Posts

Showing posts from 2012
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கல்லணைக் கிளி

Image
கரிகால் பெருவளத்தான் தான் கட்டிய கல்லணையை நோட்டம் விட்டபடித் தன் யானை மீது அமர்ந்திருந்தார். அவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலியில் ‘யானைப் பூங்கா, உள்ளே அனுமதி இல்லை’ என்று போர்டு மாட்டியிருந்தது. அந்த வேலியில் சில மாடுகள் கட்டிப் போடப்பட்டு அதை மேய்த்துக் கொண்டிருந்தவன் கரிகாலருக்கு இணையாக அந்த அதிசயத்தைப் பார்த்துகொண்டிருக்க பூங்காவைச் சுற்றிலும் தார்சாலை போடப்பட்டு ஹாரன் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டிருந்தது. ஆறுவயதில் நான் சிறுவர் மலரில் பார்த்த கார்ட்டூன் கல்லணை இதுவல்ல, இது என்னமோ சென்னை மெரினா பீச் ரேஞ்சுக்கு திருச்சிராப்பள்ளிக் குரல்களில் கலகலத்துக்கொண்டிருந்தது. பாப்கார்ன், கோன் ஐஸ், மீன் வறுவல், சோளம், என்று அச்சு அசல் திருச்சி பீச்தான் !

          யானைகளே நிற்க பயப்படும் அணை மதகுகளினூடே வெண்நாரைகளும் கொக்குகளும் ‘வாடி இருக்குமாம்’ படலத்தை நடத்திக்கோண்டிருக்க, அவைகளின் கணுக்கால் அளவிற்கு ஏதோ தண்ணீர் ஓடியது. கர்னாடக ஷெட்டர்வாளின் சூழ்ச்சியைக் கரிகாலர் சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார். கொக்குகளைப் பிடிக்க என் கேமரா சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.

“நியாயப…

அம்மா, என்னைக் கலைத்து விடேன் !

Image
என் தோழி காயத்ரி எழுதிய வலி மிகுந்த உரைவீச்சு:

எனக்கு பயமா இருக்கம்மா
என்னை கலைத்து விடேன்
இல்லை கரைந்து விடுகிறேன்...

நான் பெண்ணென்று தெரிந்தால்
நீங்களே சிதைத்து விடுவீர்கள்.
மீறி நானும் பிறந்து விட்டால்
கள்ளிப்பாலால் புதைத்து விடுவீர்கள்.
மீறி நானும் வளர்ந்தால்
மழலை பூவைக் கசக்கி விடுவீர்கள்.
அதையும் மீறி வந்தால்
என் பெண்மையினையே கொன்று விடுவீர்கள்.
இல்லை திருமணம் என்ற பெயரில்
என்னை முடக்கிவிடுவீர்கள்.

அப்பப்பா எத்தனை கொடுமை.
வேண்டாம் அம்மா.
நான் இப்படியே
கரைந்து விடுகிறேன்...

ஏனய்யா ?
பெண்ணாக பிறப்பது குற்றமா ?
இல்லை பிறந்தது குற்றமா ?
பிறந்தது தான் ஒரே குற்றமா ?

பெண்ணைத் துதிப்பதைத் துறந்தீர்.
மதிப்பதையும் மறந்தீர்.
சரி, போகட்டும்.
எங்களை மிதிக்காமல் இருங்கள்.
அதுவே போதும் அய்யா !

உயிரை ஜனிக்க செய்யும் வல்லமை தந்தாய்.
உயிரை உடலை சுமக்கும் வல்லமை தந்தாய்.
உயிரை உடலை வளர்க்கும் வல்லமை தந்தாய்.
உயிரை பெற்றெடுக்கும் வல்லமையும் தந்தாய்.
ஆனால், எங்கள் கற்பென்னும் உயிரை
மதிக்கும், பாதுகாக்கும்,
உலகை ஏனப்பா
தர மறந்தாய் ?

இந்தக் கலியுகத்தில்
ஒரு பெண் சாதிப்பதற்கு
அவள் கற்பு தான்
தடை என்றால்,
உன்னோடு கூட மட்டும்
தான் பெண் என்று
நீ…

Our duties for building an "Equal India"

Image
1. "They should be severely punished"
2. "They should be hanged to death"
3. "Thappu ponnunga melayum irukku, avanga apdi dress panradhaaladhan ipdi nadakkudhu"
4. "They should be beaten to death"
5. "Our Laws should be made more stringent, like there in Dubai"
6. "Avanga akka thangachi-ku ipdi nadandha summa irupaangalaa ?"
7. "Apdiyaa ? Eppo nadandhuchu da, News paakalada naan, ennaachu ?"
8. "Women should carry knives along with them"
9. "I'm ashamed to live in such a country !"
10. "Aambalainga na ? Enna venaalum seyyalaamaa ?"
11. "Does Delhi really deserve to be called as the capital of India ?"

These were some of the comments I got from my friends, and I respect all of them. I even saw a post suggesting rapex for women, as women harassment has become very common and is being done very casually here. Where is India really going ? The government, regardless of the pa…

மாறுதல்

Image
காலம்தான் நம்மை எப்படி எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது ! சில சம்பவங்கள் அப்படியே சர்வ சாதாரணமாய் நடந்து நம் பழக்க வழக்கத்தையே மாற்றுமளவிற்குப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டு அமைதியாக சரித்திரப் பக்கங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. ஏதோ ஒரு பிரபஞ்ச நொடியில் எங்கேயோ ஒரு இடத்தில் ஏதோ ஒன்று நிகழ்ந்ததால் இப்பொழுது நான் இப்படி இருக்கிறேன் என்கிற சித்தாந்தத்தில்தான் எத்தனை வசீகரம் வழிகிறது ! ‘என்னதான் மனிதன் ஒரு நிச்சயமுள்ள சூழலுக்கு ஏங்கினாலும் இயற்கை ஏனோ நிச்சயமற்ற சூழலைத்தான் விரும்புகிறது’, என்ற கார்ல் கிளாஸ்விட்ஸின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஒரு பக்கம் திடீரென்று எதிர்பாராமல் இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்க அங்கு யுவசக்தி என்கிற அரசு சாரா அமைப்பின் அறிமுகம் கிடைக்க அதன் மூலம் ஒரு அண்ணன் வாய்க்க அவனால் எனக்கு கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் வரமே கிடைத்துவிட்டது. இன்னொரு பக்கம் இருக்கிற 42 கல்லூரிப் பேருந்துகளில் நான் சென்ற பேருந்து பார்த்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாக அதில் என் மேல் ஒரு பெண் எசகேடாக வந்து விழ அதனால் இப்பொழுது முதுகு முன்போல் நிமிர மாட்டேன் என்று அடம்…

பிறந்தநாள்

Image
ஒரு வயசுக்கு மேல் உலகம் நம் பிறந்தநாளைக் கொண்டாட நாம் பாடுபட வேண்டும் என்று எங்கோ படித்துவிட்டேன், அப்போதிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தியாகிவிட்டது. சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய பேர் என் வீட்டிற்கு வந்து, நான் வீட்டில் இல்லாததைப் பார்த்து பல்பு வாங்கியிருக்கிறார்கள் (அடுத்த நாள் அதற்காக எனக்கு செமத்தியான அடி விழும், அது வேறு டிபார்ட்மெண்ட்). “நான் என்ன பெரிய காந்தியா நேருவா ?”, என்று பதில் சொல்லி பல கலவரங்களைக் கேண்டீனில் நிகழ்த்தியிருக்கிறேன். பர்த்டே ட்ரீட் என்று யாராவது வாயைத் திறந்தாலே அங்கிருந்து நைசாக நழுவிவிடுவதைப் பார்த்து பார்த்து, இனி பர்ஸை பிக்பாக்கெட் அடிப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு நண்பர்கள் வட்டம் வந்திருப்பதாக விவரமறிந்தோர் கூறுகின்றனர். வருடா வருடம் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எங்காவது ஓடிவிடுகிறேன் என்று இந்த வருடம் வித்தியாசமாக ஒரு பிளான் போட்டார்கள். என் அம்மாவுக்கு ஃபோனைப் போட்டு, “இன்னிக்கு எப்படியாவது விஷ்ணுவை வீட்டுல கட்டிப்போட்ருங்கம்மா” என்று சொல்லி வன்முறையைக் கையிலெடுத்தார்கள். ஊஹும்ம் ! சிக்குவேனா ? வழக்கம்போல அ…

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரை விமர்சனம்

Image
ஒரு படத்தில் குறைந்தபட்சம் ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகள், இரண்டு தொப்புள்காட்சிகள், ஒரு முத்தக்காட்சி, வெளிநாட்டில் நடனம், நட்சத்திர நடிகர்கள், பிரமாண்டமான செட், இதெல்லாம் இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்கள் அதை ஒரு திரைப்படமாக அங்கீகரிப்பார்கள் என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, மக்கள் முட்டாள்கள் அல்ல என்று பல படங்கள் சொல்லத் துவங்கி விட்ட வேளையில், இதோ இன்னொரு படம் அதை இன்னொரு முறை படத்தில் பாடல் கூட இல்லாமல் பாடியிருக்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், 2012-இன் இன்ப அதிர்ச்சி. மூனு மணி நேரம், மூச்சுத் தெணரத் தெணர சிரிக்க வைத்திருக்கிறார்கள் !

          நாயகன் விஜய் சேதுபதி இந்த முறையும் கிளாஸ் பெர்ஃபார்மன்ஸைக் கொட்டியிருக்கிறார். இவர்களெல்லாம் புதுமுகங்களா என்று ஆச்சரியப்படுமளவிற்கு அமைந்திருகின்றன ஹீரோவின் நண்பர்களாக நடிக்கும் மூவரின் நடிப்பு. ஆம், கொஞ்சம் கூட கேப்பே இல்லாமல் சிரிக்க வைக்கும் புதுமுகங்களின் முகபாவங்கள் அடடே சொல்ல வைக்கின்றன. ரிஸ்க் எடுத்து குளோசப் ஷாட்கள் பல வைத்து அவர்களின் திறமையை முழுவதுமாக உபயோகித்த இயக்குனர் பாலாஜி தரணீதரனின் முதுகில் …

கொசுக்கடி, எத்தனையோ அனுபவி !

Image
“If you think you are too small to make a difference, try sleeping with a mosquito.”
- Dalai Lama XIV

          ஒரு ஆப்பிரிக்கப் பழமொழியை வழிமொழிந்து தலாய் லாமா கூறிய கருத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். டார்வினின் 'Survival of the fittest' கொள்கைப்படி தற்போது கிட்டத்தட்ட பூமியின் சகல இடங்களிலும் கோலோச்சுவது மனிதன்தான். மனிதனுக்கு முந்தைய காலகட்டங்களில் ஆதிக்க உயிரினங்கள் தங்களின் தேவைக்கேற்பதான் மற்ற உயிர்களை வதம் செய்தன. அதாவது உணவுச் சங்கிலி அறுபடாமல் ஆதிக்கம் செய்தல் என்பது ஒரு மூர்க்கமான உயிரியல் நியதியாகவே இருந்து வந்தது. ஆனால் மனிதனின் காலகட்டத்தில் மற்ற உயிர்களை அழித்தல் என்பது உணவுச் சங்கிலிக்கு அப்பாற்பட்டு ஒரு கட்டுக்குள் அடங்காமல் போக ஆரம்பித்தது. Necessity என்பதற்கும் Luxury என்பதற்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய கோடு பல உயிரினங்களின் பாதுகாப்பின் மேல் கீரல் விழச்செய்தது. மனிதனுக்கு ஆறறிவு வந்த பிறகு அவன் அழிக்க ஆரம்பிக்காத விலங்கினங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவு இயற்கையைச் சுரண்டியிருக்கிறான் மனிதன். கடைசியாக டோடோ பறவையை மனிதன் பார்த்தது 1662வில…

நண்பேன்டா !

Image
+1 படிக்கும்போது ஒரு கவிதை எழுது என்று தமிழ் சார் ஒரு பேச்சுக்கு சொன்னதைப் படு சீரியசாக எடுத்துக்கொண்டு அன்றே இராவோடு இராவாக எழுதிய நூறு வரிக்கவிதை:


ஞாயிறு ம‌திய‌ம் நானோ,
ந‌ல்ல‌ க‌ன‌வுட‌ன் உற‌ங்க‌, என்
செல்போன் இருமுறை சினுங்க‌, நான்
சோர்வாய் எழுந்து எடுத்தேன்...

முத‌லில் எந்த‌ன் ந‌ண்ப‌ன் என்னை
மெரீனா பீச்சிற்கு அழைத்திருந்தான்;
இர‌ண்டாவ‌தாய் எந்த‌ன் அவ‌ளோ என்னை
ஈ.சி.ஆர்-இற்கு அழைத்திருந்தாள்...

முத‌லைப் ப‌டித்த‌ எந்த‌ன் முக‌த்தில்
ச‌ல‌ன‌ம் ஏனோ இல்லை, ஆனால்
பிற‌கைப் ப‌டித்த‌ பின்னே நெஞ்ச‌ம்
இற‌க்கை க‌ட்டிப் ப‌ற‌ந்த‌து...

ந‌ட்பை ம‌ற‌ந்த‌ நானோ, தெரு
நாயைப் போல‌ சுற்றி,
சுக்கிர‌ கால‌ சூட்டில் அவ‌ளோடு
சுண்ட‌ல் ப‌கிர்ந்து கொண்டேன் !

கொளுத்தும் வெயிலில் நின்று, அன‌லாய்க்
கொதிக்கும் ம‌ண‌லில் நின்று,
ந‌ட்பின் இல‌க்க‌ண‌மாக‌வே, என்
ந‌ண்ப‌ன் காத்துக் கிட‌ந்தான் !

எதிரே இருந்த‌ அவ‌ளோ முத‌லில்
ஏதேதோ என்னிட‌ம் கூறினாள்;
புதிரால் குழ‌ம்பிய‌ நானோ ஒன்றும்
புரியாம‌ல் ம‌ல‌ர‌ விழித்தேன்...

ம‌ன‌த்தை திட‌ப்ப‌டுத்திய‌து போல‌
மார்பை இற‌க்கிய‌ அவ‌ளோ,
அக‌ம்புற‌ம் விழித்த‌ என்னை
அவ‌ள் திரும‌ண‌ விழாவிற்கு அழைத்தாள் !

அதிர்ச்சியில் உறைந்த‌ எ…

உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !

Image
மனிதன் யாரென மாநில முரைத்து மாயையை அகற்றி மின்னிட வைத்து மிதிபட நேர்ந்தால் மீண்டும் முயன்று மீட்டிய செயலை முற்றிலும் வென்று முடியும் என்று மூளைக் குரைத்து மூர்க்கப் பண்பை மெலிதாய்க் குறைத்து மெத்தன மழித்து மேதையை ஆக்கும் உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !
கடமையை முடித்து காரிருள் துடைத்து காத்திடு மெதையும் கிலியைப் புடைத்து கிட்டலர் செயலைக் கீற்றே என்று கீழ்ப்படிந் திருக்கா குன்றாய் நின்று குவலய மெங்கும் கூர்மையை நிறுத்தி கூடக மென்னும் கெட்டதைத் துரத்தி கெம்பென உயர்த்தி கேசரி ஆக்கும் உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !
பற்றினை ஏற்றிப் பாரை வளர்த்து பார்த்திடு மிமையை பிரித்தே குலைத்து பிணக்க மில்லா பீதக மளித்து பீழை களைந்து புகழைத் தெளித்து புத்தன் சொல்போல் பூரண மடையா பூதி யுளவரை பெருமிதம் தேடி பெருமதி பெற்றுப் பேரோன் ஆக்கும் உன்னை உயர்த்தும் உன் நம்பிக்கையே !

அன்புமிக்க விஷ்ணுவுக்கு வண்ணதாசன் எழுதிக்கொள்வது

627007
27.07.08

அன்புமிக்க விஷ்ணுவுக்கு,

வணக்கம்.
உங்களுடைய கவிதைகள் 01.04.08ல் அனுப்பப்பட்டு 02.04.08ல் எனக்குக் கிடைத்தன. இந்த மூன்று மாதங்கள் இருபத்தேழு நாட்கள் குறைந்தது நான்கு முறைகளும், இந்த தாமதமான பதிவை எழுதுவதற்கு முன்பு மீண்டும் ஒருமுறை அவற்றைப் படித்தாயிற்று.
முதலில் என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
*
பத்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புக்கு இப்போது வந்திருப்பீர்கள். வகுப்பு அல்ல, இந்த வயதுதான் முக்கியம். வயது என்பதைவிட இந்தப் பதின்பருவத்தை-Teen age-ஐச் சொல்லலாம்.
இந்த வளரினம் பருவத்தில்தான், உடல்சார்ந்த விழிப்புக்களும் மனம் சார்ந்த விழிப்புக்களும் நிகழ்கின்றன. இந்தப் பருவத்தில் நாம் எவ்வளவு வெளிச்சத்தில் அல்லது வெளிச்சத்துடன் விழிக்கிறோமோ, அந்த வெளிச்சம்தான் கடைசிவரை நம்மை வழிநடத்தும், கூட வரும்.
எல்லாக் கலைஞனும் இந்த adolescent பருவத்திலேயே உருவாகிறான். நீங்களும் உருவாகியிருக்கிறீர்கள். உங்கள் கலை கவிதை. அல்லது உங்களது வெளிப்பாடு கவிதை. சிலர் ஓவியம் மூலம், சிலர் இசை மூலம், சிலர் இடுகிற கோலங்கள் மூலமாகக் கூட வெளிப்படுகிறார்கள். ஒவ்வொரு ஊடகமும் ஒரு வாசல் திறக்கிறத…

சிங்காரவடிவேலு சார்

Image
எஸ்.எஸ்.என். கல்லூரிக்கு வந்து போகிறவர்களுக்கு சிங்காரவடிவேலு சாரைத் தெரியாமல் இருக்காது. ஏராளமான உடம்பின் மேல் அளவெடுத்துத் தைத்த அரைக்கைச் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு தரையைப் பார்க்கிறாரா நம்மைப் பார்க்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாதபடி முகத்தை வைத்துக்கொண்டு மெதுவாக, மிக மெதுவாக நம் கல்லூரி வளாகத்திற்குள் வளைய வருபவர். கைகளை எப்பொழுதும் ஒரு தடிமனான புத்தகமும் மூக்குக்கண்ணாடிப் பெட்டியும் சாக்பீஸ் டப்பாவும் அலங்கரிக்க அதை ஒரு சுமையாகக் கருதாமல் சாதாரணமாக சுமந்துக்கொண்டு செல்வார். சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும், ஆனால் அது தெரியாதவாறு கொழுப்பு அடுக்குகள் மறைத்துவிட அதனால் அவர் கன்னம் அடையும் விசாலத்தில் அவரது இருபது ஆண்டுகால ஆசிரிய அனுபவம் பெரிதும் பயன்தராமல் அவரிடமே தேங்கி நிற்பதுபோல் தோன்றும். ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் புனித இயற்பியலைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மாணவர்கள் இருப்பது இயற்கையே, இது அவருக்கும் தெரிந்துதான் இருக்கிறதோ என்னவோ, அவரைத் தேடி யார் வந்தாலும் அருகில் உட்கார வைத்து சந்தேகங்களைப் பொறுமையாகத் தீர்த்து வைப்பார். உலகத்தில் சில கடினமான…

Dr. I. Arul Aram's Speech in MedIndia

Dr. I. Arul Aram
Head of Department Department of Media Sciences Anna University, Chennai
“First of all, I’m really proud to say that I handle a bunch of journalism aspirants as a Head of Department, because the term journalism do have an attractiveness, even while imbibing itself the quality of being a little bit cautious than the other fields. I handle a bunch of future journalists who are already well in terms with the fact that journalism is the fourth pillar of Democracy. I always advise my students about objectiveness – what you are really going to do, feasibility – how you are going to do, and reflexivity – shaping yourselves from your past experiences. At present Journalism in India faces multiple perceptions from people coming from various social/economic backgrounds and with various ideologies. Now with the social media at full pace, it’s possible for anybody to pass a comment about anything simply by sitting in front of a monitor and tapping the keyboard. So you need to be extr…

MedIndia - Overall report

Image
Students of the Department of Media Sciences, Anna University, are ecstatic as the two day inter-collegiate seminar on media, "MedIndia", jointly organized by them and 'Yuva Shakthi', a youth welfare association, went on successfully with the active participation of students from more than 10 colleges. The two day seminar, which focused on enriching the journalism aspirants about the basic ethics and commandments that a journalist should abide, was conducted on 13th and 14th September at IRS auditorium, Anna University. 
          The participants witnessed the presence of many dignitaries in the media field as chief guests. Dr. I. Arul Aram, Head of Department, Mr. Shanmugavel, Registrar and Ms. Vijayanthi, a member of ‘Yuva Shakthi’ were present during the inauguration ceremony. Dr. Arul Aram delivered a short address to the students on how media people can boldly question a government of its shortcomings. “Even the famous President Richard Nixon couldn’t …

The Bus Treat - Prologue

Image
What a Ragging Sir ji ! - Session 6: 3rd October, 2011
.................................................................
..................................
.................................................................
"Hmmm, seri ok, bye then", she said.
"Yeah, bye. See you tomorrow"

          And I started walking towards my home. "Hmmm, sweet voice. Can go places ! Oh my God have to go and pay a visit to the restaurent, EG work, FOC UT, tomorrow chemistry lab, have to finish 'Estimation of Chloride', lot to do", I thought as I walked. But chemistry lab didn't function the next day, infact, the whole first year classes, for a reason...

          I came home happily, eagerly expecting a happy, memorable, cheerful "Bus Treat" the next day. The next day came......

P.S: "The Bus Treat", a parallel series to "What a Ragging Sir ji !", coming soon...

-------------------------------------------------------------------…

பாஸ், நீங்க‌ ந‌ல்ல‌ கெட்ட‌வ‌ரா இல்ல‌ கெட்ட‌ ந‌ல்ல‌வ‌ரா ?

Image
முன்குறிப்பு : இப்ப‌திவு இங்கு குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ ந‌ப‌ர்க‌ள் யாரையும் புண்ப‌டுத்தும் நோக்குட‌னோ அவ‌ர்க‌ளின் குண‌நல‌ன்க‌ளையும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் ப‌ற்றி அவ‌தூறு சொல்லும் வ‌கையிலுலோ எழுத‌ப்ப‌ட‌வில்லை. இது முழுக்க‌ முழுக்க‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ந‌ப‌ரின் பூர‌ண‌ அனும‌தியுட‌னே எழுத‌ப்ப‌டுகிற‌து. இது ஒரு பெர்ச‌ன‌ல் டைரியின் சாய‌ல் கொண்ட‌ ஒரு ஒப்புத‌ல் வாக்குமூல‌மே அன்றி யாரையும் வாழ்வில் வ‌ழித‌வ‌றிய‌வ‌ர்க‌ளாக‌ சித்த‌ரிக்கும் ஒரு சுய‌ச‌ரிதையின் தேவைய‌ற்ற‌ அத்தியாய‌ம் அல்ல‌. இத‌னைப் ப‌டித்த‌பின் எங்க‌ளைப் ப‌ற்றிய‌‌ ந‌ல்ல‌பிப்பிராய‌ம் கெடுவ‌து அர்த்த‌ம‌ற்ற‌து, அவ‌சிய‌ம‌ற்ற‌து. இது ஒரு வாழ்விய‌ல் பாட‌ம் ம‌ட்டுமே, பாழ்விய‌ல் பாட‌ம் அல்ல‌.
------------------------------------------------------------------------------------------------------------

"ல‌வ‌டிக்க‌பால் !!", ச‌ப்பு க‌த்தினான்.

ம‌த்திய‌ கைலாஷ் செல்வ‌த‌ற்காக‌ Bus 13-இல் ஏறும்போதுதான் இந்த‌க் கூத்து. 2011-ம் வ‌ருட‌ம் SSN காலேஜில் சேர்ந்த‌ வ‌ன‌வாணி ஆண்பிள்ளைக‌ள் நானும் ச‌ப்புவும் ம‌ட்டும்தான். நான் இங்கி பிங்கி பாங்கி போட…