Posts

Showing posts from July, 2015
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கோப்பெருந்தேவியும் கோப்பைத் தேனீரும்

”இதற்கு முன்னால் நீ உன் வாழ்க்கையில் அனுபவித்திராத இன்பத்தை உனக்கு நான் தர இருக்கிறேன்”

வீடணன் தாலியைக் கட்டியதும் கோப்பெருந்தேவியின் காதில் கிசுகிசுத்த முதல் வாக்கியம் இதுதான்.

திருமணம் முடிந்தவுடன் வயது பார்க்காமல் ஆண்கள் மாப்பிள்ளையையும் பெண்கள் மணப்பெண்ணையும் ஒரு புதிரான குறும்புடன் பார்ப்பார்களே? “மச்சி, ம்ம்ம், ம்ம்ம்!”, இது வேறு யார்? நண்பனாகத்தான் இருக்கும். ”ஆஸ்திரேலியா போனால் கங்காரு குட்டி. சீனா போனால் பாண்டா கரடி குட்டி. எங்கே போனாலும் சரி, வரும்போது எனக்கு ஒரு குட்டியை எடுத்து வரவேண்டும், ஆமாம்.”, இது பக்கத்து வீட்டு முற்போக்கு அங்கிள்.

வீடணன் யோசித்தான்.  விலங்குகள் அதிகம் இல்லாத குளுகுளு நாட்டிற்கு செல்ல வேண்டும். எங்கு செல்லலாம்?
பெயரிலேயே ஐஸ் இருக்கிறது. ஐஸ்லாந்து போகலாம் என்று முடிவெடுத்தார்கள்.

ஐஸ்லாந்தில் ஐந்து நாட்கள். கேட்க வேண்டுமா? அரசியல்வாதியைப் போல் அல்லாமல் தன் வாக்குறுதியை கணத்திற்குக் கணம் நிறைவேற்றினான் வீடணன். இருவரும் தினம் தினம் அருகருகே அயர்(லா)ந்து போனார்கள். விளைவு. ஐந்தே ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுக்கு உறவானார்கள். இங்கிலன், வேலன், அயர்வடக்கன்

நீ இல்லாத இடமே இல்லை - எம்.எஸ்.வி.

Image
சமகாலத் தமிழ் இசையில் எனக்குப் பிடித்தது வித்யாசாகரின் பாடல்கள். ஹாலிவுட்டில் ஹான்ஸ் ஜிம்மர் பிடிக்கும். நான் பொதுவாக புதிய இசை ஏதேனும் வந்தால் அவற்றைக் கேட்டு ‘அப்டேட்’ செய்துக்கொள்வதில்லை. இசையைப் பொறுத்தவரை நான் காலத்தில் பின்னோக்கி செல்பவன். என்னிடம் இருக்கும் டிராக்குகள் முக்கால்வாசி குறைந்தபட்சம் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தையவை, இளையராஜாவைத் தவிர்த்து. என் தமிழ் சினிமா இசைக் கோப்புறையில் இருப்பது வேதா, விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஆர்.கோவர்தனம், கே.வி.மகாதேவன், வி.குமார், ஆகியோர். நான் கௌபாய்ப் படங்களின் விசிறியாதலால் என்னியோ மாரிகோனி, லூயி பகலோவ் ஆகியோர் என் இனிமைப் பொழுதுகளை தினமும் நிறைப்பார்கள். ஆங்கிலப் பாடல்கள் என்றால் ஃப்ராங்க் சினாட்ரா, அவரது மகள் நான்சி சினாட்ரா, ஷிர்லி பாசி மற்றும் டீன் மார்ட்டின். எப்பொழுதாவது மெய்கோ காஜியின் பாடல்களைக் கேட்டு ஜப்பானிய மொழியில் சீன் போடுவதுண்டு. வெறும் வாத்திய இசையில் நான் என்னைப் பறிகொடுப்பது சீனாவின் கூஜங், ஆப்பிரிக்க-கியூபன் பாங்கோ(’பார்த்த ஞாபகம் இல்லையோ’), மற்றும் ஜெர்மன் ஹார்மோனிக்கா(மவுத் ஆர்கன்) ஆகிய வாத்தியங்களிடம். இது …

Facebook Debate 6 - 28/07/14

Image
Post:

To Students, With Love

Comments:

Sankaranarayanan A R:
And, also there were cars in vedic times and there were licences too (of course written in Sanskrit! Mind you no any other language!) Idiots! They are doing this to create a great idea about Indian culture it seems!
The Greatest Heist in Indian History. How Indian History was Changed and We Didn't Even Notice. Part 1: The Lost Eon 6th Century B.C to 1174 A.D

Me:
Thanks for sharing. Really awesome, the name of that website.

The history of a land mass which is now divided into a few nations is really fucked up to such an extent that there are umpteen versions of truth. So when this article claims, of course as a perspective as it says, that the 6th century BC was the Golden age, according to me it can be the dark age of India. It depends on whose side one is. I am not a supporter of economic and social Darwinism, and these two were at the peak through out the known history of this land mass as far as I've read. Babur Invade…

திலீபன் அண்ணன்

Image
விகடன் மாணவப் பத்திரிகையாளராக சேர்ந்து ஆறு மாதங்கள் ஆன பிறகும் பெரிதாக சோபிக்காமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு பக்கம் கல்லூரியில் மதிப்பெண்கள் பங்குச் சந்தை நிலவரமாக சரிந்துக்கொண்டிருந்தன. மற்றொரு பக்கம் எதுவுமே செய்யவில்லையென்றாலும் பிரஸ்காரன்டா என்று கல்லூரிக்குள் எனக்கு ஒரு இமேஜ் உருவாகிக்கொண்டிருந்தது. எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் இப்படிக் கேட்டார்.

"விஷ்ணு?"
"சார்?"
"நீங்க ஜர்னலிஸ்டுன்னு காலேஜ்ல பேசிக்கிறாங்களே?"
"ஆமாம் சார். விகடன் ஸ்டூடன்ட் ஜர்னலிஸ்ட்"
"எதுல எழுதறீங்க? நான் தொடர்ந்து வாசிச்சிட்டுதான் வர்றேன்..."
"என் விகடன் ஆன்லைன்ல எழுதினேன் சார். என் போதாத‌ காலம், மூனு மாசத்துக்கு முன்னாடி அதை நிறுத்திட்டாங்க"

          அவர் முகம் சுருங்கிவிட்டது. அதற்குப் பிறகு என் மதிப்பெண்கள் பற்றி அவர் கேட்க ஆரம்பித்தவுடன் பேச்சு வார்த்தை தோல்வி என்று புரிந்துவிட்டது. ஒரு மாதம் கழித்து பையன் சரியில்லை என்று என் பெற்றோருக்கு அவரிடமிருந்து அழைப்பு சென்றது. என்னை நிரூபிக்க வேண்டிய சுமை வந்து சேர்ந்தது.

       …

Facebook Debate 5 - 16/06/14

Image
Post:

ஹிந்தி திணிப்பு தவறு என்றால் தமிழ் திணிப்பு மட்டும் சரியா?

Comments:

Me:
I have never viewed language as something analogous to caste and religion. Through your status I came to encounter a new dimension to this issue. Thank you for that. But I have few doubts and questions on how tending towards imposing almost absolutely nothing on children by the government can be practical.

1. I could not completely accept the comparison of caste and religion with language. Though all the three are defined by birth practically, the only pre-requite to belong to a certain caste or religion is to have born in a family which belong to it (Of course, we can be converted. And the pre-requisite is debatable as per your view). But language is a tongue to be learnt by the child in the first place.

2. When Mr.Rajaji supported the imposition of Hindi in 1937, he stated to the protesters that a child should somehow be forced to be breastfed in case it’s necessary, for the child’s good. His statement was …