Posts

Showing posts from September, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹாசிப் கான்

Image
Courtesy: Vikatan           எல்லோரைப் போலவும் பல்வேறு கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கார்ட்டூனின் அங்கமாகவே உணர்ந்தது ஹாசிப் கானின் சித்திரங்களில்தான். First person camera போல் இதோ ஒரு first person cartoon. டரியல் ஆகி ஆப்பரேஷன் தியேட்டரில் நிராதரவாகப் படுத்திருக்கிறோம். அரை போதையில் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தால்... மூஞ்சிக்கருகே ஐந்து சர்ஜன்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வரவேற்க, “என்னது இன்னும ... ் முடியலியா?” என்று மிச்ச சொச்ச உயிரும் போகிறது. இந்த சித்திரத்தில் நாமும் ஒரு பாத்திரம். ஹாசிப் கானின் நகைச்சுவை சித்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். நான்கு வருடங்களுக்கு முன் இதைப் பார்த்தவுடன் நிலைகொள்ளாமல் சிரித்தபடி நிலைமையை நொந்துகொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. வயதாகவே ஆகாது இந்த கலாட்டூனுக்கு. வருடா வருடம் சர்ஜன்கள் மட்டும் மாற, காட்சி என்னவோ அப்படியேதான் இருக்கப்போகிறது. மன்மோகன் இடத்தில் மோடியை கற்பனை செய்து பார்த்தேன். இன்னும் அதிக சிரிப்பு, இன்னும் அதிக கடுப்பு.           வட்டியும் முதலும் படிப்பதற்காக ஆனந்த விகடன் வாங்க ஆரம

அனிதாவும், பல அநீதிகளும்!

          அனிதாவின் தற்கொலை உலுக்கியெடுத்துவிட்டது. “தற்கொலை தீர்வே இல்லை”, என்ற வாதத்தை முன்னிலைப்படுத்தி நேற்று முன்தினம் பலர் திடீர் மனோதத்துவ நிபுணர்களாக மாறியதைப் பார்த்தபோது ஆத்திரமாக வந்தது. ஆனால் பாத்ரூம் கண்ணாடியின் முன் ஒரு சக மனிதிக்காக கையறு நிலையில் இரண்டு முறை அழுது, சோர்வில் தூங்கி மறுநாள் கண்விழித்து சற்றே திடமான மனநிலையில் அமர்ந்து யோசிக்கையில், அனிதாவின் தற்கொலை துர்நிகழ்வில் ஏதோ ஒரு பக்கம் நிற்பதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் காரணங்களில் பல்வேறு சிக்கலான காரணிகள் சம்பந்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இத்துர்நிகழ்வை அரசியலாக்குபவர்கள் நீட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக, சமூக நீதி பேசுபவர்களாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவர்களாக, ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானவர்களாக, மோடி எதிர்ப்பாளர்களாக, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் செயல்பாட்டாளர்களாக, இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குபவர்களாக, இவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ காரணிகளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவை, ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆழமானவை. இதை அரசியலாக்காதீர்கள் என்று