Posts

Showing posts with the label கடிதங்கள்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடிதம் - யுட்டா ப்யோனிஷ்

அன்புள்ள விஷ்ணு, ஹராரியின் கட்டுரையை அனுப்பியமைக்கு நன்றி. ஆங்கிலம் தெரிந்த என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உனக்கே தெரிந்திருக்கும். சில அத்தியாவசியக் கடைகளைத் தவிர, மருந்தக மருத்துவமனைகளைத் தவிர பெர்லினில் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. முற்றிலும் புதியதோர் வாழ்க்கை முறைக்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறோம். குடும்பத்தினரோடு, நண்பர்களோடு, அண்டை வீட்டாரோடு நெருங்கிப் பழக முடியவில்லை. நல்லவேளையாக இதுவரை எனக்கு சிரமம் எதுவும் ஏற்படவில்லை. தள்ளாத முதுமையின் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கை நிலை எனக்குப் பல சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. வீடு இருக்கிறது, தோட்டம் இருக்கிறது, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாசிக்கப்பட இருக்கின்றன. இப்போதைக்குப் பிரகாசிக்கும் சூரியன், இப்போதைக்கு நீல வானம், இப்போதைக்குக் குயில் சத்தம். ஆனால் என்னைப் போல் எல்லோருக்கும் இது அமையவில்லையே? உலகின் பல நகரங்களில் சிறுசிறு அறைகளில் நெருக்கியடித்துக்கொண்டு வாழும் மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன். வெளியே விளையாட வேண்டும் என்று ஆசைப்படும் குழந்தைகள்...

கடிதம் - இடைநிலை சாதிகளின் ஆதிக்கமும் திராவிட இயக்கமும்

Anonymous 29th May, 2017 விஷ்ணு, நேற்று Quora வலைதளத்தில் திராவிட இயக்கம் பற்றி ஒரு பதிவு படித்தேன். அதில் பரம்பரை பரம்பரையாக நிலம் வைத்திருந்தவர்களான நாயக்கர்,செட்டிகள், ரெட்டிகள் தங்களுக்குக் கீழே ஏழைகளாக வேலை பார்த்த பிராமணர்கள் ஆங்கிலேய படிப்பால் தனக்கு சரிசமமாக வந்தது பிடிக்காமல், அவர்களை எதிர்க்கத் துவங்கப்பட்டது தான் திராவிடர் இயக்கம் - என்று ஒரு கருத்து இருந்தது. இப்போது தமிழகத்தில் நிலவும் OBC domination மற்றும் நடுநிலை சாதிகள் செய்யும் casteism இவற்றை பார்க்கும் போது இக்கருத்து சரி என்றே தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்? இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த செயற்கையான பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவை வைத்துக்கொண்டிருக்கப் போகிறோம்? --------------------------------------------------------------------------------------------- Vishnu Varatharajan 29th May, 2017 திராவிட இயக்கத்தில் ஆரியர்-திராவிடர் என்ற இனம் சார்ந்த, அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படாத கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியது பெரியாரோடுதான். அதற்கு முன்பு பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவு இனம் சார்ந்த ஒன்றல...

கடிதம் - நேருவை துணைகொள்ளல்

Anonymous 16th May, 2017 //நேருவின் நிர்வாகத் தவறுகளை விட நேருவின் சாதனைகள் இந்திய ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை// [ நேருவைத் துணைகொள்ளல் ]. நிர்வாகத் தவறு என்பது சரியல்ல. 2017ல் நாம் வசதியாக உட்கார்ந்துகொண்டு பேசலாம். அன்றைக்கு இருந்த நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். முன்மாதிரியாக நேரு எதை வைத்து அரசாண்டார்? தேசத்துக்கு எது நல்லது என உகந்த வழியே நடந்தார். அதை மீறி கண்டிப்பாக சில தவறுகள் இருக்கத்தான் செய்யும். ------------------------------------------------------------- Vishnu Varatharajan 16th May, 2017 ஒரு வரலாற்று மாணவனாக இன்றுவரை என்னை நேருவியன் என்றே அழைத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த (ஒப்பிட முடியாது என்றாலும் மனதிற்குள் காந்தியை விட ஒரு படி மேலாகவே) தலைவர் நேருதான். எனவே உங்கள் வார்த்தைகள் மனதிற்கு இதமாகவே இருக்கிறது. ஆனால் நேரு மீதான அவதூறுகளுக்கு மாற்றாகத் தவறுகளற்ற நேருவை முன்வைக்க விரும்பவில்லை. நேருவை whitewash செய்வதன் மூலம் அவரிடமிருந்து மக்களை விலகவே வைப்போம் என்று நினைக்கிறேன். இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன...

கடிதம் - காந்தியின் முன் இருந்த காரணிகள்

Vignesh K.R. 5th May, 2017 இந்துத்வா குறித்த ஆசையின் கட்டுரையை வாசித்தேன். மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு தார்மீகக் கடமை தனக்கிருப்பதாக காந்தி எண்ணியதன் விளைவுதான் அவர் இந்து மத அமைப்புக்குள்ளேயே நீடித்து இருந்து சாதியை எதிர்க்க நினைத்தது எனத் தோன்றுகிறது. எதையும் விலக்கவோ புறக்கணிக்கவோ தயங்காதவராகவே காந்தி இருந்திருக்கிறார்; ஆனால் இந்து என்ற தன்மையிலிருந்து விலகினால் தன்னை ஒரு இந்துவின் பிரதிநிதியாக முன்நிறுத்திக் கொள்ள முடியாது. 1940-களில் சாதிக்கு எதிரான மனநிலையைக் கொண்டுவிட்ட அவர், அமைப்பிற்குள்ளேயே நீடித்து செயல்பட மேற்சொன்னதும் ஒரு சிறு காரணியாக இருந்திருக்கலாமென நினைக்கத் தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்? ------------------------------------------------------------------------------------------------------------------------ Vishnu Varatharajan 5th May, 2017 ஆம். முன்பொரு விவாதத்தில் இது விவாதப் பொருளாக வந்தது. அரசியலதிகாரத்தை வன்முறையின் மூலமாகப் பெற முயன்றால் ஆதிக்க சாதியினர் எளிதாக அதை அடக்கி விடுவார்கள் என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அதே நேரத்தில் காந்தி ஏன் இ...

கடிதம் - அன்னையர் தினமும் மாதவிடாயும்

Anonymous 14th May, 2017 வணக்கம் விஷ்ணு. ‘மாதவிடாயின் போது பெண்களைத் தீட்டு என ஒதுக்கி வைக்கும் சமூகத்திற்கு அன்னையர் தினம் கொண்டாட அருகதை இல்லை’ என்ற கருத்தை நீ பகிர்ந்திருந்ததைப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை அன்னையர் தினம் கொண்டாடுவதென்பது தேவையில்லைதான். குடும்பம் ஒற்றுமையுடன் வாழ்வதை மரியாதையுடன் நோக்கும் ஒரு சமூகத்தில் அன்னையர் தினம் அவசியமல்ல என்பது என் கருத்து. ஆனால் தீட்டு என்பது மாதவிடாயின் போது பெண்கள் வேலை செய்துவிடக்கூடாதே என்று அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்று. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களை ஆரோக்கியத்துடன் எதிர்கொள்ள அந்த ஓய்வு அவசியமானது. இதை உணராமல் இக்காலத்துப் பெண்கள் ஓய்வெடுக்காமல் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள்; அவர்களே அவர்களின் உடலைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் போகிற போக்கில் கருத்து சொல்வது என்பது இன்றைக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. அதை நீயும் செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு விஷயம் பழமையானதாகவோ மத நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதாகவோ இருந்துவிட்டால் அதைப் பரிகாசம் செய்ய வேண்டும...