Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !



மனிதன் யாரென மாநில முரைத்து
மாயையை அகற்றி மின்னிட வைத்து
மிதிபட நேர்ந்தால் மீண்டும் முயன்று
மீட்டிய செயலை முற்றிலும் வென்று
முடியும் என்று மூளைக் குரைத்து
மூர்க்கப் பண்பை மெலிதாய்க் குறைத்து
மெத்தன மழித்து மேதையை ஆக்கும்
உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !

கடமையை முடித்து காரிருள் துடைத்து
காத்திடு மெதையும் கிலியைப் புடைத்து
கிட்டலர் செயலைக் கீற்றே என்று
கீழ்ப்படிந் திருக்கா குன்றாய் நின்று
குவலய மெங்கும் கூர்மையை நிறுத்தி
கூடக மென்னும் கெட்டதைத் துரத்தி
கெம்பென உயர்த்தி கேசரி ஆக்கும்
உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !

பற்றினை ஏற்றிப் பாரை வளர்த்து
பார்த்திடு மிமையை பிரித்தே குலைத்து
பிணக்க மில்லா பீதக மளித்து
பீழை களைந்து புகழைத் தெளித்து
புத்தன் சொல்போல் பூரண மடையா
பூதி யுளவரை பெருமிதம் தேடி
பெருமதி பெற்றுப் பேரோன் ஆக்கும்
உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !

Comments

  1. Hii Nanba your blog deserves this, I have nominated your blog for Liebster Blog award kindly visit this link for more information. Thanks take care, Happy Blogging !
    Liebster Blog Award

    ReplyDelete

Post a Comment

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி