Posts

Showing posts from July, 2014
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சதுரங்கச் சுட்டிகள்

“ஒவ்வொரு மேட்ச்லயும் எதையாச்சும் கத்துக்கணும்!”                                                                                                                                                                             வைஷாலி - பிரஞ்யானந்தா. விஸ்வநாதன் ஆனந்தின் சதுரங்க வாரிசுகள் என்று சொல்லுமளவிற்குத் தங்களின் பதக்கங்களின் மூலமாகத் தமிழகத்திற்குப்  பெருமையை சேர்த்துக்கொண்டிருக்கும் சாதனைச் சுட்டிகள். அதிலும் பிரஞ்யானந்தா கடந்த 25ம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஏழு வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடித்து ஒட்டுமொத்த இந்திய சதுரங்க உலகத்தின் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளார். மேலும் கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசிய அளவிலான எட்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பிரஞ்யானந்தாவும் பன்னிரண்டு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வைஷாலியும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள் சுட்டீஸ் ! "சிலர் பிறக்கும்போதே திறமையுடன் பிறப்பார்கள் சார், வைஷாலி மாதிரியும் பிரஞ்யானந்தா மாதிரியும் !", என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தார் இவர்களின் பயிற்சியாளர

எட்டாம் புத்தகத் திறனறிதல் சந்திப்பு - நிறைவேறிய நோக்கம்?

Image
          சாரல் தமிழ் மன்றத்தின் ’புத்தகத் திறனறிதல் சந்திப்’பிற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, புத்தகம் வாசிக்கத் தூண்டுவது. இரண்டாவது, நம்மைச் சுற்றியுள்ள அரசியல்/சமூக/பொருளாதார/இன்னபிற பிரச்னைகளைக் குறித்த ஒரு தெளிவான பார்வையையும் புரிதலையும் என்றும் முடிவு பெறாத ஒரு சிந்தனை ஓட்டத்தையும் உருவாக்குவது.           சென்ற வாரம் நடந்த ‘பார்த்திபன் கனவு’ புத்தகத் திறனறிதலின்போது முதல் நோக்கம் சற்றே நிறைவேறியது. நிறைய மாணவர்கள் அப்புத்தகம் வாசிக்கக் கிடைக்குமா என்று கேட்டனர். நேற்று முன்தினம் நடந்த ‘இந்தியப் பிரிவினை’ புத்தகத் திறனறிதலின்போது இரண்டாவது நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சி ஏற்பட்டது. நண்பன் கே.ஆர்.விக்னேஷ் கருத்துப் பகிர்வை நிறைவு செய்த பிறகு, “ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?”, என்று கேட்டதுதான் தாமதம், கேள்விக்கணைகள் முழுவீச்சில் பறந்தன. புத்தகத் திறனறிதல் நிறைவு பெரும்வரை வரிசையாக அமர்ந்திருந்த மாணவ மாணவிகள், நிறைவு பெற்ற அடுத்த நொடி வட்டமாக அமர்ந்துகொண்டு விவாதிக்க ஆரம்பித்தனர். மிகவும் ஆரோக்கியமான முறையில் எந்தவித தனிமனிதத் தாக்குதலும் இல்லாமல், அதே சமயம் சூடாகவும் காட