Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ட்ரிபிள் ஜம்ப் சிறுத்தை !

ரோச்சல் மரியா மக்ஃபர்லேன், தமிழகத்தின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டப் புறப்பட்டிருக்கும் பெண் சிறுத்தை. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ட்ரிபிள் ஜம்ப் போட்டியில், '12.13 மீட்டர் தாண்டிய ஒரே வீராங்கனை' என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். 14 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதலிலும் முதன்முதலில் 5.82 மீட்டர்களை அநாயசமாகக் கடந்து சாதனை புரிந்தவர். படிப்பது... சென்னை, செயின்ட் கொலம்பஸ் ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் ஒன்.
சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தமிழக அளவிலான சி.எம். டிராஃபியில் கடுமையான போட்டியின் இறுதியில் இவருக்கு கிடைத்திருப்பது தங்கம். ''அக்கா டானியா மரியா, நீளம் தாண்டுதல்ல ஸ்டேட் பிளேயர். அதைப் பார்த்துதான் எனக்கும். லாங்க் ஜம்ப், டிரிபிள் ஜம்ப்... ரெண்டுலயும் இப்போ நான் டாப்பர். போட்டிக்குப் போனா... மெடல் வாங்காம திரும்பினதில்ல.


கடுமையான பிராக்டீஸ் பண்றதோட... போட்டி சமயத்துல எந்த பிரஷரையும் ஏத்திக்காம, மென்டல் லெவலையும் நான் சீரா வெச்சுக்குவேன். அதுதான் என்னோட பலம்னு நம்புறேன். நேரு ஸ்டேடியத்துல டிரிபிள் ஜம்ப் ஃபைனலில் ஆரம்பத்துலயே 12.24 மீட்டர் தாண்டி நான்தான் லீடிங்ல இருந்தேன். கோல்ட் எனக்குதான்னு கிட்டத்தட்ட முடிவான சமயத்துல, சிவஅன்பரசி 12.27 மீட்டர் தாண்டி அசத்திட்டாங்க. இன்னும் ஒரு சான்ஸ்தான் இருக்கு. என் அப்பா, கோச் யார் முகத்தையும் பார்க்கல. முடிஞ்சவரை டிரை பண்ணுவோம்னு ஓடினேன். ரிசல்ட் 12.50 மீட்டர். நான் டென்ஷனாகியிருந்தா, இந்த வெற்றி கிடைச்சுருக்காதுல்ல!''

- ரசிக்க ரசிக்க பேசும் ரோச்சலின் அடுத்த இலக்கு.... '2014-ம் ஆண்டு ஆசிய ஜூனியர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்' போட்டிகளில் தங்கம் வெல்வதுதான்!

- வ.விஷ்ணு
படங்கள்: ப.சரவணகுமார்
(அவள் விகடன் - 06/11/12)

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்