Posts

Showing posts from January, 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கெக்க பிக்க, கிக்கிலி பிக்கிலி

Image
சீரியஸ் மோடு ஆன்: குழந்தைகளின் உலகம்தான் எத்தனை சுதந்திரமானது! கனவுகளும் கற்பனைகளும் எல்லையின்றி, விஞ்ஞானச் சுவர் இன்றி, காலமின்றி நேரமின்றி முடிவில்லாத அருவியாகப் பாய அதன் அடிவாரத்தில் பூத்துக் குலுங்கும் வெள்ளந்தி மலர்கள் நம்மை வரவேற்க, அதை முழுமையாய் அனுபவிப்பதற்காகவே நம் வாழ்க்கை இருந்திருக்கக்கூடாதா என்று சில சமயம் ஏங்க வைக்கும் வயது அது. குவித்து வைக்கப்பட்டிருக்கும் மணல் மீது ஏறி விளையாடி அதைக் கலைத்துப் போடும் அந்த ஜென் குருக்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இனி திரும்பவும் அந்தக் கவலையற்ற சிரிப்பின் ஊடே தெரியும் கற்பனை உலகத்தில் நம்மால் வாழ முடியாது என்கிற ஏக்கத்தில் என் நண்பன் ஒருவன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “சிறுவயதில் நாம் அனைவரும் பெரியவர்கள் ஆகவேண்டும் என்று நினைத்தோம். எதை வைத்துத்தான் அப்படி ஆகவேண்டும் என்று நினைத்தோமோ.“ ஜாலி மோடு ஆன்: அப்படி இப்படி என்று ’சின்னப் பசங்க’ என்ற வட்டத்திலிருந்து சமூகம் எங்களை வெளியே இழுத்துக்கொண்டாகிவிட்டது. ஒவ்வொருவரின் தலையிலும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்தாகிவிட்டது. ஏதாவது விளையாட்டுத்தனம் பண்ணி

’பாரதி மறைவு முதல் மகாகவி வரை’

Image
          தனிமனிதன் ஒருவனின் இயக்கத்தைப் பற்றிய மதிப்பீட்டைப் பொதுவாகவே வெற்றி-தோல்வி, ஏற்புடைமை-ஏற்கப்படாமை என்ற எதிர் நிலைகளிலேயே மேம்போக்கு உலகம் குறித்துவைத்துக்கொள்கிறது. பெரும்பாலான இத்தலைமுறை இளைஞர்களுக்கு சுப்பிரமணிய பாரதியைப் பற்றியும் அப்படித்தான் தெரியும். பாரதியார் ஒரு மகாகவி என்று எல்லோருக்கும் தெரியும். பள்ளியில் தமிழ் படித்தவர்களுக்கு அவர் எட்டையபுரத்தில் பிறந்தார் என்று ஆசிரியர் குறிப்பில் இருப்பது தெரியும். முண்டாசும் மீசையும் தெரியும். திருவல்லிக்கேணிக் கோயில் யானை தெரியும். இறுதி ஊர்வலம் பற்றி சிலருக்குத் தெரியும். கொசுறாக மிஷ்கினின் அச்சம் தவிர் பாடலும் சுச்சியின் புதிய இசைத்தட்டும் தெரியும். ஆர்வமுள்ளவர்கள் பாரதியின் வரலாற்றை அறிந்துக்கொள்ளமுடியும். தேடல் சுலபம்தான். ஆனால் அவர் மகாகவி ஆன வரலாறு இன்னும் முக்கியமானது.           “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?”, என்று பாரதி புலம்புவதாக டாக்டர்.ம.பொ.சி.யின் ‘விடுதலைப் போரில் தமிழகம

Why is Mr.M.K.Gandhi needed today?

Image
          I neither follow Mr.M.K.Gandhi staunchly, nor I completely reject him. I feel that the positive and negative exaggerations revolving Mr.Gandhi chiefly arose because of idealising him. As our text books called Mr.Gandhi a 'Mahatma', majority of us have him in our good books till we pass out of our high school. Later, when we come to know about the other side of him, we'll be shocked to realise that all we had read about him is not what he really was, and we'll start to hate him. Both these extremisms are wrong. First step in understanding Mr.Gandhi is removing the prejudices on the positive 'Mahatma' and the negative 'Experiments' from our mind, and approach him like approaching a human being, a human being like us who can make wonders as well as blunders.           Yes, Gandhi might have used his power in the wrong way as some call and in the right way as his conscience call, but even after neglecting the fact that no leader was 100% per