Posts

Showing posts from March, 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

100% Discount on Vishnu's new book

Vishnu's new book is on sale! 100% discount for four days [Free until 22nd oct, 2018 morning]. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். இந்த வார விடுமுறையை ஒட்டி [வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் காலை] நான்கு நாட்கள் என் புத்தகத்தின் மின்பதிப்பு அமேசானில் இலவசமாகக் கிடைக்கும்.

சாரல் தமிழ் மன்றம் - புத்தகத் திறனாய்வுக் கூட்டம்

மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் படிக்கும் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் மூலம் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்திற்கான(Book review session) முயற்சியை என் சீனியர் துவக்கி வைக்க, சோதனை ஓட்டமாக முதல் கூட்டம் 06/03/13 அன்று நடைபெற்றது. அண்ணன் பூ.கொ. சரவணன் 'The Life and Times of C.N.Annadurai' நூலைப் பற்றி விளக்கி ஒரு சிறு விதையை விதைத்தார். இரண்டாவது கூட்டத்தில் நம்மாழ்வாரின் புத்தகங்களைப் படித்து அதன் மூலம் கிடைத்த செய்திகளை, அறிவைப் பகிர்ந்துக் கொண்டான் நண்பன் Sathiya Moorthi. மூன்றாவது கூட்டத்தில் நடந்ததுதான் மகிழ்ச்சிக்குக் காரணம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை இந்தியா, குறிப்பாகத் தமிழகம் எதிர்கொண்ட வரலாற்றை ஆர்.முத்துக்குமார் எழுதிய ‘மொழிப்போர்’என்ற நூலின் மூலம் நண்பன் Thamil Thedal விளக்க, விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

          தமிழகம் என்றைக்குமே இந்தியை எதிர்த்ததில்லை, இந்தித் திணிப்பையே தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திறனாய்வுக்கு முன்னர் இதுகுறித்து சற்று குழப்பத்துடன், மேம்போக்கான புரிதலுடன் பலர் இருந்தார்கள். ஆனால் திறனாய்வு முடிந்ததும் அனைவரும் ஒருவரு…

சாரல் கூத்துப் பட்டறை

Image
SSN கல்லூரியில் சேர்ந்த பிற்பாடான இந்த மூன்று வருடங்களில் நான் சாரல் தமிழ் மன்றத்திற்குச் செய்த முதல் உருப்படியான வேலை கல்லூரித் தமிழன்பர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து நனவாக்கிய நாடக அரங்கேற்றத்தை ஒருங்கிணைத்ததுதான். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் என் சீனியர்கள் கனவு கண்டு மேற்கொண்ட பெருந்தவம் இது.

          சீனியர்கள் நடிகர்களைத் தேர்வு செய்தபின் நாடகத்திற்கான அதிகாரப்பூர்வ செயல்முறைகளை வகுத்து, அவற்றைப் படிப்படியாக செயல்படுத்தி, பலரின் தூக்கமில்லாத இரவுகளின் துணையோடு நாடகத்திற்குக் கதை வசனம் எழுதி, இயக்கி, நொடிக்கு நொடி அநியாயத்திற்கு விளம்பரங்கள் செய்து, அறிவியல் பூர்வமாக ஆடியோ டீசர் எல்லாம் வெளியிட்டு என் நண்பர்களின் ஃபேஸ்புக் பக்கங்களைத் திணறடித்து, இறுதியாக சாரல் தமிழ் மன்றத்தின் நாடக உட்பிரிவான ‘சாரல் கூத்துப் பட்டறை’யை ’டமால் டுமீல் டமில்’ மற்றும் ‘கலாட்டா சம்பந்தம்’ ஆகிய இரு நாடங்கங்களின் அரங்கேற்றம் மூலம் பலத்த ஆரவாரத்தின் நடுவே விதைத்தபோது, இதை இதோடு விடக்கூடாது என்ற எண்ணமே மிஞ்சியது. இந்த ஒரு மாத ஓய்வற்ற பகல்களும் தூக்கமற்ற இரவுகளும் நான் முதன் முதலாக இந்தப் பிரபஞ்சத்…

கண்ணீர்

Image
சொல்லம்புகள் தைக்கப்பட்ட இடத்தில் ஒரு சிறு
சூரியன் புதிதாய் உதிக்க,
நஞ்சு தோய்ந்த அதன் கற்பனைக் கதிர்களால்
நெஞ்சுக்குழி அனலாய் தகிக்கிறது.

மனதின் அடிவாரத்தில் எழுந்த பேரலை ஆவியாகி
மீண்டும் மீண்டும் மேலெழ,
மறுவுலகில் புதைந்த கண்களில் சில
மேகங்கள் கறுமையாய்க் குவிகின்றன.

முட்டாளே என்று குமைந்த மூளையில் ஒரு
மௌன கீதம் பிறக்க - அதன்
முத்தத்தின் வெப்பத்தில் அமிழ விரும்பாமல் சில
மழைத்துளிகள் தப்பித்து விழுகின்றன.

கற்பனைக் காடுகளில் திரியும் ஒரு
தூரிகையில் சிறைப்பட்ட சிங்கத்திற்கு
இதுவே
சொல்லப்படாத சொற்களின் மொழி.

(பி.கு: ட்விட்டரில் ‘தூரிகையில் சிறைப்பட்ட யானை உலவுகிறது, கற்பனைக் காடுகளில்’ என்று படித்தேன். கடைசி பத்தி அதனால் கவரப்பட்டு காப்பியடித்து எழுதப்பட்டது)