Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நான் பாஸ் பண்ணிட்டேன், அதனால பேச தகுதி வந்துருச்சு. போடா டேய்.

”என்னடா இன்னிக்கு ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் எப்படிப் பண்ண?”

”அட போங்கணா, கைனமேடிக்ஸ்தான் அவுட்டுன்னு பாத்தா ஃப்ளூயிட்லயும் முடிஷ்டானுக”

“போச்சாடா?”

“ணா, தட்டித் தூங்கிட்டானுகணா”

“சரி விடுறா, ரெண்டு கஷ்டமான எக்சாம்ஸ் முடிஞ்சுது. அடுத்து தெர்மோடைனமிக்ஸ் ஒன்னுதான்”

“க்கும், ஈசியான ஃப்ளூயிடுக்கே டவுசர் கழண்டுருச்சு, தெர்மோலாம் கண்டிப்பா அவுட்டுதான்ணா”

“இதோ பாரு, இப்போ அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாத, அடுத்த எக்சாமுக்கு ஒழுங்கா படி, என்ன?”

“சரிணா, ரெண்டு நாள் லீவு இருக்கு…”

“அப்பறம் என்ன? மாஸ் பண்ணிரலாம் விடு. தெர்மோல ஒன்னாவது யூனிட்டும் ரெண்டாவது யூனிட்டும் செம சப்ப, ரெண்டு மணிநேரத்துல முடிச்சுரலாம், அதை நல்லா பாத்துக்கோ”

“ஹும்ம்ம்”

”அஞ்சாவது யூனிட்ல செகண்ட் டாப்பிக் மட்டும் லைட்டா காண்டேத்தும், மத்தபடி அதுவும் சப்பதான்”

“அப்படியாணா?”

“அட ஆமாம்டா. தெர்மோலாம் பாக்க மட்டும்தான் கஷ்டமா இருக்கும், ஆனா உள்ளார மட்டும் பூந்துட்டோம்னா கேம் ஆடிடலாம். அப்பறம் நாலாவது யூனிட் தரவ் பண்ணிடு. ஷ்யூரா பதினாறு மார்க் சுளையா அள்ளிடலாம்”

“இப்பதான்ணா எனக்கே ஒரு நம்பிக்கை வருது. தேங்க்ஸ்ணா”

“தேங்க்ஸ்லாம் எதுக்குடா? நல்லா தெம்பா எக்சாம் எழுது என்ன? ஆல் தி பெஸ்ட்!”

“ணா நீங்க எவ்வளவுணா தெர்மோல?

“….”

“ணா…”

“சரிடா தம்பி பாப்போம். உனக்கு வேற படிக்க நிறைய இருக்கு, நல்லா பண்ணு என்ன? பாய்”

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

இந்தியாவும் இந்தியும்

நவீன இந்தியாவின் சிற்பி