Posts

Showing posts from 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 4

Image
  முன்தொடர்ச்சி: காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3 முன்குறிப்பு:  லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன். (தொடர்கிறது)           ஆண்டு 1944. அமெரிக்க பிரிட்டன் படைகள் ஃப்ரான்சிலிருந்து கிழக்கு முகமாக ஜெர்மனி நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த சமயம். ரஷ்யப் படைகள் மேற்கு முகமாக ஜெர்மானியர்களைத் துரத்தி பெர்லின் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் மூன்று பெரிய ச

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 3

Image
முன்தொடர்ச்சி:   காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2 முன்குறிப்பு:  லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன். (தொடர்கிறது)           பகலிரவு பாராமல் முழுக்க முழுக்க விழாக்கோலம் பூண்டிருக்கும் அமெரிக்கத் தூங்கா நகரமான நியூயார்க்கின் நூறு மாடிக் கட்டிடங்களையும் செல்வத்தையும் சுத்தத்தையும் நுனி நாக்கு ஆங்கிலத்தையும் கண்ட யார்தான் தன்னிலை இழக்காமல் இருப்பார்கள்? ஆனால் விஜயலட்சுமிக்கு இது அனைத்துமே எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. மாளிகைகளைப் போல் வீடுகளைப் பார்த்தபோது வீடற்ற இந்தியர்கள் ந

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 2

Image
முன்தொடர்ச்சி:   காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1 முன்குறிப்பு:  லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கினேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளீயீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன். (தொடர்கிறது)           விஜயலட்சுமி பிறகு என்ன செய்தார்? பாஸ்போர்ட் கிடைத்ததா? இவற்றையெல்லாம் பார்க்கும் முன்பாக, பிரிட்டன் அரசு விஜயலட்சுமியின் அமெரிக்கப் பயணம் மீது இத்தனை கண்கள் வைத்தது ஏன் என்று பார்ப்பது அவசியம். அத்தனை முக்கியமானவரா விஜயலட்சுமி? அல்லது அவர் நோக்கங்கள் பிரிட்டனின் பிரம்மாண்ட நோக்கங்களில் தலையிடும் அளவிற்கா அத்தனை வீரியம் மிக்கதாக இருந்தன? இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த சமயம் கூட சர்ச்சிலின் கவனம் விஜயலட்சுமியிடம் இருந்தது என்றால் என்ன

காந்தி, நேரு, விஜயலட்சுமி: உலக அமைதியின் வழிகாட்டிகள் - 1

Image
          லேண்ட்மார்க்கில் மனு பகவான்(21ம் நூற்றாண்டு மனிதர்) எழுதிய ‘The Peacemakers: India and the Quest for One World’ என்ற புத்தகத்தைக் கண்டவுடனே காணாததைக் கண்டது போல் ஐநூறு ரூபாய்க்கு அடித்துப் பிடித்து வாங்கிவிட்டேன். ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தின் 237 பக்க வெளியீடு. காந்தியைப் போல் நேருவும் இன்று எவ்வளவு தேவைப்படுகிறார் என்று அறிய இப்புத்தகம் அவசியம். இப்புத்தகம் சொல்லிய தகவல்களில் வெகு சில தகவல்களை மட்டும் இங்கே முடிந்தவரை தருகிறேன்.           ஆண்டு 1941, நாஜி படைகள் போலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து என்று ஒவ்வொரு நாடாகக் கபளீகரம் செய்துகொண்டிருந்தன. முசோலினி வடக்கு ஆப்பிரிக்காவையே மிரட்டிக்கொண்டிருக்க, ஆசியாவில் ஜப்பான் சீனாவின் நடுப்பகுதி வரை வந்துவிட்டிருந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. அனைத்துப் போர்களையும் முடிக்க வந்த போர் என்றுதானே முதலாம் உலகப்போரை அழைக்கிறார்கள்? அப்பொழுது இதற்குப் பெயர் என்ன? பின்னோக்கி சிந்தித்தார்கள். பிரிட்டனும் ஃப்ரான்சும் முதலாம் உலகப் போரின் முடிவில் அதிகமாக அமெரிக்காவிடம் கடன் வாங்கியிருந்தன. அமெரிக்கா அதைத் திருப்பித் தந்தே ஆகவேண்

ஞான விஷ்ணு

முன்குறிப்பு: இந்த வலைப்பூவில் என்னுடைய நூறாவது பதிவு இது.           ஜென்னில் ஞானம் அடைதல் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஞானமடைதல்கள் இரண்டு. ஒன்று கீழே இருப்பது. "குருவே! மலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். எங்கிருந்து துவங்குவது?" "உச்சியிலிருந்து."           இன்னொன்று எனக்கு மிகவும் பிடித்த சியோனொவின் கதை. இந்த வலைப்பூவின் முகப்புப் படத்தில் அவர் எழுதிய கவிதையின் கடைசி வரிகளை வைத்திருக்கிறேன். எவ்வளவு முக்கியும் அவருக்கு கிடைக்காத ஞானம் ஓர் பவுர்ணமி இரவன்று தான் தூக்கி வந்த குடம் கீழே விழுந்ததும் படக்கென்று சுவிட்சு போட்டாற்போல் கிடைக்கிறது. குடத்தில் தண்ணீரைக் காணோம், தண்ணீரில் நிலாவைக் காணோம். இதுதான் வாழ்க்கை. இதுதான் இப்பேரண்டத்தின் உண்மை என்று சியோனொ கண்டுகொள்கிறார்.           இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால் எனக்கும் சென்ற வாரம் அந்த ஞானம் கிடைத்தது. இடம்: திருச்சியின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பட்டிமன்றம். நேரம்: சரியாக காலை பதினொன்று மணி நாற்பத்தி மூன்று நிமிடங்கள் (அப்பொழுது எனக்கு இன்னும் ஞானம் வராதபடியால் வினாடிக்

பாரம்பரியச் சின்னம் ஆகுமா பழவேற்காடு?

Image
பழவேற்காடு ஏரி           பழவேற்காடு, கிட்டத்தட்ட சென்னை மாநகரின் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய கிராமம். ஆங்கிலேயருக்கு முந்தைய பழங்கால தென் இந்தியாவில் பூம்புகாருக்குப் பிறகு மிகப்பெரும் துறைமுக நடவடிக்கைகள் மிகுந்த இடமாகப் பழவேற்காடு இருந்திருக்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்ன அடையாளத்தை பெறுவதற்கான தமிழகத்தின் பரிந்துரைப் பட்டியலில் பழவேற்காடும் இணைந்துள்ளது. ஆனால், தமிழக சுற்றுலாத் துறையின் கடைக்கண் பார்வை இன்னும் சரியாக இதன் மேல் விழவில்லை. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பழவேற்காட்டில் இன்னமும் மக்களின் பொருளாதாரத்திலும் சமூக அளவீட்டிலும் சமத்துவம் பெறாமல் பின்தங்கிய நிலைதான் இருக்கிறது.           இயற்கை வளம் மிக்க பழவேற்காட்டின் தற்போதைய பிரச்னைகளைப் பார்ப்பதற்கு முன், பழவேற்காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது? பழவேற்காட்டில் ஒளிந்திருக்கும் சில வரலாற்று உண்மைகள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு போகும். ஒரு சிறு உதாரணம், இன்று சென்னை என்கிற ஒரு மாநகரம் இருப்பதற்கான காரணம், பழவேற்காடு என்னும் ஒரு சிறிய

ஏன் பலருக்கு காந்தியின் மீது வெறுப்பு?

"Mr.Gandhi was not an extra-ordinary man. He was an ordinary man who did extra-ordinary things." நேற்று(15/08/14) அண்ணா பல்கலைக்கழகத்தில் 'யுவசக்தி' என்றொரு இளைஞர் அமைப்பு நடத்திய இளைஞர் எழுச்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் திரு.எஸ்.இராமகிருஷ்ணனிடம் ஒரு மாணவர் ஒரு கேள்வியைக் கேட்டார். “எனக்குக் காந்தியை மிகவும் பிடிக்கும். ஆனால் என் வயதை ஒட்டிய குறைந்தபட்சம் 50 சதவீத இளைஞர்களுக்கு காந்தியின் மீது வெறுப்பே உள்ளது. அவர் இந்தத் தவறை செய்திருக்கிறார், அந்தத் தவறை செய்திருக்கிறார், என்று ஒரு புகார்ப் பட்டியலே அவர்களிடம் இருக்கிறது. அவற்றிற்கு என்னால் சரியான பதிலை அளிக்க முடியவில்லை. அவற்றை நான் எப்படி எதிர்கொள்வது?”, என்று கேட்டார். அதற்கு திரு.எஸ்.ரா. அளித்த பதிலை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ”காந்தியை வெறுப்பது என்பது காந்தியை நேசிப்பதற்கான முதல் கட்டம் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவரைப் பிடிக்காவிட்டால்தான் அவரைப்பற்றியே யோசித்துக்கொண்டிருப்போம். அவர் ஏதேனும் தவறு செய்துவிட மாட்டாரா என்று காத்துக்கொண்டிருப்போம். காந்தி பற்றிய எல்லா குறைகளையுமே காந்தித

ஜில்ஜில் ஜிகர்தண்டா!

Image
மு.கு: திரைப்படத்தின் போஸ்டர் வேற லெவல்! விரைவில் உத்திரவாதமாக நம் போஸ்டர்கள் உலகின் கவனத்தைப் பெறப்போகின்றன.           என்ன திரைக்கதைப் பாணி என்றே தெரியவில்லை. முதலில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது புழக்கத்தில் உள்ள திரைக்கதை உத்தியை உபயோகப்படுத்துகிறாரா என்றே தெரியவில்லை. சுமார் இருபது குறும்படங்களின் சேர்க்கை, அக்குறும்படங்களின் திரைக்கதையில் உள்ள சிறு சிறு முடிச்சுகள் அப்பொழுதே செம சுவாரசியமாக அவிழ்க்கப்படும். ஆனால் திரைப்படத்தின் மைய முடிச்சு ஒரு மெல்லிய இழை போல மொத்தக் குறும்படங்களையும் ஆக்கிரமிக்கும். இந்த மைய முடிச்சு ஒவ்வொரு குறும்படங்களிலும் வளர்ந்துக்கொண்டே சென்று இறுதிக் காட்சியில் பிரம்மாண்டமாக அவிழும். தடாரென்று சந்தோஷ் நாராயணன் எண்ட்ரி, சிம்ஹாவின் முறுக்கிய மீசை, வெறிகொண்ட பார்வை. உண்மையை உணர்ந்துக்கொண்ட பார்வையாளனின் கை முடி சிலிர்த்துக்கொள்கிறது. திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.           ஜிகர்தண்டா, கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை மாயாஜாலம். ஒரே ஒரு இடம் தவிர மற்ற இடங்களில் சத்தியமாக அடுத்து என்ன ஆகும் என்று கணிக்கவே முடியவில்லை. கதை எதை நோக்கி நகர்கிறது, க

பதினொன்றாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - ஒரு நீட்சி

Image
          சாரல் தமிழ் மன்றத்தில் எது நடக்கிறதோ இல்லையோ, புத்தகத் திறனறிதல் சந்திப்பு வாரா வாரம் தொடர்ந்து நடைபெற்றே ஆகவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதுவரை பதினொரு புத்தகங்கள் தங்குத் தடையின்றித் திறனறியப்பட்டுள்ளன. சாரல் தமிழ் மன்றத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு spin off என்று சொல்லலாம். மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வளர்ச்சியிலோ அல்லது முழுக்க முழுக்கத் தமிழ் சார்ந்தோ இருக்கும்போது இந்நிகழ்ச்சி மட்டும் சற்றே தனித்து நிற்கிறது. அறிவுப் பரிமாற்றம் மட்டுமே இந்நிகழ்ச்சியின் குறிக்கோள். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு வசதியோ அவ்வாறு பேச முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஒரு புத்தகம் பற்றிப் பேசும்போது, இது தமிழ் மன்றம் நடத்தும் நிகழ்ச்சி, எனவே பேச்சில் ஆங்கிலக் கலப்பு இருக்கக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பேசி, அதனால் புத்தகம் சொல்ல வந்ததை சொல்லாமல் கருத்தில் கோட்டை விடுவதைத் தவிர்க்கவே இப்படி. சொல்ல வருகிற செய்தி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதே முழுமுதல் எதிர்ப்பார்ப்பு. அதனால்தான் ஒவ்வொரு முறையும் புத்தகத் திறனறிதல் சந்திப்பு தொடர்பாக நண்பர்களுக்கு செய்தி ஏதேனும் அனுப்பும்போ