Posts

Showing posts from October, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாம்பு

ஒரு பாம்புக்கதை சொல்கிறேன்.
நாம் தினசரி பார்க்கும் பாம்புதான்.
அடிமைப் பிழைப்பை உதறி வளரவேண்டும்
என்று நினைத்தால்
விருட்டெனக் கொதித்து
என் மேலே ஊர்ந்துகொள்ளும் அந்தப் பாம்பு.
அவ்வளவு துணிவா என்று
எஜமான் அரிதாரத்தைப் பூசிக்கொண்டு
என்னை
சுற்றி வளைத்துக்கொள்ளும் அந்தப் பாம்பு.
ஒரு சிறு தவறு செய்துவிட்டால்
அவ்வளவுதான்;
குற்றவியல் சாசனமாகவே உருமாறி
என்னை
விழுங்கித் திளைத்துவிடும் அந்தப் பாம்பு.
நம்முடைய அந்தப் பாம்பு இருக்கிறதே,
அருமையாக டவுசர் போட்டுக்கொண்டு,
திறமையாக ஆங்கிலம் பேசி,
நான்கு சுவற்றுக்குள் நடக்கும்
இலக்கியக் கூட்டங்களில்
என்னை நன்றாக உள்வாங்கி
பொறுமையாக அசைபோட்டு சவைக்கும்.
எல்லாவற்றிற்கும்
அந்த நான்கு சுவர்கள்தான் சாட்சி.
இப்பொழுதெல்லாம்
நான்
ஒவ்வொரு விளம்பரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
எங்காவது கற்றுக்கொடுக்கிறார்களா
என்று தேடி கற்றுக்கொள்ள வேண்டும்,
அந்தப் பாம்பின் தோலை உரிப்பது எப்படி என்று.

- வர்ரே ராணி
(தமிழில்: வ.விஷ்ணு)
#DalitLiterature

என்ன கனவைக் காண்பது?

நானும் ஒரு காலத்தில் அநாதைதான்
என்பதுபோல் என்னைப் பார்க்காதே.
நாங்கள் இன்னும்
தங்குவதற்குக் கூரையின்றி
அகதிகளைப்போல் உழல்கிறோம்.
எங்கள் முதுகுகளின் மேல்
நூற்றாண்டுகளாகப் பிடுங்கப்பட்ட வாழ்வு
பெரும் பாரமாக ஏறியிருக்கிறது.
அந்த சுமைகள் இருந்தும்கூட
இந்த சேற்று நிலத்தில்
எங்களின்
காலடித் தடங்கள் ஒன்றுகூட இல்லை.
நீ நம்பிக்கையோடு வானை நோக்குகிறாய்;
சிறகடிப்பது குறித்துக் கனவு காண்கிறாய்.
நானும் ஒரு காலத்தில் அநாதைதான்
என்பதுபோல் என்னைப் பார்த்து
வானத்தில் வண்ணம் பார்க்கச் சொல்கிறாய்.
இந்த நிலமே எங்களுக்கானது இல்லை என்னும்போது
வானத்தை நோக்கி நாங்கள்
என்ன கனவைக் காண்பது?

- மினா லோண்டே
(தமிழில்: வ.விஷ்ணு)
#DalitLiterature

கர்னல் ராபர்ட் கில்லிப்ரூவின் அறிவுரை

கர்னல் ராபர்ட் கில்லிப்ரூ (ஓய்வு, அமெரிக்க ராணுவம்)
எழுத்தாளர்

-----------------------------------------------------------------------------------

பல ஆண்டுகளுக்கு முன் நான் ராணுவப் பணிக்குள் நுழைவதற்கு முன்பாக, கடற்படையில் பணிபுரிந்த ஒரு ஓய்வுபெற்ற  கர்னலை சந்தித்தேன். இரண்டாம் உலகப்போரில் தராவாவில் சண்டையிட்டவர். மிகவும் புத்திகூர்மையுள்ள மனிதர். அவர் எனக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார். அவர் எனக்கு சொன்னதை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்கிறேன்:

ராணுவ வீரனாகவே நீங்கள் பணிபுரிய விரும்புகிறீர்களா? நல்லது. உங்கள் தாய்நாட்டை நீங்கள் காக்கப்போகிறீர்கள். அதற்காக முதலில் மிக்க நன்றி. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு காலம் ராணுவ சீருடையில் இருக்கப்போகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாக நீங்கள் உங்கள் தாய்நாட்டைப் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்பது ராணுவ வாழ்க்கைக்கு நேர் எதிரானது. அது குழப்பமானது; நேர்மையற்றது; ஒழுங்கற்றது; அதே நேரத்தில் அது மகத்தானதும் மகிழ்ச்சியானதும் சுதந்திரமானதும் கூட. நாம் அவ்வாறு அல்ல.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ரா…