Posts

Showing posts from 2017
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வெல்கம் 2018!

நாளை புத்தாண்டு. இன்னிக்காவது ஏதாவது வித்தியாசமா பண்ணு, 2017ல ஏதாவது பண்ண மாதிரி இருக்கும், என்றார்கள். அதனால் 2017-ல் இன்று மட்டும் புதுசா இப்படி. ஸ்னிப்பெட்ஸ்.

--------------------------------------------------------------------

கடவுள் கொஞ்சம் தேவைப்படுகிறார். 2018-ல் அவரை ஏற்றுக்கொண்டு பார்க்கலாம் என்றிருக்கிறேன். நீ எல்லாம் தைரியசாலி, மனோதிடம் மிக்கவன். லைஃப் ஆப் பையின் மூலம் யன் மார்ட்டெல் என்ன சொல்ல வந்தார், என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக்கொள்ளாமல், ஈகோவை சொறிந்துகொள்ளாமல், என்ன ரிசல்ட் வருகிறது என்று பார்க்க விருப்பம். ஆக இந்த வருடம் நான் போராடப்போவது எனக்குள் இருக்கும் நிஹிலிஸ்டோடு என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அவரவர் நம்பும் கடவுள் அவரவருக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் தரட்டுமாக.

--------------------------------------------------------------------

சென்னையில் எந்த ஏரியாவில் எந்த கடையில் பானிபூரி நன்றாக இருக்கும் என்று ஒரு டேட்டாபேஸ் நாக்கில் பதிந்துவிட்டது. சார்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

--------------------------------------------------------------------

ரேண்டம் …

நூலிலிருந்து சீரிஸ் - 3: அவுரங்கசீப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?

// கேள்வி: பணமதிப்புநீக்க நடவடிக்கையால் பாலியல் தொழில் சீர்குலைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சேர்த்து கணக்கிட்டால் demonetisation-இன் நன்மைகள் என்று இதுவரை 194 விஷயங்களை சொல்லிவிட்டார்கள். சயீத் அன்வர் போல் 194 ரன்னில் இருப்பது உறுத்தலாக இருக்கிறது. டெண்டுல்கரைப் போல் அது இருநூறைத் தொட்டால் நன்றாக இருக்குமே என்று ஒரு சின்ன நப்பாசை. - க.பாஸ்கரன்


பதில்: அன்புள்ள பாஸ்கரன். பணமதிப்புநீக்க நடவடிக்கையின் நன்மைகள் எப்பொழுதோ 200-ஐத் தொட்டுவிட்டது. பேனிக் ஆகிவிடுவீர்கள் என்பதால் அதை வெளியே சொல்லவில்லை. இப்பொழுது நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்பதற்காக உங்களிடம் சொல்கிறேன். But remember, don't panic!

195. சென்ற ஆண்டு நவம்பர் 8ம் தேதி நம்மை ஒரு சூரியப் புயல் தாக்க இருந்தது தெரியுமா? ஆனால் நல்லவேளை, பிரதமர் அவர்கள் தொலைக்காட்சியில் ‘500, 1000 ஊ ஊ’ என்று அறிவித்தாலும் அறிவித்தார், அதன் விளைவாக தொலைக்காட்சி நிலையத்தில் ஒருவகையான மின்காந்த எதிர்வலைகள் எழுந்தன. அது சத்தமில்லாமல் விண்ணைப் பிளந்து, உலகின் தொலை தொடர்பு சாதனங்களை அழிக்க விரைந்து வந்துகொண்டிருந்த அந்த சூரியப் புயலைத் திச…

ஙே... :/

நம் சமூகம் மிக மிக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. பலவற்றை சிரமம் பார்க்காமல் ஒரே மூச்சில் உடனடியாக நிரூபித்துக்கொண்டிருக்கிறது:


1. “என் மதத்துல தீவிரவாதம் வளருதுன்னா சொல்ற? உன்னை சுட்டுக்கொல்லணும்”

2. “என்னையா நாஜின்னு சொல்ற? உன் இனத்தை இங்க ஆள விட்டா இப்படித்தான் பேசுவ”

3. “என்னையா பாசிஸ்டுன்னு சொல்ற? உன் பேச்சை முதல்ல நிறுத்தணும்”

4. “என்னடி திமிரு புடிச்சவன்னு சொல்ற? உன்னை அடக்க எனக்கு எத்தனை நிமிஷம் ஆகும்?”

5. “என்னையா ஆண்டை, அக்கினிக்குஞ்சுன்னு கலாய்க்கிற? அரசியல்ல ஒன்னு திரண்டதும் வாய் நீளுது?”

6. “பார்ப்பனீயத்தையா திட்ற? இதுக்குதான் அவங்கவங்களை வெக்க வேண்டிய இடத்துல வெக்கணும்ங்கிறது”

7. “என்னையா கலவரத்தைத் தூண்டுறேன்னு சொல்ற? பத்து பேரைக் கூட்டியாரத்துக்குள்ள மரியாதையா ஓடிரு”

8. “பெண் சுதந்திரமே நாங்க தரலைன்னு சொல்றியே? உன்னையெல்லாம் வெளிய படிக்க அனுப்பினதுக்கு இப்படித்தான் பேசுவியா?”

9. “என்னையா அறிவுஜீவின்னு திட்ற? என் அறிவு இருக்கிற ரேஞ்சுக்கு நான் சொல்றதெல்லாம் உனக்கு முதல்ல புரியவே புரியாது”

10. “என்னையா மதவாதின்னு சொல்ற? இவ்வளவு காலம் அமைதியா இருந்தோம்ல அதான…

கேப்டன் கோலியும் கீப்பர் தோனியும்: கொண்டாடப்பட வேண்டிய தனித்துவமான உறவு

Image
          கேப்டன் பொறுப்பு கைமாறியுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், ஒன்றை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இன்று அவர்களிடையேயான உறவு என்பது ஒருவருக்கொருவரின் கருத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.

-------------------------------------------------------------------------------

Scroll.in வலைதளத்தில் சேத்தன் நருலா எழுதிய ‘The unique relationship between captain Virat Kohli and keeper MS Dhoni is one India should cherish' என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. கோலியின் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது.

-------------------------------------------------------------------------------          இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - 40-வது ஓவரின் முதல் பந்தை பும்ரா முழுநீளத்தில் வீச, அது ஆன்டில் பெகுலுக்வாயோவின் பின்னங்காலில் பட்டென்று இறங்கியது. ’அவுட்!’ என்று பும்ரா அப்பீல் எழுப்ப, அம்பயர் பால் ரெய்பெல் இல்லை என்று தலையாட்டினார். உடனே அம்பயரை மறந்துவிட்டு அனைவரும் பேட்ஸ்மேன் ஸ்டம்பிற்குப் பின்னே பார்வையை செலுத்தினர்.

          ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த விராட் கோலி, …

நூலிலிருந்து சீரிஸ் - 2: இலையுதிர்கால இல்லூமினாட்டிகள்

//கேள்வி: இந்த இல்லூமினாட்டி பக்தர்கள் செய்யும் பிடிவாதம் இருக்கிறதே, அதை சமாளிக்கவே முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன். - க.பாஸ்கரன்


பதில்: அன்புள்ள பாஸ்கரன், கவலைப்படாதீர்கள். எனக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. “இந்த இல்லூமினாட்டி பக்தர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்களேன்” என்று இல்லூமினாட்டியின் தலைவர் பிரான்சிஸ்கோ ராக்பெல்லர் எழுதியிருந்தார். படித்ததும் கண்கலங்கிப் போனேன். இல்லூமினாட்டி பக்தர்களை நான் செல்லமாக இல்லூக்கள் என்று அழைப்பேன். ஏனெனில் இல்லூக்கள் குழந்தைகள் போல பாஸ்கரன். இதுதான் இப்படித்தான் என்று அடம் பிடிப்பார்கள். சொப்பு சாமான் வைத்து ஒரு குழந்தை சமையல் செய்வதுபோல், கடற்கரை மணலில் கைதுளாவி இரண்டு சிறுவர்கள் மாளிகை கட்டுவதுபோல், இல்லூக்கள் யூடியூபில் நான்கு வீடியோக்களைப் பார்த்துவிட்டு ஆராய்ச்சி செய்துவிட்டேன் என்று குதூகலிப்பார்கள். அந்தக் குதூகலத்தை ரசிக்கும் பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் பாஸ்கரன். ஒரு பொறுப்பான பெற்றோரைப் போல் நாம்தான் அவர்களைக் கொஞ்சி சமாதானப்படுத்த வேண்டும். அவர்களை தெர்மாக்கோல் போல மென்மையாகக் கைகளில் ஏந்தி…

பாம்பு

ஒரு பாம்புக்கதை சொல்கிறேன்.
நாம் தினசரி பார்க்கும் பாம்புதான்.
அடிமைப் பிழைப்பை உதறி வளரவேண்டும்
என்று நினைத்தால்
விருட்டெனக் கொதித்து
என் மேலே ஊர்ந்துகொள்ளும் அந்தப் பாம்பு.
அவ்வளவு துணிவா என்று
எஜமான் அரிதாரத்தைப் பூசிக்கொண்டு
என்னை
சுற்றி வளைத்துக்கொள்ளும் அந்தப் பாம்பு.
ஒரு சிறு தவறு செய்துவிட்டால்
அவ்வளவுதான்;
குற்றவியல் சாசனமாகவே உருமாறி
என்னை
விழுங்கித் திளைத்துவிடும் அந்தப் பாம்பு.
நம்முடைய அந்தப் பாம்பு இருக்கிறதே,
அருமையாக டவுசர் போட்டுக்கொண்டு,
திறமையாக ஆங்கிலம் பேசி,
நான்கு சுவற்றுக்குள் நடக்கும்
இலக்கியக் கூட்டங்களில்
என்னை நன்றாக உள்வாங்கி
பொறுமையாக அசைபோட்டு சவைக்கும்.
எல்லாவற்றிற்கும்
அந்த நான்கு சுவர்கள்தான் சாட்சி.
இப்பொழுதெல்லாம்
நான்
ஒவ்வொரு விளம்பரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
எங்காவது கற்றுக்கொடுக்கிறார்களா
என்று தேடி கற்றுக்கொள்ள வேண்டும்,
அந்தப் பாம்பின் தோலை உரிப்பது எப்படி என்று.

- வர்ரே ராணி
(தமிழில்: வ.விஷ்ணு)
#DalitLiterature

என்ன கனவைக் காண்பது?

நானும் ஒரு காலத்தில் அநாதைதான்
என்பதுபோல் என்னைப் பார்க்காதே.
நாங்கள் இன்னும்
தங்குவதற்குக் கூரையின்றி
அகதிகளைப்போல் உழல்கிறோம்.
எங்கள் முதுகுகளின் மேல்
நூற்றாண்டுகளாகப் பிடுங்கப்பட்ட வாழ்வு
பெரும் பாரமாக ஏறியிருக்கிறது.
அந்த சுமைகள் இருந்தும்கூட
இந்த சேற்று நிலத்தில்
எங்களின்
காலடித் தடங்கள் ஒன்றுகூட இல்லை.
நீ நம்பிக்கையோடு வானை நோக்குகிறாய்;
சிறகடிப்பது குறித்துக் கனவு காண்கிறாய்.
நானும் ஒரு காலத்தில் அநாதைதான்
என்பதுபோல் என்னைப் பார்த்து
வானத்தில் வண்ணம் பார்க்கச் சொல்கிறாய்.
இந்த நிலமே எங்களுக்கானது இல்லை என்னும்போது
வானத்தை நோக்கி நாங்கள்
என்ன கனவைக் காண்பது?

- மினா லோண்டே
(தமிழில்: வ.விஷ்ணு)
#DalitLiterature

கர்னல் ராபர்ட் கில்லிப்ரூவின் அறிவுரை

கர்னல் ராபர்ட் கில்லிப்ரூ (ஓய்வு, அமெரிக்க ராணுவம்)
எழுத்தாளர்

-----------------------------------------------------------------------------------

பல ஆண்டுகளுக்கு முன் நான் ராணுவப் பணிக்குள் நுழைவதற்கு முன்பாக, கடற்படையில் பணிபுரிந்த ஒரு ஓய்வுபெற்ற  கர்னலை சந்தித்தேன். இரண்டாம் உலகப்போரில் தராவாவில் சண்டையிட்டவர். மிகவும் புத்திகூர்மையுள்ள மனிதர். அவர் எனக்கு ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார். அவர் எனக்கு சொன்னதை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்கிறேன்:

ராணுவ வீரனாகவே நீங்கள் பணிபுரிய விரும்புகிறீர்களா? நல்லது. உங்கள் தாய்நாட்டை நீங்கள் காக்கப்போகிறீர்கள். அதற்காக முதலில் மிக்க நன்றி. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு காலம் ராணுவ சீருடையில் இருக்கப்போகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு குறைவாக நீங்கள் உங்கள் தாய்நாட்டைப் புரிந்துகொள்வீர்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்பது ராணுவ வாழ்க்கைக்கு நேர் எதிரானது. அது குழப்பமானது; நேர்மையற்றது; ஒழுங்கற்றது; அதே நேரத்தில் அது மகத்தானதும் மகிழ்ச்சியானதும் சுதந்திரமானதும் கூட. நாம் அவ்வாறு அல்ல.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ரா…

ஹாசிப் கான்

Image
எல்லோரைப் போலவும் பல்வேறு கார்ட்டூன் சித்திரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு கார்ட்டூனின் அங்கமாகவே உணர்ந்தது ஹாசிப் கானின் சித்திரங்களில்தான். First person camera போல் இதோ ஒரு first person cartoon. டரியல் ஆகி ஆப்பரேஷன் தியேட்டரில் நிராதரவாகப் படுத்திருக்கிறோம். அரை போதையில் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தால்... மூஞ்சிக்கருகே ஐந்து சர்ஜன்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வரவேற்க, “என்னது இன்னும...் முடியலியா?” என்று மிச்ச சொச்ச உயிரும் போகிறது. இந்த சித்திரத்தில் நாமும் ஒரு பாத்திரம். ஹாசிப் கானின் நகைச்சுவை சித்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். நான்கு வருடங்களுக்கு முன் இதைப் பார்த்தவுடன் நிலைகொள்ளாமல் சிரித்தபடி நிலைமையை நொந்துகொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. வயதாகவே ஆகாது இந்த கலாட்டூனுக்கு. வருடா வருடம் சர்ஜன்கள் மட்டும் மாற, காட்சி என்னவோ அப்படியேதான் இருக்கப்போகிறது. மன்மோகன் இடத்தில் மோடியை கற்பனை செய்து பார்த்தேன். இன்னும் அதிக சிரிப்பு, இன்னும் அதிக கடுப்பு.

          வட்டியும் முதலும் படிப்பதற்காக ஆனந்த விகடன் வாங்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் வட்ட…

அனிதாவும், பல அநீதிகளும்!

அனிதாவின் தற்கொலை உலுக்கியெடுத்துவிட்டது. “தற்கொலை தீர்வே இல்லை”, என்ற வாதத்தை முன்னிலைப்படுத்தி நேற்று முன்தினம் பலர் திடீர் மனோதத்துவ நிபுணர்களாக மாறியதைப் பார்த்தபோது ஆத்திரமாக வந்தது. ஆனால் பாத்ரூம் கண்ணாடியின் முன் ஒரு சக மனிதிக்காக கையறு நிலையில் இரண்டு முறை அழுது, சோர்வில் தூங்கி மறுநாள் கண்விழித்து சற்றே திடமான மனநிலையில் அமர்ந்து யோசிக்கையில், அனிதாவின் தற்கொலை துர்நிகழ்வில் ஏதோ ஒரு பக்கம் நிற்பதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் காரணங்களில் பல்வேறு சிக்கலான காரணிகள் சம்பந்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. இத்துர்நிகழ்வை அரசியலாக்குபவர்கள் நீட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களாக, சமூக நீதி பேசுபவர்களாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவானவர்களாக, ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரானவர்களாக, மோடி எதிர்ப்பாளர்களாக, தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் செயல்பாட்டாளர்களாக, இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குபவர்களாக, இவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ காரணிகளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் மற்றொன்றோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவை, ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆழமானவை. இதை அரசியலாக்காதீர்கள் என்று…

மரணம்

Image
மரணிப்பது நாம் என்றாலும்
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
மரணத்தின் அருகாமையை அடைந்தாலும்
மரணத்தை எட்டும் அந்தக் கணத்தில்
மரணத்தை உணராமலேயே
நாம் மரணித்துவிடுகிறோம்.
நம்முடைய மரணத்தை
நம்மைச் சார்ந்தோரே உணர்கிறார்கள்.
நாம் இனியும் இங்கில்லை
இனியும் உலாவ மாட்டோம்
பேச மாட்டோம்
உயிர்த்திருக்க மாட்டோம்
என்ற உண்மை அறைகையில்
அவர்களுக்கு ஏற்படும் உணர்வு
அதுவே நம்முடைய மரணம்.
அதுவே மரணத்தை உணர்தல்.
நம்முடைய மரணம்
நம்மைச் சார்ந்தோருக்கு நிகழ்கிறது.
மரணிப்பது நாம் என்றாலும்
நம்முடைய மரணம் என்னவோ
நமக்கு நிகழ்வதில்லை.
அது நிகழ்வதற்குள்
நாம் மரணித்துவிடுகிறோம்.

- வ.விஷ்ணு

கடவுள்களும் குருமார்களும் - குஷ்வந்த் சிங்

Image
மறைந்த குஷ்வந்த் சிங்கின் ‘Gods and Godmen of India' நூலை வாசித்து முடித்தேன். கடவுள், மதம், மூடநம்பிக்கை, ஆன்மிக இயக்கங்கள், சாமியார்கள் குறித்த குஷ்வந்தின் கருத்துகள், அனுபவங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றின் தெளிவான தொகுப்பு இது. கடவுள் மற்றும் ஆன்மிகம் குறித்த குஷ்வந்தின் நிலைப்பாடு எவ்வாறு உருவாயிற்று என்பதை 62 கட்டுரைகளில் குஷ்வந்த் சிங்கிற்கே உரிய நகைச்சுவை எழுத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குஷ்வந்த் சிங் ஒரு ‘அக்னாஸ்டிக்’ என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத, ஆனால் கடவுள் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லவும் முடியாத, தானே உணரும் வரை கடவுள் இல்லைதான் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள். ஒருவகையில் இது கொஞ்சம் அவஸ்தையான நிலைப்பாடும் கூட. கடவுள், பிறவிப்பயன், மரணம் குறித்த கேள்விகள் மனதின் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருக்கும்.

          மதம், மத அமைப்பு, மதம் சார்ந்த அரசியல் போன்றவற்றில் குஷ்வந்த் பல்வேறு சிக்கல்களைப் பார்க்கிறார். ஒவ்வொரு மதத்திலும் இரண்டு வகையான குழுவினர் இருக்கிறார்கள். ஒரு சாரார் மாற்று மதத்தினரோடு இ…

ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள் - ஸ்ரீதர் சுப்ரமணியம்

Image
நேற்று ஸ்ரீதர் சுப்ரமணியம் சாரின் பிறந்தநாளுக்கு முகநூலில் பூ.கொ.சரவணன் அண்ணன் வாழ்த்துப் பதிவிட்டு கீழே அவர் புத்தகத்தின் அமேஜான் சுட்டியைத் தந்திருந்தார். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’ புத்தகம் கிண்டில் வடிவில் 120 ரூபாய்க்கு கிடைத்தது. ஒரே மூச்சில் கடகடவென்று வாசித்து முடித்தபோது இந்த உலகத்தை தர்க்க மதிப்பீடு செய்த ஒரு மானுடவியல் பயணத்தில் உடன்சென்றதுபோல் இருந்தது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால விழுமியங்களைத் தொடர்புபடுத்தி நிகழ்கால சிக்கல்கள் குறித்த தன் கருத்தை வரலாற்றுப் பார்வையோடு அவர் முன்வைக்கும்போது ஒவ்வொரு வாசகருக்கும் அது ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தரும். இப்புத்தகத்தை நாம் நம் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் அணுகுகிறோமா, அல்லது இப்புத்தகம் விடாமல் கைக்கொள்ளும் தர்க்கத்தை நம் மத, கலாசார, தேசிய அடையாளங்கள் உட்புகுத்தும் முன்முடிவுகளால் உந்தப்பட்டு முற்றாக நிராகரிக்கிறோமா, என்பதைப் பொறுத்து இப்புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் வேறுபடும். இது எல்லா புத்தகங்களுக்கும் பொருந்தும்தானே என்று கேட்டால், பல புத்தகங்களில் வெகு அரிதாகவே காணக்கிடைக்கும் ஒரு பண்பு இத…

நூலிலிருந்து சீரிஸ் - 1: நடுநிலை நக்கீஸ்

Image
//அத்தியாயம் 22:

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுத்தந்தது. ஜெயமோகன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘வாழும் கணம்’ ஒன்று என்னை வந்தடைந்தது.

------------------------------------------------------------------------------------

அன்றைய ஒன்பது மணி விவாத நிகழ்ச்சி நிச்சயம் பரவலாகப் பார்க்கப்படும் என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பொதுவாக நான் நெறிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் எவ்வாறு விருந்தினர்கள் தங்களின் நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்று கவனிப்பதுண்டு. “என்னைத் தவிர மற்ற அனைவரும் நடுநிலைவாதிகள் அல்ல என்று சொல்ல மாட்டேன், ஆனால் இந்த அறையிலேயே பெரிய நடுநிலைவாதி நான்தான்”, என்று நிறுவ முயற்சிப்பார்கள். அதுதான் அன்றும் நடந்தது.

கோட் சூட் போட்டுக்கொண்டு ஸ்டூடியோ சென்ற போது நால்வரும் ‘உம்’மென்று உட்கார்ந்திருந்தனர். ஒருவர் அந்த நடிகரின் தீவிர ரசிகர், இன்னொருவர் சமூக நீதி செயல்பாட்டாளர். இவர்கள் போக அந்த பெண் பத்திரிகையாளர் பக்கம் நின்று பேச தொலைக்காட்சி நிர்வாகம் பெருந்தன்மையாக இரண்டு பேரை அழைத்திருந்தது.

சமூக நீதி செயல்பாட்டாளர் அதிரடி காட்டினார். “ரசி…

‘கக்கூஸ்’ ஆவணப்படம்

Image
தினமும் மலம் கழித்துவிட்டு பாத்ரூம் ஃப்ளஷை அமிழ்த்தி அந்த அருவருப்பான இதை உள்ளே தள்ளிவிட்டு வருகிறோம். நம்முடைய அந்த அருவருப்பான இதை ஒரு சகமனிதன் கைகளால் அள்ளி வீசுகிறான் என்ற உண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம்? ‘ஹே அதுவும் ஒரு தொழில் மேன்’ என்றா? ‘அதான் சம்பளம் வாங்குகிறார்களே’ என்றா? ‘பிடிக்கலேன்னா வேற தொழிலுக்குத்தான் போகட்டுமே’ என்றா? தினமும் மலத்தை முகர்ந்து மூக்கைப் பொத்தி நகரும் நாம், இந்த உண்மையும் நாறுகிறது என்பதற்காக மூக்கைப் பொத்திக் கடந்துவிடப் போகிறோமா? அப்படியே கடந்தாலும் இம்முறை எவ்வளவு தூரம் விலகினாலும் நாற்றம் குறையாது, ஏனெனில் இம்முறை நாற்றம் நம்மிடமிருந்துதானே வீசுகிறது? நகரத்தில் சாதி இல்லவே இல்லை என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? அல்லது ஒருவேளை தெரிந்தேதான் இந்த வஞ்சகத்திற்குத் துணை போகிறோமா?

          இதுவரை ‘கக்கூஸ்’ ஆவணப்படம் பார்க்காதவர்கள், கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். உங்களை அந்தப் படம் துன்புறுத்தும், தூங்க விடாமல் துன்புறுத்தும். இல்லை குமட்டுகிறது, பார்க்க முடியவில்லை என்று அது கொடுக்கும் சாட்ட…

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது?

ஏன் அகிம்சைப் போராட்டமே உகந்தது? சில காரணங்கள்:

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் அரசு இயந்திரம் தன்னுடைய போர்ப்படையை முடுக்கிவிடும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று பெயர் சூட்டும்.

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் பிற நாடுகள் அப்பிரச்னையில் தலையிட முற்படும்; அதற்கு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சி’ என்று பெயர் சூட்டும்.

சுருங்கச் சொன்னால், சர்வாதிகாரமும் பிற நாடுகளும் உபயோகிக்கும் வன்முறைக்கு ஆயுதப் போராட்டத்தால் மறு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

ஆயுதப் போராட்டத்தைதான் சர்வாதிகாரிகள் விரும்புவார்கள்; அமைதியான போராட்டத்தில் கூட வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டிவிட முயற்சிப்பார்கள். அப்பொழுதுதான் அவர்களால் தன் தரப்பு வன்முறைக்கு நியாயம் கற்பிக்க முடியும்.

ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டால் ஒடுக்குபவர்கள் ஒடுக்கப்படுபவர்களை ‘அதோ தீவிரவாதிகள்’ என்று எளிதாக முத்திரை குத்தி, விவாதத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டுவிடுவார்கள்.

ஆயுதப் போராட்டத்தின் பணிகள் உடல்பலத்தையும் அதிகம் நம்பியிருப்பவை (பெரும்பாலும் ஆண்களே அதில் ஈடுபடுகிறார்கள்; பெண்களின் எண்ணிக்கை க…

There is more to state flags than meets the eye

Those who pinpoint that national identity of US and Germany are healthy despite having state flags, are missing a point: "Sub-national identities in a territorial nation like India are stronger."

One of the unifying factors of India is the appreciation of its diversity. "Respect our sub-nationalism and we keep Indian nationalism above it"

This outward pressure is practically absent in Germany, as it is a nation based on common language, and the State of US has its own history of gradually gaining and losing streaks of legitimacy over these 200 years.

This legitimacy of German State will be under crisis only if the State fails in distributive[Aristotle] and social justice, or the pride centering its historical events of German unification is diluted.

My opinion is that the concerns and insecurity about the unity of India in this state flag issue is genuine, and must be addressed.

I don't think its not that simple to conclude that since states already have their…

மகேந்திர சிங் தோனி: ஒரு முழு அலசல்

Image
livemint இதழில் குனல் சிங் எழுதிய ‘M.S. Dhoni: The Good, the bad and the ugly' என்ற கட்டுரையின் தேர்ந்தெடுத்த பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது. தோனியின் பிறந்த தினத்தன்று வெளியிடப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------தோனி திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிலைபெற்றிருப்பார். அப்போது கரக்பூரில் இந்திய ரயில்வேயில் வேலை செய்தபோது கூட தங்கியிருந்த தன் நண்பர் சத்ய பிரகாஷை தன் விடுதி அறைக்கு அழைப்பார். பழைய குறும்புத்தனம் ஒன்றை தன் நண்பன் மீது நிகழ்த்த வேண்டும் என்று அவருக்காகக் காத்திருந்து, அவர் வந்ததும் யாரோ பிசிசிஐ அமைப்பின் சீனியர் ஒருவரோடு ஃபோனில் பேசுவதுபோல் நடிப்பார். அந்தப் போலி தொலைப்பேசி உரையாடலில் தோனியின் கதாபாத்திரம் சொல்லும், “எனக்கு கேப்டனாக இருப்பதில் துளியும் விருப்பமில்லை, என்னால் உங்கள் கைப்பாவையாக ஆட முடியாது”. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இக்காட்சி 2013 சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்து செல்லும் முன் தோனி கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்ப…