Posts

Showing posts with the label புத்தக விமர்சனம்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடவுள்களும் குருமார்களும் - குஷ்வந்த் சிங்

Image
          மறைந்த குஷ்வந்த் சிங்கின் ‘Gods and Godmen of India' நூலை வாசித்து முடித்தேன். கடவுள், மதம், மூடநம்பிக்கை, ஆன்மிக இயக்கங்கள், சாமியார்கள் குறித்த குஷ்வந்தின் கருத்துகள், அனுபவங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றின் தெளிவான தொகுப்பு இது. கடவுள் மற்றும் ஆன்மிகம் குறித்த குஷ்வந்தின் நிலைப்பாடு எவ்வாறு உருவாயிற்று என்பதை 62 கட்டுரைகளில் குஷ்வந்த் சிங்கிற்கே உரிய நகைச்சுவை எழுத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குஷ்வந்த் சிங் ஒரு ‘அக்னாஸ்டிக்’ என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத, ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாத, தானே உணரும் வரை கடவுள் இல்லைதான் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஒருவகையில் இது கொஞ்சம் அவஸ்தையான நிலைப்பாடும் கூட. கடவுள், பிறவிப்பயன், மரணம் குறித்த கேள்விகள் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும்.           மதம், மத அமைப்பு, மதம் சார்ந்த அரசியல் போன்றவற்றில் குஷ்வந்த் பல்வேறு சிக்கல்களைப் பார்க்கிறார். ஒவ்வ...

இராட்டையும் ரோஜாவும்

Image
          10/05/17 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் நவின் ஜோஷி தொகுத்த “ The Charkha and The Rose" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தனக்கென்று தனித்த ஆளுமை இல்லாத , முழுக்க முழுக்க காந்தியின் நிழலில் வளர்ந்தவர் நேரு என்று ஒரு புறமும் , இத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தும் காந்தி நேருவைத் தலைமைப் பொறுப்புகளுக்கு முன்மொழியக் காரணம் அவரை ஆரம்ப காலத்தில் மோதிலால் நேரு ஆதரித்ததுதான் என்று மற்றொரு புறமும் தொடர்ந்து மேம்போக்கான வாதங்கள் பொதுவாக வைக்கப்படுகின்றன. ஆனால் காந்தி , நேருவுக்கு இடையேயான உறவு என்பது எவ்வாறு தொடர்ந்த உரையாடல்களால் கருத்து வேற்றுமைகளுக்கு இடையே செதுக்கப்பட்டது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. இது ஒரு ஆய்வு நூல் அல்ல ; காந்தி நேரு தொடர்புடைய இருவரின் பேச்சுகள் , புத்தகங்கள் , கடிதப் பரிமாற்றங்கள் , நாளிதழ் செய்திகள் , பத்திரிகையாளர் சந்திப்புகள் , தலையங்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். திரு.ஏ.பாஸ்கர் அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை என் நினைவில் உள்ளவரை ...