Posts

Showing posts from July, 2018
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

"வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு..."

“வந்துடுவானுகளே மனித உரிமையைத் தூக்கிட்டு” என்று பல பதிவுகளைப் பார்த்தேன். அதனால் உந்தப்பட்டு எழுதுகிறேன். “மேற்கத்திய சமூகத்தில் குழந்தையைக் கடத்தி வன்புணர்வு செய்பவர்களை ஊரே சேர்ந்து  அடித்துக்கொல்லும்போது எப்படி வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்களோ, அதேபோல அவர்களின் சமூகத்தில் தெய்வ நிந்தனை செய்பவர்களை மக்கள் அடித்துக்கொல்லும்போது வெகு சிலரே அவர்களுக்காக வருந்துவார்கள்.” இஸ்லாமிய ஆய்வறிஞர் அந்தோனி மெக்ராய் எழுதிய வரிகள் இவை. சல்மான் ரஷ்டியின் ‘சாத்தானின் வரிகள்’ புத்தகம் வெளிவந்து மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய பொதுச்சமூகத்தினிடையே பெரும் பண்பாட்டுப் பிளவை ஏற்படுத்தியிருந்த பின்னணியில் இந்த வரிகளை அவர் எழுதினார். அற சார்பியல்வாதம் மற்றும் பண்பாட்டு சார்பியல்வாதம் (Moral & Cultural relativism) குறித்து அங்கிருந்துதான் என் வாசிப்பு துவங்கியது. தனிமனித நீதியுணர்வு என்பது பலவகைகளில் சிக்கலானது. தனக்கான எல்லைக்கோட்டை அது தன்னுடைய பண்பாட்டு விழுமியங்களில் தேடுகிறது. அவ்வாறு தேடிக் கண்டடைகையில் அந்த எல்லைக்கோட்டிற்குக் கீழே உள்ள பிற நீதியுணர்வுகளையெல்லாம் அது காட்டுமிராண்டித்தனம் எ

பப்ஜி

தம்பியின் நண்பர் ஒருவர் தீவிர பப்ஜி ரசிகர். PlayerUnknown's Battlegrounds என்பதன் ‘சிறுபெயர்’தான் பப்ஜி. ஆண்டிராய்டில் இலவசமாகக் கிடைக்கும் துப்பாக்கிச்சூடு விளையாட்டு அது. ஒரே நேரத்தில் பலர் அதில் விளையாடலாம். நூறு பேர் ஒருவரையொருவர் சுட்டுக்கொல்ல வேண்டும், இறுதியில் எவர் எஞ்சியிருக்கிறாரோ அவரே கெலித்தவர். தமிழ்க்கீச்சுலகம் கடந்த சில மாதங்களாக அந்த விளையாட்டினால்தான் கோமாவில் கிடக்கிறது. நிற்க. அந்த நண்பர் ஒரு மரண கேமர். பாத்ரூமில் ஒரு கையால் பப்ஜியாடிக்கொண்டேதான் மைக்ரோநீர் கழிப்பார். நெர்ட் மாணவராக மாறுவேடம் பூண்டு கல்லூரி நூலகத்தில் இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் தடிபுக்கை எடுத்துக்கொண்டு அதற்குள் மொபைலை வைத்து விளையாடுவார். இவற்றையோ இவற்றிற்கு ஒப்பானவற்றையோ செய்தால்தான் அவர்கள் மரண கேமர்கள். அன்னாரின் மொபைல் ஒருகட்டத்தில் விளையாடி விளையாடி களைத்துப்போய் ஸ்லோ ஆகிவிட்டது. இவருக்கோ விரலால் திரையை வலித்து வலித்துக் காத்திருந்து பொறுமை போய்விட, சுற்றியிருந்தவர்களிடம் எரிந்து விழ ஆரம்பித்தார். பிறகு கை நடுக்கம் வந்துவிட, லஸ் கார்னரில் ஒரு சர்வீஸ் சென்டருக்குப் போயிருக்கிறார். மொபைல