Posts

Showing posts from August, 2018
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஹீலம்

நாக்கு சுரசுரப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இயற்கை மருத்துவத்தின் மூலம் வெறும் மூன்றே மூலிகைகளை வைத்து சரிசெய்துவிடலாம். முதலில் இரண்டு வில்வக் காம்புகள் தேவைப்படும். கடைக்கு சென்று தந்தநேரிக் காம்பு என்றோ தந்தநேரி வில்வக்கட்டை என்றோ கேட்கவும். கொடுப்பார்கள். அந்த வில்வக்காம்பின் நுனியில் இரண்டு தேக்கரண்டி புலிநெய்யைத் தடவ வேண்டும். வெள்ளைப்புலி நெய்யாக இருந்தால் கூடுதல் சிறப்பு. முடிந்தவரை தடவுவதற்கு அலுமினியக் கரண்டிகளைத் தவிர்த்து இளநீர் சுரட்டையை உபயோகித்தால் அதில் இருக்கும் கரிவிந்துவானது வெள்ளைப்புலி நெய்யோடு சேர்ந்து முறத்றால் புரோட்டீனை உருவாக்கும். அந்த முறத்றால் புரோட்டீன் வில்வக்காம்பின் நுனியில் படுகையில் முறோடைட் டையாக்சைடு என்றொரு துர்நாற்ற வாயு வெளிப்படும். அந்த நாற்றத்தைப் பார்க்காமல் கசப்பு மருத்தென நினைத்து நுகருங்கள், இதிலேயே பாதி சுரசுரப்பு போய்விடும். இப்பொழுது அந்தக் கரிவிந்து தடவப்பட்ட புலிநெய் வில்வக்கட்டை இருக்கிறதல்லவா? அதை சுருக்கமாக விந்துக்கட்டை என்று அழைப்பார்கள். அந்த விந்துக்கட்டையை ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளவும். நாட்டுமருந்துக்கடைக்குச் சென்று சத

நிவாரண நிதி

கேரளத்திற்கு வெள்ள நிவாரண நிதி திரட்டப்படும் வழிமுறைகளைப் பார்த்தபோது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு முறை நினைவிற்கு வந்தது. இன்று முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு இணையம் மூலமாக இரண்டே நிமிடங்களில் பணம் செலுத்திவிடலாம். பே.டி.எம். வசதி இருக்கிறது. அமேஜான் மூலமாக பொருட்களையே நேரடியாக அளிக்கலாம். எண்ணற்ற சமூக நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு வந்துவிட்டது. கார்கில் ஆக்கிரமிப்பு வந்த சமயம் எனக்கு ஆறு வயது. குஜராத் பூகம்பத்தின்போது எட்டு. பள்ளியில் நிவாரண நிதி அட்டை என்று ஒன்று கொடுத்தார்கள். அதில் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதி அளவைக் குறிக்க இடம் இருக்கும். யார் இந்தப் பணத்தையெல்லாம் திரட்டியது என்று என் பெயர், முகவரி எழுத மேலே ஒரு இடம் இருக்கும். இரண்டு வாரங்கள் நேரம் கொடுத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தெருக்களில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி நிதி திரட்டினோம். ஐம்பது பைசா முதல் அரிதாக ஐம்பது ரூபாய் வரை வரும். நல்ல நோக்கத்திற்காக என்றெல்லாம் அந்த வயதில் தோன்றவில்லை. அடுத்தவரை விட அதிகமாக நிதி திரட்டவேண்டும் என்ற உந்துதலில் அலைந்தோம். அந்த துர்நிகழ்வுகளின் கோரம் தெரியாத வயது. வீட்

கலைஞர்

கல்லூரியின் முதல் இரு ஆண்டுகள் பேருந்தில் பயணித்துதான் கல்லூரி சென்றேன். அதனால் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தாக வேண்டும். இறுதி இரண்டு ஆண்டுகளின்போது விடுதிக்கு மாறியபின் ரூம்மேட்ஸ் எங்களுக்கு சற்றே சோம்பேறித்தனம் குடிகொண்டுவிட, சில மாதங்கள் தாமதமாக எழ ஆரம்பித்தோம். பிறகு ஒரு உத்வேகத்தில் நாங்கள் ஒரு ஒப்பந்தம் போட்டு “காலையில எழுறோம், ஜாகிங் போறோம். ஒருத்தன் தூங்கிட்டா எழுப்பி கூட்டிட்டுப் போறோம்” என்று திட்டம் போட்டோம். அப்பொழுதெல்லாம் சிலமுறை அதிகாலை ஐந்தேகால் மணிக்கு ஒருவரையொருவர் இப்படித்தான் எழுப்பியிருக்கிறோம் - “அங்க ஒரு கிழம் முரசொலிக்குத் தலையங்கம் எழுதிட்டு இருக்கு. வாடா!” அரசியல் நிகழ்வுகளில் அரைகுறை ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் பல நாட்களில் பேச்சின்போது ஏதாவது ஒரு கலைஞர் ரெபரன்ஸ் வந்துவிடும். அதிகாலை ஒருமணிநேரம் தலையங்கம் எழுதுவார், இரண்டு மணிநேரம் செய்தித்தாள்கள் வாசிப்பார் என்று கலைஞரின் டேபிளான் ஜூவியில் வெளியானபோது அதில் கவரப்பட்டுதான் நான் தினத்திட்டங்களே போட ஆரம்பித்தேன். மையக் கவர்ச்சியே அவருடைய வயதுதான். உடல்வலு உச்சத்தில் இருந்த வயது எனக்கு, அவரோ தினம் தினம் உழ