Posts

Showing posts from February, 2018
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

நூலிலிருந்து சீரிஸ் - 4: இலையுதிர்கால இல்லுமினாட்டிகள்

// கேள்வி : அதெப்படி கமலுடைய கட்சி சின்னத்தைப் பார்த்தே அவர் ஒரு இல்லுமினாட்டி என்று முடிவு கட்டுகிறீர்கள்? - க.பாஸ்கரன் பதில் : அன்புள்ள பாஸ்கரன். உங்கள் கேள்விக்கான பதிலை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒன்று, அதெப்படி கமலை இல்லுமினாட்டி என்று சொல்கிறோம்? அந்த சின்னத்தில் ஆறு கைகள் பாஸ்கரன். அதாவது ஆறு குடும்பங்கள். அதற்கு நடுவில் ஆறு முனைகள் கொண்ட நட்சத்திரம் பாஸ்கரன், அதாவது இன்னொரு ஆறு குடும்பங்கள். ஆறையும் ஆறையும் கூட்டிப்பாருங்கள், பதினான்கு வருகிறதா? இப்பொழுது அந்த நட்சத்திரத்திற்கும் கைகளுக்கும் இடையே இருக்கும் வெற்றிடத்தை ஒன்று என்று எடுத்துக்கொண்டு அதை பதினான்கோடு கழியுங்கள். பதிமூன்று! பதிமூன்று குடும்பங்... வெயிட். கணக்கு தப்பாக வருகிறது. மன்னிக்கவும் ஆறும் ஆறும் பன்னிரண்டா? ம்ம்ம், அப்படியென்றால் அந்த வெற்றிடத்தைக் கழிப்பதற்கு பதிலாக கூட்டிவிடுங்கள் பாஸ்கரன். 6+6+1. பதிமூன்று! பதிமூன்று குடும்பங்கள்! இல்லுமினாட்டி! இரண்டாவதாக, ‘அதெப்படி சின்னத்தைப் பார்த்தே இல்லுமினாட்டி என்று சொல்கிறீர்கள்’ என்று அறிவுக்கெட்டத்தனமாகக் கேட்டிருக்கிறீர்கள். எங்களின் சிந்தனைப்போக்கு உங்