Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

டைட்டானிக் - ஒரு பொறியியல் தோல்வி

இன்று “Strength of Materials” செய்முறை வகுப்பில் எந்த உலோகத்தை எதற்குப் பயன்படுத்துவது என்பதை விளக்க ஆசிரியர் ஒரு சம்பவத்தை சொன்னார்:

எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும் அதை சந்தைப் படுத்துவதற்கு முன்பு அதனை ஏகப்பட்ட பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். இந்த வேகத்தில் மோதினால் இதற்கு எவ்வளவு சேதம் உண்டாகிறது, இதை உபயோகிப்பவரின் பாதுகாப்பை இது எந்த அளவிற்கு உறுதி செய்கிறது, இதன் மீது எவ்வளவு விசை கொடுத்தால் உடைகிறது அல்லது வளைகிறது, என்று பலப்பல பரீட்சைகளில் பாஸ் ஆனால் மட்டுமே அது சந்தைக்கு அல்லது பயன்பாட்டிற்கு வரும். ஆனால் மூழ்கவே மூழ்காது என்று சொல்லப்பட்ட டைட்டானிக் கப்பல் உடைந்து உள்ளே போனதற்கு இந்த உலோகத் தேர்வில் ஏற்பட்ட தவறு ஒரு முக்கியமான காரணம் ! எப்படி ?

டைட்டானிக்கின் அடிப்பாகம் “Mild Steel” என்று சொல்லப்படும் மிதமான எஃகு கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த Mild Steel நல்ல பலசாலியான உலோகக் கலவைதான். சாதாரண சைக்கிளுக்கே ஏகப்பட்ட டெஸ்டுகள் இருக்கின்றன, இது கப்பலின் அடிப்பாகமாக வேறு ஆகப்போகிறது, எனவே இதனைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று பாடாய்ப் படுத்தி எடுத்துப் பார்த்தும் இது எதற்குமே அசராமல் ஸ்டெடியாக நின்றது. சரி, தம்பி பாஸ், இதை உபயோகப்படுத்தலாம் என்று ஒப்புதல் வழங்கி ஆசிர்வதித்துவிட்டார்கள். ஆனால் ஒரு முக்கியமான டெஸ்டை செய்ய மறந்து விட, அதுவே இந்த விபத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகப் போய்விட்டது.

இந்த Mild Steel உலோக்கலவையின் பண்பு உப்புத்தண்ணீரில் எப்படி இருக்கும், மேலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் இது எந்த அளவுக்கு உடையாமல் தாக்குப் பிடிக்கும் என்பதைக் கண்டறிய அவர்கள் தவறிவிட்டார்கள். நல்ல உடம்போட இருக்கான், சோ நீச்சல் கண்டிப்பா அடிப்பான் என்று முடிவு செய்வதைப் போல் இதற்கு ஒப்புதல் வழங்கி விட்டார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த Mild Steel-இற்குக் உப்புத் தண்ணீர், குளிர் என்றாலே அலர்ஜி. இது தெரியாமல் டைட்டானிக் கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலில் மிதக்க விட்டுவிட, மிகமிக மோசமான விளாறல்களை எல்லாம் ஆய்வுக்கூடத்தில் அசால்டாக சந்தித்த அந்த உலோகக்கலவை குளிர் தாங்காமல், உப்புத் தண்ணீர் அரிப்பால் பலவீனமாகி, பனிப்பாறை மோதலில் விரிசல் அடைய, தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கப்பல் இரண்டாகப் பிளந்து போனது. அந்தக் காலகட்டத்தில் டைட்டானிக் எவ்வளவோ சாதனைகளைத் தன்னிடத்தில் வைத்திருந்தாலும் கூட அது ஒரு மாபெரும் பொறியியல் தோல்வியே.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி