Posts

Showing posts from December, 2013
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மகிழ்வன், மகிழினி

Image
“இந்தியாவில் 60-120 மில்லியன் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள்”, என்ற அதிர்ச்சித் தகவலுடன் முடிந்தது அத்திரைப்படம். சராசரி எடுத்தால் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஜனத்தொகைக்கு நிகராக இருக்கும் அவர்களைப் பற்றி நாம் எப்படிப்பட்ட பார்வையைக் கொண்டிருக்கிறோம்? உங்கள் பக்கத்துவீட்டு நபரோ, உங்களது நெருங்கிய நண்பரோ, ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏன், இதைப் படிக்கிற நீங்கள் கூட உங்களது பாலியல் விருப்பத்தை இந்த சமூகத்திடம் மறைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஓரினச் சேர்க்கையாளர்களையும் திருநங்கையரையும் இந்தியச் சமூகம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது? LGBT(Lesbian Gay Bisexual Transgender) என்றழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் திருநங்கையர் குழுவான ‘சென்னை தோஸ்த்’ சென்னையில் மூன்று நாட்கள் ரெயின்போ திரைப்பட விழாவினை நடத்தியது. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், அவர்களது முன்னேற்றத்தில் பங்கு கொள்ள நினைப்பவர்கள், ஆகியோர் பல்வேறு மொழிகளில் இயக்கிய சிறந்த குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. நடனக் கலைஞரான அனிதா ரத்னமும் ஊடகவியலாளர் அப்சரா

ஒரு நாள் புனிதர்கள்

சுற்றுச் சூழல் மாசடைவதன் காரணங்களையும் அதன் விளைவுகளையும் மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகளையும் விளக்குக. காரணங்கள்: • நகரமயமாக்கல் • காடுகள் அழிப்பு • குளிர்சாதனப்பெட்டிக்குப் பழகிய வாழ்க்கை முறை • மரங்கள் மீள்நடாமை • பெட்ரோலிய எரிவாயு • தொழிற்சாலைக் கழிவுகள், இத்யாதி விளைவுகள்: • ஓசோன் மண்டலத்தில் ஓட்டைகள் • பூமி வெப்பமயமாதல் • கிரீன் ஹவுஸ் பாதிப்பு • ஆக்சிஜன் மற்றும் குடிநீர் பற்றாக்குறை • புதிய நோய்கள் உருவாக்கம், இத்யாதி மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகள்: • குறைந்த தூரப் பயணத்திற்கு மகிழுந்தை உபயோகபடுத்துவதைத் தவிர்க்கவும். • மிகவும் குறைந்த தூரமாக இருந்தால் நடக்கவும், அல்லது மிதிவண்டியைப் பயன்படுத்தவும். • தவிர்க்கவே முடியாது என்னும்போதே மகிழுந்தை வெளியே எடுக்கவும், இல்லையேல் வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும். • வீட்டிற்கு ஒரு மரமாவது நடவும். • பெட்ரோலிய வாகனங்கள் பயன்படுத்தலைக் குறைக்கவும் • குளிர்சாதனப் பெட்டி உபயோகிப்பதைக் குறைக்கவும், இத்யாதி நாளை மறுநாள் நடக்கவிருக்கும் 'Environmental Science' செமஸ்டர் தேர்வுக்காக ஒருநாள் புனிதர்கள் ஆகி ப

நான் பாஸ் பண்ணிட்டேன், அதனால பேச தகுதி வந்துருச்சு. போடா டேய்.

”என்னடா இன்னிக்கு ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் எப்படிப் பண்ண?” ”அட போங்கணா, கைனமேடிக்ஸ்தான் அவுட்டுன்னு பாத்தா ஃப்ளூயிட்லயும் முடிஷ்டானுக” “போச்சாடா?” “ணா, தட்டித் தூங்கிட்டானுகணா” “சரி விடுறா, ரெண்டு கஷ்டமான எக்சாம்ஸ் முடிஞ்சுது. அடுத்து தெர்மோடைனமிக்ஸ் ஒன்னுதான்” “க்கும், ஈசியான ஃப்ளூயிடுக்கே டவுசர் கழண்டுருச்சு, தெர்மோலாம் கண்டிப்பா அவுட்டுதான்ணா” “இதோ பாரு, இப்போ அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாத, அடுத்த எக்சாமுக்கு ஒழுங்கா படி, என்ன?” “சரிணா, ரெண்டு நாள் லீவு இருக்கு…” “அப்பறம் என்ன? மாஸ் பண்ணிரலாம் விடு. தெர்மோல ஒன்னாவது யூனிட்டும் ரெண்டாவது யூனிட்டும் செம சப்ப, ரெண்டு மணிநேரத்துல முடிச்சுரலாம், அதை நல்லா பாத்துக்கோ” “ஹும்ம்ம்” ”அஞ்சாவது யூனிட்ல செகண்ட் டாப்பிக் மட்டும் லைட்டா காண்டேத்தும், மத்தபடி அதுவும் சப்பதான்” “அப்படியாணா?” “அட ஆமாம்டா. தெர்மோலாம் பாக்க மட்டும்தான் கஷ்டமா இருக்கும், ஆனா உள்ளார மட்டும் பூந்துட்டோம்னா கேம் ஆடிடலாம். அப்பறம் நாலாவது யூனிட் தரவ் பண்ணிடு. ஷ்யூரா பதினாறு மார்க் சுளையா அள்ளிடலாம்” “இப்பதான்ணா எனக்கே ஒரு நம்பிக்கை வருது. தேங்க்ஸ்ண

கெட்டக் கனவு

“டேய் பக்ஸு! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவேன், ஆனா நீ எமோஷனல் ஆகக் கூடாது”, நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தம்பி எதையோ சொல்ல வந்தான். “சொல்லு டூட், என்ன விஷயம்?, அமைதியாகக் கேட்டேன். “இல்லடா வேண்டாம்” “எனக்கு ஏலியன் நெஞ்சுடா, நீ சொல்லு”, தைரியமூட்டினேன். பையன் வேறு டீனேஜர் ஆகிவிட்டானா, எப்போது என்ன சொல்வான் என்று தெரியாது. பக்குவமாக, தோழமையாக டீல் பண்ணியாகவேண்டும். ”ஹூம்ம்ம்”, ஒரு நெடிய பெருமூச்சு விட்டுக்கொண்டான். “அன்னிக்கு ஒரு கனவு வந்துதுடா. நீயும் நானும் எதையோ வாங்கக் கடைக்குப் போயிட்டிருக்கோம். ஜாலியா பேசிக்கிட்டே மெதுவா நடந்து போயிட்டிருக்கோம்” “ஓக்கே?” ”ரோடு கிராஸிங் வருது. நம்ம தேவநாதன் ரோடுதான். ஒன்வே. நீ ஏதோ ஒரு ஞாபகத்துல சைடுல பாக்காம ரோடைக் கிராஸ் பண்ற, சடன்னா ஒரு ஹாரன் சத்தம், 21G ஏ.சி. பஸ் ஒன்னு ஃபுல் ஸ்பீட்ல…” எனக்குப் புரிந்தது. கெட்டக் கனவு. தம்பி நடுங்கியபடித் தொடர்ந்தான். “ஃபுல் ஸ்பீட்ல உன்னைப் பாத்து வருது. பிரேக் அடிச்சு ரோடைத் தேய்க்கற சத்தம் கூசுது. எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே தெரியல. ஆனா உடனே சுதாரிச்சுட்டேன். அப்படியே “அண்ணாஆ