Posts

Showing posts from December, 2016
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஷெர்லாக்கின் கடிதம்

Image
மனித உணர்வுகள் பற்றிய நமது தேடலில் நாம் அதிகம் மை சிந்திவிட்டோம். ஆனால் நம் கடிதப் போக்குவரத்து ஆரம்பித்தபோது நமக்கு அதைப்பற்றி என்ன புரிதல் இருந்ததோ, அதேதான் இப்பொழுதும் இருக்கிறது; நாம் இம்மியளவும் முன்நகரவில்லை. பல சமயங்களில் நான் ஒரு பெரும் பிளவின் விளிம்பில் நின்றபடி உரக்கக் கத்துகிறேன். அப்பொழுது மறுபக்கத்திலிருந்து வரும் பதில் உண்மையிலேயே உன்னுடையதுதானா, அல்லது அவை வெறும் என் வார்த்தைகளின் எதிரொலியா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது; அந்த சந்தேகத்தில் வியப்புதான் மேலிடுகிறது. இக்கரையிலிருந்து நான் நோக்கும்போது, இந்த உலகின் நிம்மதியின்மைக்குக் காரணம் மனித உறவிற்கான தேடல்தானோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், இம்முறை எப்படியாவது மனித உறவுகளின் நடைமுறை வழக்கங்களைப் புரிந்துக்கொண்டுவிட வேண்டும், என்று முனையும் என் தோழியைப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் அவள் தோல்வியுற்று, அத்தேடலால் விளையும் காயங்களுக்கு மருந்தாக ஓயாத பொறுமையுடன் உடலுறவுச் சடங்கைப் நடத்திவிட்டு வருகிறாள். ஒவ்வொரு முறையும் விடை கிடைக்காமல் அவள் திரும்பும்போது, அவள் மேலும் மேலும் ஏமாற்றத்துடன் திரும்புவ…

நன்றி சோ

Image
இன்று காலை எழுந்ததும் சோ காலமானார் என்ற செய்தி அலைபேசியில் வந்ததும் ஒரு கணம் ‘முனுக்’கென்று இதயத்தில் வலித்தது. இதற்கு முன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குஷ்பு தவறுதலாக சோ இறந்துவிட்டார் என்று சொன்னபோது ஏற்பட்ட வலி. அதற்குப் பிறகு ஒன்றரை வருடம் கழித்து இப்பொழுதுதான் சோவின் நினைவே வந்தது. சோவின் சிந்தனையை விட்டு வெகு தூரம் தள்ளி வந்து, மற்ற பிற கருத்தாக்கங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டதால், கடந்த ஒன்றரை ஆண்டு காலம் சோ அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதெல்லாம் அவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு சோவைப் பற்றிய நினைப்பு முடிந்து போனது. ஆனால் தற்போது நினைத்துப் பார்த்தால் இன்று ஒரு மாணவனாக நான் தொடர்ந்து அரசியலை வாசித்தபடி இருப்பதற்குக் காரணம் சோ தான்.

          சென்ற வாரம் என் உறவினர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்தபோது பன்னிரண்டு வயது நிரம்பிய என் மாமா பையன் என்னிடம், “யப்பா எப்படித்தான் பாலிடிக்ஸ் பேசுறீங்களோ, போரடிக்குது”, என்று கிசுகிசுத்தான். அவனிடம் நான், “அரசியலை மொத்தமா வெறுக்காம அதை சுவாரசியமா தெரிஞ்சுக்க ஆரம்பிக்கிறதுதான் சரி. உனக்கு …

சமூகத்தால் சபிக்கப்பட்ட இரும்பு மனுஷிகள்

Image
முன்குறிப்பு: இக்கட்டுரை செல்வி.ஜெயலலிதா தன்னுடைய ஆரம்பகாலத் தலைமை அரசியலின்போது கட்சிக்குள்ளும் அமைச்சரவையிலும் ஏன் சர்வாதிகாரத்துடன் நடந்துக்கொண்டார் என்பதைப்பற்றி மட்டுமே பேசுகிறது. கட்சியைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு பிந்தைய காலத்தில் கட்சிக்குள்ளும், அமைச்சரவையிலும், சட்டசபையிலும், ஊடகத்தின் முன்பும் அவர் கடைபிடித்த சர்வாதிகாரப்போக்கை இக்கட்டுரை எந்த விதத்திலும் நியாயப்படுத்த விரும்பவில்லை. எம்.ஜி.ஆரைப் போல் ஜெயலலிதாவின் பிம்பமும் புனிதப்படுத்தப்படப்போகும் ஆபத்து நிலவும் சூழலில், அவரின் பிற்கால சர்வாதிகார நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவையே என்று பதிவு செய்வது மிகவும் அவசியமாகிறது.

          மாண்புமிகு முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா காலமாகிய செய்தி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. உலகத்தின் பல பகுதிகளிலிருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பெண்கள் அவரிடம் ஏதோவொரு வகையில் பெண் சுதந்திரத்திற்கான அடையாளத்தைத் தேடுகிறார்கள். தன் கட்சியையும் ஆட்சியையும் தன் முழுக்கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்க அவரிடமிருந்த மன உறுதியையும் தெளிவான சிந்தனையையும் அனை…