட‌னே கூட‌ வ‌ருவார்க‌ள். அதேபோல ச‌க்தி - ஆத‌ர்ஷ். இந்த‌ இருவ‌ரும் ஒரு டீமாக‌ சேர்ந்துவிட்டால் அவ்வ‌ள‌வுதான். டெக்னிக‌ல் ச‌மாசார‌ங்க‌ளில் இவ‌ர்க‌ளை அடிக்க‌ ஆளில்லை. I should be lucky, infact everyone are in some way...

ச‌க்தியுட‌னான‌ அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ ப‌ள்ளி வாழ்க்கையில் ப‌ல‌ ம‌ற‌க்க‌ முடியாத‌/ம‌ற‌க்க‌ விரும்புகிற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌ன‌. (இப்பொழுது என்னைப் பார்த்தால் ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், சில‌ பேரைக் க‌ண்ட‌ப‌டி அடித்திருக்கிறேன்). ப‌யால‌ஜியிலும் எக‌னாமிக்ஸிலும் நான் க‌டைசி வ‌ரை பாஸ் ஆகாம‌ல் இருந்த‌து வ‌ர‌லாறு. ஃபிஸிக்ஸ் டீச்ச‌ர் இந்திரா பாய் மேமால் வாராவார‌ம் பிரின்ஸிபால் காவேரி மேம் ரூமிற்கு அனுப்ப‌ப்ப‌ட்டு suspension threat-க‌ளை எதிர்கொள்வேன். மாசாமாச‌ம் அம்மா காவேரி மேமை ஏதாவ‌து ஒரு பிர‌ச்னையின் பேரில் ச‌ந்திப்பார் (அத‌னால் கால‌ப்போக்கில் அவ‌ர்க‌ள் இருவ‌ரும் ந‌ல்ல‌ ந‌ண்பிக‌ள் ஆகிப்போன‌து வேறு விஷ‌ய‌ம் ! "உங்க‌ சாரி சூப்ப‌ரா இருக்கு", என்று ஆர‌ம்பித்த‌ ந‌ட்பு அது !). த‌ங்க‌ம‌ணி மேம் என் அருகில் வ‌ந்து பேசவே‌ யோசிப்பார். வ‌குப்பில் அனைவ‌ரும் பார்க்க‌ த‌மிழாசிரிய‌ர் சாய் சாரின் கையால் 'ப‌ளார்' என்று அறை வாங்கியிருக்கிறேன். எப்பொழுதும் க‌ல‌க‌ல‌ப்பாக‌ ஜாலியாக‌ இருப்பார் கீதாஞ்ச‌லி மேம். அவ‌ரே க‌டுப்பாகி வெறுப்பில் என் மீது ட‌ஸ்ட‌ரைத் தூக்கி அடித்திருக்கிறார்‌. எங்க‌ள் ப‌டைப்புக‌ளை நாங்க‌ள் ஒரு டைரியில்தான் எழுதி வைப்போம். ஒருமுறை தோழி ஆர்த்தி அதை எடுத்துப் பார்த்துவிட்டாள். ந‌ல்ல‌வேளை அவ‌ளுக்கு எங்க‌ள் சீக்ர‌ட் லாங்க்வேஜ் புரிய‌வில்லை (இப்பொழுதும் அது ப‌த்திர‌மாக‌ என்னிட‌ம் இருக்கிற‌து. த‌ப்புதான், இருந்தாலும் என் க‌வித்துவ‌ம் வெளிப்ப‌ட‌ ஒரு வாயிலாக‌ அது இருந்த‌தாலோ என்ன‌வோ, அதை அப்ப‌டியே வைத்திருக்கிறேன். க‌றையான் கூட‌ அதைத் தீண்ட‌ மாட்டேன் என்கிற‌து !).  இப்ப‌டிப் ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள். சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ஏற்க‌ன‌வே VV Memoriezzz-இல் சொல்லியிருப்பேன். ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌கிர‌ங்க‌மாக‌ சொல்ல‌ முடிய‌வில்லை, அவை உள்ளே ஓர‌மாய் ம‌றைக்க‌ப்ப‌ட்‌டே கிட‌க்க‌ட்டும்...

இந்த‌க் கான‌ல்நீர் வாழ்க்கைக்குக் க‌டைசி வ‌ரி எழுத‌ ஆர‌ம்பித்த‌வ‌ர் ப‌யால‌ஜி எடுத்த‌ நிர்ம‌லா மேம். ப‌த்தாம் வ‌குப்பு பொதுத்தேர்வுக்கு முன் நிர்ம‌லா மேம் என்னைத் த‌னியாக‌க் கூப்பிட்டு அழுத‌து இன்றும் ந‌ன்றாக‌ நினைவில் இருக்கிற‌து. பிற‌கு என் அம்மா. பெற்றோர் - ஆசிரிய‌ர் ச‌ந்திப்பின் போது ல‌லிதா மேமிட‌ம்(ச‌ப்புவின் அத்தை !) என் க‌ண்முன்னே விக்கி விக்கி அழுதார். என‌க்குக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌த்தான் உறைக்க‌ ஆர‌ம்பித்த‌து. க‌டைசி நேர‌த்தில் ஏதோ டியூஷ‌ன் அது இன்று என்று அலைந்து த‌ட்டுத் த‌டுமாறி 418 மார்க் எடுத்தேன். ப‌யால‌ஜி அட்டென்ட் செய்த‌தே 60 ம‌திப்பெண்க‌ளுக்குத்தான், ஆனால் கிடைத்த‌தோ 80, எல்லாம் கேயாஸ் திய‌ரிக்கே வெளிச்ச‌ம் !

தெரிந்தோ தெரியாம‌லோ அந்த‌க் க‌டைசி வ‌ரிக்கு முற்றுப்புள்ளி வைத்த‌வ‌ர் என் த‌ந்தை. தேர்வுக‌ள் முடிந்து விடுமுறை நாட்க‌ளை வெட்டியாய்க் க‌ழித்துக்கொண்டிருந்த‌போது அவ‌ர் என்னிட‌ம் ஒரு புத்த‌க‌த்தை நீட்டினார். பார்த்தேன்; சுஜாதா எழுதிய‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ளின் தொகுப்பான‌ 'க‌ட‌வுள்'. அந்த‌ ஒரு புத்த‌க‌ம் அப்ப‌டியே என் எண்ண‌ங்க‌ளையும் ச‌ம்பிர‌தாய‌ சிந்த‌னைக‌ளையும் த‌லைகீழாக‌ப் புர‌ட்டிப் போட்ட‌து. வெட்டித்த‌ன‌மாக‌ இன்னிக்கு, நாளைக்கு, நாளைக்க‌ழிச்சு என்று நாட்க‌ளைக் க‌ட‌த்திக்கொண்டிருந்த‌வ‌னை 'ஒவ்வொரு பிற‌ப்பிற்கும் ஒரு purpose இருக்கிற‌து. போ நீ உன் பிற‌ப்பிற்கான‌ கார‌ண‌த்தைத் தேடு' என்று என‌க்குள்ளே எதையோ உசுப்பி விட்ட‌து. "அடுத்து என்ன‌ ப‌ட‌ம் பார்க்க‌லாம்" என்று டி.வி-யின் முன்னால் கிட‌ந்த‌வ‌னுக்கு இந்த‌ ம‌கா பிர‌ப‌ஞ்ச‌த்தையே 'க‌ட‌வுள்' அறிமுக‌ம் செய்து வைத்த‌து. அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ கால‌க‌ட்ட‌த்தில் என் ஒழுக்க‌ ரீதியான‌ பார்வையும் சிந்த‌னைப் போக்கும்தான் திசை மாறிய‌தே த‌விர‌ என் விருப்பு வெறுப்பும் அடிப்ப‌டை குண‌ந‌ல‌ன்க‌ளும் அப்ப‌டியேதான் இருந்த‌ன‌. என‌வே கேயாஸ் திய‌ரி, ஆன்த்ராபிக் திய‌ரி, வேற்று கிர‌க‌ம், ஐன்ஸ்டைன், த‌ற்செய‌ல், க்வாண்ட‌ம் திய‌ரி, ஷிந்தோ ம‌த‌ம், புத்த‌ ம‌த‌ம், யிங் யாங் என்று 'க‌ட‌வுள்' என்னை இந்த‌ உல‌க‌த்தை விட்டு எங்கெங்கெல்லாமோ இழுத்துக்கொண்டு சென்ற‌து. இப்ப‌டி ஒருவித‌மான‌ trance state-இல் நான் இருக்க‌, அப்போதுதான் ப‌த்தாம் வ‌குப்பு ரிச‌ல்ட் வ‌ந்த‌து(418). என் பெற்றோருக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ளின் ப‌த்தாம் வ‌குப்புக் குழ‌ந்தைக‌ள் எல்லாரும் என்னைவிட‌ கூடுத‌ல் ம‌திப்பெண்க‌ள் பெற்றிருந்த‌ன‌ர்.

இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின் முத‌ன்முத‌லாக‌ என்னை நானே சுய‌ப‌ரிசோத‌னை செய்து பார்க்க‌ ஆர‌ம்பித்தேன். நான் நினைத்திருந்தால் அவ‌ர்க‌ளைப் போல‌ நிறைய‌ மார்க் வாங்கியிருக்க‌ முடியும், அப்ப‌டி வாங்காத‌த‌ற்கு என்னிட‌ம் நியாய‌மான‌ கார‌ண‌ங்க‌ள் இல்லை என்று புரிந்த‌து. யோசிக்க‌ ஆர‌ம்பித்தேன், யோசித்தேன், எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ என் சிறுவ‌ய‌து தோழி சிவ‌ச‌ங்க‌ரி 458 வாங்கிய‌து தெரிந்த‌தும் என‌க்கு என்ன‌வோ போலாகிவிட்ட‌து. அப்பொழுதுதான் உறைத்த‌து, பொறாமை இல்லை, உண்மை. அவ‌ளுக்குத் தெரியும் நான் திரும‌ங்க‌ல‌த்தில் எப்ப‌டி இருந்தேன் என்று. நான்கு வ‌ருட‌ம் வ‌குப்புத் த‌லைவ‌ன், நான்கு வ‌ருட‌ம் proficiency, செஸ் விளையாட்டில் மாவ‌ட்ட‌ அள‌வில் ஐந்தாவ‌து இட‌ம். மார்க் கொஞ்ச‌ம் குறைந்துவிட்டாலே ஓவென்று அழும் விச்சுகுட்டியை அவ‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். ஆம், அரை மார்க்கில் முத‌லிட‌த்தை கோட்டை விட்ட‌த‌ற்கு அப்ப‌டி அழுதேன் (என் க‌ண்க‌ள் சின்ன‌தாய் இருக்க‌க் கார‌ண‌ம் அதுதான்). நான் சென்னைக்கு மாற்ற‌லாகி வேறு ப‌ள்ளியின் ப‌டிக்க‌ப்போகிறேன் என்ப‌தை அப்ப‌ள்ளியின் பிரின்ஸிபாலால் ஜீர‌ணித்துக்கொள்ள‌வே முடிய‌வில்லை.

"ச‌ந்தோஷ‌ம்டா", என்று அம்மா சொன்ன‌ போது மேற்சொன்ன‌ எல்லாமே ஒருமுறை நினைவில் நிழ‌ற்திரையாய் நின்று சென்ற‌து. நிச்ச‌ய‌ம் என‌க்கு ச‌ந்தோஷ‌மில்லை என்று தெரிந்த‌து. "சாரிமா மார்க் கொற‌ஞ்ச‌துக்கு" என்று ம‌ன‌ம்விட்டு சொன்னேன். "போடா, இது வ‌ந்த‌தே என‌க்கு திருப்திதான்டா" என்றார். சுரீர் என்ற‌து. என்னைப் ப‌ற்றிய‌ க‌ன‌வுக‌ளையும் ல‌ட்சிய‌ங்க‌ளையும் ஆசைக‌ளையும் எதிர்ப்பார்ப்புக‌ளையும் அம்மா இப்ப‌டியா சுருக்கிக்கொள்வ‌து ? என‌க்கு என் மீதுதான் கோப‌ம் வ‌ந்த‌து. அத‌ற்குக் கார‌ண‌ம் நான்தானே ? ஒருமுறை த‌லையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன்.

அப்பாவுக்கு ப்ரொமோஷ‌ன் கிடைக்க‌ யார் கார‌ண‌ம், அதுவும் போஸ்டிங் சென்னையில் கிடைக்க‌ என்ன‌ கார‌ண‌ம், எந்த நொடியில் எந்த‌ ம‌ன‌நிலையில் யாரால் ஏன் அப்ப‌டித் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து, திரும‌ங்க‌ல‌ப் புழுதியில் கோலி விளையாடிக் கொண்டிருந்த‌ விஷ்ணுவிற்குச் சென்னையை அறிமுக‌ம் செய்து வைக்க‌ முடிவு செய்த‌து யார், ப‌ல‌ பேருக்கு கிடைக்காத‌ அந்த‌ வாய்ப்பு என்னைத் தேடி ஏன் வ‌ர‌‌ வேண்டும், புள்ளிமான் கூட்ட‌ம் தெருநாய்க‌ளைப் போல‌ க‌ட‌ந்து திரியும் ஐ.ஐ.டி.யினுள்ளே நான் ஏன் ப‌டிக்க‌ வேண்டும், ம‌துரை வெயிலைப் பார்த்துப் பார்த்து இன்று சென்னை வெயிலெல்லாம் ஒன்றுமே இல்லை என்ப‌துபோல் என் ம‌ன‌து உட‌ல் ரீதியாய் உறுதிப‌‌ட‌ எது கார‌ண‌ம், இன்றும் ரூல்ஸ் ராமானுஜ‌மாய் இருப்ப‌தில் நான் பெருமை கொள்ள‌ எது கார‌ண‌ம், ஏன் ஏன், ஏன் இவ்வாறு ந‌ட‌க்க‌ வேண்டும் ? ஏன் நான் சென்னைக்கு வ‌ர‌ வேண்டும் ? க‌டைசி வ‌ரை ம‌துரையிலேயே இருக்க‌ட்டும் என்று விட்டுவிட‌ வேண்டிய‌துதானே ? யார் அல்ல‌து எது இதையெல்லாம் இய‌க்கிய‌து ? எது இதையெல்லாம் தீர்மானித்த‌து ? ஏன் தீர்மானித்த‌து ?

அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ 'க‌ட‌வுள்' எஃபெக்ட் இப்ப‌டி என்னைத் த‌த்துவ‌ ரீதியாக‌ யோசிக்க‌ வைத்த‌து. எங்கோ ராம்குமார் வீட்டுக் கோழிக் குஞ்சுக‌ளைத் துர‌த்தி விளையாடிய‌ விஷ்ணு இப்பொழுது சென்னையில் நான்காவ‌து மாடியில் முத‌ல் மார்க் வாங்கிய‌ மாண‌வியை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருக்கிறானே, ஏன் ? அவ‌ன் எத‌ற்காக‌வோ இங்கே அனுப்ப‌ப்பட்டிருக்கிறான். ப‌ல‌ வாய்ப்புக‌ள் காத்திருக்கும் சென்னையில் அவ‌ன் வ‌ள‌ர‌ எதுவோ எத‌ற்காக‌வோ தீர்மானித்திருக்கிற‌து. ‌ஏதோ ஒன்றை அவ‌ன் எதிர்கால‌த்தில் செய்ய‌ப் போகிறான்.

இனிமேல் இவ‌ன் எத‌ற்கெடுத்தாலும் அழும் விச்சுகுட்டி அல்ல‌. அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள்தான் அவ‌ன் வாழ்க்கையிலேயே க‌ற்ற‌ உருப்ப‌டியான‌ முழுமையான‌ பாட‌ம். ஆதார‌ சிந்த‌னையின் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளையும் தொட்டு இப்பொழுது எது ச‌ரி எது த‌வ‌று என்று முடிவு செய்வ‌தில் அவ‌ன் கை தேர்ந்துவிட்டான். சில‌ரை அடித்து த‌ன் உட‌ல் வ‌லிமையை நிரூபித்துக்கொண்டான். பின்ன‌ர் அது த‌வ‌று என்று தெரிந்த‌தும் அத‌ற்காக‌ வ‌ருந்த‌வும் செய்து த‌ன் ம‌ன‌ப்ப‌க்குவ‌த்தையும் வ‌ள‌ர்த்துக்கொண்டான். அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் விஷ்ணு ஒரு சோம்பேறி என்று அவ‌னுக்கு உண‌ர்த்தின‌. அவை அதிலிருந்து அவ‌ன் வெளியெ வ‌ருகிற‌ வாய்ப்பையும் த‌ந்த‌ன‌, அல்ல‌து அந்த‌ சோம்பேறித்த‌ன‌த்தை வைத்துக்கொண்டே நேர‌த்தை அழ‌காக‌ ஒதுக்கும் க‌லையைக் க‌ற்கும் வாய்ப்பையும் த‌ந்த‌ன‌.

ஒரு ந‌ல்ல‌வ‌னைக் காட்டி, அவ‌ன் செய்யும் இறை வ‌ழிபாடுக‌ளையெல்லாம் சுட்டி, அவ‌ன் ஒழுக்க‌த்தையெல்லாம் ப‌றைசாற்றி, அத‌னால் அவ‌ன் அடையும் ந‌ன்மைக‌ளையெல்லாம் உண‌ர்த்தி, "இப்ப‌டித்தான் இருக்க‌ வேண்டும்", என்று சொல்வ‌து ஒரு வ‌கை. அல்ல‌து ஒரு கெட்ட‌வ‌னைக் காட்டி, அவ‌ன் செய்யும் அக்கிர‌ம‌ங்க‌ளையெல்லாம் சுட்டி, அத‌னால் அவ‌ன் பின்னார் அடையும் தீமைக‌ளையெல்லாம் உண‌ர்த்தி, "இப்ப‌டி இருக்க‌க் கூடாது" என்று சொல்வ‌து இன்னொரு வ‌கை. என் வாழ்க்கையில் கேயாஸ் திய‌ரி இர‌ண்டாவ‌து வ‌ழியைத் தேர்ந்தெடுத்த‌து.

ஒட்டுமொத்த‌மாக‌, இந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் விஷ்ணு ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை அவ‌னை அறியாம‌ல் க‌ற்றுக்கொண்டான். அத‌ற்காக‌ அவ‌னை அவ்வ‌ழியில் செல்ல‌ வைத்த‌ எதுவோ அவ‌ன் ச‌ந்தித்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை, சிந்த‌னைக‌ளை, ஒரு ந‌ல்ல‌ ஆசிரிய‌ர் ஆக்கியிருக்கிற‌து. அதுதான் ஆசிரிய‌ர் என்று எல்லாம் முடிந்த‌பின் அவ‌னுக்கு உண‌ர்த்தி அவ‌னுக்கு ஞானோத‌ய‌ம் வ‌ர‌ வைத்திருக்கிற‌து. சுருங்க‌ச் சொன்னால் ஏதோ க‌ல‌க‌ம் புரிந்து இறுதியில் ந‌ன்மை புரிந்திருக்கிற‌து. கேயாஸ் நார‌த‌ர் !

"மாமா மாமா மாமா மாமா....", ச‌ப்பு இடைம‌றித்தான். "நிப்பாட்டு ! என்ன‌டா க‌ண்ட‌ப‌டி விளையாட்ற‌ ? ஜெயிக்க‌ப் போற‌டா நீ !"
"ஹ‌ஹ் !", வெற்றிப் புன்ன‌கையுட‌ன் சிரித்தேன். "என‌க்குத் தெரியும்டா !"

இர‌ண்டு மாத‌ங்க‌ளில் முழுமையாக‌ வெளியே வ‌ந்தேன். மீண்டும் ப‌ழைய‌, ஆனால் refined விஷ்ணு ஆனேன். "ஜெயிக்க‌ப் பொற‌ந்த‌வ‌ன்டா நீ !", என்று என்னையே த‌ட்டிக்கொடுத்துக்கொண்டேன். ஒவ்வொரு ந‌ல்ல‌து கெட்ட‌திலும் எதையாவ‌து க‌ற்றுக்கொள்ள‌லாம் என்ற‌ உண்மையை என் தார‌க‌ ம‌ந்திர‌ம் ஆக்கிக்கொண்டேன். சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ற‌க்க‌ விரும்பினேன். விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் ப‌க்குவ‌த்தையும் வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ முடிவு செய்தேன். அன்றிலிருந்து இன்றுவ‌ரை வெற்றி தோல்விக‌ளைப் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை. "What ever happens, life has to move on" என்று நினைக்கிறேன். "All is well" என்கிறேன். ப‌த்து நிமிட‌ங்க‌ளாக‌ மொக்கையும் போட்டுக் கொண்டிருக்கிறேன், அதைப் ப‌டிக்க‌ உங்க‌ளை tag-உம் செய்கிறேன். விளைவுக‌ளுக்குக் கேயாஸ் திய‌ரியே பொறுப்பு.

இங்குதான் ஒரு ட்விஸ்ட். க‌டைசி நேர‌த்தில் ச‌ப்பு ஒரு ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ஜெயிக்கும் நிலைக்கு வ‌ந்துவிட்டான். நான் தோற்க‌ப் போகிறேன். ஆனால் க‌வ‌லையில்லை. இதே த‌வ‌றை அடுத்த‌ முறை செய்ய‌ மாட்டேன், புதிய‌ த‌வ‌றுக‌ளைத்தான் செய்வேன்.

அமைதியாக‌ யோசித்துப்பார்த்தேன். எந்த‌ கேயாஸ் திய‌ரி என்னை அத‌ள‌ பாதாள‌த்தில் த‌ள்ளிய‌தோ அதே கேயாஸ் திய‌ரிதான் என்னை மீண்டும் மேலே தூக்கியும் விட்டிருக்கிற‌து. மேலே-கீழே, உள்ளே-வெளியே, க‌றுப்பு-வெளுப்பு என்று பேசாம‌ல் ந‌ம் வாழ்க்கையை ஒரு யிங்-யாங்-இற்குள் பொருத்தி அதையே அனைவ‌ருக்கும் ஜாத‌க‌ம் ஆக்கிவிட‌லாம் !

நான் கீழே விழுந்த‌ வேக‌த்தில் கேயாஸ் திய‌ரி நொறுங்கியிருந்தால் என்ன‌ ஆகியிருக்கும் ? ப‌ல‌ க‌ன‌வுக‌ளுட‌ன் சென்னை வ‌ந்திருக்கும் என்னைக் கீழே த‌ள்ளி பாட‌ம் புக‌ட்டிய‌ அது என்னை மீண்டும் மேலே தூக்காம‌ல் விட்டிருந்தால் என்ன‌ ஆகியிருக்கும் ? நான் பாதை மாறிய‌ க‌ண‌த்தில் இந்த‌ப் பிர‌ப‌ஞ்ச‌விய‌லே மாறியிருந்தால் என்ன‌ ஆகியிருக்கும் ? ச‌க்தி, ச‌ப்பு என்ற‌ அருமையான‌ உயிர்த்தோழ‌ர்க‌ள் என‌க்குக் கிடைக்காம‌ல் போயிருந்தால் என்ன‌ ஆகியிருக்கும் ? 21/2/2011 அன்று பேருந்துப் ப‌டிக்க‌ட்டில் த‌டுக்கி நான் உள்ளே விழாம‌ல் வெளியே விழுந்து ட‌ய‌ருக்குள் சிக்கியிருந்தால் என்ன‌ ஆகியிருக்கும் ? என் க‌ண்முன்னே அம்மா அழாம‌ல் இருந்திருந்தால் என்ன‌ ஆகியிருக்கும் ? க‌டைசி நேர‌த்தில் "எப்ப‌டியாவ‌து ப‌டிச்சுர‌ணும்டா மாமா", என்று ச‌க்தி சொல்லாம‌ல் இருந்திருந்தால் என்ன‌ ஆகியிருக்கும் ?

"ல‌ண்ட‌ல்ல‌வ‌டிக்ஸ் !!", என்று க‌த்தினான் ச‌ப்பு.

இதுதான் ச‌ரியான‌ ப‌திலா ? தெரிய‌வில்லை. ப‌தில் தெரியாம‌லேயே இருந்துவிட்டுப் போக‌ட்டும். ம‌த்திய‌ கைலாஷ் வ‌ந்துவிட்ட‌து, so is my time...


Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி