Posts

Showing posts from January, 2018
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

எழுந்து நிற்காமை

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களை தேச விரோதிகள் என்று சொல்வது எவ்வாறு தவறோ, அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காதவர்களைத் தமிழின விரோதிகள் என்று சொல்வதும் தவறு - என்ற பொருளில் நண்பர்கள் சிலர் ஒப்பீடு செய்ததைக் கண்டேன். இரண்டும் ஒன்றுதான், வித்தியாசமே இல்லை என்பது இறுக்கமான பார்வை. இரண்டிற்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. இரு தரப்பினரின் காரணமும் நியாயமும் வெவ்வேறானவை. தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காவிடில் தேச விரோதி என்று சொல்பவர்கள் தேசிய கீதத்தை இந்திய ஒற்றுமையின் குறியீடாகப் பார்ப்பவர்கள். அதற்கு எழுந்து நிற்காதவர்களை அந்த ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகக் கருதுபவர்கள். பெரும்பான்மை எழுந்து நிற்க விருப்பப்படுவதைத் தவிர வேறென்ன நியாயம் வேண்டும் அதைக் கட்டாயமாக்குவதற்கு என்று நினைப்பவர்கள். பெரும்பான்மைதான் அவர்கள் வைக்கும் அங்கீகாரம், அதற்கு எதிரானவர்கள் அவர்கள் பார்வையில் தேச விரோதிகள். தற்காலத்தில் இதற்குள் இந்து மத விரோதி என்ற கிளையும் அதீதமாக உண்டு. தேசிய கீதத்தை வைத்து வேண்டுமென்றே பிரிவினை அரசியல் செய்பவர்கள் அல்லாது, மெய்யாகவே நாட்டின் ஒற்றுமையின்பால

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது

தாராளவாத ஜனநாயகத்தை அடைய குறுக்கு வழிகள் கிடையாது. தாராளவாதப் போக்குடைய மக்கள் இல்லாதவரை தாராளவாத ஜனநாயகம் சாத்தியமில்லை. ஜனநாயகம் என்பது வெறும் உடல்தான். அதற்கு உயிரூட்டுவது தாராளவாதமே. தன்னுடைய தனித்துவ பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கியதொரு தாராளவாதக் கொள்கையை ஒரு நாடு கண்டெடுக்காதவரை, அவற்றைப் பரவலாக்காத வரை, அந்நாட்டில் தாராளவாத மக்கள் உருவாக மாட்டார்கள். இதில் குறுக்குவழிகள் இல்லவே இல்லை. தாராளவாத ஜனநாயகம் உங்கள் நாட்டில் நிலைபெற விரும்பினால், அதற்குத் தேவையான அறிவியக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். சகிப்புத்தன்மையற்ற ஜனநாயகத்தின் ஆபத்து வெறும் சகிப்பின்மை மட்டுமல்ல; நிலையின்மையும் உறுதியின்மையும் அதன் அடிப்படை இயல்புகளாகும். ஜனரஞ்சக அரசியல் தலைவர்கள் சகிப்பின்மையோடு இருப்பது அல்ல பிரச்னை. பிரச்னை என்னவென்றால், இவர்களுக்கு வெகுமக்கள் ஆதரவும், பரவலான வாக்கு வங்கியும் இருப்பதுதான். “நம்முடைய தனித்துவ உயரிய தேசத்தை ஆபத்தான ‘மற்றவர்களும்’ ‘பண்பாட்டை மறந்த மேட்டுக்குடியினரும்’ தனதாக்கிக்கொள்கிறார்கள்; நம்மிடமிருந்து நம் உரிமத்தைப் பிடுங்கிக்க

ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து வெளியேற முயற்சிக்கும் ஆண்களுக்கு - Ejike

முன்குறிப்பு: கீழே ‘ஆண்’ என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில சமயம் அது ஆண் என்னும் பாலியல் அடையாளத்தைக்(ஆண்) குறிக்கிறது, பல முறை அது ஆண் என்னும் ஆதிக்க அடையாளத்தைக்(ஆவ்ம்பள) குறிக்கிறது. ஒரே வாக்கியத்திலேயே இரண்டும் வரலாம். எனவே இதைப் படித்துவிட்டு ‘எல்லா ஆணும் அப்படியா?’ என்று நீங்கள்  ஆண் சமூகத்திற்காகப் பொங்கினால், ஒன்று நீங்கள் அடையாளங்களை மாற்றிப் போட்டுக் குழப்பிக்கொண்டீர்கள் என்று அர்த்தம். அல்லது ஆதிக்க ஆணாகவே நீங்கள் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அல்லது இந்தப் பதிவு எளிமையாக எழுதப்படவில்லை என்று அர்த்தம். ட்விட்டரில் Ejike என்னும் பதிவர் எழுதியவற்றின் மொழிபெயர்ப்பு இது. ------------------------------------------------------------- ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வெளியே வரும் ஆண்கள், பிற ஆண்களின் வன்முறைக்குப் பெண் சமூகம் உள்ளாக்கப்பட்டு வருகிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். ‘அடடா, சக ஆணை விட இவன் மேலானவனாக இருப்பான் போலவே’ என்று பிற ஆண்களையும் உங்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கும் பெரும்பணியைப் பெண்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. ஆணாத