Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஒரு நாள் புனிதர்கள்

சுற்றுச் சூழல் மாசடைவதன் காரணங்களையும் அதன் விளைவுகளையும் மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகளையும் விளக்குக.

காரணங்கள்:
• நகரமயமாக்கல்
• காடுகள் அழிப்பு
• குளிர்சாதனப்பெட்டிக்குப் பழகிய வாழ்க்கை முறை
• மரங்கள் மீள்நடாமை
• பெட்ரோலிய எரிவாயு
• தொழிற்சாலைக் கழிவுகள், இத்யாதி

விளைவுகள்:
• ஓசோன் மண்டலத்தில் ஓட்டைகள்
• பூமி வெப்பமயமாதல்
• கிரீன் ஹவுஸ் பாதிப்பு
• ஆக்சிஜன் மற்றும் குடிநீர் பற்றாக்குறை
• புதிய நோய்கள் உருவாக்கம், இத்யாதி

மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகள்:
• குறைந்த தூரப் பயணத்திற்கு மகிழுந்தை உபயோகபடுத்துவதைத் தவிர்க்கவும்.
• மிகவும் குறைந்த தூரமாக இருந்தால் நடக்கவும், அல்லது மிதிவண்டியைப் பயன்படுத்தவும்.
• தவிர்க்கவே முடியாது என்னும்போதே மகிழுந்தை வெளியே எடுக்கவும், இல்லையேல் வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்.
• வீட்டிற்கு ஒரு மரமாவது நடவும்.
• பெட்ரோலிய வாகனங்கள் பயன்படுத்தலைக் குறைக்கவும்
• குளிர்சாதனப் பெட்டி உபயோகிப்பதைக் குறைக்கவும், இத்யாதி

நாளை மறுநாள் நடக்கவிருக்கும் 'Environmental Science' செமஸ்டர் தேர்வுக்காக ஒருநாள் புனிதர்கள் ஆகி பதிலை ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்துகொண்டிருக்கிறோம்.

Comments

மேலும் வாசிக்க

சத்யவரதன் குராயூர்

என்னுடைய கட்டுரைகள் நடுநிலையானவை அல்ல! - ப.திருமாவேலன் நேர்காணல்

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

நவீன இந்தியாவின் சிற்பி

இந்தியாவும் இந்தியும்