Posts

Showing posts from September, 2013
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Vishnu's new book available on Amazon

Vishnu's new book is now on sale. புதியவன் வாசிக்கப்படக் காத்திருக்கிறான். மின்பதிப்பு அமேசானில் கிடைக்கும்.

20-20

அப்படி இப்படி இருபது ஆண்டுகள் உசுரோட இருந்தாச்சு. சரியா பாதாள சாக்கடையை மூடிய தொழிலாளிகளுக்கும், கரண்டு கம்பம் சரிஞ்ச அடுத்த நிமிஷமே கரண்டைப் புடுங்கின ஊழியர்களுக்கும், பைய போன வாகன ஓட்டுனர்களுக்கும், பஸ் ஸ்டாப்ல ஏறினப்பறம் பேருந்தை எடுத்த டிரைவர்களுக்கும், தானே புயல்லேர்ந்து காப்பாத்தின பாண்டிச்சேரி வீட்டு ஓனருக்கும் என் கோடானுகோடி நன்றிகள்.

          போன மாசம் தம்பி, “சின்ன வயசுலேர்ந்து பெரியவங்க கால்ல விழுந்து விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சேர்த்த ரூபாய் ஆயிரம் இருக்குடா, என்ன வேணும்?”, என்று தெரியாமல் வாயைக் கொடுத்து விட, அப்படியே அவனை அலேக்காக கிராஸ்வேர்டு புத்தகக் கடைக்குத் தூக்கிச் சென்று விட்டேன். எனக்கு வாங்கிக் கொடுத்தது போக மீதிக் காசில் ’ஷிவா டிரைலஜி’ வாங்கலாம் என்று பட்ஜெட் போட்டு இருந்தவன் நான் செலக்ட் செய்த புத்தகங்களைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் தளும்பாத குறையாக, “ஏண்டா, ஏன்? அடுத்த வருஷமும் வாங்கித் தர்றேண்டா, இந்த வருஷத்துக்குத் தேவையானதை மட்டும் வாங்கு”, என்றான். பிபன் சந்திராவின் ‘India’s struggle for Independence’, Huge Toye-வின் ‘The Springing Tiger: T…

சரிங்...சாரிங்...

”இனிமே 75% அட்டெண்டன்ஸ் இருந்தாதான் ஹால் டிக்கெட் கொடுப்போம், என்ன?”
“சரிங்”
“அட்டெண்டன்ஸ் ஷீட்டை மாசா மாசம் எங்களுக்கு அனுப்பணும், என்ன?”
“சரிங்”
“பசங்களோட யூனிட் டெஸ்ட் மார்க்கெல்லாம் அப்பப்ப இங்க வந்துட்டே இருக்கணும், என்ன?”
“சரிங்”
“மூனு யூனிட் டெஸ்ட் மார்க்கையும் வெச்சுதான் இண்டர்னல் மார்க் போடணும், என்ன?”
“சரிங்”
“இன்னிக்கு செம மழை, அதனால நாளைக்கு லீவு விட்றணும், என்ன?”
“..........”
“என்ன?”
“..........”
“என்ன சத்தத்தையே காணோம்?”
“சாரிங்”
“என்னது?
“சாரிங்”
“மத்ததுக்கு எல்லாம் சரின்னு சொன்னீங்க?”
“சாரிங்”
“லீவு விடணும்னு கவர்மெண்ட் உத்தரவு போட்ருக்கே!”
“சாரிங்”
“என்னமோ பண்ணித் தொலைங்க!”
“சரிங்”
“அப்புறம் பாஸ் பர்சண்டேஜ் 75%ஆவது இருக்கணும், என்ன?”
”சரிங்”
“இதுக்கேல்லாம் மட்டும் மண்டைய மண்டைய ஆட்டுங்க. நாளைக்கு லீவு விட சொன்னா மட்டும்...”
“சாரிங்”