பதினொன்றாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - ஒரு நீட்சி

சாரல் தமிழ் மன்றத்தில் எது நடக்கிறதோ இல்லையோ, புத்தகத் திறனறிதல் சந்திப்பு வாரா வாரம் தொடர்ந்து நடைபெற்றே ஆகவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவரை பதினொரு புத்தகங்கள் தங்குத் தடையின்றித் திறனறியப்பட்டுள்ளன. சாரல் தமிழ் மன்றத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு spin off என்று சொல்லலாம். மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வளர்ச்சியிலோ அல்லது முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்தோ இருக்கும்போது இந்நிகழ்ச்சி மட்டும் சற்றே தனித்து நிற்கிறது. அறிவுப் பரிமாற்றம் மட்டுமே இந்நிகழ்ச்சியின் குறிக்கோள். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு வசதியோ அவ்வாறு பேச முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஒரு புத்தகம் பற்றிப் பேசும்போது, இது தமிழ் மன்றம் நடத்தும் நிகழ்ச்சி, எனவே பேச்சில் ஆங்கிலக் கலப்பு இருக்கக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பேசி, அதனால் புத்தகம் சொல்ல வந்ததை சொல்லாமல் கருத்தில் கோட்டை விடுவதைத் தவிர்க்கவே இப்படி. சொல்ல வருகிற செய்தி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதே முழுமுதல் எதிர்ப்பார்ப்பு. அதனால்தான் ஒவ்வொரு முறையும் புத்தகத் திறனறிதல் சந்திப்பு தொடர்பாக நண்பர்களுக்கு செ...