Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அம்மா, என்னைக் கலைத்து விடேன் !



என் தோழி காயத்ரி எழுதிய வலி மிகுந்த உரைவீச்சு:

எனக்கு பயமா இருக்கம்மா
என்னை கலைத்து விடேன்
இல்லை கரைந்து விடுகிறேன்...

நான் பெண்ணென்று தெரிந்தால்
நீங்களே சிதைத்து விடுவீர்கள்.
மீறி நானும் பிறந்து விட்டால்
கள்ளிப்பாலால் புதைத்து விடுவீர்கள்.
மீறி நானும் வளர்ந்தால்
மழலை பூவைக் கசக்கி விடுவீர்கள்.
அதையும் மீறி வந்தால்
என் பெண்மையினையே கொன்று விடுவீர்கள்.
இல்லை திருமணம் என்ற பெயரில்
என்னை முடக்கிவிடுவீர்கள்.

அப்பப்பா எத்தனை கொடுமை.
வேண்டாம் அம்மா.
நான் இப்படியே
கரைந்து விடுகிறேன்...

ஏனய்யா ?
பெண்ணாக பிறப்பது குற்றமா ?
இல்லை பிறந்தது குற்றமா ?
பிறந்தது தான் ஒரே குற்றமா ?

பெண்ணைத் துதிப்பதைத் துறந்தீர்.
மதிப்பதையும் மறந்தீர்.
சரி, போகட்டும்.
எங்களை மிதிக்காமல் இருங்கள்.
அதுவே போதும் அய்யா !

உயிரை ஜனிக்க செய்யும் வல்லமை தந்தாய்.
உயிரை உடலை சுமக்கும் வல்லமை தந்தாய்.
உயிரை உடலை வளர்க்கும் வல்லமை தந்தாய்.
உயிரை பெற்றெடுக்கும் வல்லமையும் தந்தாய்.
ஆனால், எங்கள் கற்பென்னும் உயிரை
மதிக்கும், பாதுகாக்கும்,

உலகை ஏனப்பா
தர மறந்தாய் ?

இந்தக் கலியுகத்தில்
ஒரு பெண் சாதிப்பதற்கு
அவள் கற்பு தான்
தடை என்றால்,
உன்னோடு கூட மட்டும்
தான் பெண் என்று
நீ அர்த்தம் கொண்டால்,

நீ மனிதனே இல்லையடா.
மிருகமே நீ இன்னும்
மாறவில்லையடா.

அம்மா, தங்கை, அக்கா, தோழி,
இந்த உறவுகளுக்கு
அர்த்தம் புரியாதவனே
பெண் இல்லையெனில்
நீ ஏதடா இவ்வுலகில் ?

சாலையில், பேருந்தில்,
பள்ளியில், கல்லூரியில்,
பணி புரியும் அலுவலகத்தில்,
ஏன், சொந்த நாட்டில்,
சொந்த வீட்டில்,
சொந்தம் என்ற பெயரில்,
இன்னும் எத்தனையோ !
எங்கே செல்கின்றது
இந்த உலகம் ?

சினிமாவிலும்
விட்டு வைக்கவில்லை.
அய்யா, உங்களை
பெண் குலத்திற்கு
சேவை செய்யச் சொல்லவில்லை.

பெண்ணை, அவள் பெண்மையை,
வர்த்தகம் ஆக்காதீர்கள்.

பெண்ணை தெய்வமென்று
போற்றுகின்ற பாரதத்தில்
இப்படி ஒரு கொடுமையா ?
சட்டதேவதையே,
உன்னையும்
கூறு போட்டு விற்கிறார்கள்
இந்தப் பாதகர்கள்.

போதும் அய்யா போதும்,
எங்களை வாழவிடுங்கள்.
இல்லையேல்,
பெண்ணில்லா உலகில்
நீங்களே 

செத்து மடியுங்கள் !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி