Posts

Showing posts with the label அனுபவங்கள்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சாப்ளினின் கல்லறை

Image
Corsier-sur-Vevey. வாழ்வில் என்றைக்காவது ஒரு நாள் இங்கு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று நினைக்கவில்லை. சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட்டைப் பிரிண்ட் எடுத்து ஒரு மலர்ச்செண்டுடன் சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் துணைக்கு வந்திருந்தார். சாப்ளின்பால் நான் மொத்தமாக விழ சிட்டி லைட்ஸ் படத்தின் கடைசி ஷாட் ஒரு காரணம். சக மனிதர்களுடன் பழகுகையில் நாம் பல முகமூடிகளை அணிகிறோம், வேடங்களைப் போடுகிறோம், பாத்திரங்களை ஏற்கிறோம். நம்முடைய சுயம் என்று நாம் நினைக்கும் அந்தரங்க இயல்புகளை நாம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் காட்டிவிடுவதில்லை. தொடர்ந்து ஓர் இடைவெளியுடனே பயணிக்கிறோம். ஆனால் ஒருசில மனிதர்களிடம் பழகுகையில் ஒரு குறிப்பிட்ட பொழுதில் நம் பாசாங்குகளைக் களைந்துவிட யத்தனிக்கிறோம். சில நொடிகளுக்கு நம் சுயத்தை அப்பட்டமாகத் திறந்துகாட்டத் துணிகிறோம். மிகவும் அவஸ்தையான சூதாட்டத் தருணங்கள் அவை. “இதுதான் நான். அழகாக இருக்கிறதா? உனக்குப் பிடித்திருக்கிறதா? விலக வேண்டும் போல் தோன்றுகிறதா? உன் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறதா? பிடிக்கவில்லையா? இந்த அசிங்கம் இனி வெளியே யாருக...

கடிதம் - யுட்டா ப்யோனிஷ்

அன்புள்ள விஷ்ணு, ஹராரியின் கட்டுரையை அனுப்பியமைக்கு நன்றி. ஆங்கிலம் தெரிந்த என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உனக்கே தெரிந்திருக்கும். சில அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மருந்தக மருத்துவமனைகளைத் தவிர பெர்லினில் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. முற்றிலும் புதியதோர் வாழ்க்கை முறைக்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறோம். குடும்பத்தினரோடு, நண்பர்களோடு, அண்டை வீட்டாரோடு நெருங்கிப் பழக முடியவில்லை. நல்லவேளையாக இதுவரை எனக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை. தள்ளாத முதுமையின் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை நிலை எனக்குப் பல சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. வீடு இருக்கிறது, தோட்டம் இருக்கிறது, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கப்பட இருக்கின்றன. இப்போதைக்குப் பிரகாசிக்கும் சூரியன், இப்போதைக்கு நீல வானம், இப்போதைக்குக் குயில் சத்தம். ஆனால் என்னைப் போல் எல்லோருக்கும் இது அமையவில்லையே? உலகின் பல நகரங்களில் சிறுசிறு அறைகளில் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளியே விளையாட வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள்...

மேஜர் தம்பி

தம்பிக்கு இன்றோடு 18 வயதாகிறது. திடீரென்று சென்ற மாதம் “வோட்டர் ஐடி ரெஜிஸ்டர் பண்ணணும், கூட வா” என்று அவன் கூப்பிட்டபோது மலைப்பாக இருந்தது. ஒன்னாங்கிளாஸ் படிக்கையில் டீச்சர் ஒவ்வொருவராக எழுப்பி எத்தனை அக்கா தங்கச்சி அண்ணன் தம்பி என்று கேட்டுக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராக எழுந்து இரண்டு அக்கா என்றோ, ஒரு தம்பி என்றோ சொல்லி உட்கார்ந்தனர். எனக்கு அது என்னமோ மார்க் போலத் தோன்றியதோ என்னவோ, என் முறை வந்ததும் எனக்கு யாரும் கூட இல்லை என்று அழுதுகொண்டே சொன்னேன். மொத்த கிளாசும் சிரித்ததும், அதை வீட்டிற்கு வந்து விசும்பிக்கொண்டே சொன்னதும் நேற்று நடந்ததுபோல் இருக்கிறது. பிறந்த நாள் பரிசாக இரண்டு புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். “உனக்குள் இருக்கும் சிறுவனுக்கு” என்று எழுதி ‘Diary of a Wimpy Kid'-டின் புதிய புத்தகம் ஒன்று. சிறு வயதிலிருந்தே அவன் அப்புத்தகத்தை வாங்கி சேமித்துக்கொண்டிருக்கிறான். இது பதினொன்றாவது புத்தகம் என்று நினைக்கிறேன். இன்னொரு புத்தகமாக எதைக்கொண்டுக்கலாம் என்று எனக்கு யோசிக்க அவசியமே இருக்கவில்லை. இதை இவ்வளவு தாமதமாக வாசித்துவிட்டோமே, அது சற்றே சீக்கிரம் என் கைக்கு வந்திருக்...

நிவாரண நிதி

கேரளத்திற்கு வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் வழிமுறைகளைப் பார்த்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு முறை நினைவிற்கு வந்தது. இன்று முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இரண்டே நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம். பே.டி.எம். வசதி இருக்கிறது. அமேஜான் மூலமாக பொருட்களையே நேரடியாக அளிக்கலாம். எண்ணற்ற சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு வந்துவிட்டது. கார்கில் ஆக்கிரமிப்பு வந்த சமயம் எனக்கு ஆறு வயது. குஜராத் பூகம்பத்தின்போது எட்டு. பள்ளியில் நிவாரண நிதி அட்டை என்று ஒன்று கொடுத்தார்கள். அதில் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதி அளவைக் குறிக்க இடம் இருக்கும். யார் இந்தப் பணத்தையெல்லாம் திரட்டியது என்று என் பெயர், முகவரி எழுத மேலே ஒரு இடம் இருக்கும். இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தெருக்களில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி நிதி திரட்டினோம். ஐம்பது பைசா முதல் அரிதாக ஐம்பது ரூபாய் வரை வரும். நல்ல நோக்கத்திற்காக என்றெல்லாம் அந்த வயதில் தோன்றவில்லை. அடுத்தவரை விட அதிகமாக நிதி திரட்டவேண்டும் என்ற உந்துதலில் அலைந்தோம். அந்த துர்நிகழ்வுகளின் கோரம் தெரியாத வயது. வீட்...

கலைஞர்

கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் பேருந்தில் பயணித்துதான் கல்லூரி சென்றேன். அதனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தாக வேண்டும். இறுதி இரண்டு ஆண்டுகளின்போது விடுதிக்கு மாறியபின் ரூம்மேட்ஸ் எங்களுக்கு சற்றே சோம்பேறித்தனம் குடிகொண்டுவிட, சில மாதங்கள் தாமதமாக எழ ஆரம்பித்தோம். பிறகு ஒரு உத்வேகத்தில் நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு “காலையில எழுறோம், ஜாகிங் போறோம். ஒருத்தன் தூங்கிட்டா எழுப்பி கூட்டிட்டுப் போறோம்” என்று திட்டம் போட்டோம். அப்பொழுதெல்லாம் சிலமுறை அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஒருவரையொருவர் இப்படித்தான் எழுப்பியிருக்கிறோம் - “அங்க ஒரு கிழம் முரசொலிக்குத் தலையங்கம் எழுதிட்டு இருக்கு. வாடா!” அரசியல் நிகழ்வுகளில் அரைகுறை ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பல நாட்களில் பேச்சின்போது ஏதாவது ஒரு கலைஞர் ரெபரன்ஸ் வந்துவிடும். அதிகாலை ஒருமணிநேரம் தலையங்கம் எழுதுவார், இரண்டு மணிநேரம் செய்தித்தாள்கள் வாசிப்பார் என்று கலைஞரின் டேபிளான் ஜூவியில் வெளியானபோது அதில் கவரப்பட்டுதான் நான் தினத்திட்டங்களே போட ஆரம்பித்தேன். மையக் கவர்ச்சியே அவருடைய வயதுதான். உடல்வலு உச்சத்தில் இருந்த வயது எனக்கு, அவரோ தினம் தினம் உழ...

ரோமா

என்னியோ மாரிகோனி வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறேன். ரோமாபுரியின் தெருக்களில் அலைகையில் நிறைய வயோதிகர்கள் தென்படுகிறார்கள். இரண்டு பேரைக் குறிப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் அன்டோனியோவின் சைக்கிள் திருடுபோனது. பட்டப்பகலில் கண் முன்னே நடந்த சம்பவம். அன்டோனியோவால்  அத்திருடனை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்த சைக்கிள் இல்லாவிட்டால் வேலை போய்விடும். அந்த வேலைக்காகத்தான் படுக்கை விரிப்புகளையெல்லாம் விற்று அந்த சைக்கிளை அடகுக் கடையிலிருந்து மீட்டிருந்தான் அன்டோனியோ. போய்விட்டது. அவனும் அவனுடைய மகனான குட்டிப்பையன் ப்ரூனோவும் அந்த சைக்கிளைத் தேடி ரோமாவை சுற்றியலைந்தார்கள். கிடைக்கவேயில்லை‌. ப்ரூனோவுக்குப் பசியெடுக்க, அன்டோனியோ வேறு வழியில்லாமல் வேறொரு சைக்கிளைத் திருடப்போக, தப்பிக்கத் தெரியாமல் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டான். ஊரே ஒன்று சேர்ந்து அவனை அடித்துத் துவைத்துவிட்டது. தன் மகனின் கண்முன்னே திருட்டுப்பட்டம் பெற்று அடி வாங்கியதில் அன்டோனியோவுக்கு ஒருபுறம் அவமானம் பிடுங்கித் தின்ன, மறுபுறம் தன்னுடைய திருட்டிற்கான அத்தனை நியாயங்களும் நிழலாடியதில்...

வெல்கம் 2018!

நாளை புத்தாண்டு. இன்னிக்காவது ஏதாவது வித்தியாசமா பண்ணு, 2017ல ஏதாவது பண்ண மாதிரி இருக்கும், என்றார்கள். அதனால் 2017-ல் இன்று மட்டும் புதுசா இப்படி. ஸ்னிப்பெட்ஸ். -------------------------------------------------------------------- கடவுள் கொஞ்சம் தேவைப்படுகிறார். 2018-ல் அவரை ஏற்றுக்கொண்டு பார்க்கலாம் என்றிருக்கிறேன். நீ எல்லாம் தைரியசாலி, மனோதிடம் மிக்கவன். லைஃப் ஆப் பையின் மூலம் யன் மார்ட்டெல் என்ன சொல்ல வந்தார், என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக்கொள்ளாமல், ஈகோவை சொறிந்துகொள்ளாமல், என்ன ரிசல்ட் வருகிறது என்று பார்க்க விருப்பம். ஆக இந்த வருடம் நான் போராடப்போவது எனக்குள் இருக்கும் நிஹிலிஸ்டோடு என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அவரவர் நம்பும் கடவுள் அவரவருக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் தரட்டுமாக. -------------------------------------------------------------------- சென்னையில் எந்த ஏரியாவில் எந்த கடையில் பானிபூரி நன்றாக இருக்கும் என்று ஒரு டேட்டாபேஸ் நாக்கில் பதிந்துவிட்டது. சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள். --------------------------------------------------------------------...

‘கக்கூஸ்’ ஆவணப்படம்

Image
          தினமும் மலம் கழித்துவிட்டு பாத்ரூம் ஃப்ளஷை அமிழ்த்தி அந்த அருவருப்பான இதை உள்ளே தள்ளிவிட்டு வருகிறோம். நம்முடைய அந்த அருவருப்பான இதை ஒரு சகமனிதன் கைகளால் அள்ளி வீசுகிறான் என்ற உண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம்? ‘ஹே அதுவும் ஒரு தொழில் மேன்’ என்றா? ‘அதான் சம்பளம் வாங்குகிறார்களே’ என்றா? ‘பிடிக்கலேன்னா வேற தொழிலுக்குத்தான் போகட்டுமே’ என்றா? தினமும் மலத்தை முகர்ந்து மூக்கைப் பொத்தி நகரும் நாம், இந்த உண்மையும் நாறுகிறது என்பதற்காக மூக்கைப் பொத்திக் கடந்துவிடப் போகிறோமா? அப்படியே கடந்தாலும் இம்முறை எவ்வளவு தூரம் விலகினாலும் நாற்றம் குறையாது, ஏனெனில் இம்முறை நாற்றம் நம்மிடமிருந்துதானே வீசுகிறது? நகரத்தில் சாதி இல்லவே இல்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? அல்லது ஒருவேளை தெரிந்தேதான் இந்த வஞ்சகத்திற்குத் துணை போகிறோமா?           இதுவரை ‘கக்கூஸ்’ ஆவணப்படம் பார்க்காதவர்கள், கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். உங்களை அந்தப் படம் துன்புறுத்தும், தூங்க வ...

நன்றி சோ

Image
            இன்று காலை எழுந்ததும் சோ காலமானார் என்ற செய்தி அலைபேசியில் வந்ததும் ஒரு கணம் ‘முனுக்’கென்று இதயத்தில் வலித்தது. இதற்கு முன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குஷ்பு தவறுதலாக சோ இறந்துவிட்டார் என்று சொன்னபோது ஏற்பட்ட வலி. அதற்குப் பிறகு ஒன்றரை வருடம் கழித்து இப்பொழுதுதான் சோவின் நினைவே வந்தது. சோவின் சிந்தனையை விட்டு வெகு தூரம் தள்ளி வந்து, மற்ற பிற கருத்தாக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டு காலம் சோ அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதெல்லாம் அவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு சோவைப் பற்றிய நினைப்பு முடிந்து போனது. ஆனால் தற்போது நினைத்துப் பார்த்தால் இன்று ஒரு மாணவனாக நான் தொடர்ந்து அரசியலை வாசித்தபடி இருப்பதற்குக் காரணம் சோ தான்.           சென்ற வாரம் என் உறவினர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்தபோது பன்னிரண்டு வயது நிரம்பிய என் மாமா பையன் என்னிடம், “யப்பா எப்படித்தான் பாலிடிக்ஸ் பேசுறீங்களோ, போரடிக்குது”, என்று கிசுகிசுத்தான்...

சென்னை 377

Image
Wall painting at Chennai Central by NIFT           ‘கல்லூரி சாலை’ பாடலில் வரும் அகலமான செட் சாலையைக் காட்டி “மெட்ராஸ் காட்றாங்க பாரு!”, என்று என் பாட்டி எனக்கு சோறூட்டியதுதான் மெட்ராஸ் பற்றிய என் முதல் நினைவு. சூளைமேட்டில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்லும் வழியில் கூவத்தைக் கடந்தபோது முதன் முதலாக என் மூக்கு பொத்தப்பட்டது இரண்டாவது நினைவு. ஆனால் சென்னைக்கு வந்தபிறகு இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட நினைவுகளை இந்நகரம் எனக்குத் தந்துவிட்டது, தந்துகொண்டிருக்கிறது.           வரலாற்றில் ஆர்வம் வந்த புதிதில் சென்னையின் கடந்த காலத்தை கற்பனை செய்து பார்த்ததுண்டு. தேவன் பார்த்த ‘டிராம் ஓடிய மெட்ராஸ் ‘ரஸ்தா’க்கள்’, ‘ரத்தம் ஒரே நிற’த்தில் வரும் கறுப்பர் நகரம், போன்றவற்றை சிறுவயதிலேயே வாசித்துவிட்டதால், சென்னை சாதாரண நகரில்லை, நெடும் வரலாற்றைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும் இரசவாத நகரென முதலிலேயே தெரிந்துவிட்டது. அதன் சரித்திரப் பக்கங்களை அவ்வப்போது நமக்குத் திறந்துகாட்டும் அழகே தனி. அப்படித்தான...

நாங்களும் ரவுடிதான்

Image
விக்னேஷ்: நீ ஒரு இலக்கிய வாசகன் . விஷ்ணு: என்னது ஏலக்கா வாசமா ? விக்னேஷ்: சிலப்பதிகாரம் படிப்பவன் வாசகன். இளங்கோவைப் படிப்பவன் இலக்கிய வாசகன். விஷ்ணு:   நான் உனக்கு ‘ இலக்கிய ரவுடி ’ னு பட்டம் குடுக்கலாம்னு பாக்கறேன். நீ கொடுத்த ஈபுக்ஸ்ல என்னன்னமோ இருக்கு. பிராமி எழுத்துகள் எல்லாம் இருக்குன்னா பாத்துக்கோயேன்! விக்னேஷ்: நானே முழுசா படிக்கல . எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் . விஷ்ணு: இலக்கிய ரவுடியோட இலக்கணமே அதுதான். எல்லா இடத்திலும் இலக்கிய அறிவை வசூல் செய்வதுதான் அவன் வேலை . இலக்கிய ரவுடியும் ஏரியா பிரிப்பான். சிலப்பதிகாரம் உன்னுது , சீவக சிந்தாமணி என்னுதுன்னு . விக்னேஷ்: நீ சொல்றது எதுவும் புரியல. ஆதலால் நீ ஒரு சிறந்த விமர்சகனாக , சிறு பத்திரிகை கட்டுரையாளனாக பரிணமிக்க வாய்ப்புகள் ஏராளம் . விஷ்ணு: புரியலையா ? வளைஞ்சு நெளிஞ்சு படுத்துருக்கேன் , அதனால என் வார்த்தைகளில் ஏகப்பட்ட உள்மடிப்புகள் இருக்கும் . விக்னேஷ்: உலகமயமாக்கலுக்கு பின்னான வாழ்க்கை முறையின் கூறுகள் நீ படுத்திருப்பதில் வெளிப்படுகிறது . விஷ்ணு: இல்லை. நான் தனியாகப் ...