Posts

Showing posts from July, 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

‘கக்கூஸ்’ ஆவணப்படம்

Image
தினமும் மலம் கழித்துவிட்டு பாத்ரூம் ஃப்ளஷை அமிழ்த்தி அந்த அருவருப்பான இதை உள்ளே தள்ளிவிட்டு வருகிறோம். நம்முடைய அந்த அருவருப்பான இதை ஒரு சகமனிதன் கைகளால் அள்ளி வீசுகிறான் என்ற உண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம்? ‘ஹே அதுவும் ஒரு தொழில் மேன்’ என்றா? ‘அதான் சம்பளம் வாங்குகிறார்களே’ என்றா? ‘பிடிக்கலேன்னா வேற தொழிலுக்குத்தான் போகட்டுமே’ என்றா? தினமும் மலத்தை முகர்ந்து மூக்கைப் பொத்தி நகரும் நாம், இந்த உண்மையும் நாறுகிறது என்பதற்காக மூக்கைப் பொத்திக் கடந்துவிடப் போகிறோமா? அப்படியே கடந்தாலும் இம்முறை எவ்வளவு தூரம் விலகினாலும் நாற்றம் குறையாது, ஏனெனில் இம்முறை நாற்றம் நம்மிடமிருந்துதானே வீசுகிறது? நகரத்தில் சாதி இல்லவே இல்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? அல்லது ஒருவேளை தெரிந்தேதான் இந்த வஞ்சகத்திற்குத் துணை போகிறோமா?

          இதுவரை ‘கக்கூஸ்’ ஆவணப்படம் பார்க்காதவர்கள், கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். உங்களை அந்தப் படம் துன்புறுத்தும், தூங்க விடாமல் துன்புறுத்தும். இல்லை குமட்டுகிறது, பார்க்க முடியவில்லை என்று அது கொடுக்கும் சாட்ட…

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது?

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது? சில காரணங்கள்:

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் அரசு இயந்திரம் தன்னுடைய போர்ப்படையை முடுக்கிவிடும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று பெயர் சூட்டும்.

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் பிற நாடுகள் அப்பிரச்னையில் தலையிட முற்படும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சி’ என்று பெயர் சூட்டும்.

சுருங்கச் சொன்னால், சர்வாதிகாரமும் பிற நாடுகளும் உபயோகிக்கும் வன்முறைக்கு ஆயுதப் போராட்டத்தால் மறு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

ஆயுதப் போராட்டத்தைதான் சர்வாதிகாரிகள் விரும்புவார்கள்; அமைதியான போராட்டத்தில் கூட வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டிவிட முயற்சிப்பார்கள். அப்பொழுதுதான் அவர்களால் தன் தரப்பு வன்முறைக்கு நியாயம் கற்பிக்க முடியும்.

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் ஒடுக்குபவர்கள் ஒடுக்கப்படுபவர்களை ‘அதோ தீவிரவாதிகள்’ என்று எளிதாக முத்திரை குத்தி, விவாதத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுவிடுவார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் பணிகள் உடல்பலத்தையும் அதிகம் நம்பியிருப்பவை (பெரும்பாலும் ஆண்களே அதில் ஈடுபடுகிறார்கள்; பெண்களின் எண்ணிக்கை க…

There is more to state flags than meets the eye

Those who pinpoint that national identity of US and Germany are healthy despite having state flags, are missing a point: "Sub-national identities in a territorial nation like India are stronger."

One of the unifying factors of India is the appreciation of its diversity. "Respect our sub-nationalism and we keep Indian nationalism above it"

This outward pressure is practically absent in Germany, as it is a nation based on common language, and the State of US has its own history of gradually gaining and losing streaks of legitimacy over these 200 years.

This legitimacy of German State will be under crisis only if the State fails in distributive[Aristotle] and social justice, or the pride centering its historical events of German unification is diluted.

My opinion is that the concerns and insecurity about the unity of India in this state flag issue is genuine, and must be addressed.

I don't think its not that simple to conclude that since states already have their…

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

Image
livemint இதழில் குனல் சிங் எழுதிய ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' என்ற கட்டுரையின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது. தோனியின் பிறந்த தினத்தன்று வெளியிடப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------



தோனி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிலைபெற்றிருப்பார். அப்போது கரக்பூரில் இந்திய ரயில்வேயில் வேலை செய்தபோது கூட தங்கியிருந்த தன் நண்பர் சத்ய பிரகாஷை தன் விடுதி அறைக்கு அழைப்பார். பழைய குறும்புத்தனம் ஒன்றை தன் நண்பன் மீது நிகழ்த்த வேண்டும் என்று அவருக்காகக் காத்திருந்து, அவர் வந்ததும் யாரோ பிசிசிஐ அமைப்பின் சீனியர் ஒருவரோடு ஃபோனில் பேசுவதுபோல் நடிப்பார். அந்தப் போலி தொலைப்பேசி உரையாடலில் தோனியின் கதாபாத்திரம் சொல்லும், “எனக்கு கேப்டனாக இருப்பதில் துளியும் விருப்பமில்லை, என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இக்காட்சி 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும் முன் தோனி கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்ப…