Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

"சுப்பிரமணியன் சுவாமி பத்தி நீ என்ன நினைக்கிற?"

"சுப்பிரமணியன் சுவாமி பத்தி நீ என்ன நினைக்கிற? உன் ஒபினியன் என்ன?"

http://www.youtube.com/watch?v=K3lv71xEBs0
Devil's Advocate - Indian Muslims have Hindu ancestry: Swamy

இதை எனக்குக் கொடுத்தது என் கசின். சுவாமியை எதிர்த்து ஒரு பதிவு போட்டிருந்தேன். அதுக்கு இதைப் பாரு நீ மாறுவனு குடுத்தான்! இதைப் பாத்தப்பறம் இன்னும் மோசமாயிடுச்சு  அப்பறம்தான் புரிஞ்சது, என்னை மாத்தறதுக்கு இந்த வீடியோவைத் தர்றான்னா அப்போ ரத்தத்துல இந்த ஐடியா எப்படி ஊறியிருக்கும்னு. சுவாமி சொல்றது சரிதான். முக்காவாசி பேர் அவரை உள்ளுக்குள்ள சப்போர்ட் பண்ணிட்டுதான் இருக்காங்க. அனலைஸ் எல்லாம் பண்ண மாட்டாங்க. இது மதம், உள்ள அறிவு வராது. எனக்கு ஆரம்பத்துல இது இடியாட்டிக்காதான் பட்டுச்சு, ஆனா இதைப் பாருனு சீரியசா ஒருத்தன் கொண்டு வந்து கொடுக்கும்போதுதான் இதோட சீரியஸ்னெஸ் தெரிஞ்சுது

ஆனா சுவாமி பார்வையில அவர் சொல்றது சரிதான். சுவாமியையும் என் கசினையும் மாத்த முடியாததுக்குக் காரணம் அதுதான். எங்க பேஸ்மெண்டே வேற. சுவாமியைப் பொறுத்தவரைக்கும் அவர் பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவைப் பாக்கற விதம் வேற. பிரிவினையோட சாராம்சம் என்ன? பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு. அப்ப இந்தியா இந்துக்களுக்குதானேன்னு கேப்பார். இல்லேன்னா விவாதத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போறேன் பேர்வழின்னு அனைத்து மதத்தினரும் இந்து வம்சாவளியேன்னு சொல்லுவார். இது அவர் பாயிண்ட். எங்க பாயிண்ட், இவங்களுக்குப் புரியாது, லூசுத்தனமா இருக்கும், ஏன்னா காந்தி வகுத்துக் கொடுத்த இந்த பாயிண்டை இதுக்கு முன்னாடி இந்த உலகம் பாத்ததே இல்ல.

”என்ன பாயிண்ட்?”

இப்போ இந்தியா ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டு இருக்கு. இதுக்கு முன்னாடி இந்த உலகம் பண்ணாத, ஆனா தேவைப் படற எக்ஸ்பெர்மெண்ட். இந்த இந்தியாங்கிற கான்செப்ட் மட்டும் ஜெயிட்டுசுச்சுனா நம்மதான் ஒரு ஒன்றுபட்ட உலகத்துக்கு முன்மாதிரி. அனைத்து வேற்றுமைகளும் ஏற்கப்பட்டு, அனுசரிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டு, நீ மனிதன் அதனால நீ ஒரு உலக அரசாங்கக் குடிமகன்ங்கிற கான்செப்ட்! இந்தியா ஒரு failed experiment ஆகக்கூடாது. தமிழ்நாட்டுக்கும் உ.பி.க்கும் போக விசா தேவை இல்லை, ஆனா ரெண்டுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு. ஆனா இந்தியாங்கற ஒரு லேண்ட்மாசுக்குள்ள தெரிஞ்சோ தெரியாமலோ நீ இருக்கறதுனால, உனக்கு மத்திய அரசால அங்கீகரிக்கப்பட்ட பர்த் சர்டிபிகேட் இருக்கறதால, நீ ஒரு இந்தியக் குடிமகன், நீ என்ன மத/ஜாதிக்காரனா வேணாலும் இருந்துக்கோ, என்ன மொழியை வேணாலும் பேசிக்கோ, ஆனா உனக்குப் பாஸ்போர்ட் விசா தேவையில்ல, ஏன்னா நீ ஒரு இந்தியன்... என்ன அருமையான கான்செப்ட் இது!

”Can you please explain about the experiment?”

சொல்றேன். ஸ்டெப் பை ஸ்டெப் போலாம். தொடர்ந்து மனுஷ இனம் தன்னை கரெக்ட் பண்ணிட்டே வந்துட்டு இருக்கு இல்லையா? தொடர்ந்து மெச்சூர் ஆகிட்டே வந்திருக்கு இல்லையா? ஆரம்பகாலத்துல பத்து பேருக்கு ஒரு தலைவன் இருந்தான், அவன் சொல்றதுதான் சட்டம். அப்பறம் கொஞ்சம் மெச்சூர் ஆனான், மன்னராட்சி வந்துது. அமைச்சர்ங்கிற பேர்ல அட்வைசர்களும் நிர்வாகிகளும் இருந்தாங்க. மன்னராட்சில பல ஓட்டைகள் இருந்துது. அதனால மறுபடியும் ஒரு மாற்றம் வந்துது. இங்கிலாந்துல மொனார்கிய தூக்கிப் போட்டுட்டு டெமாக்ரசி வந்துது, ரஷ்யாவில கம்யூனிசம் வந்துது. இது ரெண்டும் ஒரே டைம்ல வந்ததால, ரெண்டுமே சக்சஸ்ஃபுல்லா இருந்ததால, ரெண்டுக்கும் போட்டி வந்துது எது பெஸ்டுனு. அதுதான் கோல்டு வார். இதுக்கு நடுவுல ஹிட்லர் முசோலினியோட டிக்டேட்டர்ஷிப். கம்யூனிசம் தியரடிக்கலா ஸ்ட்ராங்க், கிட்டத்தட்ட பர்ஃபெக்ட். ஆனா பிராக்டிகலா சில காரணங்களால கம்யூனிசம் ரஷ்யாவில ஒரு கட்டத்துல மன்னராட்சி மாதிரியே ஆகிடுச்சு. கோல்டு வார்ல அதிரிபுதிரிகள் பல பண்ணி அமெரிக்க டெமாக்ரசி வின் பண்ணிச்சு. இருக்கற ரெண்டுல கம்மியா நெகட்டிவ்ஸ் இருக்கறது டெமாக்ரசிதான். ஆக இப்போ டெமாக்ரசி. இது ஒரு பாயிண்ட், மைண்ட்ல வெச்சுக்கோ.

அடுத்த பாயிண்ட், உலகத்துல ஏன் இத்தனை நாடுகள் இருக்கு? பேசாம ஒரே ஒரு கவர்மெண்ட் இருக்கட்டுமே? ஒரு ஃபெடரல் கவர்ன்மெண்டை வெச்சுக்கலாமே? ஸ்டேட்டுக்கு நிறைய பவர், செண்ட்ரல் கிட்ட பாதுகாப்பு மாதிரி விஷயங்கள்னு வெச்சுக்கலாமே? இப்போ ஒரு பேச்சுக்கு ஒரு ஏலியன் இனம் நம்ம மேல படையெடுத்து வருது. அப்ப நம்ம என்ன பண்ணுவோம்? நீ வேற மனுஷன் நான் வேற மனுஷன்னு சொல்லுவோமா? ஒன்னா இருந்து ஏலியனை எதிர்கொள்வோம். அப்ப மட்டும் வேற்றுமையெல்லாம் எங்க போச்சு? மனுஷனுக்குள்ள, எதிரிங்கற கான்செப்ட் வர்றதுக்குக் காரணமே மதம், அப்பறம் டிவைடட் பை கண்ட்ரீஸ், அதான் மேட்டர்.

மூணாவது பாயிண்ட். முதல்ல ஒரு நாடுங்கிறது சின்னதா இருந்துது. தலைவன் காலத்துல சில ஏக்கர்தான் இருந்துது. அப்பறம் மன்னர் காலத்துல நம்ம தமிழ்நாடு சைசுக்கு ஆச்சு. அப்பறம் நாடாச்சு. அப்பறம் சில நாடுகளெல்லாம் சேர்ந்து சாம்ராஜ்யம் ஆச்சு. இதுக்கு அடுத்த ஸ்டெப் என்ன? ஏக்கர், ஊர், ஸ்டேட், கண்ட்ரி, சாம்ராஜ்யம், அடுத்த நிலை என்ன? இதுக்கப்பறம்? இதுக்குள்ள இரண்டாவது பாயிண்டைக் கொண்டு வா. மனுஷன் மெச்சூர் ஆகிட்டே வர்றான். சாம்ராஜ்யங்கள் வந்தாச்சு. மன்னராட்சி முடிவுக்கு வரும்போது ரெண்டு விஷயங்கள் நடக்குது. ஒன்னு, சாம்ராஜ்யங்கள் உடையுது, நாங்க வேற வேற மக்கள், ஆனா  எங்களை ஒரு நாடுன்னு மன்னர் வெச்சிருந்தார், ஆனா எங்களால அப்படி வாழ முடியாதுனு கண்ட்ரீஸ் ஃபார்ம் ஆச்சு. உதாரணத்துக்கு ஸ்பானிஷ் பேசறவங்களை வெச்சு ஸ்பெயின் உருவாச்சு, போர்த்துகீஸ் பேசறவங்களை வெச்சு போர்த்துகல் உருவாச்சு(இது வெறும் உதாரணம்தான்,  அவை உருவானது வெவ்வேறு காரணிகளால், குறிப்பாகத் திணிப்புகளால்). இப்படிப் பிரியாம, இது நடக்காம வேற ஒன்னு நடந்திருக்க முடியும். மனுஷன் மெச்சூர் ஆகிட்டே வந்திருக்கான்னா, அப்போ வேற ஒன்னு நடந்திருக்கணும், இப்படி பிரிஞ்சிருக்கக்கூடாது. சரி, சரியோ தப்போ நாம ஒரு நாடாகிட்டோம், நமக்குள்ள வேற்றுமைகள் இருந்தாலும், அதைக் களைந்து இந்த சாம்ராஜ்ய மக்களா ஒன்னா இருப்போம்னு சொல்லியிருக்க ஒரு வாய்ப்பு இருந்திருக்கு. அந்த நாட்டோட பூகோள, வரலாற்று, சமூக, அரசியல் ரீதியா ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்திருந்தாலும், அப்படி செய்யறதுக்கு வாய்ப்பு இருந்துருக்குன்றதை மறுக்க முடியாது. ஆனா அப்ப சொல்லல, உலகம் அடுத்தக் கட்டத்துக்குப் போகாமலேயே இருந்துருச்சு, சரி, அவ்வளவுதான்னு இருக்கும்போது, 1947ல ஒரு ட்விஸ்டு. 1947-ல ஆசியாவில ஒரு நாடு இரண்டா பிரிஞ்சுது.

அதுல ஒரு நாடு, இதுக்கு முன்னாடி உலகத்துல எப்படி ஒரு நாட்டை வரையறுத்தாங்களோ, அப்படி தன்னை டிஃபைன் பண்ணிக்கிச்சு. இது இஸ்லாமிய மக்களுக்கான நாடு, இங்கு இவங்க வரலாம்னு. இங்க அதே மாதிரி குரல்கள், உலக வழக்கப்படியே, இது இந்து நாடு ஆகணும், இந்துக்களே இங்க வாங்கனு ஒரு கருத்து இருந்தது. இங்கதான் ஒரு மனுஷர் உள்ள வர்றார். “இல்லை, நாம உலக வழக்கப்படி பிரிக்க வேணாம். வேற மொழி, மதம், இனம் இருக்கற மக்களால ஒரு நாடா வாழ முடியாதுனு இந்த உலகம் நம்பிட்டு இருக்கு, அதை நம்பியே இவ்வளவு வருஷம் முன்னேறாம இருக்கு. நாம இல்ல, எவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும் ஒரு நாட்டோட குடிமகன்னு சொல்லி வாழ முடியும்னு நிரூபிப்போம், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு”னு ரெவல்யூஷனரியா ஒரு அறிக்கை விடறார்.

ஆனா இந்த சிஸ்டத்தை இதுக்கு முன்னாடி இந்த உலகம் ட்ரை பண்ணதே இல்லை. நாமதான் எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிட்டு இருக்கோம். இது மட்டும் சக்சஸ் ஆச்சுன்னா, உலகம் அடுத்தக் கட்டத்துக்குப் போகும். மனுஷன் இன்னொரு வாட்டி மெச்சூர் ஆவான். இப்ப மூனு பாயிண்டையும் ஒன்னா சேரு.
*ஒரு யுனைடட் வேர்ல்டு
*வித் டெமாக்ரசி
*வித் செக்யூலரிசம்

And India is it's pioneer. இந்தியாதான் அதற்கு வழிகாட்டி. இப்படி உலகம் அடுத்த கட்டத்துக்குப் போகணும்னா, India should not fail. India should not become a failed experiment. இந்தியா உடைஞ்சுறக்கூடாது. ஆனா இந்த சித்தாந்தம் புரியாம இந்தியா இந்துக்களுக்கேனு அதே நிலையிலயே இருக்காங்க. அவங்க சைடு பாயிண்ட்ஸ் நிறைய இருக்கு, அதனாலதான் பெரும்பான்மை மக்களும் அவங்க பக்கம் இருக்காங்க, அதுக்குக் காரணம், அவங்க சொல்ற சிஸ்டம் உலகத்துல வழக்கத்துல இருக்கறதுதான். ஆனா எங்க சிஸ்டம் புதுசு. இதுக்கு முன்னாடி இந்த உலகம் இதைப் பாத்ததில்ல, பரிசோதிச்சதில்ல. இதைப் புரிஞ்சுக்கணும்னா கொஞ்சம் கன்வென்ஷனலா யோசிக்கறதை விட்டுட்டு வெளிய வரணும்.

அதனாலதான் சொல்றேன், சுப்பிரமணியன் சுவாமி சொல்றது தப்புன்னு இல்லை, அவர் பார்வையில அவர் இந்தியாவை அந்த மாதிரி கட்டமைக்க விரும்பறார். அதை நான் எதிர்க்கறேன். எங்க ரெண்டு பேருக்கும் பேஸ்மெண்ட் வேற. அவரோட பேஸ்மெண்ட் சவர்க்காரோட இந்துத்துவா. எங்களோட பேஸ்மெண்ட் காந்தியோட இந்தியம். அதுதான் வித்தியாசம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி