Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதியவன் - 11


“விஷ்ணு! என்ன சொல்கிறாய் நீ?”, என்றேன் அதிர்ச்சியுடன்.

“மரம் விழுந்துவிட்டது சகோ. பராலிஸிஸ் நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். நீ வா”

“இதோ உடனே வருகிறேன் விஷ்ணு! ஷிட்! கின்னகா! விஷ்ணு மீது மரம் விழுந்துவிட்டதாம்!”

“வாட்! இப்போது எங்கிருக்கிறான்?”

“மைதானத்தில் இருக்கிறானாம், ஹாஸ்பிடல் போகாமல் என்ன அவனுக்கு! வா உடனே போகலாம்”

நாங்கள் இருவரும் மைதானத்தை நோக்கி விரைந்தோம். திடீரென்று அத்தனை பகையுணர்ச்சியும் மறைந்துவிட்டது. இயக்கத்தின் தலைவனுக்கு ஆபத்து என்று மூளை தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தது. ஒரு வாரத்தில் வாழ்வா சாவா என்றிருந்த நிலையில், எதுவும் நடக்கலாம் என்று திடீரென்று கேயாஸ் தியரி போட்ட திருப்பத்தைப் பற்றி மனம் அப்போது சிந்திக்கவில்லை. விஷ்ணு! விஷ்ணு!

மைதானத்திற்கு வெளியே ஒரு தெருவிளக்கின் வெளிச்சத்தில் பட்டும் படாமலும் ஒரு குட்டிச் சுவரின் அடியில் விஷ்ணுவை ஒருவர் கிடத்தியிருந்தார். பார்க்க மிகவும் பரிதாபகரமாக இருந்தான். இரத்தம் அதிகம் இழந்து சொத சொதவென்று நனைந்திருந்தான். அவனைச் சுற்றி நின்றால் வெளிச்சம் மறைக்கும் என்று அவனுக்கு இடப்புறம் ஒரு சிறு குழுவாக அன்று கூடியிருந்த இயக்கத்தவர்கள் நின்றிருந்தார்கள்.

“டேய் விஷ்ணு! என்னடா இதெல்லாம்!”, என்றபடி அவனை நோக்கி ஓடினேன்.

“வா சகோ! இதோ டாக்டர் இருக்கிறார், சேவ் தி ஹாஸ்பிடல் ஸ்பீச்”, என்றான் பலவீனமான புன்னகையுடன். “சகோ, சண்டையை மறந்துவிடு. உன்னிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஜஸ்ட் மிஸ்ஸில் மரத்திடமிருந்து தப்பித்தேன். இப்போது மரம் வென்றுவிட்டது. வா கின்னகா”

“வலி தாங்க முடிகிறதா விஷ்ணு?”, என்று கேட்டாள்

“சி ஃபைவ் இஞ்சுரி கின்னகா. மூச்சு விட சிரமமாக இருக்கிறது. கைகள் எந்நேரமும் செயலிழக்கலாம். ப்ளட் லாஸ் வேறு”

“ஐம் சாரி. போய் வா நண்பா”

“அதெல்லாம் இல்லை! உனக்கு ஒன்றும் ஆகாது விஷ்ணு. இயக்கத்திற்கு நீ தேவை. நான் இங்கு வந்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை!”

“சகோ, இதோ டாக்டர், நம் இயக்கத்தில் பார்த்திருப்பாய். ஹிப்போகிரட்டிக் ஓத்தை மீறி என்னை இங்கு கிடத்தியிருக்கிறார். நான் சொல்வதைக் கேள். வந்த இரண்டே வாரங்களில் ஆல்ஃபா மேலை சாலஞ்ச் செய்த அற்புதன் நீ”

“விஷ்ணு வா ஹாஸ்பிடல் போகலாம்”, என்று பிடிவாதம் பிடித்தேன்.

“ப்ளீஸ். சண்டையில் உன்னோடு ஜெயிப்பது சுலபம். ஆனால் என்னைக் கடைசியாக உன் பிடிவாதத்தோடு சண்டை போட வைத்துவிடாதே. நான் தோற்றுவிடுவேன்”, என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“ஆல்ஃபா மேல் இறக்கப் போகிறான். உனக்கு வேறு போட்டியாளன் இல்லை. இட்ஸ் ப்ரிட்டி சிம்பிள். இயக்கத்தைப் பார்த்துக்கொள் சகோ. எனக்கு உன்னிடம் அளிக்க ஒரு கட்டளை, ஒரு கன்சென்ஷுவல் கோரிக்கை, மற்றும் ஒரு பொறுப்பு இருக்கிறது”, என்றான்.

“என்ன விஷ்ணு? சொல். செய்கிறேன்.”

“முதலில் கட்டளை. இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும்வரைதான் துறையில் தலைசிறந்ததாக வருவதெல்லாம். இயக்கத்தின் தலைவரானால் அலுவலகப் பணியை விட்டுவிட வேண்டும். உன் பத்திரிகைப் பணிக்கு குட்பை சொல்லிவிடு.”

“விஷ்ணு!”

“தியாகம் செய்துவிடு. பத்து நாட்களில் நான் கேட்பது அதிகம்தான். ஆனால் ப்ளீஸ், இயக்கத்திற்காக செய். நான் தான் இந்த இயக்கத்தைத் துவக்கியது. இது என்னோடு முடிந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். இயக்கத்தில் உள்ள பணக்காரர்கள் உன்னை கவனித்துக் கொள்ளுமாறு பார்த்துக்கொள். புதியவர்கள் ஈகோவற்றவர்கள். ஆல்ஃபா மேல் தகுதிகள் இருக்கின்றன என்று உணர்ந்தால் மட்டுமே போட்டிக்கு வருவார்கள். அவர்களை அறிவால் நம்பலாம் சகோ. நம்பி உரையாடு.”

“என்னால் நான் காண்பதை இன்னும் நம்ப முடியவில்லை விஷ்ணு”, என்றேன் விரக்தியுடன். “உன்னோடு இந்த இயக்கத்தின் பிரைவசி மற்றும் செக்யூரிட்டி குறித்தெல்லாம் விவாதிக்க நினைத்திருந்தேன்.”

“ஷிட் ஹாப்பன்ஸ். இட் ஹாப்பன்ட். மேலும் இனி நீதானே அடுத்தது, என்னுடன் விவாதம் தேவையில்லை”, என்று கண்ணடித்தான். சரி, இப்போது கோரிக்கையை சொல்கிறேன் கேள். கின்னகா நீயும் கேள்”

“சொல் விஷ்ணு”, என்றாள்.

“என்னுடைய புதியவர்கள் கோட்பாடு இன்னும் ஹைப்போதீசிஸ் அளவில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் நாம் இன்னும் ஒரு புதிய ஆஃப்ஸ்பிரிங்கை உருவாக்கவில்லை. இயக்கத்தில் நான் கண்ட தரமான புதியவர்கள் நீங்கள்தான். நீங்கள் இருவரும் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்க வேண்டும். அக்குழந்தையை நாம் வளர்ந்ததுபோலவே வளர்க்க வேண்டும். இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையான அக்குழந்தையும் நம்மைப் போலவே ஆனால்தான், நம்மால் நாம் புதியவர்கள் என்று அடித்து சொல்ல முடியும். ஒரு வலுவான தியரியை அமைத்து சக புதியவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும்.”

“என்னால் உத்திரவாதம் அளிக்க முடியாது. யோசிக்கிறேன் விஷ்ணு.”, என்றாள்.

“நல்லது. சகோ, இப்போது பொறுப்பு. இது மிகவும் முக்கியமானது. இதை நீ நிறைவேற்றியே ஆகவேண்டும்.”, என்றான்.

“சொல் விஷ்ணு! என்னால் முடிந்ததை செய்கிறேன்”, என்றேன்.

“உன்னோடு இப்பொழுதும் முரண்படுகிறேன் சகோ. உலகில் இரண்டு அறிவுஜீவி இனங்கள் அமைதியுடன் வாழ்வது கடினம். ஒரு இனம் அடையாளங்களால் புரையோடிப்போயிருக்கிறது. அதோடு போட்டி போட வேண்டுமென்றால், அடையாளங்களை நிராகரிக்கும் நமக்கும் தற்காலிக ஏற்பாடாக அடையாளங்கள் தேவை. நம் இனத்திற்கோர் அடையாளம் அளிக்கும் பெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.”

“அப்படியென்றால்?”

“எல்லா நிறுவனமயப்படுத்தப்பட்ட அடையாளங்களும் எங்கிருந்து துவங்குகின்றன? ஒரு புத்தகத்திலிருந்து! ஒரு புத்தகத்தை நீ எழுத வேண்டும்.”, என்றான்.

(தொடரும்...)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி