Posts

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹீலம்

நாக்கு சுரசுரப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இயற்கை மருத்துவத்தின் மூலம் வெறும் மூன்றே மூலிகைகளை வைத்து சரிசெய்துவிடலாம். முதலில் இரண்டு வில்வக் காம்புகள் தேவைப்படும். கடைக்கு சென்று தந்தநேரிக் காம்பு என்றோ தந்தநேரி வில்வக்கட்டை என்றோ கேட்கவும். கொடுப்பார்கள். அந்த வில்வக்காம்பின் நுனியில் இரண்டு தேக்கரண்டி புலிநெய்யைத் தடவ வேண்டும். வெள்ளைப்புலி நெய்யாக இருந்தால் கூடுதல் சிறப்பு. முடிந்தவரை தடவுவதற்கு அலுமினியக் கரண்டிகளைத் தவிர்த்து இளநீர் சுரட்டையை உபயோகித்தால் அதில் இருக்கும் கரிவிந்துவானது வெள்ளைப்புலி நெய்யோடு சேர்ந்து முறத்றால் புரோட்டீனை உருவாக்கும். அந்த முறத்றால் புரோட்டீன் வில்வக்காம்பின் நுனியில் படுகையில் முறோடைட் டையாக்சைடு என்றொரு துர்நாற்ற வாயு வெளிப்படும். அந்த நாற்றத்தைப் பார்க்காமல் கசப்பு மருத்தென நினைத்து நுகருங்கள், இதிலேயே பாதி சுரசுரப்பு போய்விடும். இப்பொழுது அந்தக் கரிவிந்து தடவப்பட்ட புலிநெய் வில்வக்கட்டை இருக்கிறதல்லவா? அதை சுருக்கமாக விந்துக்கட்டை என்று அழைப்பார்கள். அந்த விந்துக்கட்டையை ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளவும். நாட்டுமருந்துக்கடைக்குச் சென்று சத...

நிவாரண நிதி

கேரளத்திற்கு வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் வழிமுறைகளைப் பார்த்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு முறை நினைவிற்கு வந்தது. இன்று முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இரண்டே நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம். பே.டி.எம். வசதி இருக்கிறது. அமேஜான் மூலமாக பொருட்களையே நேரடியாக அளிக்கலாம். எண்ணற்ற சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு வந்துவிட்டது. கார்கில் ஆக்கிரமிப்பு வந்த சமயம் எனக்கு ஆறு வயது. குஜராத் பூகம்பத்தின்போது எட்டு. பள்ளியில் நிவாரண நிதி அட்டை என்று ஒன்று கொடுத்தார்கள். அதில் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதி அளவைக் குறிக்க இடம் இருக்கும். யார் இந்தப் பணத்தையெல்லாம் திரட்டியது என்று என் பெயர், முகவரி எழுத மேலே ஒரு இடம் இருக்கும். இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தெருக்களில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி நிதி திரட்டினோம். ஐம்பது பைசா முதல் அரிதாக ஐம்பது ரூபாய் வரை வரும். நல்ல நோக்கத்திற்காக என்றெல்லாம் அந்த வயதில் தோன்றவில்லை. அடுத்தவரை விட அதிகமாக நிதி திரட்டவேண்டும் என்ற உந்துதலில் அலைந்தோம். அந்த துர்நிகழ்வுகளின் கோரம் தெரியாத வயது. வீட்...

கலைஞர்

கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் பேருந்தில் பயணித்துதான் கல்லூரி சென்றேன். அதனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தாக வேண்டும். இறுதி இரண்டு ஆண்டுகளின்போது விடுதிக்கு மாறியபின் ரூம்மேட்ஸ் எங்களுக்கு சற்றே சோம்பேறித்தனம் குடிகொண்டுவிட, சில மாதங்கள் தாமதமாக எழ ஆரம்பித்தோம். பிறகு ஒரு உத்வேகத்தில் நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு “காலையில எழுறோம், ஜாகிங் போறோம். ஒருத்தன் தூங்கிட்டா எழுப்பி கூட்டிட்டுப் போறோம்” என்று திட்டம் போட்டோம். அப்பொழுதெல்லாம் சிலமுறை அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஒருவரையொருவர் இப்படித்தான் எழுப்பியிருக்கிறோம் - “அங்க ஒரு கிழம் முரசொலிக்குத் தலையங்கம் எழுதிட்டு இருக்கு. வாடா!” அரசியல் நிகழ்வுகளில் அரைகுறை ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பல நாட்களில் பேச்சின்போது ஏதாவது ஒரு கலைஞர் ரெபரன்ஸ் வந்துவிடும். அதிகாலை ஒருமணிநேரம் தலையங்கம் எழுதுவார், இரண்டு மணிநேரம் செய்தித்தாள்கள் வாசிப்பார் என்று கலைஞரின் டேபிளான் ஜூவியில் வெளியானபோது அதில் கவரப்பட்டுதான் நான் தினத்திட்டங்களே போட ஆரம்பித்தேன். மையக் கவர்ச்சியே அவருடைய வயதுதான். உடல்வலு உச்சத்தில் இருந்த வயது எனக்கு, அவரோ தினம் தினம் உழ...

"வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு..."

“வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு” என்று பல பதிவுகளைப் பார்த்தேன். அதனால் உந்தப்பட்டு எழுதுகிறேன். “மேற்கத்திய சமூகத்தில் குழந்தையைக் கடத்தி வன்புணர்வு செய்பவர்களை ஊரே சேர்ந்து  அடித்துக்கொல்லும்போது எப்படி வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்களோ, அதேபோல அவர்களின் சமூகத்தில் தெய்வ நிந்தனை செய்பவர்களை மக்கள் அடித்துக்கொல்லும்போது வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்கள்.” இஸ்லாமிய ஆய்வறிஞர் அந்தோனி மெக்ராய் எழுதிய வரிகள் இவை. சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் வரிகள்’ புத்தகம் வெளிவந்து மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய பொதுச்சமூகத்தினிடையே பெரும் பண்பாட்டுப் பிளவை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் இந்த வரிகளை அவர் எழுதினார். அற சார்பியல்வாதம் மற்றும் பண்பாட்டு சார்பியல்வாதம் (Moral & Cultural relativism) குறித்து அங்கிருந்துதான் என் வாசிப்பு துவங்கியது. தனிமனித நீதியுணர்வு என்பது பலவகைகளில் சிக்கலானது. தனக்கான எல்லைக்கோட்டை அது தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களில் தேடுகிறது. அவ்வாறு தேடிக் கண்டடைகையில் அந்த எல்லைக்கோட்டிற்குக் கீழே உள்ள பிற நீதியுணர்வுகளையெல்லாம் அது காட்டுமிராண்டித்தன...

பப்ஜி

தம்பியின் நண்பர் ஒருவர் தீவிர பப்ஜி ரசிகர். PlayerUnknown's Battlegrounds என்பதன் ‘சிறுபெயர்’தான் பப்ஜி. ஆண்டிராய்டில் இலவசமாகக் கிடைக்கும் துப்பாக்கிச்சூடு விளையாட்டு அது. ஒரே நேரத்தில் பலர் அதில் விளையாடலாம். நூறு பேர் ஒருவரையொருவர் சுட்டுக்கொல்ல வேண்டும், இறுதியில் எவர் எஞ்சியிருக்கிறாரோ அவரே கெலித்தவர். தமிழ்க்கீச்சுலகம் கடந்த சில மாதங்களாக அந்த விளையாட்டினால்தான் கோமாவில் கிடக்கிறது. நிற்க. அந்த நண்பர் ஒரு மரண கேமர். பாத்ரூமில் ஒரு கையால் பப்ஜியாடிக்கொண்டேதான் மைக்ரோநீர் கழிப்பார். நெர்ட் மாணவராக மாறுவேடம் பூண்டு கல்லூரி நூலகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் தடிபுக்கை எடுத்துக்கொண்டு அதற்குள் மொபைலை வைத்து விளையாடுவார். இவற்றையோ இவற்றிற்கு ஒப்பானவற்றையோ செய்தால்தான் அவர்கள் மரண கேமர்கள். அன்னாரின் மொபைல் ஒருகட்டத்தில் விளையாடி விளையாடி களைத்துப்போய் ஸ்லோ ஆகிவிட்டது. இவருக்கோ விரலால் திரையை வலித்து வலித்துக் காத்திருந்து பொறுமை போய்விட, சுற்றியிருந்தவர்களிடம் எரிந்து விழ ஆரம்பித்தார். பிறகு கை நடுக்கம் வந்துவிட, லஸ் கார்னரில் ஒரு சர்வீஸ் சென்டருக்குப் போயிருக்கிறார். மொபைல...

ரோமா

என்னியோ மாரிகோனி வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறேன். ரோமாபுரியின் தெருக்களில் அலைகையில் நிறைய வயோதிகர்கள் தென்படுகிறார்கள். இரண்டு பேரைக் குறிப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் அன்டோனியோவின் சைக்கிள் திருடுபோனது. பட்டப்பகலில் கண் முன்னே நடந்த சம்பவம். அன்டோனியோவால்  அத்திருடனை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அந்த சைக்கிள் இல்லாவிட்டால் வேலை போய்விடும். அந்த வேலைக்காகத்தான் படுக்கை விரிப்புகளையெல்லாம் விற்று அந்த சைக்கிளை அடகுக் கடையிலிருந்து மீட்டிருந்தான் அன்டோனியோ. போய்விட்டது. அவனும் அவனுடைய மகனான குட்டிப்பையன் ப்ரூனோவும் அந்த சைக்கிளைத் தேடி ரோமாவை சுற்றியலைந்தார்கள். கிடைக்கவேயில்லை‌. ப்ரூனோவுக்குப் பசியெடுக்க, அன்டோனியோ வேறு வழியில்லாமல் வேறொரு சைக்கிளைத் திருடப்போக, தப்பிக்கத் தெரியாமல் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொண்டான். ஊரே ஒன்று சேர்ந்து அவனை அடித்துத் துவைத்துவிட்டது. தன் மகனின் கண்முன்னே திருட்டுப்பட்டம் பெற்று அடி வாங்கியதில் அன்டோனியோவுக்கு ஒருபுறம் அவமானம் பிடுங்கித் தின்ன, மறுபுறம் தன்னுடைய திருட்டிற்கான அத்தனை நியாயங்களும் நிழலாடியதில்...

சேப்பாக்க செருப்பு வீச்சு

இந்தப்பக்கம் போராட்டத்தை ஆதரித்தால் வன்முறைக்கான ஆதரவு உண்டோ, மஞ்சள் சட்டைகளை அடிப்பதும் பாம்புகளை விடுவோம் என்று மிரட்டுவதும்தான் போராட்டமோ என்று‌ விமர்சிக்கப்படுகிறது. அந்தப்பக்கம் மைதானத்திற்கு வந்தால் அது இனத்துரோகம், காவிரி குறித்து அக்கறை இல்லை என்று இன உணர்வு அதீதமாக வெளிப்படுத்தப்படுகிறது. காவிரியை இப்படியா பெறுவது என்று போராட்டக்காரர்களின் வன்முறை மீது பலர் வைக்கும் விமர்சனத்திற்கு இணையாக, CSK-வுக்கு இந்த முறையிலா ஆதரவளிப்பது என்று ஒரு குறிப்பிட்ட விமர்சனம் எனக்கு இருக்கிறது: Mob mentality என்று போராட்டத்தைப் புறம் தள்ளியவர்களோ மைதானத்திற்குள் செருப்பு வீசப்பட்டதும் mob mentality-யில் CSK CSK என்று கத்திய விதம் எனக்கு அருவெறுப்பைத் தந்தது. என் குரல் உலகத்தில் எப்படியாவது கேட்கப்படவேண்டும் என்று கையறு நிலையில் உணர்வுகளால் உந்தப்பட்டு உலகமெங்கும் செருப்புகள் தனிமனிதர்களால் வீசப்பட்டிருக்கின்றன. மைதானம் நோக்கி எறியப்பட்ட செருப்பு ஏதோ ஜடேஜா டூப்ளசி மீது எறியப்பட்டதுபோல நினைத்துக்கொண்டு, டூப்ளசி நாட்டின் தலைநகரான கேப் டவுனிலும் தண்ணீர் இல்லை என்றெல்லாம் பாடம் புகட்டப்படுகிறது. ச...