Posts

Showing posts from January, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

பண்பாடு முழுக்க முழுக்க அப்பழுக்கற்றது அல்ல

Image

Aristocracy & Patronisation - Telegram Debate - 13/01/17

Image
Appandairaj: Perhaps, Aristotle was right about democracy.
Jeykumaran: Your reasons to support Aristotle's view?
Appandairaj: By seeing increasing patronage for Jallikattu. Democracy gets reduced to Mob Rule sometimes where the voices of intellectuals are echoed down by the majority who decide things based on emotion. Vote-bank politics reins over progress. Patronage for populism maims the Govt not to take necessary tough measure lest seen authoritarian. My dad quotes democracy is nothing but 7 fools choosing a 8th biggest fool to be their leader. Global events such as Brexit and US election validate that view.
Jeykumaran: I feel the liberal views are becoming more complex for common man to comprehend and understand. I don't think he is able to appreciate liberal views of plurality and tolerance due to lack of tangible economic relief in his life.We expect reasonable discourse, but have we empowered him to do so? I feel it is no point in blaming the common man for not able to hav…

மருத்துவர் அய்யாவிற்கு மறுப்பு

Image
தினமணியில் நடுப்பக்கக் கட்டுரையாக 03/10/16 அன்று வெளியான மருத்துவர் இராமதாஸ் அய்யாவின் இந்தக் கட்டுரைக்கு (ஒருதலை காதலா? தறுதலை காதலா?) என்னுடைய மறுப்புக் கட்டுரை இது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னளவில் மருத்துவர் அய்யாவின் இந்தக் கட்டுரை ஆழமற்ற, எந்தத் தீர்வையும் முன்வைக்காத வகையில் தான் அமைந்திருக்கிறது. தன் தரப்பு யோக்கியமானது என்று நிறுவ இது ஒரு சமூக சிக்கல் என்று ஆய்வுக்கட்டுரை போல் எழுதிச்செல்கிறார். 'தறுதலை' ஆண்களை ஏதோ வில்லன்களைப் போல் பார்க்கும் மருத்துவர் அய்யா, அவர்களை உருவாக்குவது நாம்தான் என்பதை வசதியாக மறந்துவிட்டார். நமது ஆண்களின் உளவியல் இங்கு மிகவும் முக்கியம். சிறிது நேரம் மனித மூளையைப் பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன். வாதத்திற்கு உதவும்.

ஒரு பெண் தனக்கு எதிராக ஏதேனும் பேசிவிட்டால் அல்லது காதலை மறுத்துவிட்டால் இந்த ‘தறுதலை’ ஆண் ஏன் அப்பெண்ணிற்கு எதிராக வன்முறையில் இறங்குகிறான்? மனித இனம் எண்ணற்ற நாகரிக வளர்ச்சி அ…

ரஸ்டின் கோலின் அவநம்பிக்கைவாதம்

Image
(அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்கமுடியாத கதாபாத்திரங்களுள் ஒருவன் ரஸ்டின் கோல். அவனை உருவாக்கியவர் நிக் பிட்சொலாட்டோ. அவனுடைய தனித்துவமான தத்துவ நிலைப்பாட்டை நீட்ஷேவின் பாதிப்பாக சிலர் கருதுகிறார்கள். சிலர் அவனைப் பைத்தியம் என்பார்கள். ரஸ்டின் கோல் தன்னைத் தத்துவார்த்த அளவில் அவநம்பிக்கைவாதி என்கிறான். 2014-ல் HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பான True Detective தொடரின் முதல் சீசனில் ரஸ்டியாக மேத்யூ மெக்கானகீ பேசிய தத்துவார்த்த வசனங்களைத் தொகுத்து, அதை ஒரு கட்டுரையாக மொழிபெயர்க்க www.genius.com வலைதளம் பெரும் உதவியாக இருந்தது.)

------------------------------------------------------------------------------------------------------------------------

          இப்பிரபஞ்சத்தில் பூமியின் இருப்பிற்குப் பெரிய நோக்கமெல்லாம் இல்லை. பூமி ஒன்றும் தனித்துவமானதும் அல்ல. நாம் சந்திரனிலும் பிறந்திருக்கலாம். எல்லாம் ஒரே கழிவுதான். பிரபஞ்சவெளியில் ஒரு பெரும் குப்பைமேடு, அவ்வளவே. தத்துவம் என்னை அவநம்பிக்கைவாதி என்று சொல்லும். ஆனால் நான் என்னை யதார்த்தவாதி என்றே கருதிக்கொள்கிறேன். என்னைப் பொரு…

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

Image
ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது எதன் அடிப்படையில் முழுமையடைகிறது? வளர்ச்சி, முன்னேற்றத்தின் மூலம் என்றால் அதை மன்னராட்சியால் கூட சாத்தியப்படுத்த முடியும். அடிப்படை உரிமைகள் என்றால் அது கூட பல ஜனநாயகமற்ற நாடுகளில் படிப்படியாகப் போராடிப் பெறப்படுகிறது. அப்படியானால் மற்ற அரசு முறைகளிலிருந்து மக்களாட்சி எந்த தளத்தில் வேறுபட்டு நிற்கிறது? அதுதான் வெளிப்படைத்தன்மையான அரசாங்கம். மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சியின் நிர்வாகம், எப்பொழுது அந்த மக்களிடம் உண்மையாக ஒளிவு மறைவின்றி நடந்து கொள்கிறதோ, அப்பொழுதுதான் அங்கு ஜனநாயகம் முழுமையடைகிறது. அப்படி இந்தியாவில் ஜனநாயகத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் அமல்படுத்தப்பட்டதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

          இதை சாமானியரின் பார்வையிலும் அணுகலாம். ரேஷன் அட்டையைப் புதுப்பிக்கவேண்டி விண்ணப்பித்தவர், அது என்ன ஆனது என்று அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் காட்சியை நம்மால் பலமுறை காண முடியும். பிறப்புச் சான்றிதழ் என்ன ஆனது, புது வீட்டிற்கு மின் இணைப்பு எப்பொழுது கிடைக்கும்; நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்களே…