Posts

Showing posts from August, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கடவுள்களும் குருமார்களும் - குஷ்வந்த் சிங்

Image
          மறைந்த குஷ்வந்த் சிங்கின் ‘Gods and Godmen of India' நூலை வாசித்து முடித்தேன். கடவுள், மதம், மூடநம்பிக்கை, ஆன்மிக இயக்கங்கள், சாமியார்கள் குறித்த குஷ்வந்தின் கருத்துகள், அனுபவங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றின் தெளிவான தொகுப்பு இது. கடவுள் மற்றும் ஆன்மிகம் குறித்த குஷ்வந்தின் நிலைப்பாடு எவ்வாறு உருவாயிற்று என்பதை 62 கட்டுரைகளில் குஷ்வந்த் சிங்கிற்கே உரிய நகைச்சுவை எழுத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குஷ்வந்த் சிங் ஒரு ‘அக்னாஸ்டிக்’ என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத, ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாத, தானே உணரும் வரை கடவுள் இல்லைதான் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஒருவகையில் இது கொஞ்சம் அவஸ்தையான நிலைப்பாடும் கூட. கடவுள், பிறவிப்பயன், மரணம் குறித்த கேள்விகள் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும்.           மதம், மத அமைப்பு, மதம் சார்ந்த அரசியல் போன்றவற்றில் குஷ்வந்த் பல்வேறு சிக்கல்களைப் பார்க்கிறார். ஒவ்வொரு மதத்திலும் இரண்டு வகையான குழுவினர் இருக்கிறார்கள். ஒரு சாரார் மாற்று மதத்தினரோடு

நூலிலிருந்து சீரிஸ் - 1: நடுநிலை நக்கீஸ்

Image
//அத்தியாயம் 22: சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத்தந்தது. ஜெயமோகன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘வாழும் கணம்’ ஒன்று என்னை வந்தடைந்தது. ------------------------------------------------------------------------------------ அன்றைய ஒன்பது மணி விவாத நிகழ்ச்சி நிச்சயம் பரவலாகப் பார்க்கப்படும் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பொதுவாக நான் நெறிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் எவ்வாறு விருந்தினர்கள் தங்களின் நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்று கவனிப்பதுண்டு. “என்னைத் தவிர மற்ற அனைவரும் நடுநிலைவாதிகள் அல்ல என்று சொல்ல மாட்டேன், ஆனால் இந்த அறையிலேயே பெரிய நடுநிலைவாதி நான்தான்”, என்று நிறுவ முயற்சிப்பார்கள். அதுதான் அன்றும் நடந்தது. கோட் சூட் போட்டுக்கொண்டு ஸ்டூடியோ சென்ற போது நால்வரும் ‘உம்’மென்று உட்கார்ந்திருந்தனர். ஒருவர் அந்த நடிகரின் தீவிர ரசிகர், இன்னொருவர் சமூக நீதி செயல்பாட்டாளர். இவர்கள் போக அந்த பெண் பத்திரிகையாளர் பக்கம் நின்று பேச தொலைக்காட்சி நிர்வாகம் பெருந்தன்மையாக இரண்டு பேரை அழைத்திருந்தது. சமூக நீதி செயல்பாட்டாளர் அதிரடி காட்டினா