Posts

Showing posts with the label எண்ணினேன் எழுதினேன்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நேரு நினைவு தினம்

மேற்கு ஐரோப்பிய சிந்தனைப் பரப்பில் இயங்கும் அறிவுஜீவிகளுக்கு நேருவின் மீது அதீத விமர்சனப் பார்வை இருப்பதைக் கடந்த மூன்று மாத உரையாடல்களில் என்னால் உணர முடிந்தது (சில அதிரடியான விதிவிலக்குகள் உண்டு; முடிந்தால் இன்னொரு பதிவில்). அரசு இயந்திரத்திற்குள் இயங்கும் ஒருவர் அவ்வியந்திரத்தின் வன்முறை ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகிறார். அந்த நிலையே அவரை காந்தியத்திலிருந்து விலக வைத்துவிடுகிறது என்று ஒரு சிலர் கருத்து கொண்டிருந்தார்கள். “நேருவுக்கு காந்தியைத் தாண்டிய தனித்த அடையாளம் உண்டு, ஆனால் அதே நேரத்தில் காந்திக்கு நெருக்கமாக அவரை வைக்காமல் வேறு யாரை வைக்க முடியும்?” என்று நான் வாதிட்டேன். ஒவ்வொரு முறையும் நேருவின் குடும்பம் என்று அவர்கள் சொல்லும்போதும் இடைமறித்து ‘இந்திராவின் குடும்பம்’ என்று திருத்தியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள். ஜெர்மனியை நாசிசத்திலிருந்து காப்பாற்றியவர் என்று சர்ச்சிலின் மீது அதீத மதிப்பு என்னுடைய சில ஐரோப்பிய நண்பர்களுக்கு உண்டு. ஆனால் காலனிய ஆதிக்கத்திற்கு உள்ளான ஒரு நாட்டிலிருந்து வந்த நான் சர்ச்சிலை ஒரு மோசமான தலைவராக சித்தரித்தப...

என்னியோ மாரிகோனி

சில பாடல்களைக் கேட்கும்போது, சில படங்களைப் பார்க்கும்போது டைம் டிராவல் செய்ய வேண்டும் என்ற இச்சை கட்டுக்கடங்காமல் வரும். ஸ்பேஸ் ஒடிசி திரைப்படத்தின் டைட்டில் கார்டை என் 15 இன்ச் லேப்டாப்பில் பார்த்தபோது என்னத்துக்குடா லேட்டா பொறந்த என்று கடுப்பாக இருந்தது. 1968‍ல் பெரிய திரையில் அந்த டைட்டில் ஓடும்போது கூட்டத்தோடு கூட்டமாக நானும் வாயைப் பிளந்தபடி நுகர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல் சில பாடல்களைக் கேட்கும்போது "இதை ரிக்கார்டிங் ரூமில் நூறு வாத்தியங்கள் முழங்க உருவாக்கும்போது கூட இருந்திருக்க வேண்டும்" என்று தோன்றும். காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் 'நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா' பாடலை எப்பொழுது கேட்டாலும் டைம் டிராவல் செய்து அதன் ரிக்கார்டிங்கைப் பார்க்க வேண்டும் என்று ஏக்கமாக இருக்கும். அதேபோல்தான் இந்தப் பாடல் . பேரரக்கன் என்னியோ மாரிகோனி போட்ட இசை. கில்பில் படத்தின் என்ட் கார்டில் 'நவஜோ ஜோ' என்று ஒரு படத்தின் பெயர் வித்தியாசமாக இருக்கவே, சரி பார்ப்போமே என்று பார்த்தேன். அது நவஜோ இல்லை, நவஹோ என்ற தகவலைத் தவிர அத்திரைப்படத்தில் எனக்கு வேறு எத...

மன்னிப்பு

சமீபகாலத்தில் தமிழ்நாட்டில் மன்னிப்பு கேட்பதற்கு மிகவும் அருகில் வந்தது சிவக்குமார்தான். மற்ற அபாலஜிக்கள் எல்லாம் அபாலஜியே கிடையாது. 1. தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் (நிபந்தனை வைத்தல்) 2. உண்மைக்குப் புறம்பாக இருப்பின் பகிர்ந்தது தவறுதான். 3. பெருவாரியானவர்கள் தவறு என்று நினைப்பதால் மன்னிப்பு கேட்கிறேன் (சிவக்குமார்) 4. என் செயல்களுக்கு வருந்துகிறேன் (மறைமுகப் பொறுப்புத் துறப்பு). 5. தவறுகள் நடப்பது இயற்கை, ஆகவே... (நீர்த்துப்போகச்செய்தல்) 6. என்னையறியாமல் புண்படுத்திவிட்டேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்று நினைக்கவில்லை (தான் சரியாகத்தான் பேசினேன் என்று முட்டுக்கொடுத்தல்). கடைசியாக சிவக்குமார் 'வெரி சாரி' என்றார். அதுதான் அபாலஜி. மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்பதும் அந்தப் பையனின் முடிவு. அந்த 'வெரி சாரி' ஆனால் அரிய நிகழ்வு.

அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்

Image
'அசாசின்ஸ் க்ரீட்' வீடியோ கேம் சீரிசில் கடைசியாக வந்த ‘அசாசின்ஸ் க்ரீட் ஒரிஜின்ஸ்’ வீடியோ கேமை இப்பொழுதுதான் முழுமையாக அனுபவிக்க முடிந்தது. அசாசின்ஸ், டெம்ப்ளார்ஸ் என்று இரண்டு எதிரெதிர் குழுக்கள் உலகம் முழுவதும் காலம் காலமாகப் போரிட்டு வருகின்றன. இரண்டுமே அமைதியை விரும்புபவை, ஆனால் வழிமுறைகள் வெவ்வேறு. ஒழுங்கின் மூலமாகத்தான் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று டெம்ப்ளார்கள் அதிகாரத்தைக் குவிப்பார்கள். இல்லை, கட்டற்ற சுதந்திரத்தின் மூலமாகவே அமைதியைக் கொண்டுவர முடியும் என்று அசாசின்கள் அதிகார பீடங்களைத் தகர்த்துக்கொண்டே இருப்பார்கள். இந்த அசாசின் குழு எப்படி உருவானது என்று சொல்லும் கேம்தான் இந்த ஒரிஜின்ஸ். 2007-ல் முதல் கேம் வந்தது. பத்து வருடங்கள் கழித்து பத்தாவது மெயின்ஸ்ட்ரீம் கேமாக ஒரிஜின்ஸ் வந்திருக்கிறது. இதற்கு முன்பு கடைசியாக வெளிவந்த யூனிட்டி (ப்ரெஞ்சுப் புரட்சி காலம்) மற்றும் சிண்டிகேட் (தொழிற்புரட்சி காலம்) சரியாக ஓடவில்லை (எனக்கு யூனிட்டி மிகவும் பிடித்தது, ஆனால் டெக்னிகல் பிரச்னைகள் நிறைய வந்து விளையாடும் மூடை ரொம்பவே கெடுத்தது). போச்சு, அசாசின்ஸ் க்ரீட் கேம் ...

அய்யப்பனும் Heteronormativity-யும்

நான் பார்த்து வியக்கும் சில நண்பர்கள் “என்ன அய்யப்பா, இனிமே ஜாலியா?” போன்ற பதிவுகளை ஷேர் செய்யும்போது சற்றே வருத்தமாக இருக்கிறது. Heteronormativity என்று இதற்குப் பெயர். அதாவது அய்யப்பனை ஓர்ப்பால் ஈர்ப்புள்ளவராகக் கற்பனை செய்ய முடியாது என்ற எண்ணத்தை நம்மை அறியாமல் மறைமுகமாகக் கடத்துவது. பாலின சிறுபான்மையினருக்கு இந்த ‘ஜாலியா’ போஸ்ட் சற்றே அசவுகரியத்தைக் கொடுக்கும். இன்றைய சபரிமலைத் தீர்ப்பு எனக்கு உண்மையில் கலவையான உணர்வுகளைத் தந்திருக்கிறது. வழக்கிற்கு சம்பந்தமில்லை என்றாலும் இந்தப் பிரச்னையில் பாலின சிறுமான்மையினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இணைத்தே பார்க்கிறேன். LGBTQA+ சமூகம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அங்கீகரித்தே ஆகவேண்டும். ஏனெனில் ஒரு விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஒரு கடவுளைத் தங்களுடையதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள் என்றால், அந்த முனைப்பிற்கு சமூக-அரசியல் நியாயங்கள் இருக்கின்றன. அந்த நியாயத்தை உணர வேண்டும். குறைந்தபட்சம் லிபரல்கள் என்று சொல்லிக்கொள்பவர்களாவது அதை உணர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உண்டு. ஏனெனில் இது ஆண்-பெண் இருதுருவப் பி...

ஹீலம்

நாக்கு சுரசுரப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இயற்கை மருத்துவத்தின் மூலம் வெறும் மூன்றே மூலிகைகளை வைத்து சரிசெய்துவிடலாம். முதலில் இரண்டு வில்வக் காம்புகள் தேவைப்படும். கடைக்கு சென்று தந்தநேரிக் காம்பு என்றோ தந்தநேரி வில்வக்கட்டை என்றோ கேட்கவும். கொடுப்பார்கள். அந்த வில்வக்காம்பின் நுனியில் இரண்டு தேக்கரண்டி புலிநெய்யைத் தடவ வேண்டும். வெள்ளைப்புலி நெய்யாக இருந்தால் கூடுதல் சிறப்பு. முடிந்தவரை தடவுவதற்கு அலுமினியக் கரண்டிகளைத் தவிர்த்து இளநீர் சுரட்டையை உபயோகித்தால் அதில் இருக்கும் கரிவிந்துவானது வெள்ளைப்புலி நெய்யோடு சேர்ந்து முறத்றால் புரோட்டீனை உருவாக்கும். அந்த முறத்றால் புரோட்டீன் வில்வக்காம்பின் நுனியில் படுகையில் முறோடைட் டையாக்சைடு என்றொரு துர்நாற்ற வாயு வெளிப்படும். அந்த நாற்றத்தைப் பார்க்காமல் கசப்பு மருத்தென நினைத்து நுகருங்கள், இதிலேயே பாதி சுரசுரப்பு போய்விடும். இப்பொழுது அந்தக் கரிவிந்து தடவப்பட்ட புலிநெய் வில்வக்கட்டை இருக்கிறதல்லவா? அதை சுருக்கமாக விந்துக்கட்டை என்று அழைப்பார்கள். அந்த விந்துக்கட்டையை ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளவும். நாட்டுமருந்துக்கடைக்குச் சென்று சத...

நிவாரண நிதி

கேரளத்திற்கு வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் வழிமுறைகளைப் பார்த்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு முறை நினைவிற்கு வந்தது. இன்று முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இரண்டே நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம். பே.டி.எம். வசதி இருக்கிறது. அமேஜான் மூலமாக பொருட்களையே நேரடியாக அளிக்கலாம். எண்ணற்ற சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு வந்துவிட்டது. கார்கில் ஆக்கிரமிப்பு வந்த சமயம் எனக்கு ஆறு வயது. குஜராத் பூகம்பத்தின்போது எட்டு. பள்ளியில் நிவாரண நிதி அட்டை என்று ஒன்று கொடுத்தார்கள். அதில் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதி அளவைக் குறிக்க இடம் இருக்கும். யார் இந்தப் பணத்தையெல்லாம் திரட்டியது என்று என் பெயர், முகவரி எழுத மேலே ஒரு இடம் இருக்கும். இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தெருக்களில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி நிதி திரட்டினோம். ஐம்பது பைசா முதல் அரிதாக ஐம்பது ரூபாய் வரை வரும். நல்ல நோக்கத்திற்காக என்றெல்லாம் அந்த வயதில் தோன்றவில்லை. அடுத்தவரை விட அதிகமாக நிதி திரட்டவேண்டும் என்ற உந்துதலில் அலைந்தோம். அந்த துர்நிகழ்வுகளின் கோரம் தெரியாத வயது. வீட்...

"வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு..."

“வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு” என்று பல பதிவுகளைப் பார்த்தேன். அதனால் உந்தப்பட்டு எழுதுகிறேன். “மேற்கத்திய சமூகத்தில் குழந்தையைக் கடத்தி வன்புணர்வு செய்பவர்களை ஊரே சேர்ந்து  அடித்துக்கொல்லும்போது எப்படி வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்களோ, அதேபோல அவர்களின் சமூகத்தில் தெய்வ நிந்தனை செய்பவர்களை மக்கள் அடித்துக்கொல்லும்போது வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்கள்.” இஸ்லாமிய ஆய்வறிஞர் அந்தோனி மெக்ராய் எழுதிய வரிகள் இவை. சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் வரிகள்’ புத்தகம் வெளிவந்து மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய பொதுச்சமூகத்தினிடையே பெரும் பண்பாட்டுப் பிளவை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் இந்த வரிகளை அவர் எழுதினார். அற சார்பியல்வாதம் மற்றும் பண்பாட்டு சார்பியல்வாதம் (Moral & Cultural relativism) குறித்து அங்கிருந்துதான் என் வாசிப்பு துவங்கியது. தனிமனித நீதியுணர்வு என்பது பலவகைகளில் சிக்கலானது. தனக்கான எல்லைக்கோட்டை அது தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களில் தேடுகிறது. அவ்வாறு தேடிக் கண்டடைகையில் அந்த எல்லைக்கோட்டிற்குக் கீழே உள்ள பிற நீதியுணர்வுகளையெல்லாம் அது காட்டுமிராண்டித்தன...

பப்ஜி

தம்பியின் நண்பர் ஒருவர் தீவிர பப்ஜி ரசிகர். PlayerUnknown's Battlegrounds என்பதன் ‘சிறுபெயர்’தான் பப்ஜி. ஆண்டிராய்டில் இலவசமாகக் கிடைக்கும் துப்பாக்கிச்சூடு விளையாட்டு அது. ஒரே நேரத்தில் பலர் அதில் விளையாடலாம். நூறு பேர் ஒருவரையொருவர் சுட்டுக்கொல்ல வேண்டும், இறுதியில் எவர் எஞ்சியிருக்கிறாரோ அவரே கெலித்தவர். தமிழ்க்கீச்சுலகம் கடந்த சில மாதங்களாக அந்த விளையாட்டினால்தான் கோமாவில் கிடக்கிறது. நிற்க. அந்த நண்பர் ஒரு மரண கேமர். பாத்ரூமில் ஒரு கையால் பப்ஜியாடிக்கொண்டேதான் மைக்ரோநீர் கழிப்பார். நெர்ட் மாணவராக மாறுவேடம் பூண்டு கல்லூரி நூலகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் தடிபுக்கை எடுத்துக்கொண்டு அதற்குள் மொபைலை வைத்து விளையாடுவார். இவற்றையோ இவற்றிற்கு ஒப்பானவற்றையோ செய்தால்தான் அவர்கள் மரண கேமர்கள். அன்னாரின் மொபைல் ஒருகட்டத்தில் விளையாடி விளையாடி களைத்துப்போய் ஸ்லோ ஆகிவிட்டது. இவருக்கோ விரலால் திரையை வலித்து வலித்துக் காத்திருந்து பொறுமை போய்விட, சுற்றியிருந்தவர்களிடம் எரிந்து விழ ஆரம்பித்தார். பிறகு கை நடுக்கம் வந்துவிட, லஸ் கார்னரில் ஒரு சர்வீஸ் சென்டருக்குப் போயிருக்கிறார். மொபைல...

சேப்பாக்க செருப்பு வீச்சு

இந்தப்பக்கம் போராட்டத்தை ஆதரித்தால் வன்முறைக்கான ஆதரவு உண்டோ, மஞ்சள் சட்டைகளை அடிப்பதும் பாம்புகளை விடுவோம் என்று மிரட்டுவதும்தான் போராட்டமோ என்று‌ விமர்சிக்கப்படுகிறது. அந்தப்பக்கம் மைதானத்திற்கு வந்தால் அது இனத்துரோகம், காவிரி குறித்து அக்கறை இல்லை என்று இன உணர்வு அதீதமாக வெளிப்படுத்தப்படுகிறது. காவிரியை இப்படியா பெறுவது என்று போராட்டக்காரர்களின் வன்முறை மீது பலர் வைக்கும் விமர்சனத்திற்கு இணையாக, CSK-வுக்கு இந்த முறையிலா ஆதரவளிப்பது என்று ஒரு குறிப்பிட்ட விமர்சனம் எனக்கு இருக்கிறது: Mob mentality என்று போராட்டத்தைப் புறம் தள்ளியவர்களோ மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டதும் mob mentality-யில் CSK CSK என்று கத்திய விதம் எனக்கு அருவெறுப்பைத் தந்தது. என் குரல் உலகத்தில் எப்படியாவது கேட்கப்படவேண்டும் என்று கையறு நிலையில் உணர்வுகளால் உந்தப்பட்டு உலகமெங்கும் செருப்புகள் தனிமனிதர்களால் வீசப்பட்டிருக்கின்றன. மைதானம் நோக்கி எறியப்பட்ட செருப்பு ஏதோ ஜடேஜா டூப்ளசி மீது எறியப்பட்டதுபோல நினைத்துக்கொண்டு, டூப்ளசி நாட்டின் தலைநகரான கேப் டவுனிலும் தண்ணீர் இல்லை என்றெல்லாம் பாடம் புகட்டப்படுகிறது. ச...

நூலிலிருந்து சீரிஸ் - 4: இலையுதிர்கால இல்லுமினாட்டிகள்

// கேள்வி : அதெப்படி கமலுடைய கட்சி சின்னத்தைப் பார்த்தே அவர் ஒரு இல்லுமினாட்டி என்று முடிவு கட்டுகிறீர்கள்? - க.பாஸ்கரன் பதில் : அன்புள்ள பாஸ்கரன். உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, அதெப்படி கமலை இல்லுமினாட்டி என்று சொல்கிறோம்? அந்த சின்னத்தில் ஆறு கைகள் பாஸ்கரன். அதாவது ஆறு குடும்பங்கள். அதற்கு நடுவில் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரம் பாஸ்கரன், அதாவது இன்னொரு ஆறு குடும்பங்கள். ஆறையும் ஆறையும் கூட்டிப்பாருங்கள், பதினான்கு வருகிறதா? இப்பொழுது அந்த நட்சத்திரத்திற்கும் கைகளுக்கும் இடையே இருக்கும் வெற்றிடத்தை ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதை பதினான்கோடு கழியுங்கள். பதிமூன்று! பதிமூன்று குடும்பங்... வெயிட். கணக்கு தப்பாக வருகிறது. மன்னிக்கவும் ஆறும் ஆறும் பன்னிரண்டா? ம்ம்ம், அப்படியென்றால் அந்த வெற்றிடத்தைக் கழிப்பதற்கு பதிலாக கூட்டிவிடுங்கள் பாஸ்கரன். 6+6+1. பதிமூன்று! பதிமூன்று குடும்பங்கள்! இல்லுமினாட்டி! இரண்டாவதாக, ‘அதெப்படி சின்னத்தைப் பார்த்தே இல்லுமினாட்டி என்று சொல்கிறீர்கள்’ என்று அறிவுக்கெட்டத்தனமாகக் கேட்டிருக்கிறீர்கள். எங்களின் சிந்தனைப்போக்கு உங்...

எழுந்து நிற்காமை

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களை தேச விரோதிகள் என்று சொல்வது எவ்வாறு தவறோ, அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதவர்களைத் தமிழின விரோதிகள் என்று சொல்வதும் தவறு - என்ற பொருளில் நண்பர்கள் சிலர் ஒப்பீடு செய்ததைக் கண்டேன். இரண்டும் ஒன்றுதான், வித்தியாசமே இல்லை என்பது இறுக்கமான பார்வை. இரண்டிற்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. இரு தரப்பினரின் காரணமும் நியாயமும் வெவ்வேறானவை. தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காவிடில் தேச விரோதி என்று சொல்பவர்கள் தேசிய கீதத்தை இந்திய ஒற்றுமையின் குறியீடாகப் பார்ப்பவர்கள். அதற்கு எழுந்து நிற்காதவர்களை அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கருதுபவர்கள். பெரும்பான்மை எழுந்து நிற்க விருப்பப்படுவதைத் தவிர வேறென்ன நியாயம் வேண்டும் அதைக் கட்டாயமாக்குவதற்கு என்று நினைப்பவர்கள். பெரும்பான்மைதான் அவர்கள் வைக்கும் அங்கீகாரம், அதற்கு எதிரானவர்கள் அவர்கள் பார்வையில் தேச விரோதிகள். தற்காலத்தில் இதற்குள் இந்து மத விரோதி என்ற கிளையும் அதீதமாக உண்டு. தேசிய கீதத்தை வைத்து வேண்டுமென்றே பிரிவினை அரசியல் செய்பவர்கள் அல்லாது, மெய்யாகவே நாட்டின் ஒற்றுமையின்பால...

நூலிலிருந்து சீரிஸ் - 3: அவுரங்கசீப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?

// கேள்வி: பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பாலியல் தொழில் சீர்குலைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சேர்த்து கணக்கிட்டால் demonetisation-இன் நன்மைகள் என்று இதுவரை 194 விஷயங்களை சொல்லிவிட்டார்கள். சயீத் அன்வர் போல் 194 ரன்னில் இருப்பது உறுத்தலாக இருக்கிறது. டெண்டுல்கரைப் போல் அது இருநூறைத் தொட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு சின்ன நப்பாசை. - க.பாஸ்கரன் பதில்: அன்புள்ள பாஸ்கரன். பணமதிப்புநீக்க நடவடிக்கையின் நன்மைகள் எப்பொழுதோ 200-ஐத் தொட்டுவிட்டது. பேனிக் ஆகிவிடுவீர்கள் என்பதால் அதை வெளியே சொல்லவில்லை. இப்பொழுது நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன். But remember, don't panic! 195. சென்ற ஆண்டு நவம்பர் 8ம் தேதி நம்மை ஒரு சூரியப் புயல் தாக்க இருந்தது தெரியுமா? ஆனால் நல்லவேளை, பிரதமர் அவர்கள் தொலைக்காட்சியில் ‘500, 1000 ஊ ஊ’ என்று அறிவித்தாலும் அறிவித்தார், அதன் விளைவாக தொலைக்காட்சி நிலையத்தில் ஒருவகையான மின்காந்த எதிர்வலைகள் எழுந்தன. அது சத்தமில்லாமல் விண்ணைப் பிளந்து, உலகின் தொலை தொடர்பு சாதனங்களை அழிக்க விரைந்து வந்துகொண்டிருந்த அந்த சூரியப் புயல...

நூலிலிருந்து சீரிஸ் - 2: இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்

// கேள்வி: இந்த இல்லூமினாட்டி பக்தர்கள் செய்யும் பிடிவாதம் இருக்கிறதே, அதை சமாளிக்கவே முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன். - க.பாஸ்கரன் பதில்: அன்புள்ள பாஸ்கரன், கவலைப்படாதீர்கள். எனக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. “இந்த இல்லூமினாட்டி பக்தர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன்” என்று இல்லூமினாட்டியின் தலைவர் பிரான்சிஸ்கோ ராக்பெல்லர் எழுதியிருந்தார். படித்ததும் கண்கலங்கிப் போனேன். இல்லூமினாட்டி பக்தர்களை நான் செல்லமாக இல்லூக்கள் என்று அழைப்பேன். ஏனெனில் இல்லூக்கள் குழந்தைகள் போல பாஸ்கரன். இதுதான் இப்படித்தான் என்று அடம் பிடிப்பார்கள். சொப்பு சாமான் வைத்து ஒரு குழந்தை சமையல் செய்வதுபோல், கடற்கரை மணலில் கைதுளாவி இரண்டு சிறுவர்கள் மாளிகை கட்டுவதுபோல், இல்லூக்கள் யூடியூபில் நான்கு வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆராய்ச்சி செய்துவிட்டேன் என்று குதூகலிப்பார்கள். அந்தக் குதூகலத்தை ரசிக்கும் பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் பாஸ்கரன். ஒரு பொறுப்பான பெற்றோரைப் போல் நாம்தான் அவர்களைக் கொஞ்சி சமாதானப்படுத்த வேண்டும். அவர்களை தெர்மாக்கோல் போல மென்மையாகக் கைகளில்...

நூலிலிருந்து சீரிஸ் - 1: நடுநிலை நக்கீஸ்

Image
//அத்தியாயம் 22: சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத்தந்தது. ஜெயமோகன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘வாழும் கணம்’ ஒன்று என்னை வந்தடைந்தது. ------------------------------------------------------------------------------------ அன்றைய ஒன்பது மணி விவாத நிகழ்ச்சி நிச்சயம் பரவலாகப் பார்க்கப்படும் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பொதுவாக நான் நெறிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் எவ்வாறு விருந்தினர்கள் தங்களின் நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்று கவனிப்பதுண்டு. “என்னைத் தவிர மற்ற அனைவரும் நடுநிலைவாதிகள் அல்ல என்று சொல்ல மாட்டேன், ஆனால் இந்த அறையிலேயே பெரிய நடுநிலைவாதி நான்தான்”, என்று நிறுவ முயற்சிப்பார்கள். அதுதான் அன்றும் நடந்தது. கோட் சூட் போட்டுக்கொண்டு ஸ்டூடியோ சென்ற போது நால்வரும் ‘உம்’மென்று உட்கார்ந்திருந்தனர். ஒருவர் அந்த நடிகரின் தீவிர ரசிகர், இன்னொருவர் சமூக நீதி செயல்பாட்டாளர். இவர்கள் போக அந்த பெண் பத்திரிகையாளர் பக்கம் நின்று பேச தொலைக்காட்சி நிர்வாகம் பெருந்தன்மையாக இரண்டு பேரை அழைத்திருந்தது. சமூக நீதி செயல்பாட்டாளர் அதிரடி காட்டினா...

There is more to state flags than meets the eye

Those who pinpoint that national identity of US and Germany are healthy despite having state flags, are missing a point: "Sub-national identities in a territorial nation like India are stronger." One of the unifying factors of India is the appreciation of its diversity. "Respect our sub-nationalism and we keep Indian nationalism above it" This outward pressure is practically absent in Germany, as it is a nation based on common language, and the State of US has its own history of gradually gaining and losing streaks of legitimacy over these 200 years. This legitimacy of German State will be under crisis only if the State fails in distributive[Aristotle] and social justice, or the pride centering its historical events of German unification is diluted. My opinion is that the concerns and insecurity about the unity of India in this state flag issue is genuine, and must be addressed. I don't think its not that simple to conclude that since states already h...

புனிதமற்ற விவசாயம்; குறைகளுள்ள விவசாயி

Image
          அடுத்த பொருளாதார நெருக்கடி வரும்போது ஐ.டி. துறையை ஒரே ஒரு மாதம் புனித சேவையாக மாற்றிவிடுவோம். ‘ஐ.டி.யும் ஒரு தொழில்தானே’ என்று யாராவது எழுந்தால், “இந்தியாவின் முதுகெலும்பையா தொழில் என்று கொச்சைப்படுத்துகிறாய்” என்று உட்கார வைப்போம். ஒவ்வொரு புராடக்டையும் நான்கு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு அரசாங்கம் கொள்முதல் செய்யட்டும். ‘ஐ.டி.-யில் பணிபுரிபவர் மானஸ்தர், உயிரை விடுவாரே தவிர ஐ.டி.-யை விட மாட்டார்’ என்று ஏற்றிவிடுவோம். ‘இயற்கை ஐ.டி. செய்வோம்’ என்று கம்ப்யூட்டர் கேபிள்களைப் பிடுங்கிவிட்டு சிலேட்டு பல்பத்தைக் கையில் கொடுத்துவிடுவோம். “ஐ.டி.காரர் ஆபீசில் கால் வைத்தால்தான் நம்மால் இண்டெர்நெட்டில் கை வைக்க முடியும்” என்று ஒரு பழமொழியை உருவாக்கி சுற்றில் விடுவோம். ஐ.டி. தொழிலை விட்டு அவர்கள் வெளியேறி விடாதவாறு அருகே பிற தொழில்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். வீட்டு வாடகை தரவில்லையென்றால் குடும்பத்தை நடுத்தெருவிற்கு இழுத்துவிடுவேன் என்று இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்காரர் மிரட்டட்டும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தாங்க முடிய...

கோப்பெருந்தேவியும் கோப்பைத் தேனீரும்

”இதற்கு முன்னால் நீ உன் வாழ்க்கையில் அனுபவித்திராத இன்பத்தை உனக்கு நான் தர இருக்கிறேன்” வீடணன் தாலியைக் கட்டியதும் கோப்பெருந்தேவியின் காதில் கிசுகிசுத்த முதல் வாக்கியம் இதுதான். திருமணம் முடிந்தவுடன் வயது பார்க்காமல் ஆண்கள் மாப்பிள்ளையையும் பெண்கள் மணப்பெண்ணையும் ஒரு புதிரான குறும்புடன் பார்ப்பார்களே? “மச்சி, ம்ம்ம், ம்ம்ம்!”, இது வேறு யார்? நண்பனாகத்தான் இருக்கும். ”ஆஸ்திரேலியா போனால் கங்காரு குட்டி. சீனா போனால் பாண்டா கரடி குட்டி. எங்கே போனாலும் சரி, வரும்போது எனக்கு ஒரு குட்டியை எடுத்து வரவேண்டும், ஆமாம்.”, இது பக்கத்து வீட்டு முற்போக்கு அங்கிள். வீடணன் யோசித்தான்.  விலங்குகள் அதிகம் இல்லாத குளுகுளு நாட்டிற்கு செல்ல வேண்டும். எங்கு செல்லலாம்? பெயரிலேயே ஐஸ் இருக்கிறது. ஐஸ்லாந்து போகலாம் என்று முடிவெடுத்தார்கள். ஐஸ்லாந்தில் ஐந்து நாட்கள். கேட்க வேண்டுமா? அரசியல்வாதியைப் போல் அல்லாமல் தன் வாக்குறுதியை கணத்திற்குக் கணம் நிறைவேற்றினான் வீடணன். இருவரும் தினம் தினம் அருகருகே அயர்(லா)ந்து போனார்கள். விளைவு. ஐந்தே ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுக்கு உறவானார்கள். இங்கிலன் , வேலன்...

நீ இல்லாத இடமே இல்லை - எம்.எஸ்.வி.

Image
          சமகாலத் தமிழ் இசையில் எனக்குப் பிடித்தது வித்யாசாகரின் பாடல்கள். ஹாலிவுட்டில் ஹான்ஸ் ஜிம்மர் பிடிக்கும். நான் பொதுவாக புதிய இசை ஏதேனும் வந்தால் அவற்றைக் கேட்டு ‘அப்டேட்’ செய்துக்கொள்வதில்லை. இசையைப் பொறுத்தவரை நான் காலத்தில் பின்னோக்கி செல்பவன். என்னிடம் இருக்கும் டிராக்குகள் முக்கால்வாசி குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தையவை, இளையராஜாவைத் தவிர்த்து. என் தமிழ் சினிமா இசைக் கோப்புறையில் இருப்பது வேதா, விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஆர்.கோவர்தனம், கே.வி.மகாதேவன், வி.குமார், ஆகியோர். நான் கௌபாய்ப் படங்களின் விசிறியாதலால் என்னியோ மாரிகோனி, லூயி பகலோவ் ஆகியோர் என் இனிமைப் பொழுதுகளை தினமும் நிறைப்பார்கள். ஆங்கிலப் பாடல்கள் என்றால் ஃப்ராங்க் சினாட்ரா, அவரது மகள் நான்சி சினாட்ரா, ஷிர்லி பாசி மற்றும் டீன் மார்ட்டின். எப்பொழுதாவது மெய்கோ காஜியின் பாடல்களைக் கேட்டு ஜப்பானிய மொழியில் சீன் போடுவதுண்டு. வெறும் வாத்திய இசையில் நான் என்னைப் பறிகொடுப்பது சீனாவின் கூஜங், ஆப்பிரிக்க-கியூபன் பாங்கோ( ’பார்த்த ஞாபகம் இல்லையோ’ ), மற்றும் ஜெர்மன் ஹார்மோனி...