Posts

Showing posts with the label மாணவ நிருபனாக
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாரம்பரியச் சின்னம் ஆகுமா பழவேற்காடு?

Image
பழவேற்காடு ஏரி           பழவேற்காடு, கிட்டத்தட்ட சென்னை மாநகரின் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம். ஆங்கிலேயருக்கு முந்தைய பழங்கால தென் இந்தியாவில் பூம்புகாருக்குப் பிறகு மிகப்பெரும் துறைமுக நடவடிக்கைகள் மிகுந்த இடமாகப் பழவேற்காடு இருந்திருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்ன அடையாளத்தை பெறுவதற்கான தமிழகத்தின் பரிந்துரைப் பட்டியலில் பழவேற்காடும் இணைந்துள்ளது. ஆனால், தமிழக சுற்றுலாத் துறையின் கடைக்கண் பார்வை இன்னும் சரியாக இதன் மேல் விழவில்லை. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பழவேற்காட்டில் இன்னமும் மக்களின் பொருளாதாரத்திலும் சமூக அளவீட்டிலும் சமத்துவம் பெறாமல் பின்தங்கிய நிலைதான் இருக்கிறது.           இயற்கை வளம் மிக்க பழவேற்காட்டின் தற்போதைய பிரச்னைகளைப் பார்ப்பதற்கு முன், பழவேற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது? பழவேற்காட்டில் ஒளிந்திருக்கும் சில வரலாற்று உண்மைகள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு போகும். ஒரு சிறு உதாரணம், இன்று சென்னை என்கிற ஒரு மாநகரம் ...

சதுரங்கச் சுட்டிகள்

“ஒவ்வொரு மேட்ச்லயும் எதையாச்சும் கத்துக்கணும்!”                                                                                                                                                                             வைஷாலி - பிரஞ்யானந்தா. விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க வாரிசுகள் என்று சொல்லுமளவிற்குத் தங்களின் பதக்கங்களின் மூலமாகத் தமிழகத்திற்குப்  பெருமையை சேர்த்துக்கொண்டிருக்கும் சாதனைச் சுட்டிகள். அதிலும் பிரஞ்யானந்தா கடந்த 25ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஏழு வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த இந்திய சதுரங...

மகிழ்வன், மகிழினி

Image
“இந்தியாவில் 60-120 மில்லியன் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்”, என்ற அதிர்ச்சித் தகவலுடன் முடிந்தது அத்திரைப்படம். சராசரி எடுத்தால் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஜனத்தொகைக்கு நிகராக இருக்கும் அவர்களைப் பற்றி நாம் எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருக்கிறோம்? உங்கள் பக்கத்துவீட்டு நபரோ, உங்களது நெருங்கிய நண்பரோ, ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏன், இதைப் படிக்கிற நீங்கள் கூட உங்களது பாலியல் விருப்பத்தை இந்த சமூகத்திடம் மறைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஓரினச் சேர்க்கையாளர்களையும் திருநங்கையரையும் இந்தியச் சமூகம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது? LGBT(Lesbian Gay Bisexual Transgender) என்றழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் திருநங்கையர் குழுவான ‘சென்னை தோஸ்த்’ சென்னையில் மூன்று நாட்கள் ரெயின்போ திரைப்பட விழாவினை நடத்தியது. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், அவர்களது முன்னேற்றத்தில் பங்கு கொள்ள நினைப்பவர்கள், ஆகியோர் பல்வேறு மொழிகளில் இயக்கிய சிறந்த குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடனக் கலைஞரான அனிதா ரத்னமும் ஊடகவியலாளர் அப்சரா ...

மறதி விதி!

Image
          நீங்கள் ஒரு மாநகரப் பேருந்திற்காக உச்சிவெயிலில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பேருந்தைத் தவிர மற்ற எல்லா பேருந்துகளும் வருவதுபோல் என்றாவது உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? எல்லாவற்றிற்கும் மேலாக வரிசை வரிசையாக உங்கள் பேருந்து எதிர்த்திசையில் வந்து உங்களைக் கடுப்பேற்றும். எல்லாம் தலைவிதி என்று நொந்துகொள்வீர்கள். அது தலைவிதி இல்லை, மர்ஃபி விதி!           உங்கள் பைக்கை மிதியோ மிதி என்று மிதிக்கிறீர்கள். ஊஹும், வண்டி ஸ்டார்ட் ஆகக் காணோம். நேராக வண்டியை ஒரு பைக் மெக்கானிக்கிடம் எடுத்துக்கொண்டு போகிறீர்கள். அவர் ஒரே மிதி மிதிக்க, பைக் ஒரு பெரும் உறுமலுடன் ஸ்டார்ட் ஆகி விடுகிறது. அப்பொழுது அந்த மெக்கானிக் உங்களை ஒரு மாதிரி பார்க்க, அந்தப் பார்வைக்குள்ளே ஒரு நமட்டுச்சிரிப்பு தென்படுமே, அந்த நமட்டுச்சிரிப்புதான் மர்ஃபி விதி!           ஆம், நம்மைச் சுற்றி இருக்கும் உயிர‌ற்ற பொருட்களுக்குத் தன் சூழ்நிலையை வசீகரிக்கும் தன்மை உள்ளதா என்கிற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக‌ நடந்துக் கொண்டு இருக்கிறது. "எதில...

பிரஷருக்கு No... பிளஷருக்கு Yes - பாய்ச்சல் காட்டும் படகுப் பெண்!

Image
மேகனா... இந்திய விளையாட்டின் மகுடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் மற்றுமோர் மரகதக்கல். பாய்மரப்படகு செலுத்தும் போட்டியில், காற்றின் துணைகொண்டு, அது வீசும் திசையை சாதகமாக்கி, லாகவமாகப் படகை செலுத்தி, பதக்கங்களை அள்ளும் இயற்கையின் செல்லப் பிள்ளை. பெண்களுக்கான 'ரேடியல்’ பிரிவின் தரவரிசைப் பட்டியலில்... இந்தியாவிலேயே இரண்டாவது இடம் இப்போது இவரிடம்! ''2010-ல் இந்திய அளவில் நடந்த 'ஓஷன் ப்ளூ டிராபி' (Ocean Blue Trophy)... பெண்களுக்கான 16 வயதுக்கு உட்பட்ட 'லேசர் 4.7 (பாய்மரத்தின் பரப்பளவைக் குறிப்பதுதான் 4.7 என்பது) பிரிவில் வெள்ளி வாங்கினேன். இந்த வருஷம் அதே பிரிவுல தங்கம் வாங்கியிருக்கேன்!'' என்று சந்தோஷப் புன்னகை பூக்கும் மேகனாவின் பதக்கப் பட்டியல், 'லேசர் ரேடியல்’ பிரிவில் வெள்ளி, '420' (படகின் நீளத்தை செ.மீட்டரில் குறிப்பது) பிரிவில் வெள்ளி... என நீள்கிறது. இத்தனை சாதனைகளையும் மேகனா நிகழ்த்திக் கொண்டிருப்பது ப்ளஸ் டூ படித்துக் கொண்டே! ''ஒன்பதாவது படிக்கும்போது 'தமிழ்நாடு செயிலிங் அசோஸியேஷன்'ல சம்மர் கேம்ப்...

ட்ரிபிள் ஜம்ப் சிறுத்தை !

Image
ரோச்சல் மரியா மக்ஃபர்லேன், தமிழகத்தின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டப் புறப்பட்டிருக்கும் பெண் சிறுத்தை. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ட்ரிபிள் ஜம்ப் போட்டியில், '12.13 மீட்டர் தாண்டிய ஒரே வீராங்கனை' என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். 14 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலிலும் முதன்முதலில் 5.82 மீட்டர்களை அநாயசமாகக் கடந்து சாதனை புரிந்தவர். படிப்பது... சென்னை, செயின்ட் கொலம்பஸ் ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் ஒன். சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தமிழக அளவிலான சி.எம். டிராஃபியில் கடுமையான போட்டியின் இறுதியில் இவருக்கு கிடைத்திருப்பது தங்கம். ''அக்கா டானியா மரியா, நீளம் தாண்டுதல்ல ஸ்டேட் பிளேயர். அதைப் பார்த்துதான் எனக்கும். லாங்க் ஜம்ப், டிரிபிள் ஜம்ப்... ரெண்டுலயும் இப்போ நான் டாப்பர். போட்டிக்குப் போனா... மெடல் வாங்காம திரும்பினதில்ல. கடுமையான பிராக்டீஸ் பண்றதோட... போட்டி சமயத்துல எந்த பிரஷரையும் ஏத்திக்காம, மென்டல் லெவலையும் நான் சீரா வெச்சுக்குவேன். அதுதான் என்னோட பலம்னு நம்புறேன். நேரு ஸ்டேடியத்துல டிரிபிள் ஜம்ப் ஃபை...

''எப்படியோ மாட்டிக்கிட்டேன்!''

Image
''மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது... ஆல்பின் மெக்ஃபர்லேன் , தொழிலதிபர்: ''ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிஞ்சு, ஃப்ரெண்டு ஒருத்தன் கூப்பிட்டானு பார்ட்டிக்குப் போயிட்டு லேட் நைட் வீட்டுக்குப் போனேன். வீட்ல கேட்டதுக்கு 'வேலை ரொம்பா ஜாஸ்தி’னு சொல்லிட்டுப் படுத்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்டு, '' நேத்து நைட் பார்ட்டி எப்படி மச்சி?''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு?'' சிங்காரவடிவேலு, ஆசிரியர்: ''என் மனைவிக்கு ஸ்ரீவைகுண்டம் கோயில் ரொம்பப் பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் அந்த ஊர்லேயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டா. எனக்கும் அந்த ஊர்லேயே வேலை கிடைச்சுது. ஆனா, எனக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை. அதனால, எனக்கு அங்கே வேலை கிடைச்ச விஷயத்தை மறைச்சு, சென்னைக்கு வந்துட்டோம். பத்து வருஷத்துக்கப்புறம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு, கிட்டதட்ட ஆறு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. இப்போ பேசினாலும் ...

வாழ்க்கை ஒரு போர்க்களம்!

Image
''போராட்டங்கள், இடையூறுகளால் பாதி வழியில் சிக்கிச் சின்னா பின்னமான  அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது... மதன் கார்க்கி, பாடலாசிரியர் : ''எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு வீட்டுக்குள்ள சிதறிச்சு. என்ன நடக்குதுன்னே புரியல.  அப்பா உடனே எங்களை  உள்ளேபோய் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு போலீஸுக்கு போன் பண்ணி விசாரிச்சாங்க. 'ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணிட்டாங்க. அதுக்காக தி.மு.க. ஆதரவாளர்களை அடிக்கிறாங்க. நாங்க உடனே உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா, ஊர் முழுக்க இந்த மாதிரி நிறையக் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால போலீஸால் நேரத்துக்கு வரமுடியலை.  அதுக்குள்ள எங்க கார் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க. அந்த ராத்திரி முழுக்க திக் திக்குன்னு பயந்துகிட்டே இருந்தோம். அதை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கும்!'' சேகர், ஆட்டோ ஓட்டுனர் : ''6 மாசத்துக்கு முன்னாடி கத்திப்பாராவுல போலீஸ்காரங்க எங்களை நிறுத்தி வெச்சுட்டாங்க. பாலத்துக்கு அ...

இது வெறும் ஆரம்பம்தான்

இன்று எனக்கு நன்றாகத் தூக்கம் வரும் என்று நினைக்கிறேன். 721 பேரின் வாழ்க்கையை மீட்டெடுத்ததில் அடியேனுக்கும் சிறு பங்கு இருக்கிறது என்று எண்ணும்போது எதையோ சாதித்த உணர்வு மேலிடுகிறது. தமிழக முதல்வரின் ஏழைகளுக்காக இலவச வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காகப் புணரமைக்கப்பட்ட கால்நடை மருத்துவனைகளில் பணி நியமனம் செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் 843 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் 15 வருட சர்வீஸ் போட்டு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை தனியார் நிறுவனங்களில் சம்பளம் வாங்கி வந்தவர்கள், ஆயினும் அரசு வேலையாயிற்றே என்று அதை உதறித் தள்ளிவிட்டு அரசு கால்நடை உதவி மருத்துவர்களாக சென்ற வருடம் பணி நியமனம் பெற்றனர். இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி இந்தப் பணியிடங்களுக்கு ஓப்பன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வர, அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்கள். ஒரே வருடத்தில் நடுத்தெருவுக்கு வந்துவிடும் அளவிற்கு அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானது. இதை விடக்கூடாது என்று நானும் திலீபன்...