Posts

Showing posts with the label கதைகள்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

திருவாதிரை

(1 - ஆணுறுப்பில் விழுந்த பல்லி ) === “அடிக்கடி சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது டாக்டர்” என்றேன் கவலையுடன். “நான் கொடுத்த மருந்தைத் தடவினீர்களா?” “வலியோ தடிப்போ எதுவுமே இல்லையே டாக்டர்? மருந்து வேலை செய்ததா என்று எப்படித் தெரியும்?” “தடவினீர்களா இல்லையா?” “தடவினேன். இன்னும் கொஞ்சம் இருக்கிறது.” “சரி. இப்போதைக்கு ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது என்றால் வாருங்கள்.” என்று அனுப்பிவைத்தார். மீண்டும் நான் சொன்னதை நம்பியதுபோல் தெரியவில்லை. அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தன. என்னை நானே தனித்துவப்படுத்திக்கொள்ளும் ஒற்றைத் தருணத்தை அதன் மதிப்பு தெரியாமல் உதாசீனப்படுத்தி, பிறகு அதுவும் நிராகரிக்கப்பட்டு மீண்டும் திரளோடு திரளாகக் கலந்திருந்தேன். தோள்பட்டை அழுத்தியது. ஆபீசில் வேறு ஆட்குறைப்பு நடக்கப்போகிறது என்ற வதந்தியால் மனது அமைதியற்று இருந்தது. பல்லி விழுந்த நிகழ்வைக் கொண்டாடச் சொன்னார் அந்தத் தத்துவ அறிஞர். அவர் சொன்ன சில விஷயங்கள் புரியவில்லை. ஆனால் எதையோ தீர்க்கமாக சொல்வது போலவே சொன்னார். அப்பொழுதே கேட்டிருக்கவேண்டும். குறைந்தபட்சம் பத்து நிம...

ஆணுறுப்பில் விழுந்த பல்லி

தூங்கச் செல்வதற்கு முன் ஒன்றுக்குப் போகையில் பல்லி ஒன்று என் உறுப்பில் விழுந்துவிட்டது. இதயம் ஒரு வினாடி நின்றே போய்விட்டது. பதறியடித்தபடி உதறினேன். இரவு முழுவதும் தூக்கமே இல்லை. அடுத்த நாள் காலை டாக்டரிடம் சென்றேன். “பல்லி உங்களைத் தீண்டியதா?” என்று கேட்டார். “அப்படியே விழுந்துவிட்டது” என்றேன். “அதன் நாக்கு பட்டதா?” என்றார். “அதெல்லாம் தெரியவில்லையே, உதறினேன் ஓடிவிட்டது”. “விழுந்த இடத்தில் இதைத் தடவவும்” என்று ஒன்றை எழுதிக்கொடுத்தார். ஜோசியக்காரரிடம் போகவே பயமாக இருந்தது. தம்பியிடம் சொன்னேன். “சும்மா உளறாதே, இதெல்லாம் நடக்க சாத்தியக்கூறு மிகவும் குறைவு” என்றான். “அதுதான் நடந்துவிட்டதே!” என்று முறையிட்டேன். “என் அண்ணனுக்கு என்னவெல்லாம் நடக்கலாம் என்று என் அறிவு ஏற்கனவே சிலவற்றைக் கற்பனை செய்து வைத்திருக்கிறது, ஒருவேளை நடந்துவிட்டால் தாங்கிக்கொள்வதற்காக. சாலை விபத்து, புற்றுநோய், தற்கொலை, மாரடைப்பு, மரம் சாய்வது, ஆனால் பல்லி இப்படி விழுவதெல்லாம் சாத்தியம் மிகமிகக் குறைவு. என்னால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை, எனவே ஏற்க மாட்டேன்” என்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டான். இணையத்தில் தேடின...

சத்யவரதன் குராயூர்

Image
முகநூலில் சத்யவரதன் என்றொரு நண்பர் கிடைத்தார். நன்றாக நினைவிருக்கிறது, சுமார் எட்டு ஒன்பது மாதங்களுக்கு முன் இருக்கும். அப்பொழுது “மார்க்சியம் இந்தியாவின் சாதியமைப்பைக் குறைவாக எடைபோட்டுவிட்டது” என்று நான் போட்ட ஒரு பதிவிற்கு லைக் போட்டு நட்புக் கோரிக்கை விடுத்தார். நான் கோரிக்கையை ஏற்ற அடுத்த நிமிடம் என் தனிப்பெட்டியில் வந்தார். “sariyaaka sonneerkal" “நன்றி சகோ”, என்றேன் ஆங்கில வரிவடிவத்தில் இருந்த அவரின் வழக்குத் தமிழை என் தமிழ்த் தமிழோடு மாற்றி மாற்றி இங்கு கொடுப்பது மனிதத்தன்மையற்ற செயலாதலால்,   “ஏன் சார்?”, என்று ஏராளமாய் இளித்தேன். “நீயும் அந்த குரூப்புதானா?”, என்றார். எந்த குரூப்பைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. நன்றாக எழுதுகிறேன் என்று சர்ட்டிபிகேட் எல்லாம் கொடுத்தாரே, என்று எண்ணினேன். அதை அவரிடமும் கேட்டுவிட்டேன். “ஏன் சார் நல்லா எழுதறேன்னுலாம் சொன்னீங்களே? படிக்கலியா?” “உங்களையெல்லாம் ஒழிச்சுக்கட்டதான்டா மோடி ஆட்சிக்கு வந்திருக்கார்”, என்று ஒரே போடாகப் போட்டார். “சார் உங்க கருத்தை மதிக்கிறேன் சார், மோடியையெல்லாம் இழுக்காதீங்க” “ஏன் இழுத்தா...