Posts

Showing posts from January, 2013
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வாழ்க சுஜாதா !

இன்று "Heat and Mass Transfer" வகுப்பில் 'critical insulation thickness' என்றால் என்ன என்று புரியவைப்பதற்குள் ஆசிரியருக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. வெப்பம் கடந்து போவதைக் தடுப்பது அல்லது குறைப்பது எப்படி என்பதை விளக்கும் ஒரு தலைப்பு அது. ஆசிரியர் கடைசி வரை பூச்சி பூச்சியாய் கணக்குப் போட்டு விளக்க முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. கணக்குகள் குழப்பத்தைத்தான் அதிகரித்தன. திடீரென்று எனக்கு எங்கிருந்தோ சுஜாதாவின் ஞாபகம் வந்து விட்டது. இந்த வெப்பத்தடை டமாரத்தை ஆழமாகப் அப்புறம் புரிந்து கொள்ளலாம், அப்போது கணிதத்தின் உதவியை நாடலாம், இப்போது என்னதான் இது என்று தெரிந்து கொள்ள எளிமையாக சிந்திக்கலாம் என்று முடிவு செய்து முடிப்பதற்குள்... புரிந்துவிட்டது ! பக்கத்தில் இருந்தவனிடம் எளிமையாக விளக்கி அவனைத் தெளிவாக்கினேன். பிரச்னை பெரிதாக ஒன்றும் இல்லை. பொருளின் thickness-ஐக் கூட்டினாலே வெப்பம் கடந்து போவது குறையுமே என்று மாணவர் தரப்பு வாதாட, இல்லை குறையாது என்று ஆசிரியர் கணிதச் சமன்பாடுகளை சாட்சிக்கு அழைத்துக் கொண்டிருக்க, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

நா…

டைட்டானிக் - ஒரு பொறியியல் தோல்வி

இன்று “Strength of Materials” செய்முறை வகுப்பில் எந்த உலோகத்தை எதற்குப் பயன்படுத்துவது என்பதை விளக்க ஆசிரியர் ஒரு சம்பவத்தை சொன்னார்:

எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும் அதை சந்தைப் படுத்துவதற்கு முன்பு அதனை ஏகப்பட்ட பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். இந்த வேகத்தில் மோதினால் இதற்கு எவ்வளவு சேதம் உண்டாகிறது, இதை உபயோகிப்பவரின் பாதுகாப்பை இது எந்த அளவிற்கு உறுதி செய்கிறது, இதன் மீது எவ்வளவு விசை கொடுத்தால் உடைகிறது அல்லது வளைகிறது, என்று பலப்பல பரீட்சைகளில் பாஸ் ஆனால் மட்டுமே அது சந்தைக்கு அல்லது பயன்பாட்டிற்கு வரும். ஆனால் மூழ்கவே மூழ்காது என்று சொல்லப்பட்ட டைட்டானிக் கப்பல் உடைந்து உள்ளே போனதற்கு இந்த உலோகத் தேர்வில் ஏற்பட்ட தவறு ஒரு முக்கியமான காரணம் ! எப்படி ?

டைட்டானிக்கின் அடிப்பாகம் “Mild Steel” என்று சொல்லப்படும் மிதமான எஃகு கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த Mild Steel நல்ல பலசாலியான உலோகக் கலவைதான். சாதாரண சைக்கிளுக்கே ஏகப்பட்ட டெஸ்டுகள் இருக்கின்றன, இது கப்பலின் அடிப்பாகமாக வேறு ஆகப்போகிறது, எனவே இதனைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று பாடாய்ப் படுத்…

இரத்ததானம்

அவர் ஒரு அருணாச்சலப் பிரதேசக்காரர். பிறந்ததிலிருந்து இருதயக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு 40 வயதில் சென்னை பெரம்பூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது A1+ ரத்தம் வங்கியில் கிடைக்காமல் போக, கடைசி நேரத்தில் இரண்டு நல்ல நெஞ்சங்களை ரத்தம் தர அங்கு அழைத்து சென்றேன். ரத்ததானம் முடிந்தபின் அவரை சந்தித்து அடுத்த நாள் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு நம்பிக்கை தெரிவித்துவிட்டு வந்தோம். முந்தாநாள் அவரது அண்ணன் என்னைத் தொடர்பு கொண்டு தட்டுத்தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் குரலுடைந்து பேசினார். ”ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுது சார். பிரச்னை ஒன்னும் இனிமே இல்லைனு சொல்றாங்க. கடைசி நேரத்துல வந்து என் தம்பி உயிரைக் காப்பாத்தின அந்த ரெண்டு பேரை என்னிக்கும் நாங்க மறக்கமாட்டோம்”, என்றார். தமிழகத்து ரத்தம் தற்போது அருணாசலப்பிரதேச உயிரினுள் கலந்து ஒடிக்கொண்டிருக்கிறது. நாம் எவ்வளவோ பிரிவுகளாலும் நாடுகளாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்த ரத்தம் என்கிற வஸ்துவின் தேவை ஏற்படுகிறபோது அவையெல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறது என்பதை உணர்ந்து அன்றே இரத்ததானம் செய்ய ஆரம்பித்…

துக்ளக் - 43வது ஆண்டு விழா

சோவின் பல கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் வருடா வருடம் அவர் சொல்லும் ஏதாவது இரண்டு கருத்துகள் என்னிடம் கவன ஈர்ப்புத் தீர்மானம் பெற்றுவிடும் என்பதால் துக்ளக் ஆண்டு விழாவை நான் காணத் தவறுவதில்லை. இந்த வருடம் அப்படி முக்கியத்துவம் பெற்றவை இரண்டு:

1. ரஜினிகாந்தைப் பற்றி ஏதாவது சொன்னால் வழக்கமாக அரங்கத்தைப் பிளக்கும் கரகோஷம் இந்த வருடம் அவ்வளவாக இல்லை. "தனி வழி உருப்படாத வழி" என்று கூட்டத்தில் ஒருவர் கத்தி சோவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். "தனி வழி என்றால் நான் இப்படிப் போகப் போகிறேன், இஷ்டமுள்ளவர்கள் பின்னால் வாருங்கள் என்று விடுக்கும் அழைப்பு; அதுவே தலைமைப்பண்பின் அடையாளம்" என்று ஒரு போடு போட்டார் சோ ! ரஜினியின் ரியாக்சனைப் பார்ப்பதற்காக என்றே வீடியோ சிடி வாங்குவது என்று உத்தேசம். ஆகமொத்தம் கலகம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கிறார் சோ, இது எங்க போய் முடியப் போகுதோ...

2. அ.தி.மு.க.-வை சோ ஏன் ரொம்ப‌வும் எதிர்க்கவில்லை என்பதற்கான விடை நிறைய பேருக்குத் தெரிந்திருந்தாலும் வாய்மொழியாக அதை சோ போட்டு உடைத்தார். "தி.மு.க. திரும்பி வந்துவிடக்கூடாது, அதனா…

எம்.பி.ஏ. விவசாயி !

கொஞ்ச நேரம் விவசாயம் பேசுவோம்.

விவசாயம், இந்திய உயிர்களை, அதன் பொருளாதாரத்தை, இன்று வரை தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் நம் தேசத்தின் ஆதார சக்தி, முதுகெலும்பு. தற்போதைய விவசாயத்தின் நிலையில் நல்ல அம்சங்கள் கெட்ட அம்சங்கள் இரண்டுமே இருக்கின்றன. இந்தியாவின் GDP-இல் விவசாயத்தின் பங்களிப்பு 18.5 சதவீதம். நம் இந்தியப் பொருளாதாரம் உயிர்ப்போடு இருப்பதற்கு விவசாயம் செய்யும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த கோணத்தை மனதில் நிறுத்திப் பார்க்கிறபோது விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், தொய்வுகள் போன்றவற்றைப் புறக்கணிப்பது யாருக்கும் நல்லதல்ல என்பது தெளிவாகிறது. இது முதலில் புரிய வேண்டும். சரி, விவசாயம் சந்திக்கும் பிரச்னைகள் என்னன்ன ?

National Crime Records Bureau (NCRB) சமர்ப்பித்த ஆய்வறிக்கையின்படி கடந்த 2010ல் மட்டும் 15,964 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றனர். 2009-ம் வருடம் இன்னும் மோசம், 17,398 தற்கொலைகள். கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளின் தற்கொலைகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது. ஏகப்பட்ட விதர்பாக்கள் இந்தியாவில் இருந்தவண்ணம்தான் உள்ளது. இதற்கு ஏகப்ப…

Facebook Debate 1 - 03/01/13

Image
Status:

I have few questions to ask...

1. Why do most of the people categorize rape as an act of sex instead of an act of violence ? The real problem India faces is not women getting raped, but experiencing all kinds of violent harassment from men, which widely ranges from grope to rape. With this point in mind, how can chemical castration be the solution ?

2. Can chemical castrations stop men from teasing and groping women ? If implemented, the rape crimes will decrease, but is that the real problem ? Isn't there a possibility that after the implementation of this act also, women can be harassed and teased until the point of getting raped, and then will be left out, thus allowing men to be escaped from chemical castration and getting just a few years of imprisonment ?

3. We know that we guys are male chauvinists, and we all want to collectively get cured of that millennium old disease. Now isn't it a foolish thing to castrate those men ? It's fine if they stay at jail, bu…

The Delhi rape victim's friend has finally spoken !

Image
To all those chauvinists who speak as if they were present during the incident and state that it's the girl's mistake to have gone out at night, all your blind words are shattered by this one man's interview. Take some time to read the link given at the end and find who and who did mistakes:

People were afraid to help us: Delhi gang-rape victim's friend

Now,

1. The bus had tinted windows and curtains. Was it the girl's duty to have checked whether the Supreme Court's orders are implemented and supervised properly ?
2. Was it the girl's mistake to have her raped by those men ?
3. Do you think that no lives were around the bus and the two were alone after they were thrown out ? They were without clothes and bleeding, and there were people walking and driving, and no one came to help ! What everyone did was slowed down their cars and motorbikes and rickshaws, caught a glimpse of them, and just carried on with their own work ! Is it the girl's mistake to no…

28/08/12 - Appa-Amma's wedding day

Image
அன்பைக் காட்டத் தெரியவில்லை எனக்கு. நான் என் அப்பாவின் ஜெராக்ஸ் காப்பி என்று அனைவரும் சொல்லும்போது சந்தோஷத்தில் எனக்கு என்னமோ பண்ணுகிறது, அப்பாவைக் கட்டியணைக்க வேண்டுமா, தோள் மீது கைபோட்டுக் கொள்ளவேண்டுமா, தொடையைச் செல்லமாக தட்டிக்கொடுக்க வேண்டுமா, மனசு விட்டுப் பேச வேண்டுமா, மோதிரத்தில் முத்தம் பதிக்க வேண்டுமா, தூங்கும்போது காலை அமுக்கி விட வேண்டுமா, என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை, அதேபோல் அப்பாவுக்கும் தெரியவில்லை ! அவர்தான் ஒரிஜினல் ஆச்சே ! அன்பைக் காட்டத் தெரியவில்லை, ஆனால் அன்பு இருப்பதுதான் முக்கியம், காட்டுவது இல்லை என்பது என் அப்பாவின் கோட்பாடு. சரியோ தப்போ, அந்த எண்ணம் அப்படியே எனக்கும் வந்துவிட்டது. இன்று என் அப்பா-அம்மாவின் 21-ம் கல்யாண நாள். என் அப்பா-அம்மாவுக்குப் பெரிதாக நான் ஒன்றும் செய்ததில்லை, அம்மாவிடம் சமையல் சூப்பர் என்று சொன்னதில்லை, அப்பாவிடம் நீங்கதான்பா என் ஹீரோ என்று காட்டிக்கொண்டதில்லை, ஆனால் இதெல்லாம் அவர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும் ! சில நாட்கள் பிரிந்து இருந்தால் ஒரு ஃபோன் போட்டுக்கூட பேசியதில்லை. ஒரு மனிதனாக இதுவரை எந்த நல்லதையும் அவ…