Posts

Showing posts from August, 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

"சுப்பிரமணியன் சுவாமி பத்தி நீ என்ன நினைக்கிற?"

Image
"சுப்பிரமணியன் சுவாமி பத்தி நீ என்ன நினைக்கிற? உன் ஒபினியன் என்ன?"

http://www.youtube.com/watch?v=K3lv71xEBs0 Devil's Advocate - Indian Muslims have Hindu ancestry: Swamy
இதை எனக்குக் கொடுத்தது என் கசின். சுவாமியை எதிர்த்து ஒரு பதிவு போட்டிருந்தேன். அதுக்கு இதைப் பாரு நீ மாறுவனு குடுத்தான்! இதைப் பாத்தப்பறம் இன்னும் மோசமாயிடுச்சு  அப்பறம்தான் புரிஞ்சது, என்னை மாத்தறதுக்கு இந்த வீடியோவைத் தர்றான்னா அப்போ ரத்தத்துல இந்த ஐடியா எப்படி ஊறியிருக்கும்னு. சுவாமி சொல்றது சரிதான். முக்காவாசி பேர் அவரை உள்ளுக்குள்ள சப்போர்ட் பண்ணிட்டுதான் இருக்காங்க. அனலைஸ் எல்லாம் பண்ண மாட்டாங்க. இது மதம், உள்ள அறிவு வராது. எனக்கு ஆரம்பத்துல இது இடியாட்டிக்காதான் பட்டுச்சு, ஆனா இதைப் பாருனு சீரியசா ஒருத்தன் கொண்டு வந்து கொடுக்கும்போதுதான் இதோட சீரியஸ்னெஸ் தெரிஞ்சுது

ஆனா சுவாமி பார்வையில அவர் சொல்றது சரிதான். சுவாமியையும் என் கசினையும் மாத்த முடியாததுக்குக் காரணம் அதுதான். எங்க பேஸ்மெண்டே வேற. சுவாமியைப் பொறுத்தவரைக்கும் அவர் பிரிவினைக்குப் பிந்தைய இந்தியாவைப் பாக்கற விதம் வேற. பிரிவினையோட சாராம்சம்…

Facebook Debate 2 - 17/05/14

Image
FB Status:

It's going to be a test for you...

The Citizens of India,
You've done a great job !
I hereby congratulate you for the worthwhile work that you've done for the past ten years.
For the ten years of utmost criticism and watchfulness.
For responsive over any issue that has raised.
You have been so powerful in throwing out Manmohan Singh.
You have been skeptical about even any gesture that he has made.
You have made rudimentary comments about everything that he has spoken, and not even spoken.
A very much congratulations.
And, I insist you upon being the same for the forthcoming years also.
Be bold.
Be ready with your views.
Be the watch-men.
But, but,...
If you are going to be dumb for anything being done then on, feeling that he will do anything for the best of India and start idolizing him.
If you are going to speak only what he only does good, and start ignoring his short-comings in course.
If you are going to be silent, feeling proud that You've made a great…

மீனாட்சியம்மன் தாலியும் காணாமல் போன காரப்பொரியும்!

என் ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம். திருமங்கலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சில வருடங்களுக்கு முன் இங்கு நடந்த அரசியல் அதிரடிகள்தான். அங்கு நடந்த ஒரு இடைத்தேர்தலினால் திடீரென்று தமிழக அளவில் என் ஊர் பிரபலமானது. ஆனால் அதையெல்லாம் தாண்டி, திருமங்கலம் என்னும் ஒரு எழில்மிகு நகராட்சியை  உங்கள் முன் நிழலாட வைப்பதே என் நோக்கம். அரசியலுக்கு அப்பாற்பட்டு திருமங்கலம் தன்னிடம் வைத்திருக்கும் இயற்கை அழகை, அதன் மக்களை, அமைதியை, தனித்துவத்தை, உங்களுக்குப் படம்பிடித்துக் காட்ட இதோ ஒரு இனிதான பயணம்...

          மதுரை மீனாட்சியம்மனின் மாங்கல்யம்(தாலி) செய்யப்பட்ட இடம் இது என்பதால் திருமாங்கல்யம் என்னும் பெயர் பெற்று, அதுவே பின்னர் திருமங்கலம் ஆயிற்று. முருகன் தெய்வானையை மணந்து கொள்ள திருப்பரங்குன்றம் வந்தபோது இங்குதான் மாங்கல்யம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல மதத்தவரும் சாதி/மதபேதமோ சச்சரவோ இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். மதுரைக்கு ஒரு மீனாட்சியம்மன் இருப்பதுபோல் திருமங்கலத்திற்கு என்று ஒரு மீனாட்சியம்மன் இருக்கிறார். உசிலம்பட்டி, விருதுநகர் போன்ற பகுதியைச் சேர்ந்…

பாரம்பரியச் சின்னம் ஆகுமா பழவேற்காடு?

Image
பழவேற்காடு, கிட்டத்தட்ட சென்னை மாநகரின் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம். ஆங்கிலேயருக்கு முந்தைய பழங்கால தென் இந்தியாவில் பூம்புகாருக்குப் பிறகு மிகப்பெரும் துறைமுக நடவடிக்கைகள் மிகுந்த இடமாகப் பழவேற்காடு இருந்திருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்ன அடையாளத்தை பெறுவதற்கான தமிழகத்தின் பரிந்துரைப் பட்டியலில் பழவேற்காடும் இணைந்துள்ளது. ஆனால், தமிழக சுற்றுலாத் துறையின் கடைக்கண் பார்வை இன்னும் சரியாக இதன் மேல் விழவில்லை. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பழவேற்காட்டில் இன்னமும் மக்களின் பொருளாதாரத்திலும் சமூக அளவீட்டிலும் சமத்துவம் பெறாமல் பின்தங்கிய நிலைதான் இருக்கிறது.

          இயற்கை வளம் மிக்க பழவேற்காட்டின் தற்போதைய பிரச்னைகளைப் பார்ப்பதற்கு முன், பழவேற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது? பழவேற்காட்டில் ஒளிந்திருக்கும் சில வரலாற்று உண்மைகள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு போகும். ஒரு சிறு உதாரணம், இன்று சென்னை என்கிற ஒரு மாநகரம் இருப்பதற்கான காரணம், பழவேற்காடு என்னும் ஒரு சிறிய கிராமம்தான்!

        …

ஏன் பலருக்கு காந்தியின் மீது வெறுப்பு?

"Mr.Gandhi was not an extra-ordinary man. He was an ordinary man who did extra-ordinary things."

நேற்று(15/08/14) அண்ணா பல்கலைக்கழகத்தில் 'யுவசக்தி' என்றொரு இளைஞர் அமைப்பு நடத்திய இளைஞர் எழுச்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் திரு.எஸ்.இராமகிருஷ்ணனிடம் ஒரு மாணவர் ஒரு கேள்வியைக் கேட்டார். “எனக்குக் காந்தியை மிகவும் பிடிக்கும். ஆனால் என் வயதை ஒட்டிய குறைந்தபட்சம் 50 சதவீத இளைஞர்களுக்கு காந்தியின் மீது வெறுப்பே உள்ளது. அவர் இந்தத் தவறை செய்திருக்கிறார், அந்தத் தவறை செய்திருக்கிறார், என்று ஒரு புகார்ப் பட்டியலே அவர்களிடம் இருக்கிறது. அவற்றிற்கு என்னால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. அவற்றை நான் எப்படி எதிர்கொள்வது?”, என்று கேட்டார். அதற்கு திரு.எஸ்.ரா. அளித்த பதிலை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

”காந்தியை வெறுப்பது என்பது காந்தியை நேசிப்பதற்கான முதல் கட்டம் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவரைப் பிடிக்காவிட்டால்தான் அவரைப்பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம். அவர் ஏதேனும் தவறு செய்துவிட மாட்டாரா என்று காத்துக்கொண்டிருப்போம். காந்தி பற்றிய எல்லா குறைகளையுமே காந்திதான்…

ஜில்ஜில் ஜிகர்தண்டா!

Image
மு.கு: திரைப்படத்தின் போஸ்டர் வேற லெவல்! விரைவில் உத்திரவாதமாக நம் போஸ்டர்கள் உலகின் கவனத்தைப் பெறப்போகின்றன.

          என்ன திரைக்கதைப் பாணி என்றே தெரியவில்லை. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது புழக்கத்தில் உள்ள திரைக்கதை உத்தியை உபயோகப்படுத்துகிறாரா என்றே தெரியவில்லை. சுமார் இருபது குறும்படங்களின் சேர்க்கை, அக்குறும்படங்களின் திரைக்கதையில் உள்ள சிறு சிறு முடிச்சுகள் அப்பொழுதே செம சுவாரசியமாக அவிழ்க்கப்படும். ஆனால் திரைப்படத்தின் மைய முடிச்சு ஒரு மெல்லிய இழை போல மொத்தக் குறும்படங்களையும் ஆக்கிரமிக்கும். இந்த மைய முடிச்சு ஒவ்வொரு குறும்படங்களிலும் வளர்ந்துக்கொண்டே சென்று இறுதிக் காட்சியில் பிரம்மாண்டமாக அவிழும். தடாரென்று சந்தோஷ் நாராயணன் எண்ட்ரி, சிம்ஹாவின் முறுக்கிய மீசை, வெறிகொண்ட பார்வை. உண்மையை உணர்ந்துக்கொண்ட பார்வையாளனின் கை முடி சிலிர்த்துக்கொள்கிறது. திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

          ஜிகர்தண்டா, கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை மாயாஜாலம். ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் சத்தியமாக அடுத்து என்ன ஆகும் என்று கணிக்கவே முடியவில்லை. கதை எதை நோக்கி நகர்கிறது, கதாநாயகனி…

பதினொன்றாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - ஒரு நீட்சி

Image
சாரல் தமிழ் மன்றத்தில் எது நடக்கிறதோ இல்லையோ, புத்தகத் திறனறிதல் சந்திப்பு வாரா வாரம் தொடர்ந்து நடைபெற்றே ஆகவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவரை பதினொரு புத்தகங்கள் தங்குத் தடையின்றித் திறனறியப்பட்டுள்ளன. சாரல் தமிழ் மன்றத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு spin off என்று சொல்லலாம். மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வளர்ச்சியிலோ அல்லது முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்தோ இருக்கும்போது இந்நிகழ்ச்சி மட்டும் சற்றே தனித்து நிற்கிறது. அறிவுப் பரிமாற்றம் மட்டுமே இந்நிகழ்ச்சியின் குறிக்கோள். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு வசதியோ அவ்வாறு பேச முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஒரு புத்தகம் பற்றிப் பேசும்போது, இது தமிழ் மன்றம் நடத்தும் நிகழ்ச்சி, எனவே பேச்சில் ஆங்கிலக் கலப்பு இருக்கக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பேசி, அதனால் புத்தகம் சொல்ல வந்ததை சொல்லாமல் கருத்தில் கோட்டை விடுவதைத் தவிர்க்கவே இப்படி. சொல்ல வருகிற செய்தி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதே முழுமுதல் எதிர்ப்பார்ப்பு. அதனால்தான் ஒவ்வொரு முறையும் புத்தகத் திறனறிதல் சந்திப்பு தொடர்பாக நண்பர்களுக்கு செய்தி ஏதேனும் அனுப்பும்போ…