Posts

Showing posts with the label ஃபேஸ்புக் பதிவுகள்
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஙே... :/

நம் சமூகம் மிக மிக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. பலவற்றை சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் உடனடியாக நிரூபித்துக்கொண்டிருக்கிறது: 1. “என் மதத்துல தீவிரவாதம் வளருதுன்னா சொல்ற? உன்னை சுட்டுக்கொல்லணும்” 2. “என்னையா நாஜின்னு சொல்ற? உன் இனத்தை இங்க ஆள விட்டா இப்படித்தான் பேசுவ” 3. “என்னையா பாசிஸ்டுன்னு சொல்ற? உன் பேச்சை முதல்ல நிறுத்தணும்” 4. “என்னடி திமிரு புடிச்சவன்னு சொல்ற? உன்னை அடக்க எனக்கு எத்தனை நிமிஷம் ஆகும்?” 5. “என்னையா ஆண்டை, அக்கினிக்குஞ்சுன்னு கலாய்க்கிற? அரசியல்ல ஒன்னு திரண்டதும் வாய் நீளுது?” 6. “பார்ப்பனீயத்தையா திட்ற? இதுக்குதான் அவங்கவங்களை வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும்ங்கிறது” 7. “என்னையா கலவரத்தைத் தூண்டுறேன்னு சொல்ற? பத்து பேரைக் கூட்டியாரத்துக்குள்ள மரியாதையா ஓடிரு” 8. “பெண் சுதந்திரமே நாங்க தரலைன்னு சொல்றியே? உன்னையெல்லாம் வெளிய படிக்க அனுப்பினதுக்கு இப்படித்தான் பேசுவியா?” 9. “என்னையா அறிவுஜீவின்னு திட்ற? என் அறிவு இருக்கிற ரேஞ்சுக்கு நான் சொல்றதெல்லாம் உனக்கு முதல்ல புரியவே புரியாது” 10. “என்னையா மதவாதின்னு சொல்ற? இவ்வளவு காலம் அமைதியா இருந்த...

ஹாசிப் கான்

Image
Courtesy: Vikatan           எல்லோரைப் போலவும் பல்வேறு கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கார்ட்டூனின் அங்கமாகவே உணர்ந்தது ஹாசிப் கானின் சித்திரங்களில்தான். First person camera போல் இதோ ஒரு first person cartoon. டரியல் ஆகி ஆப்பரேஷன் தியேட்டரில் நிராதரவாகப் படுத்திருக்கிறோம். அரை போதையில் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தால்... மூஞ்சிக்கருகே ஐந்து சர்ஜன்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வரவேற்க, “என்னது இன்னும ... ் முடியலியா?” என்று மிச்ச சொச்ச உயிரும் போகிறது. இந்த சித்திரத்தில் நாமும் ஒரு பாத்திரம். ஹாசிப் கானின் நகைச்சுவை சித்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். நான்கு வருடங்களுக்கு முன் இதைப் பார்த்தவுடன் நிலைகொள்ளாமல் சிரித்தபடி நிலைமையை நொந்துகொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. வயதாகவே ஆகாது இந்த கலாட்டூனுக்கு. வருடா வருடம் சர்ஜன்கள் மட்டும் மாற, காட்சி என்னவோ அப்படியேதான் இருக்கப்போகிறது. மன்மோகன் இடத்தில் மோடியை கற்பனை செய்து பார்த்தேன். இன்னும் அதிக சிரிப்பு, இன்னும் அதிக கடுப்பு.    ...

அனிதாவும், பல அநீதிகளும்!

          அனிதாவின் தற்கொலை உலுக்கியெடுத்துவிட்டது. “தற்கொலை தீர்வே இல்லை”, என்ற வாதத்தை முன்னிலைப்படுத்தி நேற்று முன்தினம் பலர் திடீர் மனோதத்துவ நிபுணர்களாக மாறியதைப் பார்த்தபோது ஆத்திரமாக வந்தது. ஆனால் பாத்ரூம் கண்ணாடியின் முன் ஒரு சக மனிதிக்காக கையறு நிலையில் இரண்டு முறை அழுது, சோர்வில் தூங்கி மறுநாள் கண்விழித்து சற்றே திடமான மனநிலையில் அமர்ந்து யோசிக்கையில், அனிதாவின் தற்கொலை துர்நிகழ்வில் ஏதோ ஒரு பக்கம் நிற்பதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் காரணங்களில் பல்வேறு சிக்கலான காரணிகள் சம்பந்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இத்துர்நிகழ்வை அரசியலாக்குபவர்கள் நீட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக, சமூக நீதி பேசுபவர்களாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவர்களாக, ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானவர்களாக, மோடி எதிர்ப்பாளர்களாக, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் செயல்பாட்டாளர்களாக, இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குபவர்களாக, இவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ காரணிகளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவை, ஒவ்வொன்றும் தனித்த...

ஒரு நாள் புனிதர்கள்

சுற்றுச் சூழல் மாசடைவதன் காரணங்களையும் அதன் விளைவுகளையும் மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகளையும் விளக்குக. காரணங்கள்: • நகரமயமாக்கல் • காடுகள் அழிப்பு • குளிர்சாதனப்பெட்டிக்குப் பழகிய வாழ்க்கை முறை • மரங்கள் மீள்நடாமை • பெட்ரோலிய எரிவாயு • தொழிற்சாலைக் கழிவுகள், இத்யாதி விளைவுகள்: • ஓசோன் மண்டலத்தில் ஓட்டைகள் • பூமி வெப்பமயமாதல் • கிரீன் ஹவுஸ் பாதிப்பு • ஆக்சிஜன் மற்றும் குடிநீர் பற்றாக்குறை • புதிய நோய்கள் உருவாக்கம், இத்யாதி மாசடைவதைக் குறைக்கும் வழிமுறைகள்: • குறைந்த தூரப் பயணத்திற்கு மகிழுந்தை உபயோகபடுத்துவதைத் தவிர்க்கவும். • மிகவும் குறைந்த தூரமாக இருந்தால் நடக்கவும், அல்லது மிதிவண்டியைப் பயன்படுத்தவும். • தவிர்க்கவே முடியாது என்னும்போதே மகிழுந்தை வெளியே எடுக்கவும், இல்லையேல் வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும். • வீட்டிற்கு ஒரு மரமாவது நடவும். • பெட்ரோலிய வாகனங்கள் பயன்படுத்தலைக் குறைக்கவும் • குளிர்சாதனப் பெட்டி உபயோகிப்பதைக் குறைக்கவும், இத்யாதி நாளை மறுநாள் நடக்கவிருக்கும் 'Environmental Science' செமஸ்டர் தேர்வுக்காக ஒருநாள் புனிதர்கள் ஆகி ப...

சரிங்...சாரிங்...

”இனிமே 75% அட்டெண்டன்ஸ் இருந்தாதான் ஹால் டிக்கெட் கொடுப்போம், என்ன?” “சரிங்” “அட்டெண்டன்ஸ் ஷீட்டை மாசா மாசம் எங்களுக்கு அனுப்பணும், என்ன?” “சரிங்” “பசங்களோட யூனிட் டெஸ்ட் மார்க்கெல்லாம் அப்பப்ப இங்க வந்துட்டே இருக்கணும், என்ன?” “சரிங்” “மூனு யூனிட் டெஸ்ட் மார்க்கையும் வெச்சுதான் இண்டர்னல் மார்க் போடணும், என்ன?” “சரிங்” “இன்னிக்கு செம மழை, அதனால நாளைக்கு லீவு விட்றணும், என்ன?” “..........” “என்ன?” “..........” “என்ன சத்தத்தையே காணோம்?” “சாரிங்” “என்னது? “சாரிங்” “மத்ததுக்கு எல்லாம் சரின்னு சொன்னீங்க?” “சாரிங்” “லீவு விடணும்னு கவர்மெண்ட் உத்தரவு போட்ருக்கே!” “சாரிங்” “என்னமோ பண்ணித் தொலைங்க!” “சரிங்” “அப்புறம் பாஸ் பர்சண்டேஜ் 75%ஆவது இருக்கணும், என்ன?” ”சரிங்” “இதுக்கேல்லாம் மட்டும் மண்டைய மண்டைய ஆட்டுங்க. நாளைக்கு லீவு விட சொன்னா மட்டும்...” “சாரிங்”

235 எம்.எல்.ஏ.-க்களின் மின்னஞ்சல் முகவரி

234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது: 1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 18 Athoor--- mlaathoor@tn.gov.in 19 Attur ---mlaattur@tn.gov.in 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 21 Bargur ---mlabargur@tn.gov.in 22 Bhavani---mlabhavani@tn.gov.in 23 Bhavanisagar---...

இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல

Image
          இந்த செய்தி ஒன்றும் புதிதல்ல. வருடா வருடம் நடந்து வருவதுதான். 1063 மதிப்பெண்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காது என்ற காரணத்திற்காக நெல்லையில் ஒரு +2 மாணவி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 'இது அப்பெண்ணின் தனிப்பட்ட முடிவு, கல்விமுறையிலோ சமூகத்திலோ குற்றமிருந்தால் குறைந்த மதிப்பெண்கள் வாங்கிய அனைவருமே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்’, என்று இன்னமும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒழுங்காகக் கல்வியைக் கற்றுத் தருகிறதோ இல்லையோ, மதிப்பெண்கள்தான் வாழ்க்கை என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்ததுதான் இந்த கல்விமுறை செய்த மகத்தான சாதனை. இந்தப் போட்டி நிறைந்த உலகில் வேறு வழி இல்லை என்று ஒரு வாதம் வேறு வைக்கப்படுகிறது. கல்விமுறை ஒழுங்காக இருக்கிறதோ இல்லையோ, எங்களது கல்விச்சூழல் நிச்சயம் சரி இல்லை. மாணவ மாணவிகள் நிறைய மதிப்பெண்கள் எடுக்கட்டும், அதில் தவறேதும் இல்லை. அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்களின் கடின உழைப்பு நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. ஆனால், அதிக மதிப்பெண்கள் வாங்காவிட்டால் உன் வாழ்க்கையே அவ்வளவுதான் என்ற மாயத் தோற்றத்தை இந்த சமூ...

எதுவா இருந்தாலும் இவங்ககிட்ட டீல் பண்ணிக்குங்க

Image
          வாழ்க்கையில் ஒரு நல்ல ஆசிரியர் எல்லோருக்கும் திடீரென்று என்றாவது வாய்த்துவிடுகிறார் ! அவரது பார்வையில் படும் நூறு முகங்களில் நாமும் ஒருவராக ஜஸ்ட் லைக் தட் கடந்து போனாலும் நம்மைப் பொறுத்தவரையில் நம்மிடையே ஒரு பெரும் மாற்றத்தினை உண்டாக்கிவிட்டுப் போயிருப்பார் அவர். நாம் சிந்திக்கும் முறையிலிருந்து விரும்புகிற பாடங்கள் வரை அத்தனை விஷயங்களிலும் ஏதேனும் ஒரு பாதிப்பை உண்டு பண்ணிவிட்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அடுத்த செட் மாணவர்களை கவனிக்கத் துவங்கிவிடுவார் ! நாம் இன்று இவ்வாறு இருக்கிறோம் என்றால், நாம் இத்தனை எண்ட்ராப்பிகளை இந்தப் பிரபஞ்சத்திற்கு அளித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் அதில் பெரும் பங்கு வகித்துக்கொண்டிருப்பவர் நிச்சயமாக ஒரு ஆசிரியராகத்தான் இருக்க முடியும் ! ஒன்பதாம் வகுப்பிலிருந்து எனக்கு வாய்த்த இயற்பியல் ஆசிரியர்கள் என் சிந்தனைப் போக்கை எப்படியெப்படியெல்லாமோ செலுத்தினார்கள். கூடவே நம்ம சுஜாதா சாரோட புக்குகளும் சேர்ந்து போக, “ரிலேட்டிவிட்டி, குவாண்டம் தியரி, ஸ்பெல்லிங் தெரியுமா ?”, என்று அம்மாவிடம் சீன் ...

டைட்டானிக் - ஒரு பொறியியல் தோல்வி

இன்று “Strength of Materials” செய்முறை வகுப்பில் எந்த உலோகத்தை எதற்குப் பயன்படுத்துவது என்பதை விளக்க ஆசிரியர் ஒரு சம்பவத்தை சொன்னார்: எந்தப் பொருளை உற்பத்தி செய்தாலும் அதை சந்தைப் படுத்துவதற்கு முன்பு அதனை ஏகப்பட்ட பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். இந்த வேகத்தில் மோதினால் இதற்கு எவ்வளவு சேதம் உண்டாகிறது, இதை உபயோகிப்பவரின் பாதுகாப்பை இது எந்த அளவிற்கு உறுதி செய்கிறது, இதன் மீது எவ்வளவு விசை கொடுத்தால் உடைகிறது அல்லது வளைகிறது, என்று பலப்பல பரீட்சைகளில் பாஸ் ஆனால் மட்டுமே அது சந்தைக்கு அல்லது பயன்பாட்டிற்கு வரும். ஆனால் மூழ்கவே மூழ்காது என்று சொல்லப்பட்ட டைட்டானிக் கப்பல் உடைந்து உள்ளே போனதற்கு இந்த உலோகத் தேர்வில் ஏற்பட்ட தவறு ஒரு முக்கியமான காரணம் ! எப்படி ? டைட்டானிக்கின் அடிப்பாகம் “Mild Steel” என்று சொல்லப்படும் மிதமான எஃகு கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த Mild Steel நல்ல பலசாலியான உலோகக் கலவைதான். சாதாரண சைக்கிளுக்கே ஏகப்பட்ட டெஸ்டுகள் இருக்கின்றன, இது கப்பலின் அடிப்பாகமாக வேறு ஆகப்போகிறது, எனவே இதனைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று பாடாய்ப்...

இரத்ததானம்

அவர் ஒரு அருணாச்சலப் பிரதேசக்காரர். பிறந்ததிலிருந்து இருதயக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு 40 வயதில் சென்னை பெரம்பூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது A1+ ரத்தம் வங்கியில் கிடைக்காமல் போக, கடைசி நேரத்தில் இரண்டு நல்ல நெஞ்சங்களை ரத்தம் தர அங்கு அழைத்து சென்றேன். ரத்ததானம் முடிந்தபின் அவரை சந்தித்து அடுத்த நாள் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு நம்பி க்கை தெரிவித்துவிட்டு வந்தோம். முந்தாநாள் அவரது அண்ணன் என்னைத் தொடர்பு கொண்டு தட்டுத்தடுமாறி உடைந்த ஆங்கிலத்தில் குரலுடைந்து பேசினார். ”ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சுது சார். பிரச்னை ஒன்னும் இனிமே இல்லைனு சொல்றாங்க. கடைசி நேரத்துல வந்து என் தம்பி உயிரைக் காப்பாத்தின அந்த ரெண்டு பேரை என்னிக்கும் நாங்க மறக்கமாட்டோம்”, என்றார். தமிழகத்து ரத்தம் தற்போது அருணாசலப்பிரதேச உயிரினுள் கலந்து ஒடிக்கொண்டிருக்கிறது. நாம் எவ்வளவோ பிரிவுகளாலும் நாடுகளாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்த ரத்தம் என்கிற வஸ்துவின் தேவை ஏற்படுகிறபோது அவையெல்லாம் தவிடுபொடியாகிவிடுகிறது என்பதை உணர்ந்து அன்றே இரத்ததானம் செய்ய ஆரம்பித...

துக்ளக் - 43வது ஆண்டு விழா

சோவின் பல கருத்துகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் வருடா வருடம் அவர் சொல்லும் ஏதாவது இரண்டு கருத்துகள் என்னிடம் கவன ஈர்ப்புத் தீர்மானம் பெற்றுவிடும் என்பதால் துக்ளக் ஆண்டு விழாவை நான் காணத் தவறுவதில்லை. இந்த வருடம் அப்படி முக்கியத்துவம் பெற்றவை இரண்டு: 1. ரஜினிகாந்தைப் பற்றி ஏதாவது சொன்னால் வழக்கமாக அரங்கத்தைப் பிளக்கும் கரகோஷம் இந்த வருடம் அவ்வளவாக இல்லை. "தனி வழி உருப்படாத வழி" என்று கூட்டத்தில் ஒருவர் கத்தி சோவிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். "தனி வழி என்றால் நான் இப்படிப் போகப் போகிறேன், இஷ்டமுள்ளவர்கள் பின்னால் வாருங்கள் என்று விடுக்கும் அழைப்பு; அதுவே தலைமைப்பண்பின் அடையாளம்" என்று ஒரு போடு போட்டார் சோ ! ரஜினியின் ரியாக்சனைப் பார்ப்பதற்காக என்றே வீடியோ சிடி வாங்குவது என்று உத்தேசம். ஆகமொத்தம் கலகம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கிறார் சோ, இது எங்க போய் முடியப் போகுதோ... 2. அ.தி.மு.க.-வை சோ ஏன் ரொம்ப‌வும் எதிர்க்கவில்லை என்பதற்கான விடை நிறைய பேருக்குத் தெரிந்திருந்தாலும் வாய்மொழியாக அதை சோ போட்டு உடைத்தார். "தி.மு.க. திரும்பி வந்துவிடக்கூடாது...

28/08/12 - Appa-Amma's wedding day

Image
அன்பைக் காட்டத் தெரியவில்லை எனக்கு. நான் என் அப்பாவின் ஜெராக்ஸ் காப்பி என்று அனைவரும் சொல்லும்போது சந்தோஷத்தில் எனக்கு என்னமோ பண்ணுகிறது, அப்பாவைக் கட்டியணைக்க வேண்டுமா, தோள் மீது கைபோட்டுக் கொள்ளவேண்டுமா, தொடையைச் செல்லமாக தட்டிக்கொடுக்க வேண்டுமா, மனசு விட்டுப் பேச வேண்டுமா, மோதிரத்தில் முத்தம் பதிக்க வேண்டுமா, தூங்கும்போது காலை அமுக்கி விட வேண்டுமா, என்ன செய ்ய வேண்டும் என்று தெரியவில்லை, அதேபோல் அப்பாவுக்கும் தெரியவில்லை ! அவர்தான் ஒரிஜினல் ஆச்சே ! அன்பைக் காட்டத் தெரியவில்லை, ஆனால் அன்பு இருப்பதுதான் முக்கியம், காட்டுவது இல்லை என்பது என் அப்பாவின் கோட்பாடு. சரியோ தப்போ, அந்த எண்ணம் அப்படியே எனக்கும் வந்துவிட்டது. இன்று என் அப்பா-அம்மாவின் 21-ம் கல்யாண நாள். என் அப்பா-அம்மாவுக்குப் பெரிதாக நான் ஒன்றும் செய்ததில்லை, அம்மாவிடம் சமையல் சூப்பர் என்று சொன்னதில்லை, அப்பாவிடம் நீங்கதான்பா என் ஹீரோ என்று காட்டிக்கொண்டதில்லை, ஆனால் இதெல்லாம் அவர்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும் ! சில நாட்கள் பிரிந்து இருந்தால் ஒரு ஃபோன் போட்டுக்கூட பேசியதில்லை. ஒரு மனிதனாக இதுவரை எந்த நல்லதையும...

Our duties for building an "Equal India"

Image
1. "They should be severely punished" 2. "They should be hanged to death" 3. "Thappu ponnunga melayum irukku, avanga apdi dress panradhaaladhan ipdi nadakkudhu" 4. "They should be beaten to death" 5. "Our Laws should be made more stringent, like there in Dubai" 6. "Avanga akka thangachi-ku ipdi nadandha summa irupaangalaa ?" 7. "Apdiyaa ? Eppo nadandhuchu da, News paakalada naan, ennaachu ?" 8. "Women should carry knives along with them" 9. "I'm ashamed to live in such a country !" 10. "Aambalainga na ? Enna venaalum seyyalaamaa ?" 11. "Does Delhi really deserve to be called as the capital of India ?" These were some of the comments I got from my friends, and I respect all of them. I even saw a post suggesting rapex for women, as women harassment has become very common and is being done very casually here. Where is India really going ? The government, regard...

பிறந்தநாள்

Image
                     ஒரு வயசுக்கு மேல் உலகம் நம் பிறந்தநாளைக் கொண்டாட நாம் பாடுபட வேண்டும் என்று எங்கோ படித்துவிட்டேன், அப்போதிலிருந்து பிறந்தநாள் கொண்டாடுவதை நிறுத்தியாகிவிட்டது. சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று நிறைய பேர் என் வீட்டிற்கு வந்து, நான் வீட்டில் இல்லாததைப் பார்த்து பல்பு வாங்கியிருக்கிறார்கள் (அடுத்த நாள் அதற்காக எனக்கு செமத்தியான அடி விழும், அது வேறு டிபார்ட்மெண்ட்). “நான் என்ன பெரிய காந்தியா நேருவா ?”, என்று பதில் சொல்லி பல கலவரங்களைக் கேண்டீனில் நிகழ்த்தியிருக்கிறேன். பர்த்டே ட்ரீட் என்று யாராவது வாயைத் திறந்தாலே அங்கிருந்து நைசாக நழுவிவிடுவதைப் பார்த்து பார்த்து, இனி பர்ஸை பிக்பாக்கெட் அடிப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு நண்பர்கள் வட்டம் வந்திருப்பதாக விவரமறிந்தோர் கூறுகின்றனர். வருடா வருடம் இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எங்காவது ஓடிவிடுகிறேன் என்று இந்த வருடம் வித்தியாசமாக ஒரு பிளான் போட்டார்கள். என் அம்மாவுக்கு ஃபோனைப் போட்டு, “இன்னிக்கு எப்படியாவது விஷ்ணுவை வீட்டுல கட்டிப்போட்ருங்கம்மா” என்று சொல்...