Posts

Showing posts from June, 2013
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

''எப்படியோ மாட்டிக்கிட்டேன்!''

Image
''மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது...

ஆல்பின் மெக்ஃபர்லேன், தொழிலதிபர்: ''ஒரு நாள் வேலை சீக்கிரம் முடிஞ்சு, ஃப்ரெண்டு ஒருத்தன் கூப்பிட்டானு பார்ட்டிக்குப் போயிட்டு லேட் நைட் வீட்டுக்குப் போனேன். வீட்ல கேட்டதுக்கு 'வேலை ரொம்பா ஜாஸ்தி’னு சொல்லிட்டுப் படுத்துட்டேன். மறுநாள் என் வீட்டுக்கு வந்த ஃப்ரெண்டு, '' நேத்து நைட் பார்ட்டி எப்படி மச்சி?''னு கேட்டுத் தொலைச்சிட்டான். அதை என் பொண்டாட்டியும் கேட்க... அவங்க பார்த்த பார்வை இருக்கே... என்னா திட்டு?''

சிங்காரவடிவேலு, ஆசிரியர்: ''என் மனைவிக்கு ஸ்ரீவைகுண்டம் கோயில் ரொம்பப் பிடிக்கும். முடிஞ்சவரைக்கும் அந்த ஊர்லேயே செட்டிலாகணும்னு ஆசைப்பட்டா. எனக்கும் அந்த ஊர்லேயே வேலை கிடைச்சுது. ஆனா, எனக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை. அதனால, எனக்கு அங்கே வேலை கிடைச்ச விஷயத்தை மறைச்சு, சென்னைக்கு வந்துட்டோம். பத்து வருஷத்துக்கப்புறம் இந்த விஷயம் அவளுக்குத் தெரிஞ்சு, கிட்டதட்ட ஆறு மாசம் என்கிட்டப் பேசவே இல்லை. இப்போ பேசினாலும் ஒவ்வொரு தடவை சண்…

வாழ்க்கை ஒரு போர்க்களம்!

Image
''போராட்டங்கள், இடையூறுகளால் பாதி வழியில் சிக்கிச் சின்னா பின்னமான  அனுபவம் உண்டா?'' என்று இவர்களிடம் கேட்டபோது...

மதன் கார்க்கி,பாடலாசிரியர்: ''எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். ராத்திரி நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைஞ்சு வீட்டுக்குள்ள சிதறிச்சு. என்ன நடக்குதுன்னே புரியல.  அப்பா உடனே எங்களை  உள்ளேபோய் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு போலீஸுக்கு போன் பண்ணி விசாரிச்சாங்க. 'ராஜீவ் காந்தியைக் கொலை பண்ணிட்டாங்க. அதுக்காக தி.மு.க. ஆதரவாளர்களை அடிக்கிறாங்க. நாங்க உடனே உங்க வீட்டுக்குப் பாதுகாப்பு தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா, ஊர் முழுக்க இந்த மாதிரி நிறையக் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததால போலீஸால் நேரத்துக்கு வரமுடியலை.  அதுக்குள்ள எங்க கார் மேல பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க. அந்த ராத்திரி முழுக்க திக் திக்குன்னு பயந்துகிட்டே இருந்தோம். அதை இப்போ நினைச்சாலும் பயமா இருக்கும்!''

சேகர்,ஆட்டோ ஓட்டுனர்: ''6 மாசத்துக்கு முன்னாடி கத்திப்பாராவுல போலீஸ்காரங்க எங்களை நிறுத்தி வெச்சுட்டாங்க. பாலத்துக்கு அந்தப் பக்கம் பி…

சுகநிவாஸ் தயிர் சேமியாவும் மனிதனை அரிக்கும் ராட்சத மீனும்!

Image
''மைலாப்பூர்காரன்னு சொல்லிக்கிறதுல எனக்கு எப்பவுமே தனிப் பெருமை உண்டு. என் உயிரோடும், உணர்வோடும், மனதோடும் கலந்த ஊர் இது'' என்று மைலாப்பூர் பற்றிய நினைவுகளில் மூழ்குகிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

''ஒரு காலத்துல மேடை நாடகங்கள் என்றால் மைலாப்பூர்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். இங்கே ஓயாமல் நாடகங்கள் நடந்துகிட்டே இருக்கும். அதிலும் சென்னையின் பழமையான சபாக்களில் ஒன்றான பார்த்தசாரதி சபாவில் டிராமாக்கள் பார்த்த பொழுதுகள் அப்படியே கண்ணுல நிக்குது. ஆர்.எஸ்.மனோகரா, புரசை தம்பிரான் என எத்தனையோ பேரின் நாடகங்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்களையும் பார்க்கிற பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சது. இன்னைக்கு மாதிரி அன்றைக்கு நெரிசலோ, டிராஃபிக்கோ இல்லாததால வீட்டில் உட்கார்ந்தே ஓசியில் முழு நாடகத்தையும் நெடுந்தூரத்துக்குக் கேட்க முடியும்.

மாடவீதி அப்படினு சொன்னாலே ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக்கும். அங்கே நடக்கிற அறுபத்து மூவர் உலாவில் கலந்துகிட்டா தனி திருப்தி. இங்கேதான் கம்பீரமா கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் ஒலிக்கும். மொட்டை மாடியிலும் செட்டு வீடுகளிலும் கழி…

சர்க்கஸ்ல இருந்து வந்துட்டியா?

Image
          '82 ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்ட என் வாழ்வில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிணைந்து இருக்கும் பகுதி சென்னை. வேளச்சேரிக்குக் குடிவந்து சிலகாலமே ஆனாலும் இங்கேதான் என் நினைவெல்லாம் நிறைந்து கிடக்கிறது. இந்தப் பகுதியைப் பற்றி எனக்கு எந்தக் குறைபாடுகளும் இல்லை!' என கவனம் ஈர்க்கிறார் எழுத்தாளர் அசோகமித்திரன்.

''இப்போது வேளச்சேரி சென்னையின் அங்கமாக ஆகிவிட்டாலும் நான் இங்கேவந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் ஒரு தனி கிராமமாகத்தான் இருந்தது. இராமாயணத்தை எழுதிய ஆதிகவி வால்மீகி இங்கே வாழ்ந்ததாகவும் அதனால், இது வேதஸ்ரேணி என அறியப்பட்டு பின் வேளச்சேரி என ஆனதாகவும் நம்பிக்கை உண்டு. வயற்காடுகள் சூழ்ந்து இருந்த இந்தப் பூமி இன்று கட்டடங்களையும் எண்ணற்ற மக்கள் கூட்டத்தையும் தனதாக்கிக்கொண்டுவிட்டது. ஆனால், இப்போதும் அது தன் அற்புதமான அமைதியை இழக்கவில்லை. பல சென்னைவாசிகளுக்கு எப்போதும் இரைந்துகொண்டு இருக்கும் தி.நகரும், புரசைவாக்கமும் பிடித்து இருக்கிறது. ஆனால், அமைதி தவழ்கிற ஒரு மண் இது. காற்றாட, தரமணிவரை நாங்கள் இதன் அமைதியை ரசித்தபடியே நடந்துபோன காலங்கள், காலப்போக்கில்…