Posts

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாரம்பரியச் சின்னம் ஆகுமா பழவேற்காடு?

Image
பழவேற்காடு ஏரி           பழவேற்காடு, கிட்டத்தட்ட சென்னை மாநகரின் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம். ஆங்கிலேயருக்கு முந்தைய பழங்கால தென் இந்தியாவில் பூம்புகாருக்குப் பிறகு மிகப்பெரும் துறைமுக நடவடிக்கைகள் மிகுந்த இடமாகப் பழவேற்காடு இருந்திருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்ன அடையாளத்தை பெறுவதற்கான தமிழகத்தின் பரிந்துரைப் பட்டியலில் பழவேற்காடும் இணைந்துள்ளது. ஆனால், தமிழக சுற்றுலாத் துறையின் கடைக்கண் பார்வை இன்னும் சரியாக இதன் மேல் விழவில்லை. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பழவேற்காட்டில் இன்னமும் மக்களின் பொருளாதாரத்திலும் சமூக அளவீட்டிலும் சமத்துவம் பெறாமல் பின்தங்கிய நிலைதான் இருக்கிறது.           இயற்கை வளம் மிக்க பழவேற்காட்டின் தற்போதைய பிரச்னைகளைப் பார்ப்பதற்கு முன், பழவேற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது? பழவேற்காட்டில் ஒளிந்திருக்கும் சில வரலாற்று உண்மைகள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு போகும். ஒரு சிறு உதாரணம், இன்று சென்னை என்கிற ஒரு மாநகரம் ...

ஏன் பலருக்கு காந்தியின் மீது வெறுப்பு?

"Mr.Gandhi was not an extra-ordinary man. He was an ordinary man who did extra-ordinary things." நேற்று(15/08/14) அண்ணா பல்கலைக்கழகத்தில் 'யுவசக்தி' என்றொரு இளைஞர் அமைப்பு நடத்திய இளைஞர் எழுச்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் திரு.எஸ்.இராமகிருஷ்ணனிடம் ஒரு மாணவர் ஒரு கேள்வியைக் கேட்டார். “எனக்குக் காந்தியை மிகவும் பிடிக்கும். ஆனால் என் வயதை ஒட்டிய குறைந்தபட்சம் 50 சதவீத இளைஞர்களுக்கு காந்தியின் மீது வெறுப்பே உள்ளது. அவர் இந்தத் தவறை செய்திருக்கிறார், அந்தத் தவறை செய்திருக்கிறார், என்று ஒரு புகார்ப் பட்டியலே அவர்களிடம் இருக்கிறது. அவற்றிற்கு என்னால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. அவற்றை நான் எப்படி எதிர்கொள்வது?”, என்று கேட்டார். அதற்கு திரு.எஸ்.ரா. அளித்த பதிலை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ”காந்தியை வெறுப்பது என்பது காந்தியை நேசிப்பதற்கான முதல் கட்டம் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவரைப் பிடிக்காவிட்டால்தான் அவரைப்பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம். அவர் ஏதேனும் தவறு செய்துவிட மாட்டாரா என்று காத்துக்கொண்டிருப்போம். காந்தி பற்றிய எல்லா குறைகளையுமே காந்தித...

ஜில்ஜில் ஜிகர்தண்டா!

Image
மு.கு: திரைப்படத்தின் போஸ்டர் வேற லெவல்! விரைவில் உத்திரவாதமாக நம் போஸ்டர்கள் உலகின் கவனத்தைப் பெறப்போகின்றன.           என்ன திரைக்கதைப் பாணி என்றே தெரியவில்லை. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது புழக்கத்தில் உள்ள திரைக்கதை உத்தியை உபயோகப்படுத்துகிறாரா என்றே தெரியவில்லை. சுமார் இருபது குறும்படங்களின் சேர்க்கை, அக்குறும்படங்களின் திரைக்கதையில் உள்ள சிறு சிறு முடிச்சுகள் அப்பொழுதே செம சுவாரசியமாக அவிழ்க்கப்படும். ஆனால் திரைப்படத்தின் மைய முடிச்சு ஒரு மெல்லிய இழை போல மொத்தக் குறும்படங்களையும் ஆக்கிரமிக்கும். இந்த மைய முடிச்சு ஒவ்வொரு குறும்படங்களிலும் வளர்ந்துக்கொண்டே சென்று இறுதிக் காட்சியில் பிரம்மாண்டமாக அவிழும். தடாரென்று சந்தோஷ் நாராயணன் எண்ட்ரி, சிம்ஹாவின் முறுக்கிய மீசை, வெறிகொண்ட பார்வை. உண்மையை உணர்ந்துக்கொண்ட பார்வையாளனின் கை முடி சிலிர்த்துக்கொள்கிறது. திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.           ஜிகர்தண்டா, கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை மாயாஜாலம். ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் சத்தியமாக அடுத்து என்ன ஆகும் என்று ...

பதினொன்றாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - ஒரு நீட்சி

Image
          சாரல் தமிழ் மன்றத்தில் எது நடக்கிறதோ இல்லையோ, புத்தகத் திறனறிதல் சந்திப்பு வாரா வாரம் தொடர்ந்து நடைபெற்றே ஆகவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவரை பதினொரு புத்தகங்கள் தங்குத் தடையின்றித் திறனறியப்பட்டுள்ளன. சாரல் தமிழ் மன்றத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு spin off என்று சொல்லலாம். மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வளர்ச்சியிலோ அல்லது முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்தோ இருக்கும்போது இந்நிகழ்ச்சி மட்டும் சற்றே தனித்து நிற்கிறது. அறிவுப் பரிமாற்றம் மட்டுமே இந்நிகழ்ச்சியின் குறிக்கோள். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு வசதியோ அவ்வாறு பேச முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஒரு புத்தகம் பற்றிப் பேசும்போது, இது தமிழ் மன்றம் நடத்தும் நிகழ்ச்சி, எனவே பேச்சில் ஆங்கிலக் கலப்பு இருக்கக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பேசி, அதனால் புத்தகம் சொல்ல வந்ததை சொல்லாமல் கருத்தில் கோட்டை விடுவதைத் தவிர்க்கவே இப்படி. சொல்ல வருகிற செய்தி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதே முழுமுதல் எதிர்ப்பார்ப்பு. அதனால்தான் ஒவ்வொரு முறையும் புத்தகத் திறனறிதல் சந்திப்பு தொடர்பாக நண்பர்களுக்கு செ...

சதுரங்கச் சுட்டிகள்

“ஒவ்வொரு மேட்ச்லயும் எதையாச்சும் கத்துக்கணும்!”                                                                                                                                                                             வைஷாலி - பிரஞ்யானந்தா. விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க வாரிசுகள் என்று சொல்லுமளவிற்குத் தங்களின் பதக்கங்களின் மூலமாகத் தமிழகத்திற்குப்  பெருமையை சேர்த்துக்கொண்டிருக்கும் சாதனைச் சுட்டிகள். அதிலும் பிரஞ்யானந்தா கடந்த 25ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஏழு வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த இந்திய சதுரங...

எட்டாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - நிறைவேறிய நோக்கம்?

Image
          சாரல் தமிழ் மன்றத்தின் ’புத்தகத் திறனறிதல் சந்திப்’பிற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, புத்தகம் வாசிக்கத் தூண்டுவது. இரண்டாவது, நம்மைச் சுற்றியுள்ள அரசியல்/சமூக/பொருளாதார/இன்னபிற பிரச்னைகளைக் குறித்த ஒரு தெளிவான பார்வையையும் புரிதலையும் என்றும் முடிவு பெறாத ஒரு சிந்தனை ஓட்டத்தையும் உருவாக்குவது.           சென்ற வாரம் நடந்த ‘பார்த்திபன் கனவு’ புத்தகத் திறனறிதலின்போது முதல் நோக்கம் சற்றே நிறைவேறியது. நிறைய மாணவர்கள் அப்புத்தகம் வாசிக்கக் கிடைக்குமா என்று கேட்டனர். நேற்று முன்தினம் நடந்த ‘இந்தியப் பிரிவினை’ புத்தகத் திறனறிதலின்போது இரண்டாவது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சி ஏற்பட்டது. நண்பன் கே.ஆர்.விக்னேஷ் கருத்துப் பகிர்வை நிறைவு செய்த பிறகு, “ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?”, என்று கேட்டதுதான் தாமதம், கேள்விக்கணைகள் முழுவீச்சில் பறந்தன. புத்தகத் திறனறிதல் நிறைவு பெரும்வரை வரிசையாக அமர்ந்திருந்த மாணவ மாணவிகள், நிறைவு பெற்ற அடுத்த நொடி வட்டமாக அமர்ந்துகொண்டு விவாதிக்க ஆரம்பித்தனர். மிக...

தமிழக அரசியல் வரலாறு: பாகம்-1

Image
          ஆர்.முத்துக்குமாரின் ‘தமிழக அரசியல் வரலாறு’ புத்தகத்தின் முதன் பாகத்தை வாசித்து முடித்தேன். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இந்திரா காந்தி ஆட்சியில் ஒன்னே முக்கால் வருட அவசர நிலைப் பிரகடனம் முடிவுக்கு வரும் வரை உள்ள காலத்தில் தமிழக அரசியல் களம் எப்படி இருந்தது, என்ன சம்பவங்களெல்லாம் நடைபெற்றன, அவற்றின் பின்னணி என்ன என்று எளிய நடையில் படிக்க செம சுவாரசியமாக இருக்கிறது. வரலாறு வேறு, விவரங்கள் கொஞ்சம் வரண்டு போனாலும் வாசகனுக்கு அலுப்பு தட்டிவிடும். ஆனால் ஒரு வெகுஜன அரசியல் இதழில் தொடராக வெளி வந்ததாலோ என்னவோ, ஒரு கதை போல் பரபரவென்று புத்தகம் டாப் கியரில் பறக்கிறது. ஆங்கிலத்தில் ‘The Adventures of…’ என்று தொடங்கும் பல கதைகளைப்போல் இதை ‘The Adventures of Tamil Nadu’ என்று சொல்லலாம். தமிழகத்தின் சரித்திரப் பக்கங்களில் இவ்வளவு சாகசப் பயணங்களா என்று ஆச்சரியப்பட வைக்கும் நூல்.           இந்நூலை வாசித்து முடிக்கும்போது நூல் நெடுக ஒரு மெல்லிழ இழை அனைத்தையும் இணைப்பதை உணரலாம். அது, ”யாரையும் முழுமையாக ஏற்கவும் முடியாது, முழ...