Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

விடியற்காலை

கதிரவக் கரங்கள் உலகைத் தழுவ,
சிலுசிலு சாரல் தாளம் இசைக்க,
உலகம் ஒன்றாய் புதிதாய் விழிக்க,
வினையைத் துவக்கும் விடியற்காலை !

பெட்டையுஞ் சேவலும் விழித்தெழுந்  தலற,
நிரம்மிகு மலர்கள் சிரம்நிமிர்ந் தழைக்க,
நீர்த்துளி இலைகளில் பொன்னாய் ஜொலிக்க,
புத்துயிர் அளிக்கும் விடியற்காலை !

மஞ்சள் வானம் மனத்தில் பதிய,
குளிர்ந்த காற்று நெஞ்சை வருட,
வரையிலா வண்ணம் வானில் பரவ,
சொர்க்கம் பொங்கும் விடியற்காலை !

வனமே வானை மௌனமாய் ரசிக்க,
வண்டுகள் பூக்களில் தேனை ருசிக்க,
புட்களின் பாடல் பலவிதம் ஒலிக்க,
புலன்களைக் கவரும் விடியற்காலை !

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

மகாத்மாவிற்கு முந்தைய காந்தி