Posts

Showing posts from May, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடிதம் - இடைநிலை சாதிகளின் ஆதிக்கமும் திராவிட இயக்கமும்

Anonymous
29th May, 2017

விஷ்ணு, நேற்று Quora வலைதளத்தில் திராவிட இயக்கம் பற்றி ஒரு பதிவு படித்தேன். அதில் பரம்பரை பரம்பரையாக நிலம் வைத்திருந்தவர்களான நாயக்கர்,செட்டிகள், ரெட்டிகள் தங்களுக்குக் கீழே ஏழைகளாக வேலை பார்த்த பிராமணர்கள் ஆங்கிலேய படிப்பால் தனக்கு சரிசமமாக வந்தது பிடிக்காமல், அவர்களை எதிர்க்கத் துவங்கப்பட்டது தான் திராவிடர் இயக்கம் - என்று ஒரு கருத்து இருந்தது. இப்போது தமிழகத்தில் நிலவும் OBC domination மற்றும் நடுநிலை சாதிகள் செய்யும் casteism இவற்றை பார்க்கும் போது இக்கருத்து சரி என்றே தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய்? இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த செயற்கையான பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவை வைத்துக்கொண்டிருக்கப் போகிறோம்?


---------------------------------------------------------------------------------------------


Vishnu Varatharajan
29th May, 2017

திராவிட இயக்கத்தில் ஆரியர்-திராவிடர் என்ற இனம் சார்ந்த, அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படாத கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியது பெரியாரோடுதான். அதற்கு முன்பு பிராமணர்-பிராமணரல்லாதோர் பிரிவு இனம் சார்ந்த ஒன்றல்ல. காலனிய …

கடிதம் - நேருவை துணைகொள்ளல்

Anonymous
16th May, 2017

//நேருவின் நிர்வாகத் தவறுகளை விட நேருவின் சாதனைகள் இந்திய ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை// [நேருவைத் துணைகொள்ளல்]. நிர்வாகத் தவறு என்பது சரியல்ல. 2017ல் நாம் வசதியாக உட்கார்ந்துகொண்டு பேசலாம். அன்றைக்கு இருந்த நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். முன்மாதிரியாக நேரு எதை வைத்து அரசாண்டார்? தேசத்துக்கு எது நல்லது என உகந்த வழியே நடந்தார். அதை மீறி கண்டிப்பாக சில தவறுகள் இருக்கத்தான் செய்யும்.


-------------------------------------------------------------


Vishnu Varatharajan
16th May, 2017

ஒரு வரலாற்று மாணவனாக இன்றுவரை என்னை நேருவியன் என்றே அழைத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த (ஒப்பிட முடியாது என்றாலும் மனதிற்குள் காந்தியை விட ஒரு படி மேலாகவே) தலைவர் நேருதான். எனவே உங்கள் வார்த்தைகள் மனதிற்கு இதமாகவே இருக்கிறது. ஆனால் நேரு மீதான அவதூறுகளுக்கு மாற்றாகத் தவறுகளற்ற நேருவை முன்வைக்க விரும்பவில்லை. நேருவை whitewash செய்வதன் மூலம் அவரிடமிருந்து மக்களை விலகவே வைப்போம் என்று நினைக்கிறேன். இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட தே…

Walking with Nehru

Image
We are indeed at crossroads. Jawaharlal Nehru is being exhibited as a man who did nothing more than creating the Kashmir issue, losing the war with China, and neglecting the primary education. Ask a globalised Indian of neo-liberal era about Nehru, and the most probable reply would be that he ruined the country's economy with his obsession with socialism, and spearheaded nepotism in politics. The right-wing even regard him as an extension of colonial legacy. Nehru's character is being intentionally assassinated, as a westernised womaniser who stood against everything that is 'Indian'. How much of these are true? And regardless of what is true and what is not, is that all Nehru has ever been accounted for? Is there nothing more to him?

          Debunking our cognitive and confirmation biases, Nehru's wonders comprehensively outweigh his blunders, and are very significant to the survival of Indian Democracy.

          While the educational and scientific…

நேருவைத் துணைகொள்ளல்

Image
அனைவருக்கும் விருப்பமான, எல்லா இடங்களிலும் நன்மதிப்பைப் பெற்றிருந்த, தேசியத் தலைவராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, காந்திக்குப் பிறகு உலகமே மதித்த ஒரு உலகத் தலைவராக இருந்த நேரு, எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறையினருக்குப் பிடிக்காமல் போனார்? நேருவின் நிர்வாகத் தவறுகள் காரணமா? போஸ் மரணம் தொடர்பான நிரூபிக்கப்படாத பிரச்சாரங்களா? இன்றைய உலகமயமாக்கல் யுகத்தில் உறுத்தும் அவரின் பொதுவுடைமை சார்பு நிலையா? அல்லது காந்தியின் மீதான வெறுப்பு அவருடைய வாரிசு என்பதால் இவர் மீதும் படிந்துவிட்டதா? அல்லது திட்டமிட்டு நேருவின் பிம்பத்தை உடைக்க வேண்டும் என்ற சதியா?

          காஷ்மீர் பிரச்னையை சரியாகக் கையாளாத நேருவாக, சீனப் போரில் இந்தியாவைத் தோற்கச் செய்த நேருவாக, ஆரம்பக் கல்வியைக் கவனியாது விட்ட நேருவாக, மொத்தத்தில் இந்தியாவிற்குத் தீங்கு விளைவித்தவர்தான் நேரு என்று அவரது பிம்பம் அவசர அவசரமாக இன்று கட்டமைக்கப்படுகிறது. இவ்வளவுதான் நேருவா? தவறான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டை நாசமாக்கிவிட்டார் என்றும், காலனிய ஆட்சியின் நீட்சியாகத்தான் அவர் செயல்பட்டார் என்றும் அவர் தொடர்ந்து தாக்கப்படுகிறார்…

இந்தியாவும் உலகமும் - ஜவகர்லால் நேரு

Image
லக்னோவில் நவம்பர் 22, 1952 அன்று ஒரு பொதுக் கூட்டத்தில் நேரு ஆற்றிய உரையிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை நேருவின் நினைவு தினத்தையொட்டி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். இக்காலத்தில் நாம் அவசியமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டிய பல கருத்துகள் இச்சொற்பொழிவில் இருக்கின்றன.

----------------------------------------------------------------------------------------------------------------------

சகோதரிகளே! சகோதரர்களே!

          சென்ற முறை தேர்தலுக்கு முன்னால் நான் லக்னோ வந்தபோது தேசமே உற்சாகத்தில் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் தனிப்பட்ட அளவில் அத்தேர்தல் சுற்றுப்பயணம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் இந்திய மக்களோடு மேலும் நெருக்கமாவதைப் போல் உணர்ந்தேன். அப்பொழுதுதான் புரிந்தது, தில்லியில் எனக்கு எவ்வளவு பணிச்சுமைகள் இருந்தாலும், இந்தியாவின் மற்ற இடங்களுக்கும் நான் தொடர்ந்து வருகை புரிந்தபடி இருக்க வேண்டியது அவசியம் என்று. இந்தியா மிகப்பெரியதொர…

கடிதம் - காந்தியின் முன் இருந்த காரணிகள்

Vignesh K.R.
5th May, 2017

இந்துத்வா குறித்த ஆசையின் கட்டுரையை வாசித்தேன். மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு தார்மீகக் கடமை தனக்கிருப்பதாக காந்தி எண்ணியதன் விளைவுதான் அவர் இந்து மத அமைப்புக்குள்ளேயே நீடித்து இருந்து சாதியை எதிர்க்க நினைத்தது எனத் தோன்றுகிறது. எதையும் விலக்கவோ புறக்கணிக்கவோ தயங்காதவராகவே காந்தி இருந்திருக்கிறார்; ஆனால் இந்து என்ற தன்மையிலிருந்து விலகினால் தன்னை ஒரு இந்துவின் பிரதிநிதியாக முன்நிறுத்திக் கொள்ள முடியாது. 1940-களில் சாதிக்கு எதிரான மனநிலையைக் கொண்டுவிட்ட அவர், அமைப்பிற்குள்ளேயே நீடித்து செயல்பட மேற்சொன்னதும் ஒரு சிறு காரணியாக இருந்திருக்கலாமென நினைக்கத் தோன்றுகிறது. நீ என்ன சொல்கிறாய்?


------------------------------------------------------------------------------------------------------------------------


Vishnu Varatharajan
5th May, 2017

ஆம். முன்பொரு விவாதத்தில் இது விவாதப் பொருளாக வந்தது. அரசியலதிகாரத்தை வன்முறையின் மூலமாகப் பெற முயன்றால் ஆதிக்க சாதியினர் எளிதாக அதை அடக்கி விடுவார்கள் என்பதில் அம்பேத்கர் தெளிவாக இருந்தார். அதே நேரத்தில் காந்தி ஏன் இந்த மத…

கடிதம் - அன்னையர் தினமும் மாதவிடாயும்

Anonymous
14th May, 2017

வணக்கம் விஷ்ணு. ‘மாதவிடாயின் போது பெண்களைத் தீட்டு என ஒதுக்கி வைக்கும் சமூகத்திற்கு அன்னையர் தினம் கொண்டாட அருகதை இல்லை’ என்ற கருத்தை நீ பகிர்ந்திருந்ததைப் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை அன்னையர் தினம் கொண்டாடுவதென்பது தேவையில்லைதான். குடும்பம் ஒற்றுமையுடன் வாழ்வதை மரியாதையுடன் நோக்கும் ஒரு சமூகத்தில் அன்னையர் தினம் அவசியமல்ல என்பது என் கருத்து. ஆனால் தீட்டு என்பது மாதவிடாயின் போது பெண்கள் வேலை செய்துவிடக்கூடாதே என்று அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்று. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்களை ஆரோக்கியத்துடன் எதிர்கொள்ள அந்த ஓய்வு அவசியமானது. இதை உணராமல் இக்காலத்துப் பெண்கள் ஓய்வெடுக்காமல் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள்; அவர்களே அவர்களின் உடலைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் போகிற போக்கில் கருத்து சொல்வது என்பது இன்றைக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. அதை நீயும் செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு விஷயம் பழமையானதாகவோ மத நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதாகவோ இருந்துவிட்டால் அதைப் பரிகாசம் செய்ய வேண்டும் என…

இராட்டையும் ரோஜாவும்

Image
10/05/17 அன்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் நவின் ஜோஷி தொகுத்த “The Charkha and The Rose" புத்தகத்தின் நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தனக்கென்று தனித்த ஆளுமை இல்லாத, முழுக்க முழுக்க காந்தியின் நிழலில் வளர்ந்தவர் நேரு என்று ஒரு புறமும், இத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தும் காந்தி நேருவைத் தலைமைப் பொறுப்புகளுக்கு முன்மொழியக் காரணம் அவரை ஆரம்ப காலத்தில் மோதிலால் நேரு ஆதரித்ததுதான் என்று மற்றொரு புறமும் தொடர்ந்து மேம்போக்கான வாதங்கள் பொதுவாக வைக்கப்படுகின்றன. ஆனால் காந்தி, நேருவுக்கு இடையேயான உறவு என்பது எவ்வாறு தொடர்ந்த உரையாடல்களால் கருத்து வேற்றுமைகளுக்கு இடையே செதுக்கப்பட்டது என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. இது ஒரு ஆய்வு நூல் அல்ல; காந்தி நேரு தொடர்புடைய இருவரின் பேச்சுகள், புத்தகங்கள், கடிதப் பரிமாற்றங்கள், நாளிதழ் செய்திகள், பத்திரிகையாளர் சந்திப்புகள், தலையங்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இப்புத்தகம். திரு.ஏ.பாஸ்கர் அவர்கள் மிக அருமையாக செலுத்திச் சென்ற அந்நிகழ்வில் நான் கேட்டவற்றை என் நினைவில் உள்ளவரை, என் புரிதலையும் இடையிடையே நுழைத்தபடித் தருகிறேன்.
முன்குறிப்பு 1…