Posts

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

W.E.B. டுபாய்சின் எழுத்துகள் தற்பொழுது மின்வடிவில்

Image
      கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அமெரிக்க எழுத்தாளரும் சிந்தனையாளரும் பத்திரிகையாளருமான W.E.B. டுபாய்சின் பேச்சுகளும் எழுத்துகளும் தற்பொழுது மின் வடிவத்தில் கிடைக்கின்றன. Collected Works of Gandhi-யை இணையத்தில் பதிவேற்றியதைப் போன்ற பெரும் பணி இது. காந்தியும் டுபாய்சும் ஒருவருக்கொருவர் சில கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். காந்தி குறித்து டுபாய்ஸ் எழுதிய, ஆனால் பிரசுரமாகாமல் போன எழுத்துகளும் இம்மின்வடிவில் அடக்கம். அம்பேத்கர் ஜூலை 1946-ல் டுபாய்சுக்கு எழுதிய கடிதமும் நம் பார்வைக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலைக்கும் இந்தியாவில் தீண்டத்தகாதார் என்று கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்றும், கறுப்பின மக்கள் ஐ.நா. சபைக்கு அனுப்பிய மனுவின் இரண்டொரு பிரதியைத் தனக்கு அனுப்பி வைக்க முடியுமா, அதே போன்றதொரு மனுவை இந்தியாவின் தீண்டத்தகாதோரும் அனுப்ப உத்தேசித்திருக்கிறோம் என்றும் எழுதியிருக்கிறார். முழு கடிதத்தின் சுட்டி கீழே. அதே மாதத்தில் டுபாய்ஸ் அம்பேத்கருக்கு பதில் கடிதம் எழுதி, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா

சாப்ளினின் கல்லறை

Image
Corsier-sur-Vevey. வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட்டைப் பிரிண்ட் எடுத்து ஒரு மலர்ச்செண்டுடன் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் துணைக்கு வந்திருந்தார். சாப்ளின்பால் நான் மொத்தமாக விழ சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட் ஒரு காரணம். சக மனிதர்களுடன் பழகுகையில் நாம் பல முகமூடிகளை அணிகிறோம், வேடங்களைப் போடுகிறோம், பாத்திரங்களை ஏற்கிறோம். நம்முடைய சுயம் என்று நாம் நினைக்கும் அந்தரங்க இயல்புகளை நாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் காட்டிவிடுவதில்லை. தொடர்ந்து ஓர் இடைவெளியுடனே பயணிக்கிறோம். ஆனால் ஒருசில மனிதர்களிடம் பழகுகையில் ஒரு குறிப்பிட்ட பொழுதில் நம் பாசாங்குகளைக் களைந்துவிட யத்தனிக்கிறோம். சில நொடிகளுக்கு நம் சுயத்தை அப்பட்டமாகத் திறந்துகாட்டத் துணிகிறோம். மிகவும் அவஸ்தையான சூதாட்டத் தருணங்கள் அவை. “இதுதான் நான். அழகாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா? விலக வேண்டும் போல் தோன்றுகிறதா? உன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பிடிக்கவில்லையா? இந்த அசிங்கம் இனி வெளியே யாருக

பாரிக்கின் காந்தி

Image
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்கு பாரிக்கின் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை மீள்வாசிப்பு செய்தேன். காந்தியின் மீது ஒரு மிக முக்கியமான விமர்சனத்தை பாரிக் வைக்கிறார். திலகர், அரவிந்தர், சாவர்க்கர் போல் இந்து மதத்தின் அடிப்படையில் இந்திய ஒற்றுமையைக் கற்பனை செய்யாமல், காந்தி இந்தியாவை பன்முக வரலாற்றுப்பார்வையோடு அணுகினார். பல்வேறு மத, இன, மொழியடையாளங்களின் கூட்டுத்தொகுப்பாகத்தான் இந்தியாவை அவர் கண்டார். ஆனால் அந்தக் கூட்டுத்தொகுப்பின் இயல்பை விளக்கும்போது அவரிடம் இந்துச் சாய்வு இருந்தது என்கிறார் பாரிக். அதாவது இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்து மதத்தின் சாதனையாகவும் இந்து சகிப்புத்தன்மைக்கான எடுத்துக்காட்டாகவும் காந்தி புரிந்துகொண்டார். இஸ்லாமியர்களுக்கான பண்பாட்டு வெளி காந்தியின் இந்தியாவில் இருந்தது, ஆனால் அது ஓர் இந்து சட்டகத்திற்கு உள்ளேதான் அமைக்கப்பட்டது என்கிறார் பாரிக். அதாவது இந்து அடிப்படைவாதிகளைப்போல் இந்தியாவை இந்துமயமாக்காமல் காந்தி இந்துமதத்தை இந்தியமயமாக்க முயன்றார், அந்த முயற்சியின் போக்கில் இந்துமதத்தில் உள்ள இஸ்லாமியத் தாக்கங்களை அங்கீகரித்தார். ஆனால் இவை அனைத்தைய

திருவாதிரை

(1 - ஆணுறுப்பில் விழுந்த பல்லி ) === “அடிக்கடி சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது டாக்டர்” என்றேன் கவலையுடன். “நான் கொடுத்த மருந்தைத் தடவினீர்களா?” “வலியோ தடிப்போ எதுவுமே இல்லையே டாக்டர்? மருந்து வேலை செய்ததா என்று எப்படித் தெரியும்?” “தடவினீர்களா இல்லையா?” “தடவினேன். இன்னும் கொஞ்சம் இருக்கிறது.” “சரி. இப்போதைக்கு ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது என்றால் வாருங்கள்.” என்று அனுப்பிவைத்தார். மீண்டும் நான் சொன்னதை நம்பியதுபோல் தெரியவில்லை. அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை நானே தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணத்தை அதன் மதிப்பு தெரியாமல் உதாசீனப்படுத்தி, பிறகு அதுவும் நிராகரிக்கப்பட்டு மீண்டும் திரளோடு திரளாகக் கலந்திருந்தேன். தோள்பட்டை அழுத்தியது. ஆபீசில் வேறு ஆட்குறைப்பு நடக்கப்போகிறது என்ற வதந்தியால் மனது அமைதியற்று இருந்தது. பல்லி விழுந்த நிகழ்வைக் கொண்டாடச் சொன்னார் அந்தத் தத்துவ அறிஞர். அவர் சொன்ன சில விஷயங்கள் புரியவில்லை. ஆனால் எதையோ தீர்க்கமாக சொல்வது போலவே சொன்னார். அப்பொழுதே கேட்டிருக்கவேண்டும். குறைந்தபட்சம் பத்து நிம

ஹிரோஷிமா மேயர் மட்சூயி கசூமியின் அமைதிப் பிரகடனம் - ஆகஸ்ட் 6, 2020

அமைதிப் பிரகடனம் மட்சூயி கசூமி, மேயர், ஹிரோஷிமா நகரம் ஆகஸ்ட் 6, 2020 ஆகஸ்ட் 6, 1945 அன்று, ஒரே ஓர் அணுகுண்டு எங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் அழித்தது. “இந்த இடத்தில் இன்னும் 75 வருடத்திற்கு ஒன்றும் முளைக்காது” என்ற வதந்தியொன்று அப்பொழுது இருந்தது. ஆனால் ஹிரோஷிமா மீண்டது; இன்று அமைதியின் குறியீடாக, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வருகை தரும் இடமாக விளங்குகிறது. மனிதகுலம் இன்று கொரோனா வைரஸ் தொற்று என்ற புதியதோர் ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்தகாலப் பேரழிவுகளிலிருந்து நாம் கற்ற பாடங்களின் மூலம் நம்மால் இதைக் கடந்துவர முடியும். சென்ற நூற்றாண்டில் 1918-ல் தொற்று நோய் பரவியபோது அது கோடிக்கணக்கான உயிர்களைப் பறித்து மனிதகுலத்தையே அச்சுறுத்தியது. காரணம், முதலாம் உலகப்போரில் ஒன்றோடொன்று போரிட்ட நாடுகளால் அத்தொற்றுநோயை ஒன்றாக இணைந்து எதிர்க்க முடியவில்லை. அதன் பிறகு நிகழ்ந்த தேசியவாதங்களின் எழுச்சி, இரண்டாம் உலகப்போருக்கும் அணுகுண்டு வீச்சிற்கும் வழிகோலியது. வலிமிகுந்த இக்கடந்தகாலம் மீண்டும் நம் கண்முன்னே நடைபெற நாம் அனுமதித்துவிடக்கூடாது. குறுகிய நோக்கம் கொண்ட தேசியவாதத்தை சிவில்

ஆணுறுப்பில் விழுந்த பல்லி

தூங்கச் செல்வதற்கு முன் ஒன்றுக்குப் போகையில் பல்லி ஒன்று என் உறுப்பில் விழுந்துவிட்டது. இதயம் ஒரு வினாடி நின்றே போய்விட்டது. பதறியடித்தபடி உதறினேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. அடுத்த நாள் காலை டாக்டரிடம் சென்றேன். “பல்லி உங்களைத் தீண்டியதா?” என்று கேட்டார். “அப்படியே விழுந்துவிட்டது” என்றேன். “அதன் நாக்கு பட்டதா?” என்றார். “அதெல்லாம் தெரியவில்லையே, உதறினேன் ஓடிவிட்டது”. “விழுந்த இடத்தில் இதைத் தடவவும்” என்று ஒன்றை எழுதிக்கொடுத்தார். ஜோசியக்காரரிடம் போகவே பயமாக இருந்தது. தம்பியிடம் சொன்னேன். “சும்மா உளறாதே, இதெல்லாம் நடக்க சாத்தியக்கூறு மிகவும் குறைவு” என்றான். “அதுதான் நடந்துவிட்டதே!” என்று முறையிட்டேன். “என் அண்ணனுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று என் அறிவு ஏற்கனவே சிலவற்றைக் கற்பனை செய்து வைத்திருக்கிறது, ஒருவேளை நடந்துவிட்டால் தாங்கிக்கொள்வதற்காக. சாலை விபத்து, புற்றுநோய், தற்கொலை, மாரடைப்பு, மரம் சாய்வது, ஆனால் பல்லி இப்படி விழுவதெல்லாம் சாத்தியம் மிகமிகக் குறைவு. என்னால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை, எனவே ஏற்க மாட்டேன்” என்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டான். இணையத்தில் தேடின

கடிதம் - யுட்டா ப்யோனிஷ்

அன்புள்ள விஷ்ணு, ஹராரியின் கட்டுரையை அனுப்பியமைக்கு நன்றி. ஆங்கிலம் தெரிந்த என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உனக்கே தெரிந்திருக்கும். சில அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மருந்தக மருத்துவமனைகளைத் தவிர பெர்லினில் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. முற்றிலும் புதியதோர் வாழ்க்கை முறைக்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறோம். குடும்பத்தினரோடு, நண்பர்களோடு, அண்டை வீட்டாரோடு நெருங்கிப் பழக முடியவில்லை. நல்லவேளையாக இதுவரை எனக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை. தள்ளாத முதுமையின் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை நிலை எனக்குப் பல சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. வீடு இருக்கிறது, தோட்டம் இருக்கிறது, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கப்பட இருக்கின்றன. இப்போதைக்குப் பிரகாசிக்கும் சூரியன், இப்போதைக்கு நீல வானம், இப்போதைக்குக் குயில் சத்தம். ஆனால் என்னைப் போல் எல்லோருக்கும் இது அமையவில்லையே? உலகின் பல நகரங்களில் சிறுசிறு அறைகளில் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளியே விளையாட வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள்