Schindler's List (1993)
“ஆஸ்கர் ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் எண்ணிக்கை 1200-க்கும் அதிகம். இன்று போலாந்தில் இருக்கும் யூதர்களின் எண்ணிக்கை 4000-க்கும் குறைவு என்றால், ஷிண்ட்லர் காப்பாற்றிய யூதர்களின் வழித்தோன்றல்களின் எண்ணிக்கை இன்று சுமார் 6000. அவர்கள் ‘ஷிண்ட்லர் யூதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்” - என்றபடி இத்திரைப்படம் முடிவடைகிறது. நண்பன் கார்த்திக் ஸ்ரீதர் பரிந்துரைத்ததன் பேரில் 'Schindler's List' படம் பார்த்து முடித்தேன். நம்மூர் இயக்குனர்கள் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் கண்ட கண்ட படத்திலிருந்தெல்லாம் திரைக்கதையை சுடுகிறார்களே, சரி, சுடுவதுதான் சுடுகிறார்கள், இதுபோன்ற உலக சினிமாவிலிருந்து சுட்டால் நமக்காவது நன்மை பயக்குமே என்று தோன்றியது. அந்த அளவிற்கு உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய, உருக்கிய படம். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படமாச்சே, வழக்கம்போல கணினியின் உபயத்தில் வர்ணிக்கமுடியாத உருவம் எல்லாம் கோரமாய் உறுமும் என்று நினைத்துப் பார்த்தால், முற்றிலும் வேறு ஒரு தளத்தில், எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த இனப் படுகொலையைப் பி...